அக்கினேனி நாகேஸ்வரராவ்- சாவித்திரி நடிப்பில் 1953ல் ரிலீஸ் ஆன தெலுங்குப்படமான BRATUKU TERUVU ஆந்திராவில் செம ஹிட் ஆனது. மூன்று வருடங்கள் கழித்து அது தமிழில் பலே ராமன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு 1956ல் ரிலீஸ் ஆனது. பிறகு அது ஹிந்தியில் ஜீன் கி ராஹ் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி 1969ல் ரிலீஸ் ஆனது. பிறகு மூன்று வருடங்கள் கழித்து தமிழில் ரீ மேக் ஆகி நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு திருமணம் ஆகி விட்டது , ஒரு குழந்தை இருக்கிறது. இவர் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வரும்போதுதான் தன் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வேலைக்குப்போய் சிரமபடுவதை அறிந்து கொள்கிறார். இனி வேலைக்குப்போய் தன் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும், ஆனால் வேலை எங்கும் காலி இல்லை
நாயகனின் அப்பாவுக்கு இரண்டு தாரங்கள் , அதனால் அவரது இரண்டாவது தாரத்துக்குப்பிறந்த குழந்தைகளையும் இவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்
படிப்பு முடிந்ததும் சென்னை வந்து வேலை தேடும்போது அவரது ஊர்க்காரர் சிபாரிசு மூலம் ஒரு பக்கம் வேலை கிடைக்கிறது. ஆனால் அங்கே திருமணம் ஆகாதவருக்குத்தான் வேலை என்ற கண்டிஷன் இருப்பதால் நாயகன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து விடுகிறான்
ஓனருக்கு ஒரு மகள் , அம்மா இறந்த அதிர்ச்சி தாளாமல் மன ரீதியாக உடல் ரீதியாக பாதிப்பு அடைந்த நாயகி நாயகனின் வருகைக்குப்பின் உற்சாகம் அடைகிறாள் ஒருதலையாக நாயகனை விரும்புகிறாள்
சென்னை போன நாயகனைத்தேடி அவனது மனைவி , குழந்தை , அம்மா அனைவரும் வந்து விடுகின்றனர் ., நாயகன் ஒரு பக்கம் தன் குடும்பம் , இன்னொரு பக்கம் தன் மீது ஆசைப்படும் ஓனரின் மகளான நாயகி இருவரையும் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்பது மீதி திரைக்கதை
நாயகனாக எம் ஜி ஆர் . உற்சாகமான தோற்றம் , கண்ணியமான உடைகள் என படம் பூராவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகியாக காஞ்சனா . பணக்காரக்களை கச்சிதம்
மனைவியாக கே ஆர் விஜயா எளிமையின் சிகரமாக வந்து பெண்களின் உள்ளங்களைக்கவரும் கேரக்டர்
காமெடிக்கு நாகேஷ் . ஓனராக மேஜர் சுந்தர் ராஜன் வழக்கம் போல
வில்லனாக நம்பியார், சைடு வில்லனாக தேங்காய் சீனிவாசன் , அதிக வாய்ப்பில்லை
சபாஷ் டைரக்டர்
1 பொதுவாக ஆக்சன் ஹீரோக்கள் ஓப்பனிங் சீனாக ஃபைட் சீன் வைப்பதைத்தான் விரும்புவார்கள் , எம் ஜி ஆர் ஃபார்முலா படி ஓப்பனிங் சீன்ல பெண்களுக்கு , குழந்தைகளுக்கு உதவுவது போல சீன் வைத்து பில்டப் வசனம் கச்சிதமாக பிளேஸ் செய்த விதம்
2பாடல் காட்சிகளைப்படமாக்கிய விதம் , நாயகி , மனைவிக்கான உடைகளில் கண்ணியம், பெண்களைக்கவரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் கனகச்சிதமான கதம்ப மாலையாக தொகுக்கப்பட்ட திரைக்கதை
செம ஹிட் சாங்க்ஸ்
1 நான் ஏன் பிறந்தேன்?நாட்டுக்கு நலன் என்ன புரிந்தேன்? என நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா ( ஹீரோ ஓப்பனிங் சாங் )
2 தம்பிக்கு ஒரு பாட்டு , அன்புத்தங்கைக்கு ஒரு பாட்டு , வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு நான் சொல்லும் கதைப்பாட்டு ( சந்தோஷ நிலையில் ஹீரோ தத்துவப்பாட்டு )
3 நான் பாடும் பாடல் நலம் ஆக வேண்டும் , இசை வெள்ளம் நதியாக ஓடும், அதில் இளநெஞ்சம் படகாக ஆகும் ( ஹீரோவின் மைண்ட் டைவர்ட் சாங் )
4 என்னம்மா சின்னப்பொண்ணு ( நாயகியின் இமேஜினேஷனில் நாயகனுடன் டூயட் ) 0 எம் ஜி ஆர் ஃபார்முலா படி ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடி எனில் அந்த டூயட் சாங்கை கனவு காண்பது நாயகனாக இருக்க மாட்டார், நாயகிதான் கனவு காண்பார் )
5 தம்பிக்கு ஒரு பாட்டு , அன்புத்தங்கைக்கு ஒரு பாட்டு , வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு ( சோகப்பாட்டு , ரிப்பீட்டு );
6 எனது விழியில் உனது பார்வை உலகைக்காண்பது ( மனைவியுடன் டூயட்)
7 தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன் ( மனைவி பக்திப்பாட்டு )
8 சித்திரைச்சோலைகளே ( இது எப்போ வருதுனு தெரில, கட்)
ரசித்த வசனங்கள்
1 கணவனோட புகழுக்குப்பின்னால மனைவியோட அன்பு இருக்கும்னு ஒரு ஆங்கிலக்கவிதைல படிச்சிருக்கேன்
2 உங்க குல தெய்வம் யாரு ?
என்னைப்பெத்த எங்க அம்மா தான்
3 மனிதர்களுக்கு செல்வத்தைக்குடுத்த கடவுள் கூடவே கவலையையும் ஏன் கொடுத்தான்?
அப்பதான் அவன் கடவுளை மறக்காம நினைச்சுட்டு இருப்பான்
4 இவன் நிச்சயம் நம்ம ரெண்டு பேருக்கும் வேட்டு வைக்கப்போறான்
என்ன வேட்டு ?
ம், டைனமேட்டு
5 அவன் ஒத்தை ஆள் தான், ஆனா பத்துப்பேரை அடிப்பான் ஜாக்கிரதை
6 மற்றவர்களைக்கெடுக்கற வேலை தவிர வேற எந்த வேலையும் யாரும் செய்யலாம்,
7 ரொட்டில தடவற வெண்ணெயை எப்படி மீண்டும் வழித்து எடுக்க முடியாதோ அதே மாதிரி தான் நான் உன் மீது வைத்திருக்கும் அன்பும், யாரும் அதை திருப்பி எடுக்க முடியாது ( டேய் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்க டா மொமெண்ட் )
8 விட்டுக்கொடுக்கும் குணம்தான் பெண்ணின் பெருமை
9 வல்லவன் என பேர் எடுப்பதை விட எல்லாருக்கும் நல்லவன் என பேர் எடுக்கத்தான் நான் ஆசைப்படறேன் ( சம்பந்தமில்லாத டயலாக்_11111
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் படித்தவர். ஆனால் தன் வீட்டுப்பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கும்போது பொதுத்துறை வங்கியில் முயற்சி செய்தால் குறைந்த வட்டிக்குப்பணம் கிடைத்திருக்குமே? ஏன் தனியாரிடன் அநியாய வட்டிக்கு வாங்குகிறார்? படிக்காத ஆள் அல்லது பத்திரத்தில் ஏதாவது வில்லங்கம் இருந்தால்தான் அப்படி செய்வாங்க
2 நாயகன் நேர்மையானவர், ஆனால் மணிஆர்டர் அனுப்பாமல் கவரில் 500 ரூபாய் வைத்து அனுப்புவது ஏன் ? கவரில் பணம் வைத்து அனுப்பக்கூடாதே?
3 நாயகனுக்கு திருமணம் ஆகி மனைவி , குழந்தை எல்லாம் இருக்கிறது என்பது கே எஸ் கோபால கிருஷ்ணனுக்கு தெரியும், ஆனால் மேஜர் சுந்தர் ராஜனிடம் வேலைக்காக சிபாரிசு பண்ணும்போது மேரேஜ் ஆன தகவலை ஏன் சொல்லவில்லை ? பிரம்மச்சாரியைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்வேன் என அவர் தெளிவாக இருக்கிறாரே?
4 நாயகனின் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. வீடு கடனில் இருக்கிறது , சாப்பாட்டுக்கே கஷ்டம், ஆனால் நாயகன் உடுத்தும் உடைகள் எல்லாம் கோடீஸ்வரன் ரேஞ்சுக்கு இருக்கே? கோட் சூட் என கலக்கலாக இருக்கிறார்
5 நாயகன் வீட்டுக்குப்பணம் அனுப்புகிறான், அதை போஸ்ட் மேன் வீட்டு அட்ரசில் டெலிவரி செய்யாமல் ஆத்துல துவைச்சுக்கிட்டு இருக்கும் நாகேஷிடம் ஏன் தருகிறார்? ஒரு முறை நாயகனின் தங்கையிடம் தருகிறார், ஆனால் ஒரு முறை கூட நாயகனின் மனைவி கையில் தரவில்லையே?
6 நாயகன் கடிதம் அனுப்பும்போது அதில் அனுப்புனர் முகவரி இருக்குமே? நாயகனின் மனைவி ஏன் அவரது தங்கை பணம் தராமல் ஏமாற்றுவதை தகவல் தெரிவிக்கவில்லை ?
7 நாயகனைத்தேடி பட்டணம் வரும் அவரது குடும்பத்தார் நாயகனிடம் தாங்கள் வரும் தகவலை ஏன் தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வருகிறார்கள் . பிராப்பர் அட்ரஸ் தெரியாமல் யாராவது அப்படி வருவார்களா?
8 மனைவிக்கு படிப்பறிவு இல்லை , நகரத்தில் ஹோட்டலில் இருக்கும்போது டாய்லெட்டைக்காட்டி அங்கே போய்விட்டு வருவதாக கூறும்போது அவளுக்குப்புரியவில்லை, உடனே நாயகன் அவள் காதில் ரகசியமாகக்கிசுகிசுக்க அவள் ஏதோ ஜோக் கேட்டது போல வெட்கப்பட்டு சிரிக்கிறாள் , பாத்ரூம் போய்ட்டு வர்றேன்னு சொல்றதுல என்ன தயக்கம் > அதுல என்ன காமெடி ?
9 தனக்கு மேரேஜ் ஆனதை மறைத்துத்தான் நாயகன் வேலையில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது நகரத்துக்கு வந்த அமனைவியை நாலு பேர் பார்க்கும்படி ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று அங்கே நடக்கும் தகறாறில் ஃபைட் எல்லாம் போடுகிறார். இது அபாயம் என அறியாதவரா?
10 நாயகனின் மனைவி நகரத்துக்குக்கிளம்பியது ஓக்கே , ஆனால் அவரது தங்கையும் , கணவரும் ஏன் நகரத்துக்கு வர்றாங்க > அப்போ நாயகன் அனுப்பப்போகும் பணத்தை ரிசீவ் பண்ண அங்கே ஆள் இருக்க மாட்டாங்களே? எதுக்காக அவங்க அங்கே வரனும் ? காமெடி டிராக் கண்ட்டிநியூ ஆகவா?
11 நாகேஷ் அண்ட் கோ பீச்சில் வடை சுட்டு விற்கும்போது ஒரு டயலாக் வருது. நாலு வடையாவது விற்றாதான் அடுத்த வேளைக்கஞ்சிக்கே வழி... அவ்ளோ வறுமையில் ஊரிலிருந்து சென்னை வந்த அந்த ஜோடிக்கு பிரமாதமான வசதியுடன் வீடு வாடகைக்கு எப்படிக்கிடைத்தது? அட்வான்ஸ் எப்படிக்கொடுத்தாங்க ? வீட்டில் டைனிங் டேபிள் , டி வி எல்லாம் ஆடம்பரமா இருக்கே?
12 நாயகன் வீடு என தெரியாமல் நாயகி வீட்டுக்கு வருகிறாள், ஆனால் அங்கே வீட்டில் நாயகன் திருமண ஃபோட்டோ எதுவும் இல்லையே? அவர் வருவார் என்பது நாயகனுக்கு முன் கூட்டியே தெரியாது. எப்படி மறைத்தார் ?
13 பீச்சில் வடை சுட்டு விற்கும் நாகேஷூம், மனைவியும் இன்னொரு காட்சியில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக காட்றாங்க. ஆனா வீடு மட்டும் மொசைக் தரை வீடு
14 டைனிங் டேபிள் , அட்டகாசமான கிச்சன் கிட்ஸ் உடன் வாழும் தங்கை ஒரு சீனில் ஒரே ஒரு துணி மூட்டையுடன் அண்ணன் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறார். ஆல்ரெடி காட்டப்பட்ட அந்த பொருட்களை எல்லாம் சேல்ஸ் பண்ணிட்டாரா?
15 மங்குலி நோன்பு அன்று வீட்டுக்கு வந்தே ஆகனும், சுமங்கலி பூஜை செய்யனும் என மனைவி சொல்கிறார். நாயகி அதே நாள் அன்று தனக்கு பிறந்த நாள் , அன்று ஒரு பார்ட்டி என்கிறார். உடனே நாயகன் எங்கே போவது என தடுமாறுகிறார். காலையில் பர்த்டே பார்ட்டி மாலையில் நோன்பு கும்பிடுதல் என ஈசியாக சமாளிக்கலாமே?
16 கணவனின் ஆஃபீஸ் லேண்ட் லைன் ஃபோன் நெம்பர் மனைவி வாங்கி வைத்துக்கொள்ள மாட்டாரா? மங்குலி நோம்பிக்கு இன்னும் வர்லையே?னு பார்த்துட்டே இருக்கார்..
17 மங்குலி நோம்பிக்கு மனைவி சாமி கும்பிடும்போது பூஜை அறைக்குள் நாயகன் பூட்ஸ் காலுடன் வருகிறார். அதுக்கு க்ளோசப் ஷாட் வேற
18 நாயகன் நாயகியின் பர்த்டே அன்னைக்கு பூ பொக்கே கிஃப்ட் ஆக தரும்போது நாயகி அதிலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து நாயகனின் கோட்டில் நேருவிற்கு அணிவிப்பது போல அணிவிக்கிறார், ஆனால் அதே ரோஜாவை தன் தலையில் சூடிக்கொண்டிருந்தால் இன்னும் கேட்சிங்காக , மேட்சிங்காக இருந்திருக்கும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - பல்லாண்டு வாழ்க படம் தவிர்த்து எம் ஜி ஆரின் அனைத்துப்படங்களுமே கண்ணியமான காட்சிகள் கொண்ட ;படம் தான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - எம் ஜி ஆர் ரசிகர்கள் மட்டுமல்ல , பொது ரசிகர்களும் கண்டு களிக்கும்படி ஜாலியான ஃபேமிலி டிராமாவாகத்தான் போகுது . பார்க்கலாம், ரேட்டிங் 2. 5 / 5
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | சித்திரை சோலைகளே | டி. எம். சௌந்தரராஜன் | பாரதிதாசன் | 03:19 |
2 | நான் பாடும் பாடல் | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 03:29 |
3 | நான் ஏன் பிறந்தேன் | டி. எம். சௌந்தரராஜன் | 04:09 | |
4 | தலை வாழை | ஜிக்கி, ஜானகி | 04:01 | |
5 | தம்பிக்கு (மகிழ்ச்சி) | டி. எம். சௌந்தரராஜன் | அவினாசி மணி | 03:38 |
6 | தம்பிக்கு (சோகம்) | எம். எஸ். ராஜேஸ்வரி, | 03:40 | |
7 | உனது விழியில் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் | 03:54 |
8 | என்னம்மா | டி. எம். சௌந்தரராஜன், கௌசல்யாa |
நான் ஏன் பிறந்தேன் | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி (காமாட்சி ஏஜென்சீஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 9, 1972 |
நீளம் | 4295 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Naan Yen Pirandhen | |
---|---|
Directed by | M. Krishnan |
Screenplay by | M. Krishnan |
Story by | Samudrala Sr. |
Produced by | Ashok Brothers |
Starring | M. G. Ramachandran K. R. Vijaya Kanchana |
Cinematography | P. Bhaskar Rao |
Edited by | K. Narayanan |
Music by | Shankar–Ganesh |
Production company | Sri Kamakshi Agencies |
Release date |
|
Running time | 160 minutes |
Country | India |
Language | Tamil |