1 /தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறிய ரஜினி பேச்சுக்கு சரத் குமார் எதிர்ப்பு # நாட்டுக்கு ஒரு நல்லவன் VS நாட்டாமை
================
2 தமிழ் படங்களில் இனி நடிக்க மாட்டேன்-திரிசா.#நடிக்கும் சூழல் வந்தா அப்டி நான் சொல்லவே இல்லை.ஹேக் பண்ணிட்டாங்கனு சமாளிப்பீங்க
=============
3 அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-திவாகரன் # வெளி ஆட்கள் யாராலும் அழிக்க முடியாது என பொருள் கொள்க
=============
4 ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: சரத்குமார் # நீங்க அரசியலுக்கு வந்தப்போ அவர் அதை கண்டுக்கவே இல்ல
============
5 அதிமுகவில் எங்கள் பங்கு அதிகம்- திவாகரன் # எவ்ளோ பங்கு எடுத்துக்கிட்டீங்க?கணக்கு காட்டவும்
==============
6 அதிமுகவை உடைக்க மோடி சதி.. சசிகலா கணவர் நடராஜன் # துக்கம் விசாரிக்க வந்தப்ப சசி தலை மேல கை.வெச்சாரே அது குறியீடு?
===========
7 தமிழகத்தில் முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.. சசிகலா கணவர் நடராஜன் # தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஷோ ரூமிலிருந்து அறிக்கை விடுறார் போல
============
8 தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்
- சரத்குமார்
# புதுசா இதுவரை யாரும் சொல்லாத டயலாக்/பஞ்ச் சொல்லுங்க நாட்டாமை.இது புளிச்சுப்போனது
============
9 எனக்கு பிடித்த படம் ஒன்றை எடுக்க சொன்னால் சின்னம்மாவை பற்றி படம் எடுப்பேன் - லிங்குசாமி #டைட்டில் அஞ்சாள்?
===============
10 தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை # பேரம் பேசிக்கொண்டிருக்கிறார் என அறிக
===========
11 பா.ஜ., மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டால், காங்., தொண்டன் ஒவ்வொருவனும், துாக்கில் தொங்க வேண்டியது தான்-EVKS #அப்போக்கூட நைசா தலைவர்கள் தப்பிச்சிடுவாங்க?
================
12 அ.தி.மு.க.,வில், ஜெ வை உருவாக்கிய ஹீரோ நான்; நடராஜன் தான் வெறும் ஜீரோ.-திருநாவுக்கரசர் # அரசியல்வாதிகளுக்கு நாக்கில் தான் சனி
=================
13 கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிட்டா, நான் சந்தோஷப்படுவேன்; 'பீட்டா' அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா, தமிழகம்சந்தோஷப்படும்.-விஜய் # வரலாம் வரலாம் வா காளை
====================
14 தடை பற்றி கவலைப்படாமல், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்என்பதற்கு அடையாளமாக, ஜல்லிக்கட்டுநடத்திய அத்தனை இளைஞர்களுக்கும், என் பாராட்டுகள்.- இல கணேசன் # வேண்டாம் அரசியல்வாதிகள் பாராட்டு , வேண்டும் மீண்டும் ஜல்லிக்கட்டு
================
15 உணவுப் பொருளில் கலப்படமா: ஆயுள் தண்டனை விதிக்க பரிந்துரை # குற்றவாளிக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி இருந்தா?
==================
16 மாணவர்கள் போரட்டம் பின்புலம் யாரோ ஒருவர் இருக்கிறார் : திருமாவளவன்
# குயுக்தியா சிந்திக்க அரசியல்வாதிக்கு மட்டும் தான் தெரியும்
==============
17 அனைத்து பிரச்சனைக்கும் போராட மாணவர்கள் முடிவு..# அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வயித்துல புளியை கரைச்சது போல் இருக்குமே?
==============
18 ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் சூழ்நிலை வரலாம்.-பொன்.ராதா # தடை அதை உடை, புதிய சரித்திரம் படைனு கோஷம் போட்டாங்களே, கேட்கல?
===================
19 கறுப்பு பண முதலைகள் தப்புவதை தடுக்க...வியூகம்: வங்கிகளுக்கு நேரடி வரிகள் வாரியம் உத்தரவு # அக்கவுண்ட்ல பணம் போடும்போதே டேக்ஸ் கழிச்சுக்குவாங்க போல
====================
20 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் போராட்டம் 'காகித கப்பல்' போன்றது; அது, பயணம் செய்ய பயன்படாது,'-கிருஷ்ணசாமி # அரசியல்வாதி போராட்டம் டைட்டானிக் கப்பல் போல மூழ்கிடும்
==========================