DO PATTI என்ற ஹிந்தி வார்த்தைக்கு டூ கார்ட்ஸ் என்று பொருள் . டொமஸ்ட்டிக் வயலன்ஸ் பற்றிப்பேசுகிறது .திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் 25/10/2024 முதல் காணக்கிடைக்கிறது .போலீஸ் ஆபீசர் ,வக்கீல் என இரு பதவிகளில் கஜோல் நடித்து இருக்கிறார் .அக்கா , தங்கை என ட்வின்ஸ் ரோலில் நாயகி க்ரித்தி சனோன் நடித்து இருக்கிறார் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
சவுமியா ,ஷைலி இருவரும் இரட்டை சகோதரிகள் . அம்மா , அப்பா இல்லை .அத்தைதான் வளர்க்கிறார் .இருவரும் சிறுமிகளாக இருக்கும்போதே அம்மா தற்கொலை செய்து இறந்து விடுகிறார் .அம்மாவின் மரணத்துக்கு அப்பா தான் காரணம் .அடிக்கடி அம்மாவை அடித்துக்கொடுமைப்படுத்தி வந்தவர் தான் அப்பா . இந்த சம்பவத்தால் சவுமியா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்
சவுமியா ,ஷைலி இருவருக்கும் சின்ன வயதில் இருந்தே ஆகாது . அடித்துக்கொள்வார்கள் .சவுமியாவின் உடைமைகளை கபளீகரம் செய்வதில் ஷைலி க்கு கொள்ளை ஆனந்தம்
அக்கா , தங்கை என ட்வின்ஸ் ரோலில் நாயகி க்ரித்தி சனோன் பிரமாதமாக நடித்து இருக்கிறார் . சவுமியா ரோலில் இவர் அமைதியான பெண்ணாக மனம் கவர்பவர் , ஷைலி ரோலில் மாடர்ன் கேர்ள் ஆக கிளாமர் டிரஸில் கலக்குகிறார் .இவர்தானா அவர் ?அவர் தானா இவர்?என திகைக்க வைக்கிறார்
நாயகன் ஆளும் கட்சி அமைச்சரின் மகன் . சவுமியாவை சந்திக்கிறார் . இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள் . அப்போது ஷைலி இருவருக்கும் இடையில் நுழைகிறார் . நாயகனுக்குக்குழப்பம் . இருவரில் யாரைத்தேர்வு செய்வது ?இறுதியில் சவுமியாவை திருமணம் செய்து கொள்கிறார்
திருமணம் ஆகி சில மாதங்களில் நாயகனின் சுய ரூபம் வில்லன் என்பது தெரிய வருகிறது . அடிக்கடி சவுமியாவை அடிக்கிறான் .அவனைப்போலீஸில் எப்படி மாட்ட வைத்து தண்டனை பெற்றுத்தருகிறார் என்பது தான் மீதிக்கதை
.போலீஸ் ஆபீசர் ,வக்கீல் என இரு பதவிகளில் கஜோல் நடித்து இருக்கிறார். போலீஸ் ஆபீசர் ரோலில் இவரது உடல் மொழி , நடிப்பு ரொம்ப செயற்கை . வக்கீல் ரோலில் பரவாயில்லை
நாயகன் ஆக ஷஹீர் ஷேக் .டிரான்ஸ் பர்மேஷன் காட்சியில் வில்லன் அஜித் போல் கலக்கி இருக்க வேண்டாமா? கோட்டை விட்டிருக்கிறார்
சச்சேத் பரம்பரா , டானிஷ் பாக்சித் இருவரும் பாடல்களுக்கான இசை .ஐந்து பாடல்களில் 2 சுமார் ரகம் .பின்னணி இசை அனுராக் சவுக்கியா . கச்சிதம்
மார்ட் ரட்டாசிப் தான் ஒளிப்பதிவு . கிளாமர் காட்சிகளை ஆர்வமாக ,ரசனையாகப்படம் பிடித்து இருக்கிறார் .நாமன் அரோரா , ஹேமல் கோத்தாரி இருவரும்தான் எடிட்டர்கள் .127 நிமிடங்கள் டைம் டியூரேஷன்
கனிகா தீலியன் எழுதிய கதை , திரைக்கதைக்கு சஷாங்க் சதுர்வேதி உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 பிரியாமணி நடிப்பில் வெளிவந்த சாருலதா (2012) , அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் (2019) சாமி இயக்கிய உயிர் ( 2006) , அஜித் நடித்த வாலி ( 1999) போன்ற படங்களில் வெளி வந்த பல காட்சிகளை கோர்வையாக சொன்ன விதம்
2 முதல் பாதி ரொமாண்டிக் த்ரில்லர் , பின்பாதி கோர்ட் ரூம் டிராமா என பிரித்துக்கொண்டு திரைக்கதை அமைத்த விதம்
3 டொமஸ்ட்டிக் வயலன்ஸ் பற்றி அழுத்தமாகப்பே சிய விதம்
ரசித்த வசனங்கள்
1 ரூல்ஸை பாலோ பண்றே , ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கறே , ஆனா பிரமோஷன் எதிர்பார்க்கறே . எப்படி நடக்கும் ?
2 சூஸ் பண்றதுல எதுவும் தப்பு பண்ணலையே? ஐ மீன் ஜூஸ் ..
3 லைப்ல நாம சந்தோஷமா இருக்க நமக்கு என்ன எல்லாம் தேவையோ அவை எல்லாமே நம் கண் எதிரே தான் இருக்கும்
4 லைப்லஅட்வென்ச்சர் இருந்தா அது நமக்கு ஹார்ட் அட்டாக்கைத்தான் வர வைக்கும்
5 இருவருக்கு இடையில் உருவாவதுதான் காதல் .மூவர் வந்து விட்டால் அது போர்
6 என் அப்பா யார் என உனக்குத்தெரியுமா?
உன் அப்பா யார் என உனக்குத்தெரியுதே , சந்தோசம்
7 ஒரு வீட்டில் டொமஸ்ட்டிக் வயலன்ஸ் நடக்கும்போது யார் எல்லாம் அதைப்பார்த்துட்டு அமைதியா இருக்காங்களோ அவங்களும் தப்பு நடக்கக்காரணம்
8 நமக்காகப்பேச உரிய தருணம் வரும்வரை காத்திருக்கணும்
9 ஒரு பெண்ணைக்கை நீட்டி ஒருத்தன் அடிச்சா அது மொத்தக்குடும்பத்துக்கும் விழும் அடி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இரட்டை சகோதரிகளின் அத்தையாக நடித்தவர் நடிப்பு ரொம்ப செயற்கை
2 ஒரு புருஷன் மனைவியை கை நீட்டி அடிப்பது
பெரும்பாலும் ஹாலில் , கிச்சன் ரூமில் .. ஆனால் அத்தை பெட்ரூமில் சிரமப்பட்டு அதைப்படம் பிடிக்கிறார்
3 இயக்குனருக்கு இப்படத்தை டொமஸ்ட்டிக் வயலன்ஸ் பற்றிப்பேசுவது போல எடுக்கலாமா? கிளுகிளுப்புக்கதையாக எடுக்கலாமா? என ஒரு டைலமோ
4 கோர்ட் காட்சிகள் எடுபடவில்லை .நாடகத்தனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமாக வந்திருக்க வேண்டிய நல்ல படம் . இயக்குனரின் அனுபவக்குறைவால் சுமாராக வந்துள்ளது . ரேட்டிங்க் 2.25 / 5
Do Patti | |
---|---|
Directed by | Shashank Chaturvedi |
Written by | Kanika Dhillon |
Produced by | |
Starring | |
Cinematography | Mart Ratassepp |
Edited by | Naman Arora Hemal Kothari |
Music by | Score: Anurag Saikia Songs: Sachet–Parampara Tanishk Bagchi |
Production companies |
|
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 127 minutes[1] |
Country | India |
Language | Hindi |