Wednesday, August 28, 2024

போகுமிடம் வெகுதூரமில்லை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

     




    திருமண மண்டபங்களில்  மணப்பெண் ,  பெண்ணின் தோழி  என இருவரின்  அலங்காரங்களை  ஆர்ப்பாட்டமாக  நாம் காணும் அதே சமயம்  ஒப்பனையே  இல்லாத ஒரு எளிமையான அழகு ஒவ்வொரு மண்டபத்திலும் உலா வருவதைப்பார்க்க  முடியும் .அந்த மாதிரி தான்  இந்த வாரம் வெளியான மூன்று படங்களில்  கவித்துவம்  மிக்க   வாழை  படத்துக்கும் , காலிப்பெருங்காய டப்பா ஆன  கொட்டுக்காளி படத்துக்கும் மீடியாக்கள் ,விமர்சகர்கள் அளித்த முக்கியத்துவத்தில்  பாதியைக்கூட அளிக்காவிட்டாலும்  தரத்தால் தனித்து நிற்கிறது இந்தப்படம் 



 கல்கி , இந்தியன் 2 , தங்கலான் போன்ற பிரமாண்டமான , டப்பாப்படங்களை , குப்பைப்படங்களை , மக்கள் மனதில் கனெக்ட்டே ஆகாத    ஆகாவளிப்படங்களைப்பார்த்து  சலித்த  நமக்கு  ஸ்டார்  வேல்யூ இல்லாத ,விளம்பரம்  அதிகம் இல்லாத எளிமையான   சாதா  பட,மாக  இருந்தாலும்  ரசிக்க  முடிகிற நல்ல படமாக இருப்பதில் திருப்தி             


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு டிரைவர் . மனைவி நிறை மாத கர்ப்பிணி ஆக ஹாஸ்ப்பிடலில் இருக்கிறார் . ஆபரேஷன்   செலவுக்குப்பணம் தேவை .ஒரு பிணத்தை ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு  டெலிவரி செய்ய வேண்டும் 



இறந்த ஆள் அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி  இரு தாரம்  கொண்டவர் .ஆள் பெரிய இடம் . இரு தாரங்களுக்கும்  வாரிசு உண்டு . இரு தாரங்களின்  குடும்பமும்  இறந்தவரின்  சவ  அடக்கத்துக்கு உரிமை கோர , சண்டை போட ரெடியாக இருக்கிறார்கள் 


 நாயகன் பிணத்தை ஏற்றி வரும்போது  வழியில் லிப்ட் கேட்டு  ஒரு ஆள்   ஏறுகிறான் . பின் ஒரு காதல் ஜோடியும்  ஏறுகிறது . . காதல் ஜோடியைத்துரத்திக்கொண்டு  ஒரு கும்பல் . இந்த களேபரத்தில்  பிணம் காணாமல் போகிறது 


 நாயகன்  இந்தப்பிரச்சினையை எப்படி  டீல் செய்கிறான் என்பது மீதிக்கதை 

நாயகன் ஆக விமல் .களவாணி  , விலங்கு  மூலம் பலர் மனதைக்கவர்ந்தவர்  இதில் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார் . க்ளைமாக்சில்  இவரது நடிப்பு பட்டாசு 


லிப்ட் கேட்கும் ஆளாக  தெருக் கூத்துக்  கலைஞனாக  கருணாஸ் கலக்கி இருக்கிறார் . நாயகனை விட கனமான ரோல் . லொடுக்குப்பாண்டி  கேரக்ட்டருக்குப்பிறகு கிடைத்த நல்ல ரோல் . 

நாயகனின் மனைவி ஆக  மே ரி ரிக்கெட்ஸ்  குறைவான நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பு 


 மற்ற  நடிகர் நடிகைகள் அனைவருக்கும் சின்னசின்ன  ரோல்தான் . குட் 


டெமில் சேவியர் எட்வார்ட்ஸ்   தான் ஒளிப்பதிவு . இது மாதிரி படம் முழுக்க   பயணம் இருக்கும் கதையில்  கேமரா ஒர்க் சவாலானது . கச்சிதமாகப்பணியாற்றி இருக்கிறார் . ரகுநந்தன் இசையில் இரண்டு பாடல்கள்  சுமார் ரகம், பின்னணி இசை அருமை 


 திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  மைக்கேல் கே ராஜா . எடிட்டிங் குட் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 



சபாஷ்  டைரக்டர்


1   ஒருவருக்கு முடிந்தவரை நாம் உதவவேண்டும் என்பதுதான் கதையின் மையக்கரு .அதை பிரச்சார தொனி 

 இல்லாமல் இயல்பாக சொல்லி இருக்கிறார்  


2  காதல் ஜோடிக்கு உதவி செய்து உயிரைக்காப்பாற்றியதால்  அந்தக்காதலன் நாயகன் காலில் விழுந்து நன்றி சொல்லும் இடம்  நெகிழ்ச்சி  என்றால்  அப்போது  நாயகன் கற்பனை செய்து  பார்க்கும் காட்சி ரசனை 


3 கருணாஸின் கேரக்ட்டா  டிசைன் அருமை .ஆரம்பத்தில்  பிளேடு போடுபவர் பின் மெல்ல மெல்ல   நம் மனதில் குடி ஏறுகிறார்


4  படம் முழுக்க ஒரு பதட்டம் நம்மைத்தொற்றிக்கொள்கிறது . அந்த டெம்ப்போவை  கடைசி வரை காப்பாற்றிய விதம் அருமை  


  ரசித்த  வசனங்கள் 


1  அம்மா இருந்தவரை கல்யாணம் பண்ணிக்க- ன்னு சொல்லி நச்சரிப்பாங்க, அப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணலை அம்மா இறந்தபின்  கல்யாணம் பண்ணிக்கற  வயசு தாண்டிடுச்சு 


2  அப்டி திட்டி இருக்கக்கூடாது , ஒரு வார்த்தை உயிரையே கொல்லும் 


3 எனக்கு மட்டும்   எல்லாமே  தப்புத்தப்பா நடக்குது 


4 சனியன் நம்மைப்பிடிச்சுடக்கூடாது , சனியன்பிடிச்ச  ஆளைக்கூடவெச்சிருக்கக்கூடாது , அவங்க கூட சகவாசம் வெச்சிக்கக்கூடாது


5  என்னை சொல்லிட்டு நீங்க தம் அடிக்கறீங்களே?இது மட்டும் சாமிக்கு ஊதுபத்தியா? 


6   ஒத்தைக்கொள்ளி க்கு பத்துக் கொள்ளி  பரிகாரமா? 


7 பேருக்காகவும் கொள்ளி   வைக்கலை , ஊருக்காகவும் கொள்ளி   வைக்கலை , உரிமைக்காக கொள்ளி   வைக்கறோம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காதல் ஜோடிக்கு உதவி செய்து உயிரைக்காப்பாற்றியதால்  அந்தக்காதலன் நாயகன் காலில் விழுந்து நன்றி சொல்லுகிறான் , ஆனால் காதலி ஒரு நன்றி கூட சொல்லவில்லையே? 


2  க்ளைமாக்சில்  வரும் டிவிஸ்ட்  சொல்லாமலே பட க்ளைமாக்ஸை நினைவுபடுத்துகிறது .இப்படி எல்லாம் ஒரு தியாகி இருப்பார்களா? நம்பகத்தன்மை இல்லை 


3  அழாதீங்க  என்று டயலாக் வர வேண்டிய இடத்தில் அழுகாதீங்க என வருகிறது . பழம்தான் அழுகும் 


4 காதல் ஜோடியைக்காப்பாற்றிய  நாயகன் அவனிடம் அடி வாங்கிய கும்பல்  போன் பண்ணி வரச்சொல்லும்போது ந,ம்பி எப்டிப்போகிறார்கள்? போனால் அடி விழும் என தெரியாதா?  


5  விபத்தில் இறந்தவர்  தலையில் அடிபட்டு அடையாளம் தெரியாமல் இருக்கார் என சமாளித்தாலும்   ஆள் மாறாட்டம்  நடந்த பின் டெட் பாட்டியின் உயரம் , , உடல் வாகு  மாறி இருப்பது தெரியாதா? அவருக்கு நரை முடி இவருக்குக்கருப்பு முடி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எம் சசிக்குமார் நடித்த அயோத்தி  பட பாதிப்பு கொஞ்சம்  இருந்தாலும்  இது ஒரு மாறுபட்ட த்ரில்லர் ..பார்க்கலாம் . எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் 43  குமுதம் - நன்று . அட்ரா  சக்க ரேட்டிங்க் 3 / 5