Friday, May 06, 2022

கூகுள் குட்டப்பா (2022) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)


 சில  சப்ஜெக்ட்கள்  எந்த மொழியில்  ரீமேக்கினாலும்  எடுபடும்.குறிப்பா  த்ரில்லர்  சப்ஜெக்ட், லவ்  சப்ஜெக்ட்  டை தைரியமா  எடுக்கலாம், ஆனா  மலையாள  சினிமா  டேஸ்ட்  வேற தமிழ்  சினிமா  ரசிகனோட  டேஸ்ட்  வேற. அதனால அங்கே  ஹிட்  ஆன  படங்களை  இங்கே  எடுப்பது  வேஸ்ட். உதா  சார்லி ( மாறா ),  ஜோசஃப் ( விசித்திரன்) ,ஹெலன் (அன்பிற்கினியவள்). விதிவிலக்கு   த்ரிஷ்யம் - பாபநாசம்.  பெரும்பாலும்  ஓ டி டி  வந்துட்டதால  தமிழ்  ரசிகர்கள்  ஒரிஜினல் வெர்சனை  பார்த்துடறாங்க . தமிழில்  ரீமேக்கினா  கம்ப்பேர்  பண்றாங்க . எதுக்கு  தேவை  இல்லாத  ஆணி ?லேட்டஸ்ட்  ஆணி  தான் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25 ரீமேக்கான இந்தப்படம். கேரளாவில் சக்கை போடு போட்ட படம் தமிழ் வெர்சன் எப்படி இருக்குனு பார்ப்போம்


ஹீரோ 60 வயசான கிராமத்து ஆள் . அவருக்கு ஒரே ஒரு மகன். ஆனா அவன் படிச்ச படிப்புக்கு ஃபாரீன் போய் வேலை செய்ய ஆசைபப்டறான், ஆனா அப்பாவுக்கு அது பிடிக்கலை . தன் கூடவே அவன் இருக்கனும்னு நினைக்கறார். ஆனா அது நடக்கலை . மகன் ஃபாரீன் போறான்


அவன் வேலை செய்யற கம்பெனில ரோபோ ஒண்ணை இந்தியா கொண்டு வந்து அப்பாவுக்கு துணையா விட்டுட்டு போறான், இது ஹோம் நர்ஸ் மாதிரி எல்லா உதவியும் பண்ணுது


ஆரம்பத்தில் ரோபோவை வெறுக்கும் அப்பா தனிமையின் காரணமா படிப்படியா அதன் மேல் அன்பு வைக்கிறார், இருவருக்குமான பாண்டிங் நல்லாருக்கு .


இதுக்கு இடையில் அவரது இளமைக்கால ஒன் சைடு லவ் ஓமனா வை சந்திக்கிறார். அந்த ஆண்ட்டி கூட சாட்டிங் பண்ண ரோபோ உதவி பண்ணுது


ஃபாரீன் போன மகன் இந்தியா வரும்போது அப்பாவோட ரோபோ அட்டாச்மெண்ட்டைப்பார்த்து ஜெர்க் ஆகறான்.கம்பெனில அந்த ரோபோவை திருப்பி தரனும் ஆனா அப்பா அதுக்கு சம்மதிக்கலை


க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு? என்பதை திரையில் காண்க


ஹீரோவா அப்பாவா கே எஸ் ரவிக்குமார் அருமையான நடிப்பை வழங்கி இருக்கார் . ஆனா மலையாள ஒரிஜினலில் ஹீரோவின் வயோதிகம் பக்காவா உக்காரும் , அது இங்கே மிஸ்சிங்


மகனா தர்ஷன் அட்டர் வேஸ்ட் . தம்பி நீங்க இன்னும் கத்துக்கனும், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தான் இவருக்கு ஜோடி , கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல். என்னமோ டைரக்டர் சொன்னதுக்காக கடமைக்கு லவ் பண்ற மாதிரி இருக்கு


வளர்ந்து வரும் நடிகர்கள் , நடிகைகள் எல்லாம் ரொமாண்டிக் சீன்களில் எப்படி அந்த பாத்திரமாவே மாறி பர்ஃபார்ம் பண்ணனும் என்பதை கமல் , கார்த்திக் , சிம்பு , தனுஷ் படங்களைப்பார்த்து கத்துக்கனும்


ரோபோ வாக ஒரு சின்னப்பையனை நடிக்க வெச்சிருப்பாங்க போல


பாட்டி சொல்லைத்தட்டாதே செம ஹிட் ஆகக்காரணம் அந்த கார்தான். குழந்தைகளுக்கு ரொம்பப்பிடிக்கும். ரிப்பீட்டா வந்தாங்க ஹிட் ஆச்சு


ஆனா இதில் வரும் ரோபோ பெரிய அளவில் குழந்தைகளைக்கவரும் படி காட்சி அமைப்புகள் இல்லை


பட மேக்கிங் ரொம்பவே சுமார்தான் பல காட்சிகள் டிராமா மாதிரி போகுது ஹீரோவின் இளவயது காதலியா வரும் ஆண்ட்டி நடிப்பு ஓக்கே ரகம்


அந்த டென்ஷன் பார்ட்டி லூஸ் கேசாக வரும் ஆள் கேப்டன் மகன் சண்முகப்பாண்டியனைப்பார்ப்பது போல் இருக்கு செம கடுப்பு


இசை ஜிப்ரான் . ஓக்கே ரகம்


யோகிபாபு வரும் காட்சிகள் சிரிப்பே வர்லை அதுக்கு முக்கியக்காரணம் ஸ்கிர்ப்ட்டே இல்லாமல் அவர் தன்னை ஒரு கவுண்டமணியாக சந்தானமாக நினைத்துக்கொண்டு எல்லாரையும் சதாய்ப்பதுதான், எடுபடலை


சபாஷ் டைரக்டர்


1 இடைவேளை ட்விஸ்ட்டாக வரும் ஃபாரீன் காட்சி யில் ஒரு ரோபோ ஓனரை கொலை செய்வது அப்பேற்ப்பட்ட டிஃபால்ட் ரோபோதான் ஹீரோ வசம் இருப்பதாக காட்டுவது


2 60 வயது ஹீரோ வின் இளவயது காதலி இப்போ வயசான விதவை அவருடன் முகம் காட்டாத ஃபேஸ்புக் சேட்டிங் சுவராஸ்யங்கள்



ரசித்த வசனங்கள்


1 - பி பி , சுகர் ரெண்டும் இப்போ எப்படி இருக்கு ?


அது விலை வாசி மாதிரி ஏறியே கிடக்கு


2 ஏன் டாக்டர் ஊசி மருந்தை வேஸ்ட் பண்றீங்க ?


யோவ் , ஊசி போடும் முன் அப்டி கொஞ்சம் வெளியேத்தனும்


3 சேட்டா.. இத கேட்டோ ?


ஏம்மா நான் சேட்டு இல்லைம்மா, கவுண்டர்


அய்யோ சேட்டா அப்டின்னா மலையாளத்துல அண்ணன்னு அர்த்தம்


4 மனசுல கவலை நிறைய இருக்கு , மனசு விட்டு யார் கிட்டேயாவது பேசனும்னு தோணுது ஆனா கேட்க யாரும் இல்லை , இதான் வயோதிகத்தின் கொடுமை


5 சின்ன வயசுல நீ அழகா இருந்திருக்கே போல


அப்போ இப்போ அப்படி இல்லையா?>


இப்போ பேய் மாதிரி இருக்கே?


வாட்’?


ஆனா எனக்கு பேய் பிடிச்சிருக்கு


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்


1 ஃபாரீன் கம்பெனியில் வேலை செய்யும் தர்சன் எம் டி யிடம் எதிர்த்துப்பேசுவது , தெனாவெட்டாக பதில் சொல்வ்து எல்லாம் செம காமெடி


2 ரோபோவின் ஆபத்து பற்றி விளக்கும் எம் டி அந்த க்ளிப்பிங்கை தர்சனுக்கு காட்றார் ஆனா அதை தன் அப்பாவுக்கு காட்டி இருந்தாலே மேட்டர் ஓவர் அதை செய்யாமல் சும்மா வள வளனு இழுக்கறார்


3 தர்சன் - லாஸ்லியா லவ் போர்சன் ஸ்கிரிப்ட் சரியாக எழுதப்படலை , அவங்களுக்குள்ளே திடீர்னு லவ் வர்றது ஏத்துக்கற மாதிரி இல்லை , சரியா ஸ்க்ரீன்ப்ளே பண்ணலை


4 க்ளைமாக்ஸ் சீன் சொதப்பல் ரகம்,





சிபிஎஸ்  ஃபைனல் கமெண்ட்கூகுள் குட்டப்பா ( 2022) - ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25 மலையாளம் -2019 படத்தின் அஃபிசியல் ரீமேக். கே எஸ் ரவிக்குமார் நடிப்பு , இசை மட்டுமே பிளஸ். மற்ற எதுவும் கனெக்ட் ஆகவில்லை.தர்சன், லாஸ்லியா வேஸ்ட்.ரோபோ காட்சிகள் பெருசா எடுபடலை , விகடன் 39, ரேட்டிங் 2.25 / 5