Friday, September 23, 2022

DECOUPLED 2021 (HINDI) - வெப் சீரிஸ் விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி ஃபேமிலி மெலோ டிராமா) @ நேட் ஃபிளிக்ஸ்

ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு  கல்யாணம்  பண்னனும்னா  சொந்தக்காரங்க  , ஃபிரண்ட்சை  அழைச்சு  பிரம்மாண்டமா  கொண்டாடறோம், ஆனா  டைவர்ஸ்  பண்ணும்போது  சத்தம்  இல்லாம  முடிச்சுக்கறோம்,   டீன்  ஏஜ்    ல  ஒரு  பொண்ணு  இருக்கற  தம்பதி  பிரிய  நினைக்கறாங்க.  அதை  முறைப்படி  ஒரு  பார்ட்டியா  கொண்டாட  நினைக்கறாங்க 


அதை  முதல்ல  அவங்க  பெற்றோர்  கிட்டே  சொல்லனு,ம்  மகளிடம்  சொல்லனும்  இதெல்லாம்  நடந்ததா?   பிரிஞ்சாங்களா? என்பது  தான்  திரைக்கதை


 ஹீரோவா  , ஒரு  ரைட்டரா  மாதவன் .  மிக   மெச்சூர்டான  நடிப்பு. இந்த  கேரக்டரை  பார்க்கும்போது  நான்  ரைட்டர்  சி எஸ் கே  வை  மனசுல  நினைச்சுக்கிட்டேன்.அவங்கவங்களுக்குப்பழக்கமான  அல்லது  பரிச்சயமான   ரைட்டரை  நினைச்சுக்கறது  இந்தக்கதையோட மிங்கிள்  ஆக  உதவும் 


ஹீரோயினா  சர்வின்  சாவ்லா. நல்ல  நடிப்பு  ஹிரோவுடனான  கெமிஸ்ட்ரி  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகாததுக்குக்காரணம்  இவங்க  லவ்  போர்சனை  விஷூவலா  காட்டாத்து 


 மகளா  நடிச்சவர்   குட்  ஆக்டிங். முக்கியமான  இந்த  மூணு  ரோல்  போக  எதிர்பாராத  ஆச்சரியம்  ஹீரோவின்  மாமியாராக  வருபவர்  முக  பாவனைகள், காமெடி  கலக்கல்  நடிப்பு 


  ஏர்  ஹோஸ்டலா  வரும்  நடிகை  ஹீரோயினை  விழ  அழகு .


ஹீரோயினுக்கு  எதிர்கால  ஜோடியா  வர  இருக்கும்  கோடீஸ்வர  கொரியன்  மேன்  கேவலமா  இருக்காப்டி.இந்தியன்  ஆளையே  போட்டிருக்கலாம்


டிரைவராக  வரிபவர்  பல  இட்ங்களில்  ஸ்கோர்  பண்றார் 


மொத்தம்  எட்டு  எபிசோடு.ஒப்பொண்ணும்  அரை  மணி  நேரம்.  மொத்தம்  4  மணி  நேரம் 


 பெண்களுக்குபிடிக்கும் . விஷூவலா  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை , ஆனா  வச்னமா  கொஞ்சம்  வசனம்  அப்டி  இப்டி  இருக்கு 


 ரசித்த  வசனங்கள்


1  வேற  ஆளே  சிக்காததாலும்   வேற  வழி  இல்லததாலும்  இந்தியாவில்  பெரும்பாலான  திருமணங்கள் சகிக்கபிளா  இருக்கு 


2  பிரிஞ்சிருக்கும்  தம்பதிகளுக்கு  இதுதான்  கடைசி  தாம்பத்ய    உறவா  இருக்கும்னு  முன் கூட்டியே  தெரியாது 


3  என்  சம்சாரம்  உங்க  எல்லா  நாவ்ல்களையும்  படிச்சிருக்கா

  நீங்க  எப்படி? ஒண்ணாவது  படிச்சிருக்கீங்களா? 


4 எனக்குப்பிடிச்ச  ரைட்டரை  நேர்ல  பார்க்கும்போது  எப்படி  இருக்கு  ? தெரியுமா? 


சிக்கன்  பிரியாணி  சாப்பிடறப்ப  அந்தக்கோழியை  உயிரோட  நேரில்  பார்ப்பது  போலவா?

5  ஒரு  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டல்ல  பாத்ரூம்  போறது  பெண்களுக்கு  ரொம்பப்பிடித்தமான  விஷயம் ., சொந்த  நாட்டுக்குள்  அடி  எடுத்து  வைக்கும்  அகதியின்  மனநிலை 


6  செக்ஸ்  அதிகம்  கிடைக்காதவங்க தான்  அதைப்பத்தி  அடிக்கடி  பேசிக்கிட்டு  இருப்பாங்க 


 7  சாமிஜி  நீங்க  குருஜி 


 அப்டி  எல்லாம்  இல்லை  , அமைதியைத்தேடும்  பயணிகள்  மக்கள், அவங்களை  உரிய  இடத்துக்கு  ழைத்துச்செல்லும்  டிரைவர்  நான்


 ஆனா  அப்பப்ப  அந்த  பய்ணிகள்  கூடவே  தங்கிடறீங்க, அது  ஏன் ? 


8   வீட்டு  வேலை  செய்ய  வர்ற  பொண்ணுங்க  அழகா  இருந்தா அந்த  வீட்டில்  இருக்கும்  லேடீசுக்குப்பிடிக்காது , சோ  அகத்தில்  மட்டும்  அவங்க  அழகா  இருந்தா  போதும்


9   நான்  என்  ஃபேஸ்புக்  ஸ்டேட்டஸ்ல  சிங்கிள்னு  மாத்தி  இருக்கவே  கூடாது , ஆண்கள்  ரொம்ப  வ்ழிய  ஆரம்பிச்ட்டாங்க 


 சிங்கிள் லேடிசை  ஈசியா  ஆண்கள்  மோப்பம்  பிடிச்சிடுவாங்க  அது  ஆண்களுக்கு  அளிக்கப்பட்ட  வரம் 


10  எல்லாருடைய  வாழ்க்கையும்  ரொம்ப  சின்னது , ஒரு  மேரேஜ்  லைஃப்ல  பரஸ்பரம்  புரிஞ்சுக்க  ஜஸ்ட்  ஒரு  மாசம்  போதும் 


11  டியர் , எங்க  அம்மாவுக்கு  ஒரு  பிரச்ச்னை, நீங்க தான்  தீர்த்து  வைக்கனும். ஐ  மீன்  யூ டி ஐ


 மியூச்சுவல் ஃபண்ட்?

அய்யோ  யூரினரி  ட்ராக்  இன்ஃபக்சன் 


12  ஒரு  நல்ல  ஆண்  அவனோட  எக்ஸ் கேர்ள்  ஃபிரண்ட்சோட  வாய்சை  எப்பவும்  மறக்கவே  மாட்டான் 




13     இண்டர்நெட்ல  பெருசா  என்ன  யூஸ்?  போர்ன்  வெப்  தவிர 


 அது  மட்டுமே  நெட்  இல்லை


 35%  ஆஃப்  த  நெட்  சர்ச்  பண்றது   போர்ன்  வீடியோஸ்தான்


14   கொரியா ல  ஒரு பொண்ணோட  முதல்  டேட்டிங்கை  ஸ்விம்மிங்  பூல்லதான்  வைப்பாங்க 


 ஏன்?


 அங்கே தான்  பொண்ணுங்க  கம்மி  மேக்கப்ல  வருவாங்க . உண்மையான  அழகு   தெரியும் 


15   நாட்ல  நிறைய  பேரு  நல்லவனா  இருக்கக்காரணம்  நாம  அவங்களை  ஏழையா  மட்டும்  விட்டு  வெச்சிருக்கோ,ம்


16  இந்த  உலகத்துல  அவருக்குப்பிடிச்ச  ரெண்டு  விஷயம்  ஏழை  அப்றம்  வாழை


16   ஒரு  ஆணுக்கு  சுய  மரியாதை  , காமம்  ரெண்டுமே  வேணும்னா  ரொம்ப  க்‌ஷ்டம்  எதோ  ஒண்ணைத்தான்  அவன்  சூஸ்  ப்ணணனும்


17  இப்போ  தெரியுதா? இவரை  ?இப்போதான்  உள்ளே  நுழைஞ்சாரு , உங்க  மூளையைத்தூக்கிப்போட்டு  மிதிச்ட்டாரு 


18  ஆண்கள்  ஹேப்பியா  இருப்பது  ஈசி . இருக்கற  சூழலை  வெச்சே  அவங்க  சந்தோஷமா  இருந்துக்குவாங்க 


19  ஆண்கள்  பெண்களை  கரெக்ட்  பண்ண கண்டுபிடிச்ச  புது  வழி  எது  தெரியுமா>?>  மீ  டூ  பிரச்சனையைப்பற்றி  பேசி  அவங்களுக்கு  ஆதரவா  இருப்பது  போல்  காட்டிக்குவது


20   ஒருத்தர்  மேல  அன்பு  தானா  வரனும் 


21   மேரேஜ்  என்பது  ஆண்களைப்பொறுத்தவரை  டீசல்  கார்  மாதிரி  அதுக்கு  10  வருசம் தான்  வேலிடிட்டி  இருக்கனும் . இல்லைன்னா  அது  கூண்டு  மாதிரி  நாம  மாட்டிக்கிட்டு  முழிக்கனும் 


22   இந்த  மனித  மூளை  மகிழ்ச்சியை  விட  சோகத்தைத்தான்  அதிக  ஞாபகம்  வெச்சுக்கற  மாதிரி  ப்ரோக்ராம்  பண்ணப்பட்டிருக்கு 


23   தம்பதிகள்  அவங்களுக்குள்ள  ச்ண்டை  போட்டுக்கறாங்கன்னா  கல்யாண  வாழ்க்கை  தொட்ருதுனு  அர்த்தம்.  அமைதியா  இருந்தங்கன்னா  அவஙக்   மேரேஜ்  லைஃப்  முடிஞ்சிடுச்சுனு  அர்த்தம் 




சபாஷ்  டைரக்டர்


1     ஹிரோ  ஹோட்டல்ல  முக்கியமான  விஷயம்  பேசும்போது  குறுக்கிட்டு  ஆர்டர்  கேட்கும்  சர்வருக்கு  பாடம்  புகட்ட  அந்த  சர்வர்  வேற  டேபிளில்  ஆர்டர்  எடுக்கும்போது  குறுக்கே  புகுந்து  குழப்பும்  சீன்  ஃபெண்டாஸ்டிக் 


2   ஹீரோயின்  ஹீரோவைக்கடுப்பெற்றுவதற்காக   ஹீரோ  ஃபோன்ல  லைன்ல  இருக்கும்போது  தான்  வேற  ஆளுடன்  இருப்பது  போல  சீன்  கிரியேட்  பண்ண்ணுவதும்  அதை  சம்பந்தபப்ட்ட  ஆளே  காண்பதும்  ஹீரோயின்  பல்பு  வாங்குவதும் 


3   ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  ஒரு  பார்ட்டிக்குப்போகனும், ஹீரோயின்  கிளாமரா  டிரஸ்  பண்ணிட்டு  கிளம்பறா  அது  தன்  மகளுக்கு  தெரியக்கூடாதுனு  நினைச்சு  ஒளிஞ்சு  ஒளிஞ்சு  வீட்டை  விட்டுக்கிளம்பறா.  ஹீரோ  மகள்ட்ட  சொல்லிட்டுக்கிள்ம்பும்போது  டாடி  இன்னைக்கு  உங்க  ஒய்ஃப்  செம  ஹாட்டா  இருக்காங்க  என  நோஸ்கட்  குடுப்பது  வயதுக்கு  மீறிய  பஞ்ச்  என்றாலும்  ரசிக்க  வைக்குது. இதே  மாதிரி  ஓசை  படத்துல  பேபி  ஷாலினி  சில  இடங்களில்   வயதுக்கு  மீறிய   சேஷ்டை  செய்வது  ர்சிக்க  வைத்தது 


4   க்ளோபல்  வார்மிங்  லைட்  ஆஃப்  மேட்டர்ல  ஒரு  இடத்துல  சொதப்புனாலும்  ஒரு  சீன்ல  கலக்கிட்டாங்க . கிளாமர்  டிரஸ்ல  பார்ட்டிக்கு  வந்த  ஹீரோயின்  மேலாடை  ஸ்ட்ராப்  கட்  ஆகிடுது . அப்போ  ஹீரோ  தன்  கோட்டை  கழட்டி  தர்றாரு ,  கூட்டத்தின  கவனம்  ஹீரோயின்  மேல  படாம  இருக்க  க்ளோபல்  வார்மிங்  தடுக்க  5  நிமிசம்  லைட்ஸ்  ஆஃப்  பண்ணுவமே  என்கிறார்   செம சீன்  அது 


5  கோவிச்ட்ட்டுப்போன  கார்  டிரைவரை  பார்க்க  அவங்க  கிராமத்துக்குப்போவதும்  அங்கே  தகறாரு  ஆகி  டிரைவர்  மூலமா  தப்பிப்பதும்  உங்களைப்பார்க்கதான்  வந்தோம்  உங்க  வீட்டுக்குப்போகனும்  என  சொல்லும்போது  வாங்க  கூட்டிட்டுப்போறேன்  என  காரின்  பின்  சீட்டில்  டிரைவர்  அமர்ந்து  கெத்து  காட்டுவதும்  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 


6  த்னக்கு  நோஸ்கட்  குடுத்த  டிரைவர்  , தன்  மனைவியிடம்  ஜொள்  விடும்  அபார்ட்மெண்ட்  ஆசாமி  இருவ்ரையும்  ஒரே   கோட்டில்  ஒரே  நிகழ்வில்  பழி  வாங்க  ஹீரோ  போடும்  ஐடியா  சிம்ப்ளி  சூப்பர் 


7   ஏழாவது  எபிசோடில்  ஹீரோ  ஹீரோயின்  மாமனார்  மாமியார்  நால்வ்ரும்  உரையாடும்     சீன்  செம  ரைட்டப்.  பிளாக் ஹியூம4ர்  எப்படி  அமையனும்னு  டீச்  பண்ணுன  மாதிரி  இருந்தது . இன்  கேஸ்  இந்த  வெப்சிரிஸ்  பார்க்க  ஆசைப்படாதவங்க  கூட    7  வது  எபிசோடு  மட்டும்  பார்த்துடுங்க 


8  எட்டாவது  எபிசோடில்  ஹீரோ  பிரியும்  முன்  தன்  இணையைப்பற்றி  சில  வார்த்தைகள்  பேசும்போது  ஹீரோயின்  டச்சிங்காக  உணர்வது  ஹீரோயின்  தங்கி  இருக்கும்  ஹோட்டல்  ரூம்க்கு  வரும்  ஆள்  ஆள் மாறி    ஹீரோயின்  அம்மாவிடம்  ரோஸ்  குடுத்து  கலாட்டா  நடப்பது  கலக்கலான  காமெடி 

லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  எபிசோட் 2 ல  நாயகி  ஜாகிங்  போய்க்கிட்டே  கூல்டிரிங்க்ஸ்  குடிக்குது . வாக்கிங்  ஜாகின்  போகும்  முன்  குடிக்கலாம், போய்ட்டு  இருக்கும்போதோ  போய்  முடிச்ச  பின்  உடனேவோ  குடிக்கக்கூடாது 


2   ஹீரோ  திருநங்கைகளை  பேட்டி  எடுப்பதா  ஒரு  நிகழ்ச்சிகடைசி  நிமிடத்தில்  அவங்க  வ்ர்லை  . நிகழ்ச்சி  மாறுது. அவங்களுக்குப்பதிலா  வீட்டில்  பணிப்பெண்களாக  இருக்கும்  7  பேர்  ஸ்டேஜ்க்கு  வர்றாங்க. இந்த  விஷயம்  ஹீரோக்கு  தெரியாது , ஆள்  மாறாட்டக்காமெடி  டிரை  பண்ணது  ஓக்கே  ஆனா  அதை  கரெக்டா   காட்டலை .  நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்களோ  அல்லது  ஹீரோவின்  நண்பரோ  சொல்லி  இருக்கலாமே? 


3   டைரக்டர் ஏதோ  ஒரு  ரைட்டரால  பாதிக்கப்பட்டிருக்கார்  போல  அதான்  கதைக்கு சம்ப்ந்தமே  இல்லாமே  ரைட்டர்னா  கிறுக்குத்தனமா  ஏதாவது  செய்வாங்கனு  எல்லா  எபிசோட்லயும்  ஒரு  சீன்  அல்லது ஒரு  டயலாக்  ரைட்ட்ர்களை  மட்டம்  தட்ற  ,மாதிரி  வெச்சிருக்காரு. அனேகமா  டைரக்டர்  ஒரு  லேடியா  இருக்கனும்  . அவருக்கு  ஒரு  ஆண்  ரைட்டரால  பாதிப்பு  வந்திருக்கனும் ( டைட்டில்ல  ஆண்  டைரக்டர்  பேருதான்  வருது , திரைக்கதை  வசனம்  லேடியா  இருக்கலாம் )


4   ஹீரோ  மனைவி  அல்லாத  ஒரு பெண்ணிடக்  காரில்  போகும்போது  அந்தப்பெண்  தன்  மீது  உண்மையான  அன்பு  வெச்சிருக்கா? என்பதை  செக்  பண்ண  பணத்தைக்காட்டி  இது  எப்படி  இங்கே  வ்ந்தது ? உனக்கு  வேணும்னா  வெச்சுக்க  என  2  லட்சம்  ரூபா  கேஷ்  தருவதும்  பணக்காரியான  அந்தப்பெண்  எம்ப்ரேசிங்கா  உணர்வதும்  மடத்தனமான  காட்சி 


5 ஒரு  ஆண்  புதிய  பெண்ணுடன்  நெருக்கமா  இருக்கும்போது  ஸ்வெட்டிங்  ஸ்மெல்னா  எனக்கு  அல்ர்ஜி  என்  சொல்லி  வெறுப்பேத்த  வாய்ப்பே  இல்லை . மனசுக்குள்  வேணா  நினைக்கலாம், அந்த  சீனில்  செயற்கை  தட்டுது 

6  +அபார்ட்மெண்ட்ல  எல்லாரும்  ஒண்ணு  கூடி  க்ளோபல்  வார்மிங்  தடுக்க  இன்னைக்கு  நைட்  ஒரு  மணி   நேரம்  லைட்ஸ்  ஆஃப்  பண்ணுவோம்    என  பிளான்  போட  அது  தெரியாத  ஹீரோ  லைட்  போடுவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகளும்  செய்ற்கை. பொதுவா  அபார்ட்மெண்ட்ல  எடுக்கும்  முடிவுகள்  முதல்லியே  சர்க்குலர்  அனுப்பிடுவாங்க , இப்படி  திடீர்னு  முடிவு  எடுத்து  உடனே  நிறைவேற்ற  மாட்டாங்க 


7  கோடீஸ்வரன்  ஆன  அந்த  கொரியன்  மேன்  ஹீரோயின்  நட்புக்காக  பம்முவதும்  பல்பு  வாங்குவதும்  நம்ப  முடியல , இந்த  மாதிரி  மில்லியனர்ஸ்  எத்தனை  பேரைப்பார்த்திருப்பாங்க ?


8   மகள்    மாப்ளை  இருவரும்  பிரிவதில்  ம்களின்  பெற்றோருக்கு  வருத்க்தமே  இல்லை  ஜாலியா  பார்ட்டில  காமெடி  பண்ணிட்டு   இருக்காங்க . பொதுவா  மாப்ளை  வீட்டில்  வேணா  அப்டி இருக்கலாம், ஆனா  பெண்  வீட்டில்  டென்சனா  தான்  இருப்பங்க 


  சிபிஎஸ்   ஃபைனல்  கமெண்ட் -   இது  எல்லாருக்கும்  பிடிக்காது  ஸ்லோ வா  தான்  கதை  போகும், ஆனா  காமெடி  பல  இடங்களில்  நல்லாருக்கும்  பெண்களுக்குப்பிடிக்கும் . தமிழ்  டப்பிங்க்லயும்  இருக்கு ,  நெட்  ஃபிளிக்டில  பார்க்கலாம் .   ஆனந்த  விகடன்  மார்க்  போட்டா  இதுக்கு  44 / 100  .  மை  ரேட்டிங்  3 / 5