Tuesday, November 26, 2024

ஜாலியோ ஜிம்கானா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மொக்கைக்காமெடி டிராமா)

       

                 

ஜாலியோ ஜிம்கானா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மொக்கைக்காமெடி டிராமா)
இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் முதல் படமான சாம்ராட் (1997)சுமார் ரகமாக இருந்தாலும் , அடுத்த படமான என்னம்மா கண்ணு (2000) சத்யராஜ் தயவில் ஹிட் ஆனது , அடுத்து சார்லி சாப்ளின்(2002) மீடியம் ஹிட் . காதல் கிறுக்கன் (2003) , இனிது இனிது காதல்இனிது (2003) இரண்டும் டப்பா .மகாநடிகன் (2004) மெகா ஹிட் . , இங்க்லீஷ் காரன் (2005) சுமார் , கோவை பிரதர்ஸ் (2006) டப்பா ,வியாபாரி (2007) சுமார் , சண்டை (2008), சுமார் ராஜாதிராஜா ( 2009) குப்பை , குரு சிஷ்யன் ( 2010) சுமார் , சார்லி சாப்ளின் பாகம் 2 (2019) டப்பா , பேய் மாமா (2021) குப்பை
WEEK END AT BERNIE'S (1989) என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து சில காட்சிகளை அட்லி பாணியில் பட் டி டிங்கரிங்க் செய்து 1994 ஆம் ஆண்டு மகளிர் மட்டும் என்ற படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் தந்தார் . அதில் பிணமாக நாகேஷ் பிரமாதமாக நடித்திருப்பார் .அதில் நாகேஷுக்குக்கிடைத்த வரவேற்பைப்பார்த்து கமல் லேடீஸ் ஒன்லி ஹிந்திப்படத்தில் (மகளிர் மட்டும் ரீமேக் ) அந்த நாகேஷ் கேரக்ட்டரை அவர் செய்தார் .அந்த பிண கான்செப்ட்டை ஒரு முழுப்படமாக தந்தால் எப்படி இருக்கும் ? என கற்பனை செய்து எடுத்திருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
3 மகள்களைக்கொண்ட நாயகி தன் அப்பா நடத்தி வந்த ஹோட்டல் நினைவாக தானும் ஒரு ஹோட்டல் நடத்துகிறார் . அதில் ஆர்டர் பண்ணி ஒரு எம் எல்ஏ தனது வீட்டு விசேஷத்துக்கு சாப்பாடு பல்க் ஆக வாங்கி செல்கிறார் .ஆனால் பில் பே பண்ணவில்லை .கேட்டால் தகராறு . நாயகியின் தாத்தாவைத் தாக்கி விடுகிறார்கள் எம் எல் ஏ வின் அடியாட்கள்
வக்கீலான நாயகன் இந்தக்கேஸில் வாதாடுகிறான் . நாயகிக்கு 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது . அதை வட்டியோடு கட்ட சொல்லி மிரட்டும் பைனான்சியர் பற்றிப்புகார் தர நாயகி தன மகள்களுடன் வக்கீல் வீட்டுக்குப்போக அங்கே நாயகன் ஆன வக்கீல் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் .. கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக டெட் பாடியை வேறு இடத்தில் டிஸ்போஸ் பண்ண முயற்சிக்கிறார்கள் . அந்தக்காமெடி கலா ட்டாக்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக பிரபுதேவா படம் முழுக்க டெட் பாடியாக கலக்கி இருக்கிறார் .நாயகி ஆக அபிராமி , நாயகியின் மகளாக மடோனா செபாஸ்டின் இருவரும் கச்சிதம்
யோகிபாபு , ரெடின் கிங்க்ஸ்லி எல்லாம் பேருக்கு வந்து போகிறார்கள் . ஆனால் பல படங்களில் யோகிபாபு மொக்கை போட்டு கடுப்பேத்துவார் . இதில் அந்தளவு கொடுமை இல்லை
வில்லன்களாக நாஞ்சில் சம்பத் , மதுஸுதனன் ராவ் இருவரும் பரவாயில்லை .அடியாட் களாக வரும் ரோபோ சங்கர் ஓகே ரகம் ஜான் விஜய் , எம் எஸ் பாஸ்கர் வரும் காடசிகள் கொஞ்சம் சிரிக்கவைக்கின்றன
ஒளிப்பதிவு எம் சி கணேஷ் சந்திரா நாயகிகளை க்ளோசப்பில் காட்டி பயப்படுத்துகிறார் . ஆர்ட் டைரக்ஸன் ஜனார்த்தனன் கு ட் ஒர்க் . எடிட்டிங்க் ராமர் & நிரஞ்சன் ஆண்டனி . 120 நிமிடங்கள் படம் ஓடுகிறது
இசை அஸ்வின் விநாயகமூர்த்தி .2 பாடல்கள் சுமார் ரகம் / பிஜிஎம் ஓகே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 படம் முழுக்க மொக்கைக்காமெடி சரவெடிகளால் வசனத்தை நிரப்பியது
2 பிரபு தேவாவின் நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 என் பேரு பவானி ,என் தங்கை பேரு ஷிவானி ...
அம்மா பேரு ரோகிணி , அப்பா பேரு சப்பாணி ?
2 என் மூலக்கதையை உக்கார்ந்து கேட் டாதான் உங்களுக்குப்புரியும்
எனக்கே மூல வியாதி ,உக்கார்ந்து எல்லாம் கேட்க முடியாது
3 எல்லாருடைய வாழ்க்கைலயும் ஒரு டெட் எண்டு வரும் . வேற வழியே இல்லைனு நாம நினைக்கும்போது கடவுள் யாராவது ஒருவர் ரூபத்துல வந்து நம்மைக்காப்பாத்துவான்
4 யார் உள்ளே ? கதவைத்திறங்க
நாங்க 4 பேரும் உள்ளே இல்லை
5 அவன் கிட் டே போனைக்கொடுங்க ,"செத்த " நேரம் பேசிட்டு தர்றேன்
செத்த நேரத்துல எப்படி பேசுவீங்க?
6 போன் போடு
லைன் டெட் ஆகிடுச்சு
அதுவும் டெட்டா?
7 உடனடியா ரூமை செக் அவுட் செய்யணும்
அவருதான் ஆளே அவுட் ஆகிட்டாரே ?
8 வரு யாரு ?புரோட்டா மாஸ்டரா? மப்புல இருக்காரா?
ஆமா, கடை எல்லாம் மூடிட்டாங்க இல்லை ? அதான் சரக்கு மாஸ்டரா ஆகிட்டாரு
9 டெட் பாடி எதிர்ல வந்தா நல்லதா?
டெட் பாடி எதிர்ல வந்தா நல்லதுதான் , ஆனா கூடவே வந்தாதான் கெட்டது
10 நான் குறிஞ்சிப்பாடி , நீங்க ?
தரங்கம்பாடி
இங்கே எல்லாமே பாடி தான்
11 நான் டிரஸ் மாத்தறதை இந்தாளு பார்க்கற மாதிரி இருக்கு
நீ பாடி மாத்தறதை இந்த டெட் பாடி பார்த்தா என்ன தப்பு ?
12 என்னய்யா? உன் ரெண்டு கைகளையும் ஒரு மாதிரி வெச்சிருக்கே? என் பொண்டாட்டி ஊருல இருந்து வரும்போது பிரா வாங்கிட்டு வரச்சொன்னா , அந்த சைஸ் மறந்துடும் இல்ல? அதுக்குத்தான்
13 என்ன அண்ணே ,ஆளே மாறீட்டீங்க ?
அதான் ஆளே மாறிட்டனே ? எப்படிடா கண்டு பிடிச்சே?
ஷேவிங்க் பண்ணினாலும் சிங்கம் சிங்கம் தானே?
14 அவனை இவரு மறுபடி கொலை பண்ணிட் டாரு
ஒரே ஆளை எத்தனை டைம் கொல்ல முடியும் ?
15 வடை போச்சே எனபுலம்பாம ,வடையோட போச்சே என கடையை மூடிட்டு கிளம்புங்க
16 நீங்க தான் இப்போ பேங்க் மேனேஜர்
நான் தான் படிக்கவே இல்லையே?
இதுக்குத்தேவை படிப்பு இல்லை , நடிப்பு
17 பாபநாசம் கமல் மாதிரி எல்லாரும் ஒரே ,மாதிரி பொய் சொல்லணும்
ஆமா , மாறி மாறி பொய் சொல்லக்கூடாது
மாரி தனுஷ் படம்
18 பூதம் பூதக்கண்ணாடி வெச்சு பார்க்குது
19 சார் , கேளடி கண்மணி ல வர்ற மூச்சு விடாம பாடும் பாட்டு பாடுங்க
அவருதான் மூச்சை விட்டுட்டாரே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிகள் மூவருக்கும் லிப்ஸ்டிக் ஓகே , ஆனா அவங்க அப்பா ஒய் ஜி மகேந்திரனுக்கு எதுக்கு பிங்க் கலர் லிப்ஸ்டிக் ? மனசுல ராமராஜன்னு அவருக்கு நினைப்பா?
2 ரோஷி குத்துற ஊசி வேணுமா ? இல்லை ஊசி குத்துற ரோஷி வேணுமா ? கானா பாட்டு வரிகள் அனைத்தும் 1989ல் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ் ஆண்டு விழாவில் பாடப்பட்ட பழைய சரக்கு
3 சி செண்ட் டரில் சுலபமாக ஹிட் அடிக்கக்கூடிய இந்தக்கதையை ரைட்டர் சுபா , பட்டுக்கோட் டை பிரபாகர் மாதிரி அனுபவம் மிக்க வர்களிடம் தந்திருந்தால் நல்ல திரைக்கதை அமைத்து ஆல் செண்டர் ஹிட் ஆக்கி இருப்பார்கள் .மிஸ்டு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடி வசனங்களை ரசிப்பவர் களுக்கு படம் பிடிக்கும் விகடன் மார்க் 40 , குமுதம் -சுமார் .ரேட்டிங் 2.25 / 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,