Tuesday, August 06, 2024

ARTIST - ஆர்ட்டிஸ்ட் (2013) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ தந்தி ஒன் ,

       

    சிறந்த இயக்குனர் , சிறந்த  நடிகர் , சிறந்த  நடிகை  என்று கேரளா மாநில அரசின்  மூன்று விருதுகளை வென்ற படம் இது       , பரித்தோஷ   உத்தம் எழுதிய  " ட்ரீம்ஸ்  இன்  த  ப்ரஷ்ஷியன்  ப்ளூ "   என்ற நாவலைத்தழுவி    அமைக்கப்பட்ட  திரைக்கதை இது .இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில்  உருவான படம் 

கமல் + மாதவி  நடிப்பில் உருவான  ராஜபார்வை படத்தின்  பாகம்  2  எனவும் சொல்லலாம்       


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பிரமாதமான ஓவியர் . நாயகி அப்போதுதான் புதுசா ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்திருக்கும்  மாணவி .நாயகனின்  அட்டகாசமான ஓவியத்திறமையைப்பார்த்து  நாயகி அவனை  காதலிக்கிறாள் நாயகனுக்கு நாயகி மேல் பெரிதாகக்காதல் எல்லாம்  இல்லை .அவனது முழு  கவனமும்  ஓவியத்தின் மீது தான் . இருந்தாலும்  நாயகியின் காதலை  ஏற்றுக்கொள்கிறான் 


நாயகன் ஒரு முஸ்லீம் , அப்பா பெரிய தொழில் அதிபர் . அப்பாவின்  தொழிலுக்குத்தன்னை இழுத்து விட்டால்  என்ன  செய்வது ? நம்  கனவு பலிக்காது  என நாயகன் அப்பாவை  விட்ட  விலகியே  இருக்கிறான் 


நாயகி ஒரு இந்து பிராமின் பெற்றோ ரின் எதிர்ப்பை மீறி  நாயகனுடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறாள் . நாயகி தன சிறு சேமிப்பில் இருந்த தொகையை எடுத்து  தனி வீடு வாடகைக்குப்பார்த்து நாயகனுடன் குடியேறுகிறாள் .படிப்பை நிறுத்தி விட்டதால் காலேஜ்க்குப்போகவில்லை . ஆபிஸ்  வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாள் 


காதல் வாழ்க்கை நன்ராகப்போய்க்கொண்டிருந்த நேரம் ஒரு சாலை விபத்தில் நாயகனுக்குக்கண்  பார்வை  பறி போகிறது .இருந்தாலும்  மனம்  தளராமல்  நாயகனுக்கு  உறுதுணையாக நாயகி இருக்கிறாள் 


ஆனால் நாயகன் நாயகியின் தியாகத்தைப்புரிந்து கொள்ளாமல் அவள் மீது எரிந்து விழுகிறான் . இயலாமையை , ஆற்றாமையை நாயகி மீது காட்டுகிறான் 


பார்வை பறி போனாலும்  ஓவியம் வரைந்தே சாதிக்க வேண்டும் என்பதில் நாயகன்  பிடிவாதமாக இருக்கிறான் 



நாயகன் , நாயகி இருவருக்கும் காலேஜ் மேட்டாக இருந்த  வில்லன்   இதுதான் தருணம் என்று நாயகியை அடைய  முயல்கிறான் .இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான்  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பகத் பாசில் அற்புதமான  நடிப்பை வெளிப்படுத்துகிறார் .அவரது இளமையான தோற்றம் கொள்ளை அழகு . பார்வை பறி போன பின் அவர் காட்டும்  எரிச்சல்  அருமை 


நாயகி ஆக ஆன் அகஸ்ட்டின் நாயகனை தூக்கி சாப்பிடும் நடிப்பு . ஒப்பனை இல்லாமல் வசீகரம் காட்டும் ஓவிய  முகம் 


வில்லன்  ஆக  ஸ்ரீ ராம்   ராமச்சந்திரன் செம பர்சனாலிட்டியாக  இருக்கிறார் . நாயகனை விட  வில்லன் தோற்றப்பொலிவில் அசத்துவது அபூர்வம் 


முக்கியமான பாத்திரங்ளாக  மூன்று பேரை மட்டும் வைத்து திரைக்கதை நகர்த்துவது  அருமை 


பிஜிபால்  இசை  அருமை . . ஷாம் தத்  சைமுதீன்  தான் ஒளிப்பதிவு.செம . வினோத் சுகுமாறன்  எடிட்டிஙகில்  படம் 104  நிமிடங்கள் ஓடுகிறது .


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  .இயக்குனர் ஷ்யாம் பிரசாத் 



சபாஷ்  டைரக்டர்

1  லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எல்லாம்  சரிப்படாது ,  பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் தான்  சிறந்தது  என்ற கருத்தை மறை முகமாகச்சொன்ன விதம்  


2  நாயகன்  - நாயகி   இருவரின் அற்புதமான  நடிப்பு , கெமிஸ்ட்ரி 



3 ஆர்ட் பிலிம்  போல திரைக்கதை நகர்ந்தாலும் கமர்ஷியல்  ரசிகர்களும் பார்க்கும்  வண்ணம்  இயக்கிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரு நல்ல ஓவியம் வரைஞ்சவங்கள் உடைய  அனுபவத்தைக்குறிக்கும் .அவங்க ஆசை , அனுபவம் எல்லாமே  அதில் இருக்கும் 


  2  உன்  சந்தோஷத்துக்காகத்தான்  சொல்றோம் 


 தயவு செஞ்சு மத்தவங்க சந்தோஷத்துக்காக  நீங்க பொறுப்பெடுத்துக்காதீங்க , உங்க  பாரம் தான்  அதிகம் ஆகும் 


3  ஒரு ஓவியத்துல ரியாலிஸ்ட்டிக் இருக்கணும்னு அவசியம் இல்லை 


4 நம்மால பின்னால (  கடந்த காலம் ) போய் எதையும் மாற்ற முடியாது


5  வஞ்சசனையோட நிறம் தான்  நீலம், ஏன்னா  அதுதான்  உலகத்தை சுத்தியும் இருக்கு  



 6   தியாகம் செஞ்சவங்களுக்கு   இந்த உலகம் காயத்தைத்தான் ,கொடுக்கும். அதுதான் வாழ்க்கை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின் அப்பாவை ஒரு காடசியில்  கூட  காட்டவில்லை .மகன் விபத்தில் மாட்டி பார்வையை இழந்தான் என்பதே  அவருக்குத்தரியாதா? பணத்துக்காகஜ நாயகி அவ்ளோ கஷ்டப்படும்போது நாயகன் நினைத்தால் அப்பா  மூலம்  உதவி பெற்றிருக்கலாமே? 


2  நாயகியின்  அம்மா, அப்பா  அப்பப்போ    போனில் விசாரிப்பதோடு சரி , மகளை நேரில் வந்து பார்க்க  மாட்டார்களா?


3  வில்லனின்  எண்ணம்  நாயகிக்கு  முதலிலேயே  தெரிந்து விடுகிறது .அப்பவே அவனைக்கட் பண்ணி  இருக்கலாமே? 



4   ரூ  30,000  சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு  நாயகி  சாதா வேலைக்கு ,மாறுவது  நம்பமுடியவில்லை .  நாயகனை  கவனித்துக்கொள்ள   குறைந்த சம்பளத்தில் ஆள் வைத்திருக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எல்லோருக்கும் படம் பிடிக்காது .பொறுமை மிகத்தேவை .பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்  ரேட்டிங்க் 3/ 5 


Artist
Film poster
Directed byShyamaprasad
Written byShyamaprasad
Based onDreams in Prussian Blue
by Paritosh Uttam
Produced byM. Mani
Starring
CinematographyShamdat Sainudeen
Edited byVinod Sukumaran
Music byBijibal
Production
company
Sunitha Productions
Distributed bySunitha Productions
Release date
  • 30 August 2013
CountryIndia
LanguageMalayalam

Monday, August 05, 2024

மூன்றாம் மனிதன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )@ சிம்ப்ளி சவுத் , யு டியூப்

   


     அறிமுக இயக்குனர் ஆன ராமதேவ்  இயக்கி நாயகன்  ஆக அறிமுக ம்  ஆகி இருக்கும் படம் இது . குடி கூடாது , கள்ளக்காதல் கூடாது என்ற சோசியல் மெசேஜ் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார் .இந்த இரண்டாலும் பர்சனலாக ரொம்பவே பாதிக்கப்பட்ட  ஒருவரால் தான் இப்படித்திரைக்கதை அமைக்க முடியும் . க்ரைம்  அல்லது சஸ்பென்ஸ் த்ரில்லர்  ஆக இருந்தாலும்  குடும்பப்பாங்கான  படமாக அமைத்த விதம்  குட் .பெரிதும் கவனிக்கப்படாத  இப்படம்  அண்டர்  ரேட்டட்  மூவியாக எனக்குத் தோன்றுகிறது .  வன்முறை இல்லாத , டமால் டுமீல் இல்லாத , ஹீரோயிசம் இல்லாத படம் பார்க்கஆசைப்படுப வர்கள் பார்க்கலாம்                


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு கடையில் சேல்ஸ்  கேர்ள்  ஆகப்பணிபுரிகிறார் . நாயகன் உடன் பெற்றோர்   நிச்சயித்த திருமணம் நடக்கிறது . இருவருக்கும் ஒரு   குழந்தை பிறக்கிறது . நாயகனுக்கு சில கடன் பிரச்சனை      காரணம் ஆக   வெளியூரில் தங்கி  வேலை பார்க்க  நேரிடுகிறது . அப்போது குடிப்பழக்கம் வந்து விடுகிறது .சம்பாதிக்கும்  பணத்தில் பாதியை  குடிக்க செலவிடுகிறார் 



நாயகி இப்போது   ஒரு போலீஸ்   இன்ஸ்பெக்ட்டர்  வீட்டில் பணிப்பெண்ணாக  பணிபுரிகிறார் .இவர் தான் கதையின் வில்லன்  . இவரது மனைவி  தான்  வில்லி . வில்லி க்கு  தன  கணவன் மேல் ஒரு  சந்தேகம் . பணிப்பெண்ணுடன்  அவருக்குத்தொடர்பு இருக்குமோ? என சந்தேகிக்கிறார் 



இந்த விஷயத்தை  தன  பள்ளித்தோழன்  உடன்  பகிர்கிறார் . வீட்டிலேயே ஒரு ஹிடன் கேமரா செட் பண்ணி  கணவனை உளவு பார்க்கிறார் . ஆனால் அவர் சந்தேகப்பட்டபடி  கணவருக்கும் , பணிப்பெண்ணுக்கும்  இடையே எதுவும்  இல்லை 


 ஆனால் இப்போது  இங்கு புதுப்பிரச்சனை  முளைக்கிறது . பள்ளித்தோழன்  இதுதான் சமயம்  என வில்லி குளிப்பதை   வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வில்லியை  மிரட்டுகிறான் 



இந்த விஷயம் வில்லனுக்குத்தெரிந்து விடுகிறது . தன மனைவி இப்படி ஆகி விட்டாளே  என்ற ஆதங்கத்தில்   தன சோகத்தை  தன பணிப்பெண்ணிடம் பகிர்கிறார் .இதற்குப்பின் தான்   வில்லனுக்கும் நாயகிக்கும்  தொடர்பு உண்டாகிறது 


இப்பொது வில்லன் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான் . இந்தக்கொலையை செய்தது யார்? 


1  வில்லனின் மனைவி ஆன வில்லியா? 

2 வில்லனின் கள்ளக்காதலி ஆன நாயகியின் கணவனா? 

3 வில்லியின் பள்ளித்தோழனா?

4    வில்லனே  திட்டம் போட்டு  தான் கொலை ஆனது போல செட்டப்  செய்தாரா? 


 என்பதுதான் மீதி திரைக்கதை 


இந்தகேசை  டீல் செய்யும் போலீஸ் ஆபிஸராக கே  பாக்ய ராஜ்   கச்சிதமான நடிப்பு ஆனால் நான் சிகப்பு மனிதன் அளவுக்கு கலகலப்பு இல்லை .


 வில்லி ஆக சோனியா அகர்வால் .அழகாக இருக்கிறார் . ஆனால் அவருக்குக்காட்சிகள்  குறைவு 


 நாயகி ஆக பிரணா  மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கும்  கேரக் டர் . பிரமாதமாக செய்திருக்கிறார் . நாயகனாக இயக்குனர் ராம்தேவ்  பரவாயில்லை ரக நடிப்பு 


ஒளிப்பதிவு , இசை ,ஆர்ட் டைரக்ஸன்  போன்ற டெக்கினிக்கல் அம்சங்கள் பரவாயில்லை ரகம் 


பல காட்சிகள் சொல்வதெல்லாம்  உண்மை டி வி நிகழ்ச்சி போல் இருப்பதும் , ஓவர் டிராமாட்டிக்காக இருப்பதும்  மைனஸ் 


சபாஷ்  டைரக்டர்


1   கே பாக்யராஜ் , சோனியாஅகர்வால்  ஆகிய   இருவரை மட்டும் தெரிந்த முகங்களாக புக் பண்ணிவிட்டு மற்ற  அனைவரையும்  புதுமுகங்களாக  உலவ விட்டது  தைரியம் தான் 


2  நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்த பாணியும்    ஓகே   ரகம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உலகத்தில் எத்தனை   சந்தோஷங்கள் இருந்தாலும்   குடிகாரனுக்குக்குடி தான்  முக்கியம் 


2   யோவ் , அன்பு , பேர்ல அன்பை  வெச்சுக்கிட்டு  ஒயிப்  கிட்டே  அதைக்காட்டலைன்னா  எப்படி ? 


3    சாராயம் விக்கறவன்  எல்லாம்  வி ஐ பி , அதைக்குடிக்கிறவன் எல்லாம்  அக்யுஸ்ட் 


4  போதைல இருக்கறவன் போய் பேசமாட்டான் 


5   உலகிலேயே அழகான விஷயம் புருஷன் கிட்டே  பொண்டாட்டி  வெட்கப்படுவதுதான் 


6   பொண்டாட்டி    காட்டாற்று வெள்ளம்  மாதிரி , புருஷன்   என்னும் அணையில் அடங்கி இருந்தாதான்  யூஸ்  ஆகும் இல்லைன்னா  கடலில் கலந்து வேஸ்ட் ஆகும் 


7    இப்படி  எல்லாம் நடக்கும்னு  நான் கனவுலயும்  நினைக்கலை 


நான் நினைப்பது  நடக்கணும் 


8    நமக்குப்பிடிச்ச மாதிரியே  எல்லாம்   நடக்கும்னு நினைச்சா  கடவுளே   எதிரி ஆவான் 


9 பொண்ணுங்க எவ்ளோ உயரத்துக்குப்போனாலும்   கற்பு தான் அவங்க  கவுரவம் 


10  உலகத்தில் இருக்கும்  ஒவ்வொரு மனுசனுக்கும்   ஒரு  போதை , அது  தலைக்கு ஏறிட்டா  அவனைத்திருத்தவே  முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    படத்தில்  ஏகப்பட்ட கள்ளக்காதல்கள் .ஓவர் டோஸ் . நாயகிக்கும் , வில்லனுக்கும்  கள்ளக்காதல், இரு வேறு இளைஞர்கள் அவரவர் அம்மா வுக்கு தலா ஒரு  கள்ளக்காதல் .வில்லிக்கும்  பள்ளித்தூழனுக்கும் கள்ளக்காதல்  அமைக்க  முயற்சி 


2  ஒரு  சாதா  ஆள்  ஒரு  போலீஸ்  ஆபிசரின் மனைவியை மிரட்ட துணிய  மாட்டான் .லாடம்  கட்டிடுவாங்கனு தெரியாதா? 


3  திருமணம் ஆன  வில்லி க்கு   செமன் ஸ்மெல்   தெரியாமல்  இருக்குமா? டெஸ்ட் பண்ண லேபில்  தருவது எதனால் ? 


4   கள்ளக்காதலனுடன்  வீடியோ சேட்டிங்   செய்யும்  நாயகி ஜன்னல் கதவைத்திறந்து வைத்துக்கொண்டா செய்வார்? 


5 வில்லி   தன பள்ளித்தோழனுடன் பேசிய கால் ஹிஸ்ட்ரியை    அழிக்காமல்  தூங்கப்போவது எப்படி ? புருஷன் போலீஸ் . ஜாக்கிரதையா  இருக்க  மாட்டாரா?  


6   நாயகியின்  வீட்டுக்கு அடிக்கடி  வரும் இளைஞர்  நாயகியின்  கணவரை  போட்டோவில் கூட பார்த்தது இல்லையா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஸ்லோவாக மூ வ்  ஆகுது . யூ டியூபில் கிடைக்குது . பார்க்கலாம், ரேட்டிங்  2.25 / 5 

Saturday, August 03, 2024

மழை பிடிக்காத மனிதன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (மாமூல் மசாலா )

               


        கேப்டன்  விஜயகாந்த்தின்  கடைசிப்படமாக  இது  அமையும்  என  சொல்லப்பட்டதால்  எதிர்பார்ப்புக்கு  உள்ளான  படம், ஆனால் அவர்  நடிக்கவில்லை 


 காத்திருந்த காதல் (1997) முதல்    "காதல் " (  2004)  வரை   15  படங்களில் ஒளிப்பதிவாளராகப்பணியாற்றிய   விஜய் மில்டன் இயக்குநர்   அவதாரம்  எடுத்த  முதல் படம்  அழகாய் இருக்கிறாய் , பயமாய்  இருக்கிறது . (2006)  டைட்டிலைப்போலவே படமும்  கவித்துவமாக  இருந்தது . எட்டு  வருட இடைவெளிக்குப்பின்  கோலிசோடா (2014)  10 எண்றதுக்குள்ள (2015) , கடுகு (2017) ,கோலிசோடா  பாகம் 2  ( 2018)  ஆகிய நான்கு படங்களை  இயக்கியவர்  பைராகி (2022) என்ற கன்னடப்படத்தை  இயக்கிய  பின்  இந்தப்படத்தை  இயக்கி உள்ளார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு அண்டர்கவர் ஏஜெண்ட் . அரசியல்வாதியின் மகனைப்போட்டுத்தள்ளி  விடுகிறார் . அவரைப்பழி வாங்க  அந்த  அரசியல்வாதி  துடித்துக்கொண்டு இருப்பதால்  ஒரு விபத்தில் நாயகன் இறந்தது போல செட்டப்  செய்து நாயகனின்   ஹையர் ஆபிஷர்   நாயகனை அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுகிறார் 


 வந்த இடத்தில்  இன்னொரு வில்லன் . வட்டிக்குக்கடன்  கொடுத்து மக்களைக்கொடுமைப்படுத்துபவன் . நாயகியின் அப்பாவை  வில்லன்  முடித்து விட நாயகன் வெகுண்டு எழுந்து  அவன் கொட்டத்தை அடக்க நாயகன்  உயிருடன் இருக்கும் மேட்டர்  எல்லோருக்கும்  தெரிந்து விடுகிறது . இதற்குப்பின்  என்ன நடக்கும் என்பதை  சின்னக்குழந்தை கூட சொல்லும் 


நாயகன்  ஆக  விஜய் ஆண்டனி.  பாட்ஷா  படம்   இவரை ரொம்ப  பாதித்திருக்கு போல .வழக்கம் போல முகத்தில் நடிப்பு வரவில்லை 


 நாயகி ஆக்  மேகா   ஆகாஷ்  . அழகாக இருக்கிறார் .படத்தில் ஒரே ஆறுதல் அவர் தான் 


 சரத் குமார் , சத்ய ராஜ் இருவரும் வீணடிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் .


சரண்யா  நல்ல குணச்சித்திர  நடிப்பு 


வில்லன் ஆக கன்னட நடிகர் தனஞ்செயா  .பாவம் . 


தலைவாசல் விஜய் குட் ஆக்டிங் 


அச்சு ராஜாமணியுடன் இணைந்து இசை அமைத்து  இருக்கிறார்   விஜய் ஆண்டனி . சுமார் தான் 


அந்தமான் லொக்கேஷனை  ஒளிப்பதிவாளர்  அழகாகப்பயன்படுத்தி இருக்கிறார் 

எடிட்டிங்  அதிகாரப்பூர்வமாக  யாரோ ஆனால் அந்த அபிசயல் ஆக  விஜய் ஆண்டனி தான் போல 



சபாஷ்  டைரக்டர்


  1   இயக்குனர்க்கு நாயகன் மீது என்ன  கோபமோ? காமெடியன் கேரக்ட்டர் மூலம்  கலாய்த்து  இருக்கார் . ஆரம்பத்துல   இருந்தே  ஒரே மாதிரி லுக்தானா? போர்  அடிக்கல?   எனக்கேட்பது போல  நாயகனின் ஒரே மாதிரி நடிப்பை  நக்கல்  அடித்த  விதம் 


2  1985  ல் ரிலீஸ் ஆன காக்கிசட்டை படத்தில் சத்தியராஜ் பேசிய தகடு தகடு டயலாக்கை பிளேடு பிளேடு என  மாற்றிப்பேச வைத்து  டயலாக்  ரைட்டர்   சம்பளத்தை  மிச்சம்  செய்தது 


3    1995ல் ரிலீஸ் ஆன ஆசை  படத்தில்  நாயகி - நாய்   பாண்டிங்கை  சுட்ட விதம்  


4   ஹிஸ்ட்ரீ  ஆப் வாயன்ஸ் படத்துக்கு  அபிசியல்   ரைட்ஸ் வாங்கி லியோ எடுத்தாலும் , பத்துகாசு செலவு  பண்ணாமல் அந்த காபி ஷாப் கான்செப்ட்டை  ஆட்டையைப்போட்ட விதம் 

5   பிளேடு  பைட் கான்செப்ட் புதுசா இருக்கு , சுட்டதோ ஒரிஜினல் ஐடியாவோ நல்லாருக்கு

6  படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்  ஆன ஒரு மேட்டரை ஓப்பனிங்க்ல எதனால் வைத்தார்கள்  என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர்  பதில் அளிக்கும்போது  எனக்கே அது தெரியாது , என் நாலெட்ஜ்க்கு வராமல் யாரோ மாற்றி எடிட் செய்து விட்டார்கள்  என சமாளித்தவிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  அடுத்து என்ன? ன்னு தெரிஞ்சா  வாழ்க்கை ருசிக்குமா? என்ன? 


2  ஒருத்தரைப்பற்றி ஒருத்தர்  தெரிஞ்ச்சுக்கும்  முயற்சியில் தான்  இந்த  உலகமே   இருக்கு 


3   சரியா இருப்பதை விட     நிம்மதியா   இருப்பது  முக்கியம் 


4  என்ன சார் ?  தள்ளிட்டு வர்ற  வண்டிக்கெல்லாம்  பேப்பர்  கேட்கறீங்க? 


 பேப்பர் இல்லைனு தானே வண்டியைத்தள்ளிட்டு  வர்றிங்க? 


5   என்ன? 


 இல்லை , இந்தப்பக்கமா  வந்தேன் 


எதுக்கு? 


 அந்தப்பக்கமாப்போறதுக்கு , ஹிஹி 


6  எல்லாரும் குடிச்சுட்டு  விழுவாங்க , நாம  விழுந்துட்டுக்குடிக்கிறோம் 


7     பர்மா எங்கடா?


 மேப்ல போய் தே டு, இங்கே வந்து கேட்டுட்டு இருக்கே? 


8  உன் பேரு தான் பர்மாவா?உன்  தம்பி பேரு மலேசியாவா? 


9   ஒவ்வொரு சைலன்ஸ் க்குப்பின்னாலும்  ஒரு  சத்தம்   இருக்கும் 


10  இந்த  உலகத்துல  எல்லாமே   நாம  ஆசைப்பட்ட   விதமாவா நடக்குது ?         ஆனா அதுக்காக  நாம  ஆசைப்படாமயா  இருக்கோம்? 


11      நான்  காத்து மாதிரி ,ஒரே இடத்துல  இருக்க  முடியாது , இருக்கவும் கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  சரத் குமார் கேரக்டர்  டிசைனில் ஒரு தெளிவில்லை . ஆரம்பித்த்தில்  இருந்தே நாயகனைக்காப்பாற்றத்துடிப்பவர்  திடீர் என ஹையர்  ஆபிசர்  சொன்னதும் கொல்லத்துடிக்கிறார் 


2  சத்யராஜ்  கேரக்ட்டர்  வலுவாக அமைக்கப் படவில்லை 


3   விஜய் ஆண்டனியி ன் ஆரம்ப காலபபடங்களான நான் , சலீம் , பிச்சைக்காரன்  இவை எல்லாம் கதைக்காக கவனிக்கப்பட்டவை . ஆனால்  தன்னை ரஜினி ஆக  , விஜய் ஆக நினைத்துக்கொண்டு அவர் ஓவர் ஹீரோயிசம்  செய்வது கடுப்பாக இருக்கிறது 


4   நாயகனுக்குப்பிடித்த நாயை வில்லன் சித்ரவதை செய்து மிரட்டுவது எல்லாம்  கேவலமான   ஐடியா 


5  தலையில் பட்ட  காயத்துக்கு வெள்ளைத்துணி பேண்டேஜ் போட்டுக்கொள்ளும் நாயகன் அடுத்த ஷாட்டில் பச்சைத்துணி ஆக  மாறுவது  பார்க்கவில்லை   போல 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இந்தப்படத்துக்குக்கிடைக்க  இருக்கும் மரண அடி விஜய் ஆண்ட்டணியை இது போன்ற மசாலாக்குப்பைகளில்  இனி நடிக்க விடாமல் செய்யட்டும் . டப்பாப்படம்  , ரேட்டிங் 1.5 / 5 .விகடன் மார்க் 34 , குமுதம் ரேங்க்கிங்   சுமார் 

LEVEL CROSS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் )

     


   மூன்றே  நடிகர்கள் , ஆளுக்கு தலா ரூ 10  லட்சம் சம்பளம் , காஸ்ட்யூம்  செலவு ரூ  25,000 மொத்தமே படத்தின் மொத்த  பட்ஜெட்டே  10  லட்சம்  ரூபாய் தான் இருக்கும் , ஆனால் பிரமாதமான திரைக்கதை , ரசிகர்களின் அமோக வரவேற்பில்  தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது . 100 கோடி சம்பளம் கொடுத்து  500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம்  டப்பா ஆகும் கால கட்டத்தில்  இது போல திரைக்கதையை நம்பும் படங்கள்  வெற்றி பெறுவது மிக்கமகிழ்ச்சி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஆள் அரவமே இல்லாத பாலைவனம் போன்ற ஒரு  பகுதி . அங்கே  ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங் . அங்கே பனி புரியும்  நாயகன் . அவனுக்குத்துணைக்கு யாரும் இல்லை . அங்கேயே வீடு கட்டி  பணி  செய்து வருகிறான் .தினசரி  3  அலல்து  4  ரயில்கள் அந்த வழியாக வரும் . பச்சைக்கொடியைக்காட்டி  அனுப்பி விட்டால்  வேலை ஓவர் .சமையல் செய்து வாழ்ந்து வருகிறான் 


ஒரு நாள்  ரயில் அந்த வழியே போகும்போது ஒரு பெண்  ரயிலில் இருந்து குதித்து  வீழ்ந்து  மயக்கம் ஆகிக்கிடப்பதைப்பார்க்கிறான் . அவள் தான் நாயகி . அவளைத்தன்  வீட்டுக்குத்தூக்கி வந்து மயக்கம் தெரிவிக்கிறான் . இவனைக்கண்டதும் நாயகி அரண்டு விடுகிறாள் 


ஆரம்பத்தில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்ததாக பொய் சொல்லும் நாயகி பின்  சொல்வது ...  அவள் கணவன் ஒரு சைக்கோ .அவனிடம் இருந்து தப்பிக்க இப்படி ஓடும் ரயிலில் இருந்து குதித்தேன் என்கிறாள் 


நாயகியின் கணவனை  வில்லன் என வைத்துக்கொள்வோம் . நாயகியின்  கோணத்தில் நாயகி சொல்லும்  வில்லனின் கதை இது .வில்லனுக்கு ஆல்ரெடி திருமணம் ஆகி விட்டது ஆனால் மனைவி என்ன காரணத்தாலோ  தற்கொலை செய்து கொள்ள மனநல பாதிப்புக்கு உள்ளாகும்  வில்லன்  மன  நல  நிபுணர்  ஆன நாயகியிடம்  சிகிச்சைக்கு வருகிறான் 


வில்லன் , நாயகி இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் வில்லன் நாயகியிடம் தன காதலைத்தெரிவிக்கிறான் . நாயகி ஓகே சொல்கிறாள் , இருவருக்கும் திருமணம் நடக்கிறது . அதற்குப் பின் தான்  வில்லனின்  நடவடிக்கையில் மாற்றம் .அவன் ஒரு  ட்ரக் அடிக்ட் . நாயகியை அடிக்க ஆரம்பிக்கிறான் . அவனிடம் இருந்து தப்பிக்க பல முறை போராடி இப்போதுதான் வெற்றி பெற்றிருக்கிறாள் .




நீண்ட நாட்களாகத்தனிமையில்  இருக்கும் நாயகனுக்கு நாயகியின் வரவு  மனதுக்கு நிம்மதியை , மகிழ்ச் ச்சியைத்தருகிறது இருவரும் நெருக்கம் ஆக இருக்கும் கட்டத்தில் நாயகிக்கு ஒரு  அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது . நாயகன் ஒரு  சைக்கோ கில்லர் . மனைவி , அவளது கள்ளக்காதலன்  உட்பட நான்கு கொலைகளை செய்தவன் . இது தெரிந்ததும் நாயகனிடம் இருந்து தப்ப்பிக்க  முயற்சிக்கிறாள் , அந்த நேரம்   வில்லன் நாயகியைத்தேடி அங்கே வருகிறான் 


இதற்குப்பின் நிகழும்  திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக ஆசிப் அலி கலக்கி இருக்கிறார் . அவரது ஒப்பனை , உடல் மொழி   எல்லாம்  அருமை . ஆரம்பத்தில் அப்பாவியாகத்தெரியும்  அவர்  பின்பகுதியில் சைக்கோ கில்லர்  என்பது தெரியவரும்போது  அவரது  நடிப்பில் அபார மாற்றம் 


 நாயகி ஆக அமலாபால் . அவருக்கு ஒரு கம் பேக் படமாக இருக்கும் . நடிப்பில் , கிளாமரில்  குறை வைக்கவில்லை 


 வில்லன் ஆக சஹ்ராபுதீன்  .இவருக்கும் இரு விதமான கேரக்டர்  டிசைன் . இரண்டையும் நிறைவாகசெய்து இருக்கிறார் 


 லொக்கேஷன் செலக்சன்  அட்டகாசம்  அந்தப்பாலைவனத்துக்காக  துனிஷியா   என்ற இடத்திருப்போய் ஷூட்டிங்க் பண்ணி இருக்கிறார்கள் . ஒளிப்பதிவு கலக்கல் ரகம் . சில லாங்க் ஷாட்கள்  ஹாலிவுட் படத்துக்கு  நிகரானவை 



எடிட்டிங்க் தீபி ஜோஸப் 116 நிமிடங்கள் டைம் ட்யுரேஷன் .முதல் 40  நிமிடங்கள் டெட் ஸ்லோ . பின்  நல்ல  விறு விறு ப்பு 


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அர்பாஸ் அயூப் 

சபாஷ்  டைரக்டர்


1    விருமாண்டி பாணியில் மூவரும் வெவ்வேறு கோணத்தில் கதை சொல்வதும் யார் சொல்வது  உண்மை என புரியாமல் ஆடியன்ஸை திகைக்க வைப்பதும் 


2   நாயகன் ஒரு  சைக்கோ கில்லர்  என நாயகிக்குத்தெரிய வரும் இண்டர்வ்ல் பிளாக் சீன கலக்கல் ரகம் 


3  வில்லன் , நாயகி , நாயகன் மூவருக்கும் மோதல் வரும்போது நாம் யார் பக்கம்   என்பதை நம்மாலே முடிவு செய்ய இயலாமல்  இருக்க வைத்த விதம்  


4  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  நம்ம மனதில் இருப்பதை 90% சொல்லமாட்டோம் , 10 % தான் வெளில சொல்வோம் , வெளியில்  சொல்லாத அந்த 90% தான்   நம் மனதை  அதிகம் பாதிக்கும் 

2  காதல் ரன்பது  வலிமையான மருந்து 

3   சிங்கிளா இரு  மேரேஜ் பண்ணிக்காதே .உன் சுதந்திரத்தை  இழக்காதே 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்  எல்லாம் 60 கிமீட்டர்  டு  80 கிமீட்டர்  வேகத்தில் செல்லும்  அதில் இருந்து    குதித்த நாயகிக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை . சைக்கிளில் இருந்து கீழே  விழுந்தாலே நமக்குக்காலில் சிராய்ப்பு  வருது 


2    தண்ணீர்  தட்டுப்பாடு . கிணற்றில் போய் தண்ணீர் எடுக்க  ஒரு கி மீட்டர்  நடக்கணும் .ஆனால்  நாயகன் நாயகியிடம்  தண்ணீர்  பற்றிபிராப்ளம்  இல்லை .  குளிங்க  என்கிறான் 



3   மாடர்ன் பெண்கள்  பொதுவாக  இப்போது வேலை எல்லாம் செய்வது இல்லை .கணவன் அல்லது காதலன் அல்லது பாய்பெஸ் டியை வேலைக்காரன் போல  நடத்தி தனக்கு வேண்டிய வேலையை வாங்கிக்கொள்கிறார்கள் . ஆனால்  நாயகி   ஒரு கிமீட்டர்  நடந்து  போய் தண்ணீர் கொண்டு வரப்போவது  நம்ப முடியவில்லை 



4  நாயகன் ஒரு சைக்கோக்கில்லர் .தான் கொலை செய்த நபரின்  போட்டோவை .செய்தி வந்த  நியூஸ் பேப்பரை   எதற்காக   ஆதாரமாக தன்னிடம்  வைத்திருக்கிறான் ? 



5  நாயகன் ஆள் மாறாட்டம் செய்து  வேறு ஒரு ஆளின் ஐடியில் வாழ்கிறான் .டெலிபோனில் குரல் மாற்றம்  ஆபிசரு த்தெரியாதா? 


6   கிட்டத்தட்ட 10 வருடங்களாக  நாயகன் தனிமையில் இருக்கிறான் . ஆனால் நாயகியைக்கண்டதும்   தவறாக    நடக்க முயற்சி கூட செய்யவில்லை . அக்கம் பக்கம் யாருமில்லை . போலீஸ் பயம் , சமூக பயம் இல்லை , ஆனாலும் நல்லவனாக இருப்பது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்  பார்க்கலாம்,ஆனால் பொறுமை அவசியம் .ரொம்ப ஸ்லோ . ரேட்டிங்க்  3 / 5 

Friday, August 02, 2024

NAGENDRAN'S HONEYMOONS (2024) - நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் - மலையாளம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்

               


        ஜெமினி கணேசன் நடிப்பில்  கே  பாலச்சந்தர்  இயக்கத்தில்  உருவான  நான்  அவன்  இல்லை (1974)  ,  அதன்  ரீமேக் ஆன ஜீவன் நடிப்பில்    செல்வா இயக்கத்தில் உருவான  நான்  அவன்  இல்லை (2007) ,  அதன்  தொடர்ச்சியாக நான்  அவன்  இல்லை  பாகம் 2 (2009)   ஆகிய மூன்று  படங்களின்  கதையும் ஒன்று தான் . நாயகன்  அவன்  வாழ்வில்  ஏகப்பட்ட  பெண்களைக்காதலித்து  ஏமாற்றுவதுதான் கதைக்கரு. அதே  கதைக்கருவில்  திரைக்கதை  மட்டும்  கொஞ்சம்  மாற்றமாக  வந்துள்ள  வெப்சீரிஸ்  தான்  இது 


196  நிமிடங்கள்  டைம்  டியூரேசன்  உள்ள  இந்த  வெப் சீரிஸ்  6 எபிசோடுகளாக வந்துள்ளது . ஒவ்வொரு  எபிசோடும்  சராசரியாக  34  நிமிடங்கள், மொத்தம்  மூன்றே  கால் மணி  நேரம் ஒதுக்கினால் ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம் ,டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்  ஓடிடி யில்  தமிழ் டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது  


 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  வேலை  வெட்டி  இல்லாத  தண்டக்கடன் . அம்மா  மட்டும் தான்  வீட்டில் . நாயகனுக்கு   துபாய்  போக  ஆசை, ஆனால்  கை  வசம்  பணம்  இல்லை . அப்போதான்  கூட  இருக்கும் ஒரு  குலக்கொழுந்து  ஒரு  வீணாப்போன  ஐடியா  தருகிறான். பெண்ணைத்திருமணம்  செய்தால்  வரதட்சணை  கிடைக்கும் . அந்தப்பணத்தை  வைத்து  ஃபாரீன்  போகலாம்  என்கிறான் .


 அந்தக்கேவலமான ஐடியாவைப்பின்பற்றி  நாயகன்  வரிசையாக  ஆறு  பெண்களை  ஏமாற்றுகிறான், திருமணம்  செய்கிறான் . க்ளைமாக்சில்  ஒரு  அதிர்ச்சி  காத்திருக்கிறது 


1   ஜானகி -  நாயகனின்  அத்தை  பெண். ஏழை. ஆனால்  அவளைத்திருமணம்  செய்தால்  வரதட்சணை  கிடைக்கும்  என  நம்பி  மணக்கிறான். பின்  அவளை  விட்டுச்செல்கிறான் 


2  லில்லிக்குட்டி - நாயகி மனநிலை  தவறியவள் . 18  ஏக்கர்  சொத்து  உண்டு . திருமணம் ஆனதும் கிடைத்த  பணத்தை  சுருட்டிக்கொண்டு  நாயகன்  எஸ்  ஆகிறான் 


3  லைலா -  ஜூடோ  ரத்னத்தின்  தங்கை  மாதிரி  ஃபைட்  எல்லாம்  போடும்  ஒரு பெண் , சந்தர்ப்ப  சூழலால்  கொலை  செய்கிறாள் . அவளைக்கல்யாணம்  செய்து  ஏமாற்றுகிறான்  நாயகன் 


4  சாவித்திரி  - காலேஜ்  படிக்கும்போது லெக்சரர்  உடன்  காதல்  ஏற்பட்டு  அதனால்  கர்ப்பம்  ஆகும்  நாயகி . காதலன்  விட்டு  விட்டு  ஓடி  விடுவதால்  பெற்றோர்  நாயகனுக்குக்கட்டி  வைக்கின்றனர் 


5   தங்கம் -  நாயகி  ஒரு  விலைமகள் . ஊர்  மக்கள்  எல்லோரும் ஆளுக்குக்கொஞ்சம்  காசு  போட்டு  வரதட்சணை  கொடுத்து  நாயகனுக்குத்திருமணம்  செய்து  வைக்கிறார்கள்  அவளிடம்  இருந்த  பணத்தை  ஆட்டையைபோட்டு  விட்டு நாயகன்  தப்பிக்கிறான் 


6  மொழி -  நாயகி  ஒரு  அப்பாவி . திருமணம்  ஆனதும்  நாயகன்  நாயகியிடம்  தன்னைப்பற்றிய  எல்லா  உண்மைகளையும் கூறி  விடுகிறான் . விடிந்து  பார்த்தால் நாயகி  நாயகனை  ஏமாற்றி  விட்டு  நாயகனிடம்  இருந்த  பணத்தை  எடுத்துக்கொண்டு   நாயகனின்  நண்பனுடன்  ஓடி  விடுகிறாள் . இதுதான்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாம் 


  நாயகன்  ஆக  சுராஜ்  வெஞ்சாரமூடு  நடித்திருக்கிறார். போலீஸ்  ஆஃபிசர்  ஆக ஈகோயிஸ்ட்டாக  பல  கலக்கலான  கேரக்டர்களீல்  பட்டாசைக்கிளப்பிய இவருக்கு  இந்த  ரோல்  அந்த  ரோல்கள்  போல  செட்  ஆகவில்லை ,  இருந்தாலும்  சமாளீக்கிறார் 


நாயகிகளாக  கனி குஸ்ருதி கிரேஸ்  ஆண்ட்டனி ,  ஸ்வேதாமேணன் , ஆல்பி பஞ்சிகரன் , அம்மு அபிராமி ,நிரஞ்சனா அனூப் ஜோயா  ஆகியோர்  நடித்துள்ளனர்,. அனைவருக்கும்  10  நிமிடங்கள் தான்  நடிக்க  வாய்ப்பு  என்றாலும்  அவர்களில்  கிரேஸ்  ஆண்டனி  கலக்கி  இருக்கிறார் .

கலா பவன்  ஷாஜன்  நடிப்பும்  குட் 


 கதை  நடக்கும்  காலகட்டம்  1978  என்பதால்   அந்தக்கால  பாணீயில்  ரஞ்சன் ராஜ்  இசை  அமைத்த  விதம்  அருமை . எஸ்  நிகிலின்  ஒளிப்பதிவு அழகு . எடிட்டிங் மன்சூர். ஒவ்வொரு  எபிசோடும் 20  நிமிடங்கள்  வருவது  போல  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம். 36   என்பது  நீளம் . சரக்கு  இல்லை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  தயாரித்து  இருப்பவர்  நிதின்  ரஞ்சி  பணிக்க ர் 


சபாஷ்  டைரக்டர்


1   2016 ஆம்  ஆண்டு  மம்முட்டி  நடிப்பில்  கசாபா  என்ற  டப்பாப்படத்தை  இயக்கி  இருந்தாலும்  இந்தப்படத்துக்கு   வெற்றி  கிடைக்கும்  என்று  நம்பிக்கை  ஊட்டி  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கிய  சாமார்த்தியம் 


2  ஆறு  நடிகைகளை  நாயகிகள்  ஆக்கி  இருந்தாலும் கிளாமர்  காட்சிகள்  வைக்காமல்  கண்ணீயம்  காத்தது 


3  நாயகன்  எப்படி ஒவ்வொரு  முறையும்  ஐடெண்ட்டியை  மாற்ற  முடியும் ? ஆதார்  கார்டு  காட்டிக்கொடுக்குமே? என்ற  லாஜிக்  மிஸ்டேக்கை  யாரும்  சொல்லி  விடக்கூடாது  என்பதற்காக  கதைக்காலகட்டத்தை  1978  என  சொன்னது 


  ரசித்த  வசனங்கள் 


 1  எனக்கு கல்யாணம்  வேண்டாம், ஒரு  மனுசன் அப்புறம்  நிம்மதியா  இருக்கவே  முடியாது 


2   எதையும்  உயர்வுபடுத்தாம  வீணே  நம்ம  கிட்டே  எதையும் வெச்சிருக்கக்கூடாது 


3   அத்தான் , மரத்தில்  உள்ள  இலைகள்  போல  நாம  பிள்ளை  குட்டி  பெத்துக்கலாம் 


4 தங்கம்  சும்மா  பங்கமா  இருப்பா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஓப்பனிங்  ஷாட்டிலேயே  நாயகன்  இடது கை  விரலால்  பல் துலக்குகிறார்.. இடது கைப்பழக்கம் உள்ள  ஆளும்  இல்லை 


2   நாயகனின் நண்பன்  கள்ளக்காதலி வீட்டில் இருக்கும்போது  செட்டியார் வந்து விடுகிறார். வாசலில்   அந்நியன் செருப்பு  இருப்பதைப்பார்க்கிறார். எந்த  மாங்கா  மடையனாவது  நைட்  டைமில்  கள்ளக்காதலி  வீட்டுக்குப்போகும்போது  வாசலில்  செருப்பை  விட்டுச்செல்வார்களா?  வீட்டுக்குள்ளேயே  செப்பலைப்போட்டுட்டுப்போவதுதானே  சேஃப்டி ? 


3  நாயகனின் நண்பன்   ஒரு  இக்கட்டான  சூழலில்  மாட்டும்போது  நாயகன்  அவனது  உயிரைக்காப்பாற்றுகிறான். உனக்கு  என்ன  வேண்டுமானாலும் கேள், பணம்  வேண்டுமா? எனக்கேட்கும்போது  அதெல்லாம்  வேண்டாம்  என்கிறான். ஆனால்  அடுத்த  நான்காவது  ஷாட்டிலேயே  விசா  எடுக்க  ரூ 16,000  வேண்டும், நான்  யாரிடம்  போய்க்கேட்பேன்  எனப்புலம்புகிறான்  நாயகன். அந்த  நண்பனிடமே  கேட்டிருக்கலாமே? 


4   ரொம்ப  நாளா  மூல  வியாதி  இருக்கு , ஆனா  டாக்டருக்கு  தர  ஃபீஸ்க்குப்பணம் இல்லைனு  நாயகனின் நண்பன்   புலம்பறான் . கேரளாவில் ஜிஹெச்  இருக்கு , ஆயுர்வேதிக்  ஹாஸ்பிடல்  இருக்கு , இலவச  சிகிச்சை தான் , அங்கே  போகலாமே? 


5  நாயகன் வேலை  வெட்டி  இல்லாத  வெட்டித்தண்டம், சொத்தும்  இல்லை . ஆனால்  கிளி  மாதிரி  இருக்கும்  ஜானகியை  எப்படி கட்டித்தர  முன்  வருகிறார்கள் ? இந்தக்காலத்துல  1008  கண்டிசன்ஸ்  போடறாங்க  பெண்  வீட்டார் 


6  நாயகன்  தன்  அம்மா, மனைவி  இருவருக்கும்  தெரியாமல்  வீட்டை விட்டு  ஓடத்திட்டம்  போட்டவர்  நைட்  டைமில்  சூட்கேசுடன்  வெளியே  வருகிறார். ஆல்ரெடி  பகலில்  தன்  நண்பனிடம்  கொடுத்து  வைத்துப்பின்  நைட்டில்  கிளம்புவதுதானே  சேஃப் ? 


7    நான்  அவன்  இல்லை (1974)  ,  நான்  அவன்  இல்லை  ( 2007) நான்  அவன்  இல்லை  பாகம் 2 (2009)   இந்த  மூன்று  படங்களில்  இருந்த  வேகம் , விறுவிறுப்பு   சுவராஸ்யம்  இதில்  இல்லை 

8   லாட்ஜில்  அட்வான்ஸ்  தரனும். இவங்க  பாட்டுக்கு  மிட்  நைட்டில்  காலி  செஞ்சா  வாடகை  மிச்சம்  எனப்பேசுவது  எப்படி ? 


9    தற்கொலை  செய்யும்  பெண்  நாற்காலி  , சேர் ,  டேபிள்  என  எதுவுமே  இல்லாமல்  முயற்சிப்பது  எப்படி ? 


10 போகும்  இடம்  எல்லாம்  ட்ரங்க்  பெட்டியுடன்  நாயகன்  அலைவது ஏன் ? 


11  அப்பப்ப  ஏமாற்றிப்பணம்  சேர்க்கும்  நாயகன்  அதை  வங்கி  அல்லது  போஸ்ட்  ஆஃபீஸ்  சேவிங்க்ஸ் பேங்க்  அக்கவுண்ட்டில்  போடாமல்  தன்  கைவசம்  உள்ள  பெட்டியில்  வைப்பது ஏன் ? 


12  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  மகா  மொக்கை 


13   நாயகனின்  இலக்கு  பணம் தான். 2  வதாகத்திருமணம்  செய்யும்  மனநிலை  சரி இல்லாத  பெண்ணுக்கு 18  ஏக்கர்  நிலம்  உண்டு. அதைப்பொறுமையாக  ஆட்டையைப்போடாமல் நாயகன் அந்தப்பெண்ணை  விட்டு  வருவது ஏனோ? 


14   சிப்பிக்குள்  முத்து ( ஸ்வாதிமுத்யம் ) படத்தில்  மனநிலை  சரி இல்லாத  நாயகனுக்குத்திருமணம்  நடக்கும்போது  முதல்  இரவில்   மனைவி  தான்  முன்னெடுத்து  நடத்துவாள். ஆனால்  இதில்  மனநிலை  சரி  இல்லாத  பெண்  அந்த  விஷயத்தில்  மட்டும்  ஓவர்  விவரமான  ஆளாகக்காட்டி  இருப்பது  எப்படி?  



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நான்  அவன்  இல்லை  படம்  போல்  இருக்கும்  என  ஏமாற  வேண்டாம் . காமெடி  டிராமா  என  ப்ரமோ  செய்திருக்கிறார்கள், ஆனால்  ஏமாற்றம் , காமெடி  எல்லாம்  இல்லை . ரேட்டிங் 2/ 5 

Thursday, August 01, 2024

ராயன் (2024) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் வயலன்ஸ் மசாலா ) 18+

                        

 


ராயன் (2024) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் வயலன்ஸ் மசாலா ) 18+
--
முன்னணி ஹீரோக்களின் 50 வது பட,ம் யாருக்கெல்லாம் வெற்றியைக்கொடுத்தது ? யாருக்கெல்லாம் தோல்வியைக்கொடுத்தது? என்பதைப்பார்ப்போம் எம் ஜி ஆர் -ன் 50 வது படம் நல்லவன் வாழ்வான் (1961) சுமார் , சிவாஜி யின் சபாஷ் மீனா ஹிட் , ரஜினியின் நான் வாழ வைப்பேன் மீடியம் கமல் -ன் மூன்று முடிச்சு அதிரி புதிரி ஹிட் . (கமல் கெஸ்ட் ரோல் )கேப்டனின் நீதியின் மறுபக்கம் ஹிட் .சரத் குமாரின் வேடன் சுமார் , அஜித்தின் மங்காத்தா மெகா ஹிட் , விஜய் -ன் சுறா அட்டர் ஃபிளாப் , விக்ரம் -ன் ஐ மீடியம் ஹிட் , மாதவன் -ன் வேட்டை சுமார் , விஜய் சேதுபதியின் மகாராஜா மெகா ஹிட்
இயக்குநர் ஆக தனுஷ் அவதாரம் எடுத்த முதல் படமான பவர் பாண்டி (2017) ஹிட் ஆனதால் அவருக்கு இரண்டாவது படம் எடுக்கும் தைரியம் வந்ததில் ஆச்சரியம் இல்லை .வெற்றி மாறன் , செல்வராகவன் ஆகிய இயக்குநனர்களிடம் தான் கற்ற வித்தையை இறக்கி உள்ளார்
இந்தப்படத்தின் பிரமோ வில் இயக்குனர் செல்வராகவன் கொடுத்த பில்டப் தான் படத்தைப்பார்க்க வைத்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு 2 தம்பிகள் , ஒரு தங்கை , பெற்றோர் இல்லை . அவர்கள் விபத்தில் இறந்தார்களா? வேண்டும் என்றே விட்டு விட்டுப்போனார்களா? அல்லது வேண்டாம் என விட்டு விட்டார்களா? தெரியாது .
நாயகன் ஒரு ரோட்டோரக்கடை , ரெஸ்ட்டாரண்ட் மாதிரி நடத்துகிறார். தம்பிகளில் ஒருவன் தறுதலை . ஒருவன் காலேஜ் ஸ்டூடண்ட்
அந்த ஏரியாவில் இரு கேங்க்ஸ்டர்கள் இருக்கிறார்கள் . இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி. நாயகனின் தறுதலை தம்பி ஒரு கேங்க்ஸ்டரின் மகனுடன் வம்பு வளர்த்தி ஒரு பிரச்சனையில் சிக்குகிறான் . தம்பியைக்காப்பாற்ற நாயகன் ஒரு கேங்க்ஸ்டரை போட்டுத்தள்ளுகிறான் .
இன்னொரு கேங்க்ஸ்டர் இப்போது தனக்கு எதிரி யாரும் இல்லை என நிம்மதியாக இருக்கும்போது நாயகன் தான் கொலையாளி என்பது தெரியவர தன்னுடன் கை கோர்க்குமாறு அழைப்பு விடுக்கிறான். நாயகன் மறுக்கவே மோதல் .
நாயகனின் தங்கைக்கு விடிந்தால் திருமணம் . இரவில் நடக்கும் சில சம்பவங்கள் தான் நாயகனின் வாழ்க்கையைப்புரட்டிப்போடுகிறது . அவை என்ன ? என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக தென்னக ப்ரூஸ்லீ தனுஷ் . ஜெயிலர் ரஜினியின் பாதிப்பு பல இடங்களில் தெரிகிறது . அதிக வசனம் பேசாமல் உடல் மொழி மூலம் மட்டுமே மிரட்டும் கேரக்டர். அருமையாகச்செய்திருக்கிறார்
தம்பிகளாக சந்தீப் கிசன் , காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தாலும் சந்தீப் கிசன் க்கு அதிக வாய்ப்பு
தங்கையாக துஷாரா விஜயன் அருமையான குணச்சித்திர நடிப்பு
சந்தீப் கிசன் காதலியாக அபர்ணா பாலமுரளி அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை ஓக்கே
வில்லன் ஆக எஸ் ஜே சூர்யா வழக்கம் போல ஆர்ப்பாட்டம் ஆன நடிப்பு . ஆனாலும் அவருக்கான போர்சன் குறைவு
இன்னொரு கேங்க்ஸ்டர் ஆக வரும் பருத்தி வீரன் சித்தப்புன் சரவணன் சில காட்சிகளே வந்தாலும் முத்திரை பதிக்கிறார்
போலீஸ் ஆஃபீசர் ஆக பிரகாஷ் ராஜ் , நாயகனின் கார்டியன் ஆக செல்வராகவன் , வில்லனின் மனைவி ஆக வரலட்சுமி சரத் குமார் ஆகியோர் குறை சொல்ல முடியாத பங்களிப்பை வழங்கி உள்ளனர்
ஏ ஆர் ரஹ்மான் தான் இசை . இரண்டு பாடல்கள் செம ஹிட்டு . பிஜிஎம்மில் பின்னிப்பெடல் எடுக்கிறார். படத்தைத்தாங்கி நிற்பதே பிஜிஎம் தான்
ஒளிப்பதிவு ஓம் பிரமாஷ் கச்சிதம் , எடிட்டிங்க் ஜி கே பிரசன்னா. 145 நிமிடங்கள் ஓடுகிறது . முதல் பாதி குட் , பின் பாதி ஒரே ரத்தம் , அடிதடி , வெட்டு குத்து , வன்முறை
சபாஷ் டைரக்டர்
1 ரஜினி நடித்த தர்மதுரை (1991) , படிக்காதவன் (1985)ஆகிய படங்களில் இருந்து முதல் பாதி கதையை ரெடி செய்தது , ரஜினி யின் ஜெயிலர் , பாட்ஷா , சிவாஜி யின் தங்கப்பதக்கம் , சத்யராஜின் வால்டர் வெற்றி வேல் ஆகிய படங்களில் இருந்து பின் பாதி கதையை ரெடி செய்தது ,
2 நீ இருக்கறியே ஓலைக்கொட்டாயா பாட்டு சீனில் அபர்ணா பால முரளியின் செமயான குத்தாட்டம் , செம ஹிட் ஆன பாட்டு மெட்டு
3 நாயகன் , வில்லன் முதன் முதலாக சந்திக்கும் காட்சியில் குரலை உயர்த்தாமல் நாயகன் வில்லனை மிரட்டும் மாஸ் சீன்
4 இண்ட்டர்வெல் பிளாக் சீன்
ரசித்த வசனங்கள்
1 என்னப்பா? ராயன் . என்ன சொன்னே? அவன் கிட்டே? டக்னு கேசை வாபஸ் வாங்கிட்டான் ?
கெஞ்சிக்கேட்டேன் சார்
யாரு ? நீ ? கெஞ்சிக்கேட்டே? நம்பிட்டேன்
2 அரசியல் , ரவுடிசம் இதெல்லாம் பெரிய சுழல், அதில் எல்லாம் நாம சிக்கிக்காம இருப்பதே நல்லது
3 அண்ணா , எனக்கு மாப்ளை பார்க்கறதுதான் பார்க்கறே. நல்லா வாட்டசாட்டமான ஆளா பாரு. பத்துப்பேரை அடிச்சுப்போடறவனா இருக்கனும், சும்மா அல்ப சொல்பையான சப்பையான ஆளைப்பார்த்துடாத
4 அங்கே தான் எனக்கு நிம்மதி கிடைக்குது , அதனால தான் அங்கே அடிக்கடி போறேன்
அப்போ நானும் உன்னை மாதிரியே நிம்மதி கிடைக்கும் இடத்துக்குப்போகவா?
5 நான் உனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கேன், அதுக்காக என்னை உயிரோட விட்டுடக்க்கூடாதா?
என் இடத்துல நீ இருந்தா என்ன செய்வே?
6 நீ மட்டும் என் ரத்தமா இல்லாம இருந்திருந்தா அவங்களோட சேர்த்து உன்னையும் போட்டிருப்பேன்
7 துரையை நீ தான் போட்டுத்தள்ளுனியா?
நோ
என் கிட்டே வேலைக்கு சேர்ந்துக்கோ
நீங்க சொன்னபடி துரையைப்போட்டுத்தள்ளுனது நான் தான் என்பது உண்மையா இருந்தா அவனை முடிச்ச மாதிரி உங்களை போட்டுத்தள்ள எனக்கு எவ்ளோ நேரம் ஆகும் ? ஆனா நான் அபப்டி செய்ய மாட்டேன்
8 அண்ணே , ஒண்ணு கேட்கவா? ஏன் எப்போப்பாரு மொட்டைத்தலையோட சுத்திட்டு இருக்கே?
ஸ்டைலு
9 காட்டுல வலிமையானவை புலி , சிங்கம் தான் என்றாலும் ஆபத்தானது ஓநாய் தான்
10 அவன் ஒரு பெண்ணை ரேப் பண்ணி இருக்கான், தப்புத்தானே?
அதை ரெண்டு சம்சாரம் வெச்சிருக்கற நீ பேசலாமா?
11 உன் உயிர் இப்போப்போகப்போகுது , ஏன் சிரிக்கறே?
உன்னை ராயன் என்ன எல்லாம் செய்யப்போறான்னு நினைச்சா சிரிப்பா வருது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை டீடெய்லாகக்காட்டவே இல்லை .பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தையை விட்டு விட்டு ஊருக்கு ஒரு அம்மா போகுமா?
2 வேலை தேடும் ஒரு இளைஞன் தன் படிப்பு , அனுபவம், திறமை சொல்லி வேலை கேட்பானா? எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, செலவு இருக்கு , வேலை வேணும் என்று கேட்பானா? பிச்சை எடுப்பது போல இருக்கு
3 வேலை வெட்டி இல்லாதவனை ஒரு பெண் லவ் பண்ணுவது பெரிய விஷயம் இல்லை , ஆனால் பொறுப்பே இல்லாமல், வருமானத்துக்கு வழியே இல்லாதவனை நம்பி திருமணத்துக்கு முன்பே உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் தைரியம் ஒரு பெண்ணுக்கு வருமா?
4 நாயகனுக்கும் , வில்லனுக்கும் இடையே இவ்ளோ பகை பாராட்டும் அளவு எதுவுமே நடக்கவில்லை . வலு இல்லாத பகை உயிரைக்காவு வாங்கும் அளவு செல்வதை நம்ப முடியவில்லை
5 ஒரு கேங்க்ஸ்டர் ஆன சரவணன் சேரில் அமர்ந்திருக்க அவன் கண் முன் நாயகன் வில்லனின் அடியாட்களை வரிசையாகக்கொன்று போட்டுக்கொண்டே இருக்கிறான். அதை என்னமோ ரோடு ஷோ பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் வில்லன் 10 நிமிசம் கழித்து என்னை உயிரோட விட்டுடு என்கிறான் . முதல்லியே ஓடி இருக்கலாமே? முயற்சிக்கவே இல்லை
6 பின் பாதி திரைக்கதை ஒட்டவே இல்லை . வில்லனை துரத்தாமல் அண்ணன் , தம்பிகள் அடித்துக்கொள்வதும், தங்கையே அண்ணனைக்கொல்வதும் சகிக்கவில்லை
7 நாயகனின் தம்பி வயிற்றில் கத்திக்குத்து வாங்கிப்படுத்திருக்க ஹாஸ்பிடல் போகாமல் என்னமோ தங்கச்சி முடி சிங்கிள் போடுவது போல ஊசியில் தையல் போடுவது காமெடி
8 படம் முழுக்க நாயகன் உம்மணாம்முகமாக இருப்பது , அவருக்கு ஜோடி இல்லாதது , காமெடி மருந்துக்குக்கூட இல்லாதது கமர்ஷியல் படத்தின் பலவீனங்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ ஓவர் வன்முறை , சிறுவர் சிறுமியர் , கர்ப்பிணிப்பெண்கள் , மென்மையான மனம் கொண்டோர் பார்க்கத்தகுதி அற்ற ரத்தக்களறிப்படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தனுஷ் ரசிகர்கள் , ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் பார்க்கலாம் . ஆனந்த விகடன் மார்க் ( யூகம் ) 41 , குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே . ரேட்டிங்க் 2.5 / 5
விகடன் ஆக்சுவல் மார்க் - 42
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,


ராயன்
Theatrical release poster
இயக்கம்தனுஷ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைதனுஷ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்சன் படங்கள்
விநியோகம்see below
வெளியீடு26 சூலை 2024
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு100 கோடி[1][2]

Wednesday, July 24, 2024

MALAYALEE FROM INDIA (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ சோனி லைவ்

                   

    

2022 ம் ஆண்டு ஜனகனமன   என்ற லீகல் த்ரில்லர் படத்தை இயக்கிய  டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி இந்த முறை காமெடி டிராமாவை கொடுத்திருக்கிறார் லோ பட்ஜெட்டில் உருவான இப்படம் 19  கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது .1/5/2024 ஆர்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது சோனி லைவ்  ஓடிடி  யில்  5/7/24 முதல் காணக்கிடைக்கிறது .தமிழ் டப்பிங்கில் ஒளிபரப்பாகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன் ஒரு வெட்டித்தண்டம்  . படிச்சுட்டு சும்மா வீட்டில் உக்கார்ந்து அம்மா உழைப்பில் சொகுசாக வாழ்பவன் .எப்போப்பாரு கிரிக்கெட்டு , கட் சி , அரசியல் , வெட்டி அரட்டை என  வாழ்பவன் . இது பத்தாதுன்னு  இவன் கெட்ட கேட்டுக்கு ஒரு தலைக்காதல் வேற .இவன் கூடவே ஒரு நண்பன் சுத்திட்டு இருக்கான் .என்னால நீ  கெட்டே , உன்னால நான் கெட்டேன்  என இருவரும்  தண்டமாக வாழ்ந்து வருகிறார்கள் 



இப்படி  ஜாலியாகபோய்க்கொண்டிருக்கும்  இவனது   வாழ்க்கையில் ஒரு  திருப்பம்   நிகழ்கிறது .இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கட்  மேட்சில்  இந்தியா தோற்ற போது முஸ்லீம்  சிறுவர்கள் பட்டாசு வெடிக்க  நாயகன் அங்கே  தலையிட்டு  பெரிய மதக்கலவரம்  வெடிக்கிறது 


 இனி இவன் இங்கே  இருந்தால் இவன்  உயிருக்கே  ஆபத்து என அவசரம் அவசரமாக  நாயகனை  அவனது மாமா  பாரின்  அனுப்பி விடுகிறார் சொந்த மண்ணில் ஜெயிக்காதவனா  வெளிநாட்டில் போய் ஜெயிக்கப்போகிறான்   என  நாம் நினைக்கும்போது  நாயகனின் வெளிநாட்டு வாழ்க்கையில்  ஒரு திருப்பம் நிகழ்கிறது . அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள்தான்  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  நிவின் பாலி  முதல்  பாதியில் காமெடியாகவும் , கடைசி 30 நிமிடங்களில்  சென்ட்டிமென்ட் டச் உடனும்  நடித்திருக்கிறார் . அறிமுகம் ஆகும்போது  ஒல்லியாக இருந்தவர் இப்போது செம வெயிட்  போட்டு இருக்கிறார் . தமிழ் நாட்டில்  இதே  போல  வடிவேலு , விஜய் சேதுபதி உட்பட பலரை சொல்லலாம் . நல்ல மார்க்கெட் , சம்பளம்  கிடைத்ததும்  உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தாமல் கண்டபடி புல் கட்டு  , ட[புள் கட்டு கட்டுவது  ஓவராக  தண்ணி அடிப்பது   என தோற்றப்பொலிவை இழக்கிறார்கள் 


நண்பன் ஆக  தயான் சீனிவாசன்  கலகலப்பான காமெடி  நடிப்பு .நாயகி ஆக அனஸ்வரா ராஜன் அழகாக வந்து போகிறார் . இவருக்கு அதிகக்காட்சிகள் இல்லை 


பாரினில் நாயகனுக்கு ஹையர்   ஆபிஸராக தீபக் ஜதி ஆரம்பத்தில்  வில்லன்  போலவும்  , பின்  உணர்ச்சி மிக்க நடிப்பிலும்  கலக்குகிறார் 


ஜேக்ஸ் பிஜோய் இசையில் எட்டு பாடல்கள் . அவற்றில் ஐந்து பாடல்கள் இனிமை .பின்னணி இசை கச்சிதம் ஸ்ரீ ஜித்  சாரங்கின் எடிட்டிங்கில்  படம் 158  நிமிடங்கள் ஓடுகின்றன 


சுதீப் எல்மோன் ஒளிப்பதிவு அருமை .குறிப்பாக பாலைவனக்காட்சிகள் அழகு 

சாறிஸ் முகமதுவின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி


சபாஷ்  டைரக்டர்

1   படத்தின் முதல் பாதியை வேலை கிடைச்சிடுச்சு (1990)  பாணியில்  காமெடியாகக்கொண்டு போனது ,பின் பாதியை ஆடு ஜீவிதம் (2024)  கதையை பட்டி டிங்கரிங் செய்த லாவகம்  அருமை . வர  வர எல்லா  மாநிலங்களிலும்  அட்லிகள் பெருகி வருகிறார்கள் 


2   சீரியஸ் ஆக போன ஆடுஜீவிதம்  கதையை  காமெடியாக மாற்றிய விதம் அருமை 


3   நாயகன் - வில்லன்  இருவருக்குமான புரிதல் ஏற்பட்ட பின்   இந்து முஸ்லீம் ஒற்றுமை , இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை குறித்த  காட்சிகள்  மனதைத்தொ ட்டன 

  ரசித்த  வசனங்கள் 

1   சங்கு பீச்  கடல் ஆகிடுச்சு 


ஆல்ரெடி  அது கடல் தானே ?


ஐ மீன் மக்கள் கடல்  


2  ஒய் ஆர் யு லேட்? 


 ஒரு  பொண்ணுக்கு 1008 பிரச்சனைகள் ,இருக்கும். அதை எல்லாம்  கேட்கக்கூடாது 


சாரி , இனி கேட்கலை 


 என்னடி பிரச்சனை ?


 சும்மாடி 


3    எனக்கு உங்கள்ல  பாதி வயசு தான்  இருக்கும்,என்னை விட்டுங்க  அண்ணா .லவ் எல்லாம்  வேண்டாம் 


4  தேன் , நெய்  இரண்டும்  நல்லதுதான் ஆனால் இரண்டும் சேர்ந்தால் விஷம் , அதுபோலத்தான்  மதமும்  அரசியலும் . அபாயம் 


5  நம்ம கேரளா மாநிலத்தை கடவுளின்  தேசம்னு     எதனால கொண்டாடறாங்க ? சாத்தான்கள் இங்கே இல்லையா? இருக்காங்க, ஆனால் அவங்களை எங்கே வைக்கணுமோ   அங்கே வெச்சிருக்கோம் அதனால 


6 பாலைவனத்தில் விவசாயமா? யாருமே இல்லாத  கடைல யாருக்குடா  டீ  ஆத்தறே ?


7  அவன்  கொடுமை தாங்க முடியலைன்னா சாப்பாட்டில்  விஷம் வெச்சு கொன்னுடு 


 விஷம்  கிடைச்சா நானே சாப்பிட்டு  செத்துடுவேன் 


8  நரகத்தில் வாழ்ந்து என்னபிரயோஜனம் ?


9   நான் ஊருக்கு திரும்பி வரும்போது எனக்கு ஒரு பரம்வீர சக்ரா விருது ரெடி பண்ணி வை 


 அது செத்துப்போனவங்களுக்குத்தர்றது 


 அப்போ  அசோக சக்ரா விருது ?


 அதுவும் தான் 


10  குரானின் முதல்  வார்த்தை என்ன  தெரியுமா? படிங்க . என்பதுதான் . ஆயுகத்தை எடுங்க  என்பதல்ல 


11  மதம் ஒரு  ராஜ்ஜியத்தை  ஆளும் சக்தியா  மாறினா அந்த ராஜ்ஜியம்  அழிநது  விடும் 


12 ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  அவரது  வாழ்க்கையை  மாற்றி  அமைக்கக்கூடிய  ஒருவர்  வருவார் 


13   படி , உணர் , நீ  வெற்றி பெறுவாய் - இதுதான்  தாரக  மந்திரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பாஸ்போர்ட் விசா எடுக்க எவ்ளோ டைம் தேவைப்படும்? ஆனா     வெட்டியா சுத்திட்டு இருக்கும் நாயகன் ஒரு  கட்டத்தில் தலைமறைவான வாழ்க்கை வாழும்போது  அவரது உறவினர்  ஒரே நாளில் எல்லாம்  ரெடி பண்ணிடறார் . இது எப்படி ? அவர் சைன் எல்லாம்  பண்ணத்தேவை இல்லையா? 


2  நாயகன் - வில்லன்  இருவருக்கும் எப்படி புரிதல்  வருகிறது  என்பதை விளக்கமாகக்காட்டவில்லை 


3 நாயகனை போலீஸ்  தேடிக்கொண்டிருக்கிறது . தலைமறைவாக  இருக்கும் நாயகனுக்கு பாஸ்போர்ட்  ரெடி ஆகிறது .பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் போலீஸ் தானே செய்யணும்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி கலகலப்பு , பின் பாதி லேடிஸ்க்கு  பிடித்த சென்ட்டிமெண்ட்  காட்சிகள் . பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 


Malayalee from India
Directed byDijo Jose Antony
Written bySharis Mohammed
Produced byListin Stephen
Starring
CinematographySudeep Elamon
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
Distributed byMagic Frames
Release date
  • 1 May 2024
Running time
158 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest.₹18.37 crore[1]