Wednesday, June 12, 2024

HIT MAN (2024) - ஆங்கிலம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் பிளாக் காமெடி க்ரைம் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

             

       2023 ஆம்  ஆண்டு  நடந்த 80 வது  வெனிஷ்  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  திரையிடப்பட்ட  இப்படம்  ஆடியன்சின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்றது. இது  ஒரு  உண்மை  சம்பவம், ஆட்டோ  பயோகிராஃபி  போல  சொல்லலாம்.24/5/2024  முதல்  அமெரிக்கத்திரையரங்குகளில்  திரையிடப்பட்ட  இப்படம்  இப்போது  7/6/2024  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில்  காணக்கிடைக்கிறது


படத்தின்  நாயகன்  ஆன க்ளென் பவல்  மற்றும்  இயக்குநர்  ஆன  ரிச்சர்ட்  லிங்க்லேட்டர் இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் .2001 ஆம்  ஆண்டு  டெக்சாஸ்  மந்த்லி மேகசின்ல  வந்த  ஒரு  ஆர்ட்டிக்கிளை  பேஸ்  பண்ணி  கதை  ரெடி  பண்ணி  இருக்காங்க 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  காலேஜ் புரொஃபசர். உளவியல்  பாடம்  எடுப்பவர். பார்ட்  டைம் ஜாப்  ஆக  போலீஸ்  இன்ஃபார்மர்  போல  செயல்படுகிறார். அதாவது  யாருக்காவது  யாரையாவது  கொல்ல  வேண்டிய  தேவை  ஏற்பட்டால்  வாடகைக்கொலையாளியை  நியமித்து  கொல்வார்கள்  இல்லையா? அந்த  வாடகைக்கொலையாளி  போல  வேடம்  இட்டு  குற்றவாளிகளுடன் பழகி  அவர்கள்  வாயால்  வாக்கு  மூலம்  வாங்கி  தக்க  ஆதாரங்களுடன்  அவர்களை  போலீசில்  சிக்க  வைப்பார் 


தசாவதாரம்  கமல்   போல  பல  கெட்டப்களில்   உலா  வந்து தான்  ஒரு  ஹிட்மேன்  என்பதை  நம்ப  வைத்து  குற்றவாளியிடம்  பேசி  போலீசில்  மாட்டி  விடுவதை  வழக்கமாகக்கொண்டுள்ளார் 


ஒருமுறை  நாயகன்  நாயகியை  சந்திக்கிறார். நாயகி  திருமணம்  ஆனவர். கணவனுடன்  கருத்து வேறுபாடு  கொண்டவர். ஒரு  கட்டத்தில்  தன்  கணவனைக்கொலை  செய்து  விடலாம்  என  நினைக்கிறார். அதற்காக  நாயகனை  ஹிட்  மேன்  என  நினைத்து  அவரை  வாடகைக்கொலையாளியாக  நியமிக்க  முற்படுகிறார்


 முறைப்படி  நாயகன்  நாயகியை  போலீசில்   மாட்டி  விட்டிருக்க  வேண்டும். ஆனால்  லவ்  அட்  ஃபர்ஸ்ட்  சைட்  விதிப்படி  நாயகன்  நாயகி  மீது  காதல்  கொண்டதால்  நாயகியை  தப்பிக்க   விடுகிறார். மேலும்  நாயகிக்கு  அட்வைஸ்  செய்து  கொலை  எல்லாம்  வேண்டாம், உங்களுக்கு  அவரைப்பிடிக்கவில்லை  எனில்  அவரை  விட்டு  விலகிச்சென்று  உங்களுக்கான  வாழ்க்கையை  வாழுங்கள்  என  அனுப்பி  விடுகிறார்


அதே  போல்  நாயகியின்  கணவனும்  நாயகனை  சந்தித்து  தன்  மனைவியைக்கொலை  செய்யுமாறு  கேட்கிறார், அவரையும்  போலீசில்  மாட்ட  விடாமல்  தப்ப  வைக்கிறார்


 ஒரு  கட்டத்தில்  நாயகி  தன்  கணவனைப்போட்டுத்தள்ளி  விடுகிறார். இன்சூரன்ஸ்  பணத்துக்காகத்தான்  கொலை  செய்தார்  என  போலீஸ்  சந்தேகிக்கிறது 


 இதற்குப்பின்  நாயகன்  நாயகியை  எப்படிப்போலீஸிடம்  இருந்து  நாயகியைக்காப்பாற்றுகிறார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக க்ளென் பவல்   நடிப்பில்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  மாறுபட்ட  கெட்டப்கள் , முக  பாவனைகள் , உடல்  மொழி  அனைத்தும்  அருமை . நாயகி  உடனான  ரொமான்ஸ்  காட்சிகளில்  பாடி  கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ்  , பயாலஜி  அனைத்தும்  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 

நாயகி  ஆக   அட்ரியா  அர்ஜோனா  ஒரு  அழகுப்பதுமை . கண்கள் , புன்னகை  இரண்டுமே  அவரது  பிளஸ்  பாயிண்ட்ஸ். படம்  ஆரம்பித்து  முதல்  25  நிமிடங்கள்  ஸ்லோவாகப்போகும்    இவரது  எண்ட்ரிக்குப்பிறகுதான்  ஸ்பீடு  எடுக்கும். இவரது  காஸ்ட்யூம்  டிசைன்  அருமை 


நாயகியின்  கணவன்  ஆக  வருபவர், நாயகனின்  கொலீக்  ஆக  வந்து  க்ளைமாக்சில்  நாயகனையே  மிரட்டுபவர்  என  கவனிக்க  வைக்கும்  கதாப்பாத்திரங்களும்  உண்டு


சாண்ட்ரா  அடேர்  தான்  எடிட்டிங். 115  நிமிடங்கள்  ஓடியதே  தெரியவில்லை . 


கிரஹாம்  ரெனால்ட்ஸ்  தான் இசை பின்னணி  இசை  பல  இடங்களில்  சுவராஸ்யம் 


ஷேன்  இ  கெல்லி  யின்  ஒளிப்பதிவு  அருமை 


சபாஷ்  டைரக்டர்


1   போலீஸ்  டீம்  நாயகனிடம்  மைக்ரொஃபோனைப்பொருத்தி  நீ  போய்  அவளிடம்  பேசு  என  அனுப்பும்போது  நாயகன்  நாயகியைத்தப்பிக்க  வைக்க  என்ன  டெக்னிக்கை  ஃபாலோ  பண்ணி  காம்வெர்சேஷனை  வளர்த்துகிறார்  என்ற  கான்செப்ட்  அபாரம், காமெடியாகவும்  இருந்தது, புத்திசாலித்தனமாகவும்  இருந்தது 


2  படத்தின்  டைட்டிலைப்பார்த்து  இதில்  வயலன்ஸ்  , ரத்தம்  தெறிக்குமோ  என  யாரும்  பயப்படத்தேவை  இல்லை , ஒரு  காட்சியில்  கூட  ரத்தம் , வன்முறை  இல்லை . இது  ரொமாண்டிக்  டிராமாவாகவே 90%  மூவ்  ஆகும் 


3  போலீசின்  கண்காணிப்பில்  நாயகன்  நாயகியிடம்  உள்ளொன்று  வைத்து புறம்  ஒன்று  பேசும்  அந்த  நீளமான  காட்சி  அபாரம். அந்தக்காட்சியில் நாயகன்  நாயகி  இருவரது  நடிப்பும்  முக  பாவனைகளும்  செம 


4   நாயகனின்  கொலீக்  நாயகன் - நாயகி  இருவரையும்  மிரட்டும்  காட்சியும்  அதை  அசால்ட்  ஆக  நாயகன்  டீல்  செய்யும்  காட்சியும்



  ரசித்த  வசனங்கள் 


1    உங்களுக்கான  ஐடெட்ண்ட்டியை  நீங்கள்  தான்  உருவாக்கனும்


2  எல்லாரையும்  போல  நீங்க  இருக்கக்கூடாது . சம்திங்  ஸ்பெஷல்  உங்க  கிட்டே  இருக்கனும் 


3  உன்னை  மாட்டிவிடச்சொன்னா  அவளுக்குக்கிளாஸ்  எடுத்துட்டு  இருக்கே?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கதையின்  முக்கிய  சம்பவம்  ஆன  நாயகியின்  கணவன்  கொலை  விஷூவலாக  ஆடியன்சுக்குக்காட்டப்படவே  இல்லை. அதைக்காட்டாமல்  அதை  வைத்தே  திரைக்கதை  பயணிப்பது  எப்படி ? 


2  நாயகன்  மேல்  சந்தேகப்படும்  போலீஸ்  டீம்  நாயகனைத்தனியாக  நாயகியை  சந்திக்க  அனுப்புவது  ஏன் ?  வீடியோ  கேமரா  செட்டப்  உடன்  அனுப்பி  இருக்கலாமே?> ஆடியோ  மட்டும்  இருப்பதால்  தானே  நாயகனால்  ஏமாற்ற  முடிந்தது ? 


3  நாயகியின்  கணவன்   உஷார்  பார்ட்டி , அவனை  எப்படி  நாயகி  கொலை  செய்தாள் ? என்பது  விஷூவலாககாட்டப்படாததால்  நம்பகத்தன்மை  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+  காட்சிகள்  உண்டு 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரொமாண்டிக்  டிராமா  பார்க்க  விருப்பம்  உள்ளவர்கள்  பார்க்கலாம். டைம்  பாஸ்  மூவி  ரேட்டிங்  2.75 / 5


Hit Man
Release poster
Directed byRichard Linklater
Screenplay by
Based on"Hit Man"
by Skip Hollandsworth[1]
Produced by
Starring
CinematographyShane F. Kelly
Edited bySandra Adair
Music byGraham Reynolds
Production
companies
Distributed byNetflix
Release dates
  • September 5, 2023 (Venice)
  • May 24, 2024 (United States)
  • June 7, 2024 (Netflix)
Running time
115 minutes[2]
CountryUnited States
LanguageEnglish
Budget$8.8 million[3]
Box office$1 million[4]