Friday, August 13, 2010

சினிமா விமர்சனம்-காதல் சொல்ல வந்தேன்

தேவதையைக்கண்டேன்,திருவிளையாடல் ஆரம்பம்,மலைக்கோட்டை என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கண்ட இயக்குநர் பூபதி பாண்டியனின் 4 வது படம்தான் இந்த காதல் சொல்ல வந்தேன்.'நானும் என் சந்தியாவும்' என 2005இல் பூஜை போட்ட படம் பல கை மாறி இப்போ வந்திருக்கு.2 டைட்டிலுமே கவிதை நயம்.படம்?

கதைக்களம் திருச்சி.மலைக்கோட்டை ஹிட் ஆன செண்ட்டிமெண்ட்?தன்னை விட 2 வருடங்கள் சீனியர் பெண்ணுடன் கொண்ட காதலை எப்படி வெளிப்படுத்துகிறான், அக்கா என தன்னை அழைக்கச்சொன்ன பெண்ணையே எப்படி காதலிக்க வைக்கிறான் என்பதுதான் கதை.வல்லவன் படத்தில் சிம்பு தோற்ற கதைக்கரு பூபதி பாண்டியனின் இயக்கத்தில் வெற்றி பெற்றது ஆச்சரியம்.

புதுமுக நாயகன் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ தனுஷுக்கு தம்பி மாதிரி இருக்கிறார்.ஹீரோயின் அனுஷ்காவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.ஆனால்  கதையின் KNOT (முடிச்சு)
 தன்னை விட சீனியர் பொண்ணுடன் காதல் கொள்வது என்பதால் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை.


செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன்தான் ஹீரோ.புதுமுகம் என்ற அளவில் ஓகே ரகம்.மேக்னாவை முதல் முறை பார்த்ததும் உடனே ஓடிப்போய் தன்னுடன் 8வது படித்த பெண்ணுக்கு ஃபோன் போட்டு “அடியே,நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னப்ப முடியாதுனு சொன்னதுக்கு தேங்க்ஸ்,அப்ப ஓகே சொல்லி இருந்தா இப்படி ஒரு ஃபிகர் கிடைச்சிருக்குமா என லந்து பண்ணும்போது ஆரம்பமாகும் காமெடி தர்பார் இடை வேளைவரை தொடர்கிறது.

ஹீரோயின் மேக்னா இதழ் விரிப்பில் நயன்தாரா,புன்னகை சிரிப்பில் சித்தாரா,முக சாயலில் ஆசை சுவலட்சுமி என அழகுக்கலவையாக இருந்தாலும் முகத்தில் முற்றல் அதிகம்.தொடர்ந்து கோலிவுட்டில் கோலோச்சுவது சிரமம்.


வழக்கமாக ஹீரோயினைப்பார்த்ததும்  உடனே ஹீரோ பாடும்  இன்சிடெண்ட் லவ் சாங்க் இதிலும் உண்டு.ஓ சலாம் எனும் அந்தப்பாட்டை ஹீரோ - ஹீரோயின் சந்திப்புகளில் பிட் பிட்டாக போடுவது நல்ல யுக்தி.


படத்துக்கு பெரிய பிளஸ்சே வசனம்தான்.காமெடி களை கட்டியதில் சில சாம்ப்பிள்ஸ்.


1.என்னது ,பார்த்ததுமே லவ்வா?

பின்னே, 15 வருஷம் கழிச்சு லவ் பண்ண சொல்றியா?


2.உனக்கு ஏன் நாநு - நு பெயர் வெச்சாங்க?

குழந்தை பிறந்ததும் ஜோசியர்ட்ட ஐடியா கேட்டாங்க,அவர் நா அல்லது நு அப்படிங்கற எழுத்துல ஆரம்பிக்கற மாதிரி பெயர் வெச்சா நல்லாருக்கும்னாரு,ரொம்ப நல்லாருக்கட்டும்னு 2 எழுத்தையும் சேர்த்தே வெச்சுட்டாங்க.


3.அவளுக்குப்பிடிச்ச இந்த நாயை நான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தா அவளுக்கு லவ் வருமா?

வரும்,உன் மேல இல்ல,நாய் மேல.


4.என்னது,உன் பேரு ஹேப்பி கிங்கா?

அதாங்க ஆனந்தராஜ்


5. டீ குடிக்கலாம் வா

பழக்கமில்லை.காசா குடுத்துடுங்க.செலவுக்கு ஆகும்.


6.நான் உனக்கு மச்சான் வேலை பார்க்கலாம்,நீ எனக்கு மாமா வேலை பார்க்கக்கூடாதா?



ஹீரோயின் அறிமுக்காட்சி எனில் முதல் முறை அவர் முகத்தில் பூக்களைதூவுவதை கோடம்பாக்க இயக்குனர்கள் மாற்றுவது நல்லது,(ஆனால் தியேட்டர்ல  கை தட்டறாங்கப்பா.)தோட்டத்தில் பைப் மூலம் தண்ணிர் ஊற்றும் பெண்ணிடம் அதை வாங்கி மினரல் வாட்டர் பாட்டிலின் அடிப்பக்கத்தை சிறு சிறு துளைகளிட்டு ஷவர் மாதிரி செய்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி கவிதை.

காலேஜ் க்ளாஸ் ரூமில் நுழைந்ததும் ரிங் டோனாக வைத்த சரக்கு வெச்சுருக்கேன் பாட்டு காலை வாரும் சீன் செம காமெடி.அப்பா,நாயை நாமளே வளக்கலாம்ப்பா என்றதும் ஆர்.சுந்தர்ராஜன் ஏற்கனவே வீட்ல நீ,உங்கம்மா 2 நாய்களை வளர்க்க்றேனே போதாதா எனக்கேட்பது நல்ல நக்கல்.
சிங்காக வரும் வில்லன்(?) சந்தியாவை லவ் பண்ணுவதாக சொன்னதும் டேய்,இவன் சந்தியாகிட்ட சிக்கிடக்கூடாதுங்கறதுக்காகவே நீ அவளை லவ் பண்ணனும்டா என சலம்பும்போது தியேட்டரில் கை தட்டல்கள்.

பாடல் காட்சிகளில் தேவதையைக்கண்டேன் தனுஷ் மாதிரி பாடிலேங்குவேஜ்ஜில் டான்ஸ் ஆடுவதை ஹீரோ தவிர்த்திருக்கலாம்.ஹீரோயினிடம் ஹீரோ நான் முதல் வருஷம்,நீங்க? எனக்க்கேட்கும்போது நான் ஃபைனல் இயர் என அவர் பதில் சொல்லும்போது சங்கு ஊதும் சத்தத்தை காண்பிப்பது சூப்பர்.காலேஜ்ஜில் கேர்ள்ஸ் பசங்களை ராகிங் பண்ணும் காட்சிகள் ஜாலி.எங்கள்ல யார் அழகு? என மேக்னா கேட்டதும் கேமரா ஒரு அடாஸ் ஃபிகரின் செஸ்ட்டை ஜூம் பண்ண ,டேய்,மூஞ்சியை பார்த்து சொல்லுங்கடா மூதேவிங்களா என அலறுவதும் அலப்பறை ரகம்.

 சியர்ஸ் சொல்லியே பெப்சி பாட்டிலை உடைக்கும் குறும்பும் ரசிக்க வைக்கிறது.ரயில் தண்டவாளத்தில் காது வைத்துக்கேட்கும் சீன் பல படத்தில் வந்தாலும்,இதில் ஒரு புது கான்செப்ட் இருக்கு.
திமிர் படத்தில் விஷால் வரும் காட்சிகளில் ஹோ ஒஹோஹோ என த்ரெட்டன் ம்யூசிக்(THREATEN MUSIC)  போடுவாங்களே அது மாதிரி ஓவர் பில்டப்புடன் ஆங்காங்கே வரும் சொட்டைத்த்லை ஆள் கடைசியில் ஒரு பிள்ளைப்பூச்சி எனக்காட்டுவது கிளாசிக் காமெடி.
படத்தில் மொக்கை காமெடிகளும் உண்டு. உன்னைப்பார்க்கும் வரை நான் பக்கி,பார்த்த பின் நான் லக்கி,  அனைவரும் போன அது அரசுப்பேருந்து,நீ மட்டும் போனா அது அரசிப்ப்பேருந்து,  சின்னப்பைஉஅனை அடிச்ச்ட்டாடா -தப்பா சொல்லாதடா,ரொம்ப்ப ரொம்பச்சின்னப்பையனைப்போட்டு அடிச்சிருக்கா.லவ் பண்ணுனா ஃபேஸ் ஃப்ரெஸ் ஆகுமாமே உண்மையா? ஆமா,ஆனா உனக்கு மட்டும் 5 பேரை லவ் பண்ணுனாத்தான் அப்படி ஆகும்.





காதலிக்கு பரிசு கொடுக்கும் காதலன் ஆசாரியின் மகன் என்பதை நிரூபிக்கும் விதமாய் துறை சார்ந்த பரிசு குடுப்பதும்,மரத்தூளைக்கூட கலரிங் பண்ணி சாமிக்கு பூ அர்ச்சனை செய்வதும் ரசிக்க வைக்கிறது.ஆனால் உடனே ஹீரோயின் கையில் முத்தம் குடுப்பது நம்ப முடியாத சீன்.
இவன் நல்லா வருவாண்டா.என வில்லன் குரூப் சொல்வதும்,நாமளும் நல்லா வருவோம் என எடுபிடிகள் சொல்வதும் காமெடி.இந்த இடத்தில்தான் இயக்குனர் ஒரு தவறு செய்கைறார்,படம் காமெடியாக வர வேண்டும் என்பத்ற்காக படம் முழுதும் ஆளாளுக்கு காமெடி செய்வதில் படத்தின் சீரியஸ்னஸ் போய்விடுகிறது.

முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் மேட்டர் மாதிரி சாக்லெட் சாப்பிட்டால் காதல் உணர்வு பொங்கும் என சொல்வது எந்த அளவு எடுபடும் என சொல்ல முடியாது.
படத்தின் ஒரு பாடல் காட்சியை வஸந்தின் நீ பாதி நான் பாதி பட நிவேதா பாட்டின் சாயலில் காட்சிப்படுத்தியதை இயக்குனர் தவித்திருக்கலாம்.

சாமி வருகுது பாடல் காட்சியில் ஹீரோவின் அர்ப்பணிப்பும்,ஈடுபாடும் தெரிகிறது.ஆனால் ஏனோ அது ரசிகர்கள் மனதை கவரவில்லை.( ரஜினி சத்யராஜ் மிஸ்டர் பாரத்தின் என்னம்மா கண்ணு மாதிரி)

காலேஜ் பிரின்சிபால் ஹீரோயினை சமாதானப்படுத்த தோள் மீது கை வைத்ததும், ஹீரோ டச் பண்ணாம பேசுங்க சார் என சத்தமாக சொல்லி விட்டு பின் மெதுவாக அவ்வளவு சின்சியர் லவ் என மெல்லிய குரலில் சொல்வது டாப்,
ஹீரொயின் ஹீரோவிடம் என்னை ஏன் துரத்திட்டே  இருக்கே வா லாட்ஜ்க்கு போலாம் என ஆட்டோவில் அழைத்து செல்லும் பதட்டமான சீனில் பின்னணி இசை பின்னி எடுத்திருக்க வேணாம? யுவனும் சரி,பூபதியும் சரி அதை கண்டு கொள்ளவே இல்லை.அந்த சீரியஸ் காட்சியில் கூட ஆனா லாட்ஜ் வாஅ\டகை நீதான் தரனும் என ஹீரோ காமெடி பண்ணுவது இயக்குனரின் பெரிய சறுக்கல்.

அன்புள்ள சந்தியா நல்ல மெலோடி சாங்க்.மரத்தைக்குடுத்தா ஆசாரி நான் அதை எப்படி வேணாலும் மாத்திடுவேன்,மனசை மாத்தசொன்னா?என கேட்பது டச்சிங் சீன்.
இத்த்னை பிளஸ் இருந்தும் க்ளைமாக்ஸ் சீனில் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ஆக்கி படத்தை ,அதன் தரத்தை குறைத்து விட்டார்.(பாணா காத்தாடி போல சோக முடிவு).
1990களில் தழுவாத கைகள் என்ற விஜய்காந்த் படம் வந்தது .அந்த சமயத்தில் அதே போல் ஹீரோ கேன்சரில் க்ளைமாக்சில் சாவது மாதிரி படம் 34 படங்கள் வந்ததாம்.அது மாதிரி இப்போது ஹீரோ பஸ்ஸில் அடிபட்டு சாகும் சீசன் போல.
மொத்ததில் க்ளைமாக்ஸ் தவிர்த்துப்பார்த்தால் படம் ஓகே தான்.பி சி செண்ட்டர்களில் 50 நாட்கள் கேரண்ட்டி,ஏ செண்ட்டர் சுமாராகத்தான் போகும்.

Thursday, August 12, 2010

கலைஞரின் ரீ மிக்ஸ் வசன கவிதை -விகடன் அம்பலம்

எதேச்சையாக நடந்ததா,ஜூனியர் விகடன் அழகிரி சர்ச்சையின் காரணமாக நடந்ததா தெரியவில்லை.ஆனந்த விகடனில் கலைஞரின் வாழ்த்துச்செய்தி சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது.
எந்திரன்  இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் நேரில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் வாழ்த்துச்செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்,
அதில் “எங்கெங்கு காணினும் வெற்றியடா,ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா” என வசன் கவிதையாக கலைஞர் எழுதி இருந்தார்.

ஆனந்த விகடனின் நானே கேள்வி நானே பதில் பகுதியில் இதை பற்றிய நையாண்டி வந்துள்ளது.பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதை வரிகளின் ரீமிக்ஸ் தான் கலைஞரின் வாழ்த்துச்செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா

இது தான் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதையின் ஆரம்ப வரிகள்.

இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர் தமிழ்நாட்டில் ஏராளம்.

போகட்டும்.நமது வலைப்பூ நண்பர் பரிசல்காரன் அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு பத்திரிக்கைத்துறையில் தடம் பதிக்கும் அவருக்கு நமது வாழ்த்தை சொல்வோம்.
அதே போல் நண்பர் காட்டுவாசி  அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்றும் ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.அவருக்கும் நமது வாழ்த்தை சொல்வோம்.

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +

10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்ளாஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

1.டாக்டர்,எனக்கு ஹெச் ஐ வி (H I V)வைரஸ் இருக்குமோனு பயமா இருக்கு.

ஏன் பயப்படறீங்க?பாசிட்டிவ் திங்க்கிங்க் வேணும்
.
அய்யய்யோ டாக்டர்,ரிசல்ட் பாசிட்டிவ்வா இருந்துடக்கூடாதுனுதான் பயமா இருக்கு.

-----------------------------------


2.என் கணவர் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல டிப்ளமோ படிச்சவர்டி.

அதுக்காக ஒவ்வொரு வீடா போய் லேடீஸ் கிட்ட “உங்க பிராவை குடுங்க,புது டிசைன் மாடலா மாத்தி தர்றேன்னு சொல்றதா?”

---------------------------------

3.மிஸ்,ஒன்றைப்பெறவேண்டும் என்றால் உங்களீடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க வேண்டும் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

டைரக்டர் சார்,சினிமா சான்ஸ் கேட்டா ஏதேதோ புரியாத பாஷைல பேசறீங்க.என்ன வேணும் உங்களுக்கு?நேரடியா விஷயத்துக்கு வாங்க.

----------------------------

4.என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல  வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?

-----------------------------

5.ஆசிரியர் -உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்.

மாணவன் -அனுபவமா?போங்க சார்,அதைப்போய் உங்ககிட்ட எப்படி கூச்சம் இல்லாம சொல்றது?


----------------------------------






6.டீச்சர் -அறிவியல்பூர்வமான சந்தேகம் ஏதாவது இருந்தா கேள்

மாணவன் -வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்?

-----------------------

7.செஸ் பிளேயரை கல்யாணம் பண்ணுனது தப்பா போச்சுடி.

ஏன்?

முதலிரவுல என்னைப்பார்த்து 10 நிமிஷம் கழிச்சு கன்னத்தை தொட்டாரு,அப்புறம் யோசிச்சாரு,20 நிமிஷம் கழிச்சு உதட்டை தொட்டாரு.ஒவ்வொரு மூவ்க்கும்  அரை மணி நேரம் யோசிக்கறாரு.

--------------------------

8.அத்தான்,முதலிரவுல போய் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே,சொன்னா நம்புங்க,இது வரை யாரும் என்னை தொட்டதில்லை.

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா?

-------------------

9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?

-----------------------


10.குருவே,பெண்கள் விஷயத்தில் நீங்க வீக்னு (WEAK)பேசிக்கறாங்களே?

சிஷ்யா,அதை நம்பாதே,ஸ்ட்ராங்க் (STRONG) தான்,அப்படி இல்லைனா ஆசிரமத்துல இத்தனை பொண்ணுங்களை வெச்சு சமாளிக்க முடியுமா?

-----------------------


 (டிஸ்கி)- மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரிக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்க வேண்டாம்.ஏன்னா  அவரு சும்மா ஒரு கிளாமருக்கு.

Wednesday, August 11, 2010

மஞ்ச மாக்கான்னு யாரும் சொல்லாதீங்க

ஃபோட்டோ கலெக்‌ஷனில் இருந்து வந்த மெய்லை பார்த்ததும் மனதில் அப்படியே ஒரு புத்துணர்வு பரவியது.வண்ணங்களிலும்,நல்ல எண்ணங்களீலும் மனிதனின் வாழ்க்கை இரண்டறக்கலந்து விடுகிறது என தோன்றுகிறது.

1.மஞ்சள் மாநகர் என பெயர் எடுத்தது ஈரோடு.
அன்பே,உன் கூந்தல் இருப்பதோ ஈறோடு,பேனோடு
தோட்டக்காரன் பார்ப்பதற்குள் ஒரு ரோஜாவை கையில் எடு.

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்களை இந்தக் குழில போட்டு
மூடுனா என்ன?



3.ராம நாராயணனுக்கு வேற மார்க்கெட் இல்ல,குட்டிப்பிசாசு அவரை குமுறிடுச்சு.ஹீம்,அவர் இருந்தா ஆடி வெள்ளி,ஆடாத சனினு ஏதாவது படம் எடுப்பாரு,நாமும் சான்ஸ் கேட்கலாம்.
4.அன்பே,நீ என்னை கடக்கும்போதெல்லாம் ரோஜாவோடு குல்கந்து கலந்து ஒரு வாசனை வருகிறதே ,எப்படி?
டேய் எருமை,பர்ஃப்யூம் போட்டா பன்னாடைக்குக்கூட பன்னீர் வாசனை வரும்.



5.கண்ணாடி போட்ட பொண்ணுக்கு ஆடி மாசம் மட்டும்தான் கண்ணு தெரியும்னு எந்த மேங்கோ மடையன் சொன்னான்?




6.ஸாரி,மஞ்சப்புத்தகங்கள்,மஞ்சள் பத்திரிக்கைகள் நான் படிக்கறதில்லை.

7.இரட்டை இலை உதிரப்போகுதா?

7.என்னைப்போன்ற வண்டினங்களூக்குப்பிடிச்ச படம் எது? தேன்மொழி



7.டாப் ஸ்டார் ஆகனும்னா இப்படித்தான்,டாப்ல மட்டும் டிரஸ் போடறதா?

8.மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தை ரீமேக் பண்றாங்களாம்.ஹீரோ ராமராஜனாம்.ஹலோ.ஏன் ஓடறீங்க?


9.அட அ தி மு க வும்,தி மு க வும் இணைஞ்சுடுச்சா?






10.இங்கே இருப்பது ஆரஞ்சா?லெமனா?தீர்ப்பு சொல்ல வர்றாங்க தமனா.

அய்யய்யோ,என் ஆளூ வந்துட்டா எமனா


11.ஈரோடு சுத்திக்காண்பிக்கறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இதுதான் ஈரோடு சுத்தினு சொல்றது சரியா?



12.தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதி


13.தம்பி நீ   க்ரோ (crow) மாதிரி இருந்துட்டு என்னை நீக்ரோனு குறை சொல்றியா?






14.என்னது?மேதைல ராமராஜன் கூட ஒரு குத்தாட்டம் டான்ஸ் போடனுமா? ஆளை விடுங்க.







15.இது என்ன மீனா?இன்னும் கல்யானம் ஆகாத மீனா?


16.வாழைப்பழச்சோம்பேறின்னா என்ன அர்த்தம்? அது தெரியல.ஆனா உலகத்துலயே சீப்பா கிடைக்கற ஒரே பழம் இதுதான்.


எந்திரனின் மந்திரன் - ஒரு திறனாய்வு

பவித்ரனின் சூரியன் படம் பட்டையைக்கிளப்பியதற்கு  யார் காரணம் என்று திரை உலகமே குழம்பியது.ஏனெனில் அப்போது ஷங்கர் அந்தப்படத்திற்கு உதவி இயக்குநர்.இந்து,வசந்தகாலப்பறவை போன்ற பல டப்பா படங்களை கொடுத்த பவித்ரன் சூப்பர் ஹிட் எப்படிக்கொடுத்தார் என கோடம்பாக்கத்தில் கேட்காத ஆளில்லை.எஸ்.ஏ.சந்திரசேகரன்,பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கே.டி.குஞ்சுமோனிடம் சேர்ந்து முதல் படமான ஜெண்டில்மேன் கொடுத்தார்.சிக்குப்புக்கு சிக்குப்புக்கு ரயிலே பாட்டு உட்பட பல சூப்பர்ஹிட் பாடல்களுடன் களம் இறங்கிய அந்தப்படம் மெகா ஹிட்.

          2வது படம் அதே தயாரிப்பாளருக்கு காதலன் .இந்து வில் ஹீரோவாக பிரபுதேவா செய்த முதல்படம் தோல்வி அடைந்தபோதும்,அவரது நடனத்திறமை மீதும்,தன் மீதும் நம்பிக்கை வைத்து ஜாலியான லவ் ஸ்டோரி எடுத்தார்.அந்தப்படத்தில்தான் பாடல் காட்சிகளீல் ஜிம்மிக்ஸ் வேலைகளில் தனது சித்து வேலைகளை காண்பித்தார்.கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தனது உச்ச பட்ச பதிவை தமிழ்ப்படத்தில் தடம் பதித்தது அப்போதுதான்.

             3வது படம் இந்தியன்.கமல் 2 வேடங்களில் வந்தாலும் இந்தியன் தாத்தா வேடமும்,கமலின் மேக்கப்பும் பேசப்பட்டது.கமலுடன் ஷூட்டிங்க் டைமில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.2 திறமைசாலிகள் ஒன்றாக வேலை செய்கையில் இது சகஜம்தான்.கவுண்டமணியின் காமெடி டிராக் படத்துக்கு தேவை இல்லை ,படத்தின் சீரியஸ்னெஸை காமெடி பாதிக்கும் என கமல் நினைத்தார்.ஆனால் எண்டெர்டைன்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட்டான ஷங்கர் விடாப்பிடியாக நின்று காமெடி டிராக்கை மெருகு ஏற்றினார்.அதே போல் மாயா மச்சிந்த்ரா பாடல் காட்சியில் கமல் சிங்கம் போல் கிராஃபிக்ஸில் மாறுவது போல் எட்த்தது கமலுக்குப்பிடிக்கவில்லை.3 மாசம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பிறகு காம்ப்ப்ரமைஸ் ஆகி கமல் நடித்தார்.இந்தப்படம் பெற்ற மெகா வெற்றியால் ஷங்கர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உய்ர்ந்தார்.


           ஷங்கர் படம் டைரக்ட் பண்ண ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறார்.ஒரு படம் சீரியஸ்,ஒரு படம் ஜாலி.அதன்படி 4வது படம் ஜீன்ஸ்.ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஷங்கர்க்கு இந்தப்படம் அவரது முந்தைய படங்களோடு
ஒப்பிடுகையில் சுமார் ரகம்தான்.ஐஸ்வர்யாராயின் அழகும்,ஏ ஆர் ரஹ்மானின் இசையும் படத்தை காப்பாற்றின. பிரசாந்த்,நாசர்,ஐஸ் என ஆளாளுக்கு டபுள் ஆக்ட் நடிப்பு கொடுத்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.அன்பே அன்பே கொல்லாதே பாடல் வைரமுத்துவின் உச்சபட்ச வர்ணனையை கொணர்ந்தது.ஃபிஃப்டி கே ஜி தாஜ்மஹால் (50 KG) டாக் ஆஃப் சிட்டி ஆனது.

       5வது படம் முதல்வன்.இது ரஜினிக்காக உருவாக்கப்பட்டது,ஆனால் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் (கலைஞர் பீரியட்)ரஜினி அந்தப்படத்தில் நடித்தால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரும் என ரஜினி நினைத்ததால் அர்ஜூன் புக் ஆனார்.இடைவேளை வரை படம் செம ஸ்பீடாக இருந்தது.பாலகுமாரன் வசனத்தை விட அமரர் சுஜாதாவின் வசன்ம் ஷங்கருக்கு நன்றாக செட் ஆனது.பட்டி தொட்டி எங்கும் படம் பட்டையை கிளப்பியது.
                    6வது படம் பாய்ஸ்.இளமைத்துள்ளலாக எடுக்க நினைத்தவர் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி முகம் சுளிக்கும் அளவு  ஏ படம் ஆனது.பத்திரிக்கைகளின் கடுமையான விமர்சனத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் படத்தின் ஸ்டில்லை போட்டு ச்சீ மோசம் என ஒரே ஒரு கமெண்ட் மட்டும் போட்டு ஒரு முழு பக்கத்தை அப்படியே பிளாங்க்காய் விட்டது.ஆனால் இலங்கையில் இது சூப்பர் ஹிட் ஆனது.
               7வது படம் அந்நியன்.விக்ரம்க்கு இது மாஸ்டர்பீஸ் படம்.லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் கேரக்டர்.ரெமோ,அம்பி,அந்நியன் என 3 வெவ்வேறு கேரக்டரில் பிரமாதப்படுத்தினார்.குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் சடக் சடக் என அந்நியன்ஆகவும்,அம்பி ஆகவும் அவர் காண்பித்த முக பாவனைகள்  ஏ க்ளாஸ் ரகம்.உயிரைக்குடுத்து நடித்திருந்தாலும் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.ஆனால் தெலுங்கில் அபராஜித்டு என்ற பெயரில் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
                 இந்தக்கால கட்டத்தில்தான் ஷங்கர் ஒரே மாதிரி கதைகளை எடுக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது.அநியாயம் எங்கு நடந்தாலும் ஹீரோ அதை தட்டிக்கேட்பார்,இருப்பவர்களீடம் பறித்து இல்லாதவர்களிடம் கொடுப்பார்.இந்த ஒரே டைப் மாவை அவர் வித விதமாக தோசையாக ,ரோஸ்ட்டாக மாற்றி மாற்றிஉருவாக்குகிறார் என்பதே அந்தக்குற்றச்சாட்டு.
ஆனால் ஷங்கர் அதற்கெல்லாம் அஞ்சவில்லை.
                    முதல் முதலாக ஷங்கர்ஃபார்முலாவை மீறினார்,அதாவது ஒரு  படம்  சீரியஸ்,ஒரு படம் ஜாலி.என்பதை தொடர்ந்து 7 படங்களாக கடைப்பிடித்து வந்தவர் 8வது படத்தை ஜாலியாக எடுக்க வேண்டியது.ரஜினிக்காக அதை மாற்றினார்.இந்தப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்தியாவின் சிறந்த டைரக்டர்,ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடி அதிக சம்பளம் பெறும் நடிகர் இணைவது என்றால் சும்ம்மாவா?ஆனால் எதிர்பார்த்தபடி மெகா ஹிட் ஆகவில்லை.படத்தில் ரஜினி இளமையாகக்காட்டப்பட்டது பேசப்பட்டது.மற்றபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
                  அடுத்து ஷங்கரின் ட்ரீம் புராஜக்ட் ரோபோ. 6 வருடங்களூக்கு முன்பே கமலுக்காக தயாரான ஸ்கிரிப்ட்.அமரர் சுஜாதா கமலை மனதில் வைத்து இதற்கான ஸ்கிரிப்டை பக்காவாக உருவாக்கி விட்டார். ஆனால் ஏனோ கமல் விலகி விட்டார்.அடுத்து ஷாருக்கான்.அவரும் சில நாட்களீள் முடியாது என கை விரித்து விட்டார்.என்ன காரணம் என்பதை கமல்,ஷாருக்,ஷங்கர் 3 பேரும் வெளியிடவே இல்லை.
            இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிற இன்னொரு முக்கிய காரணம் உண்டு.ஷங்கரின் வழக்கமான ராபின்ஹூட் ஃபார்முலா இதில் இல்லை.இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என சொல்லப்படுகிறது.(ஆனால் எஸ் ஜே சூர்யாவின் நியூ படம் கூட ஒரு    சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்தான்)
 ரஜினியின் நீண்ட நாள் ஆசை ஐஸுடன் ஜோடியாக நடிப்பது.அது நிறைவேறி விட்டது.படத்தின் பாடல்கள் வெளீயாகி விட்டது.சூப்பர் என சொல்ல முடியாவிட்டாலும் ஓகே ரகம்தான்.ஏ ஆர் ரஹ்மான் மியூசிக்கில் ஒரு மேஜிக் உண்டு,முதல் முறை கேட்கும்போது சுமாராகத்தோன்றுவது படம் வந்த பிறகு ஹிட் ஆகி விடும்.
                      இன்னொரு செண்ட்டிமெண்ட்டும் தமிழ் சினிமாவில் காலம் கால்மாக இருந்து வருகிறது.மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களும் சரி,நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படங்களூம் சரி,பெரிய வெற்றியை தந்ததில்லை.பீமா,குற்றப்பத்திரிக்கை,பாபா,ஆளவந்தான், போன்ற படங்களெல்லாம் அப்படிப்பட்ட படங்களே.

        இவற்றை எல்லாம் மீறி எந்திரன் எதிர்பார்த்த வெற்றி பெற்றால் நமக்கு மகிழ்ச்சியே.அதே சமயம் ரசிகர்கள் அந்தப்படத்தின் மேல் ஓவராக எதிர்பார்ப்பை வைக்காமல் இருப்பதும் நல்லது.