அரங்கேற்றம் - சினிமா
விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)
பிரமீளா நடிச்ச கொரில்லா
படம் தான் நான் முதன் முதலா எங்க ஊர் சென்னிமலைல இருந்து
ஈரோடு வந்து ராயல் தியேட்டார்ல பார்த்த
படம்.. ஊர் பெரிய மனுசங்க
பூரா அங்கன தான் இருந்தாங்க . பிரமீளா வர்ற சீன்
எல்லாம் கை தட்றாங்க, நம்ம ஊர்ல சூப்பர் ஸ்டார்க்குக்கூட அவ்ளோ
ரெஸ்பான்ஸ் கிடச்சு நான் பார்க்கலை.
இந்தப்படம் கமல் நடிச்ச பழைய
படம் பார்க்காம மிஸ் பண்ணிட்டோம்னு
தான் பார்க்க ஆரம்பிச்சேன், கடைசி 20 நிமிடங்கள்
பிரமீளா நடிப்பு , வசனம் , இயக்கம் எல்லாம் ஒரு கலக்கு
கலக்கிடுச்சு
ஒரு லோயர் மிடில்
கிளாஸ் ஃபேமிலி ல நாயகி இருக்கு. அவருக்கு ஒரு தம்பி , சில தங்கைகள் , அம்மா, அப்பா. அவங்க வீட்ல நடக்கற உரையாடல்கள் ,
அந்த ஏரியா மக்களின்
வாழ்க்கை முறை இப்படி முதல்
30 நிமிசம் பொதுவான சப்ஜெக்டா
படம் நகருது
தம்பி க்கு டாக்டர் சீட் வேணும்,
அதுக்கு சிபாரிசு வேணும். நல்ல
வேளை அப்போ நீட் தேர்வு எல்லாம் இல்லை . சிபாரிசு வேண்டி
ஒரு பெரிய மனுசனைப்பார்க்க நாயகி போறார்.
நாயகி முன் அந்த ஆளு
மினிஸ்டர் கூட ஃபோன்ல பேசற மாதிரி எல்லாம்
சீன் போடறான்.அப்றம் நாயகியை வலுக்கட்டாயமா பாலியல்
வன் கொடுமை பண்ணிடறான்.
இதுல என்ன கொடுமைன்னா அந்தாள்
சிபாரிசு எல்லாம் இல்லாமயே சீட் கிடைச்சிடுது. கற்பை பறிகொடுத்ததுதான்
மிச்சம்
நாயகி வேலை செய்யற
கம்பெனி ஓனர் வீட்டுக்கு
ஒரு டைம் தன் தங்கையை படிக்க வைக்க ஃபீஸ்
கட்ட செலவுக்கு பணம் கேட்டு போறா. அங்கே
ஓனர் நாயகியை..... இவருதான்
அந்த டுபாக்கூர் சிபாரிசு ஆளின் சகோதரன். நல்ல குடும்பம்..
தொட்ர்ந்து நாயகி விலை மகள் ஆகிடறா.
வெளியூர்ல வேலை செய்வதால் இவர் பண்ற வேலை எல்லாம் இவர் குடும்பத்துக்கோ, ஊருக்கோ தெரியாது
சின்ன வயசுல நாயகி மேல
ஆசைப்பட்ட /காதலிச்ச நபரை ஒரு டைம் கஸ்டமரா எதிர்
கொண்டு திகைக்கறா
ஒரு டைம் தங்கைக்கு மேரேஜ்
ஃபிக்ஸ் ஆகிடுது. மேரேஜ் அட்டெண்ட்
பண்ண நாயகி ஊருக்கு
வர்றா. வந்து பார்த்தா தங்கைக்கு
நிச்சயக்கப்பட்டவன் நாயகியின் முன்னாள் ஒன் டே
கஸ்ட,மர்
இதுக்குப்பின் என்ன ஆச்சு? நாயகியின் குடும்பத்துக்கு விஷயம்
தெரிஞ்சுதா? அவங்க எப்படி அதை ஃபேஸ் பண்ணாங்க என்பதையும்
கலக்கலான கடைசி 20 நிமிட
திரைக்கதையையும், யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டையும் யூ ட்யூப்பில்
காண்க
நாயகியா பிரமீளா.
ஓப்பனிங் சீன்ல , ஏமாற்றப்படும் சீன்ல
எல்லாம் சராசரி நாயகியா பாஸ் மார்க் வாங்கற
பிரமீளா அந்த கடைசி
20 நிமிடங்களில் பொறுத்தது போதும்
பொங்கி எழு மனோகரி
ஆகிட்டாங்க . செமயான நடிப்பு
தம்பியா கமல் . சொல்றதுக்கு
பெருசா ஒண்ணுமில்ல கிட்டத்தட்ட
நெகடிவ் ரோல் தான் பழைய படங்களில் நெகடிவ்
ரோல்களில் ரஜினி மிளிர்ந்த
அளவு கமலுக்கு சரியா கேரக்டர் அமையலைனு
தான் சொல்லனும்
காதலனா சிவக்குமார்
. அந்த
மாதிரி பெண்ணா தன் ஊர்
பெண்ணை அதுவும் முன்னாள் ஆதர்ச காதலியைப்பார்த்த அதிர்ச்சியை
நன்கு வெளிப்படுத்தி இருக்கார். க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் செயற்கை தட்டுது
குறிப்பிட்டு சொல்ல
வேண்டிய முக்கிய விஷயம்
தன் தங்கைக்கு பார்த்திருக்கும் ,மாப்ளை
அந்த மாதிரி இடத்துக்கு
வந்து போனவன் என்பதை
சொல்வாரா? என்ன ஆகுமோ? என்ற பரபரப்பான
காட்சியில் மாப்பிள்லை ரக்சியம்
சொல்லவா? என்ற செமயான பாட்டு . என்ன ஒரு சிச்சுவேஷன் /
அது போக ஆரம்பக்காலத்தில் அது இருக்கும்
என்ற இனிமையான மெலோடியும் உண்டு
நச் டயலாக்ஸ்
1 நான் ஒண்ணு குடுப்பேன் , வாங்கிப்பீங்களா?
எக்குதப்பா ஏதாவது தந்தா நானும் ஒண்ணு குடுப்பேன்\
\2ஆசீர்வதிக்கத்தான்
கைகள் ‘அரளி விதை அரைக்க அல்ல
3 அழகை விற்கறேன், அறிபை விற்க முடியலை
4 வர்ற உத்தமன்க
பூரா கேட்கற ஒரே கேள்வி உங்களை
மேரேஜ் பண்ணிக்க யாராவது முன் வந்தா
உங்க ரீ ஆக்சன் என்ன? ஏன்? இவனுங்க
யாரும் மேரேஜ் பண்ணிக்க தயாரா இல்லையா?
5 நாட்டைக்காக்கறவன்
நான், என்னை நம்புனவங்க ரகசியத்தைக்காக்க முடியாம
போச்சே ?
6 தனக்குக்கிடைக்கறதை விட்டுக்கொடுக்கறதுதான் தியாகம்னா
நான் இழந்தது எத்தனை ?
7 தனக்கு அனுகூலமா
இருக்கும்னா மனுசன் என்ன வேணா சமாதானம் சொல்லிக்குவான்
சி.பி ஃபைனல் கஎம்ண்ட்
– பொறுமையா முதல் பாதியை
பார்த்துட்டா பின் பாதி நல்ல ஸ்பீடான திரைக்கதையை ரசிக்கலாம். ரேட்டிங் 3 / 5