ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க முக்கியத்தேவை ஆழ்ந்த உறக்கம். அது மிட் நைட் 12 டூ 3 தூங்கும்போதுதான் கிடைக்கும். அப்படி கிடைக்க நாம் நைட் 9 டூ 10 தூங்க ஆரம்பிக்க வேண்டும், ஆனால் இப்போது அனைவரும் மிட் நைட் 12 டூ 1 வரை சோசியல் மீடியாவில் உலாத்தி விட்டு அதுக்குப்பின் உணவு அருந்தி அது ஜீரணம் ஆகும் முன் படுக்கைக்குப்போனால் எப்படி தூக்கம் வரும்.?
டீப் ஸ்லீப் அல்லது சவுண்ட் ஸ்லீப் வர என்ன செய்ய வேண்டும் ? குறட்டை விட்டால் அதுதான் ச்வுண்ட் ஸ்லீப் என அரதப்பழசான மொக்கை ஜோக் உண்டு . அந்த கான்செப்ட்டைத்தான் படத்தின் ஒன் லைன் ஆக எடுத்திருக்கிறார் இயக்குநர் வினாயக் சந்திர சேகரன்.
பொதுவாக ஹீரோவை நம்பாமல் திரைக்கதையை நம்பும் படங்களை நாம் ஆதரிப்பது வியப்பில்லை . மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அபரிதமான லாபத்தையும், நல்ல பெயரையும் சம்பாதித்துக்கொடுத்த படம் இது. கே பாக்யராஜ் , வி சேகர் போன்ற இயக்குநர்கள் பாணியில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கண்ணியமான படத்தைத்தந்த இயக்குநருக்கு வாழ்த்துகள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி அம்மா, அப்பாவை இழந்த அனாதைப்பெண் . ஒரு போர்ஷனில் தனியாகக்குடி இருக்கிறார். வேலைக்கு செல்பவர் . அவரது ஹவுஸ் ஓனர் ஆன வயதான தம்பதி தான் நாயகிக்கு கார்டியன் போல .
நாயகன் அம்மா, தங்கை , அக்கா, அக்காவின் கணவர் என்று கூட்டுக்குடித்தனத்தில் வசிக்கும் பேச்சிலர். இவர் ஐ டி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஆஃபீசில் பணிபுரியும் சக கொலீகிடம் லவ் பிரப்போஸ் செய்கிறார் ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை
இதற்குப்பின் நாயகியை எதேச்சையாக சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். அவரும் ஓக்கே சொல்ல திருமணம் நடக்கிறது
வில்லனே இல்லாத கதையில் நாயகன் - நாயகி திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது ? அதை எப்படி சரி செய்தார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக மணிகண்டன், கச்சிதமான நடிப்பி , அளவான பேச்சு , உடல் மொழி எல்லாம் அருமை
நாயகி ஆக மீத்தா ரகுநாத் அட்டகாசமான தேர்வு . ஒப்பனையே இல்லாத இயல் அழகி . இவரது யதார்த்தமான நடிப்பு , சிரிப்பு மிகப்பெரிய பிளஸ்
நாயகனின் அக்காவாக ரைச்சல் ரெபேக்கா பிரமாதமான நடிப்பு . , சின்னச்சின்ன முக பாவனைகளை அசால்ட் ஆக வெளிப்படுத்துகிறார்
கோடிகளில் சம்பளம் வாங்கும் இன்றைய முன்னணி நடிகைகள் இவர்கள் இருவரையும் ஃபாலோ செய்தால் நல்லது
நாயகனின் அக்கா கணவர் ஆக ரமேஷ் திலக் நல்ல குணச்சித்திர நடிப்பு . ஆஃபீஸ் ஹையர் ஆஃபீசர் ஆக பகவதி பெருமாள் வில்லத்தனம் மிக்க நடிப்பு
அது போக ஒரு நாய்க்குட்டி மிக யதார்த்தமாக படம் முழுக்க பயணிக்கிறது , பெட் லவ்வர்ஸ்க்கு ஜாக்பாட்
சீன் ரோல்டன் இசையில் நான் காலி என்ற பாடல் அதிரி புதிரி ஹிட் மெலோடி , மற்ற பாடல்களும் ஓக்கே ரகம் தான் . பிஜிஎம் பக்கா
ஜெயந்த் சேது , மாதவன் இருவரும் ஒளிப்பதிவு. காட்சிகளை கண் முன் காண்பது போல நேர்த்தியான படப்பிடிப்பு
கே பாக்யராஜ் பாணியில் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வினாயக் சந்திர சேகரன்.
சபாஷ் டைரக்டர் (வினாயக் சந்திர சேகரன்.)
1 நாயகன் , அக்கா கணவர் இருவருக்குமான பாண்டிங் , அவர்கள் இருவருக்குமான காட்சிகள் எல்லாம் அருமை. மச்சினந் மாமா என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் ? என நினைக்க வைக்கும் நடிப்பு
2 மெய்ன் கதைக்கு சம்ப்ந்தம் இல்லை என்றாலும் அந்த நாய்க்குட்டி - நாயகி இருவருக்குமிடையேயான நட்பு அழகான கவிதை
3 கணவன் - மனைவி பிரிவுக்கு இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத ஒரு காரணம், அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்ன விதம்
4 பிரிவுக்குப்பின் தூக்கம் வராமல் தவிக்கும் நாயகி நாயகனின் குறட்டை சத்தத்தை டேப்பில் ஓட விட்டு அந்த சத்தத்தில் தூங்கும் காட்சி
செம ஹிட் சாங்க்ஸ்
1 நான் காலி
2 சில் மக்கா
ரசித்த வசனங்கள்
1 நீங்க யார்?னு இந்த உலகம் உங்களைக்கேட்கும்போது உங்களுக்கு பதில் சொல்லத்தெரியலைன்னா உலகமே உங்களுக்கு ஒரு பேரு வைக்கும் , அப்படி எனக்கு இந்த உலகம் வெச்ச பேரு தான் அம்மா, அப்பாவை விழுங்கினவ, அன் லக்கி
2 ஒரே நாள்ல நம்ம வாழ்க்கைல எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தா எப்படி இருக்கும் ?
3 வாழ்க்கைல பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு சின்னச்சின்ன விஷயங்களே தீர்வாக இருக்கின்றன, நாம் தான் அதைப்புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்
4 வாழ்க்கைல எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 உணவுப்பொருட்களை வீண் ஆக்குதல் அல்லது அவமதித்தல் இது இயக்குநரின் மூலம் பல முறை பார்வையாளர்களுக்கு கடத்தப்படுது . ஓப்பனிங் சீன்ல முள்ளங்கி சாம்பாரை மட்டம் தட்டி நாயகன் பேசும் வசனமும், மிளகு கலந்த பால் டம்ளரை தட்டி விடுவதும் உதா. இதை எல்லாம் தவிர்க்கலாம், அன்னலட்சுமியைப்பழிக்கக்கூடாது
2 நாயகன் சரக்கு அடிக்கிறான், தம் அடிக்கிறான். அவை இரண்டும் நாயகிக்கு பிரச்சனையாகத்தெரியவில்லை . சிகரெட் நாற்றம், சரக்கு நாற்றம் பற்றி மூச்சு விடவில்லை , ஆனால் குறட்டை மட்டும் தான் பெரிய பிரச்சனை ஆக சொல்கிறார்
3 நாயகனின் குறட்டைப்பிரச்சனையால் இருவ்ரும் தனித்தனி ரூமில் படுபப்தும் அதனால் இருவருக்கும் தாம்பதய உறவே நடக்க வில்லை எனவும் அதனால் குழந்தை பாக்கியம் இல்லை எனவும் சித்தரித்து இருப்பது நகைப்பான விஷயம் , தினசரி தாம்பதய உறவை முடித்து விட்டு பின் தனித்தனி ஆறையில் தூங்கசெல்லலாமே? தனிக்குடித்தனம் தானே?
4 காமெடிக்காக எடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சி அபத்தம். டேக் ரிவர்ஸ் என பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சொல்லும் காட்சி திகட்டி விடுகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நல்ல திரைக்கதை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம் . குடும்பத்துடன் பார்க்கலாம், ரேட்டிங் 3.25 .5