1 தலைவரே! நம்ம ஆட்சில வெள்ளபாதிப்பே இருக்காதுனு எப்டி சொல்றீங்க?
நம்ம ராசி அப்டி.மழையே பெய்யாது.வெள்ளம் எப்டி வரும்?\
==============
2 எல்லார் க்கும்் கன்றுக்குட்டிதானே அழகா தெரியும்?என் கண்ணுக்கு பசு அழகாத்தெரியுது.
அடப்பாவி.த்ரிஷா வை விட அவங்க அம்மா.செம னு சொல்வே போல?
=============
3 தலைவரே! உங்க ஆட்சில பணப்புழக்காட்டம் பிரமாதமா இருந்ததுன்னீங்க.எங்க கைல 10 பைசா இல்லையே?
யோவ்.எங்க குடும்பத்துல சொன்னேன்
===============
4 யார் எனக்கு லவ் லெட்டர் தந்தாலும் அதை வாங்கி பேப்பர் கப்பல் செய்வேன்
ஓஹோ, அப்போ நான் உங்களுக்கு பேப்பர் கப்பல் தந்தா எனக்கு லவ் லெட்டர் தருவீங்களா?
================\
5 ஏழைகள் இருக்கும் ஏரியாவில் எங்க கால் படுவதே இல்லைனு ஒரு புகார் வந்தது.அதான் அப்டி.
சார்,அதுக்காக ஐஏஎஸ் ஆஃபீசர் நீங்க பேஷண்ட்டோட பெட்ல கால் வைக்கலாமா?
===============
6 தலைவரே! அமாவாசை யைக்கண்டா உங்களுக்கு பயமாமே?
அதெல்லாம் இல்லை.நாகராஜசோழன் வந்தாலும் பயம் இல்லை. தேர்தல் அறிக்கை ரிலீஸ் ஆகுதே அதான்
==================
7
சார், நம்ம சினிமா விளம்பரத்தில் வெற்றி சிம்மாசனத்தில்-னு போட்டிருக்கீங்களே?
\\ சோ வாட்?\\\
சிம்ம ராசிக்கு பிடிக்காது. பார்த்துக்குங்க
====================
8 டாக்டர், டெய்லி உண்வில் கொள்ளு சேர்த்துக்கிட்டா குதிரை மாதிரி சக்தி கிடைக்குமா?
பதில் சொன்னா நர்சைக்கூட்டிட்டு வேகமா ஓடிடுவியோனு பயமா இருக்கு
==================
9
வாக்காளப்பெருமக்களே! இலவச திட்டங்கள் பார்த்து வேறு யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள், பாரம்பரியப்பெருமை, பரம்பரைப்பெருமை மிக்க எங்களிடமே ஏமாறுவீர்
=================
10
நான் ஜெயிச்சா தொகுதியை சிங்கப்பூர் ஆக்குவேன்
எப்டி?
யாராவது தூ-ன்னு துப்பினா ஸ்பாட் ஃபைன் 2000 ரூபா
=================
11
மிஸ்! திருமணம் என்பது ஒரு கொலை போலன்னு எப்படி சொல்றீங்க?
வரப்போற துணை அன்பானவளா, அடக்கமானவளா இருப்பா எனும் மாப்ளையின் நம்பிக்கையை கொலை ப\ன்னிடறமே?
==================
12
தலைவரே! கணக்கு கேட்டா உங்களுக்குப்பிடிக்காதாமே?
ஆமா, சொத்துக்கணக்கை கேட்டா எப்டி?
===============
13 தலைவரே! நம்ம தேர்தல் அறிக்கை தான் ஹீரோன்னீங்களே?
என்னய்யா பன்னச்சொல்றே?நாம போட்ட கோட்டுக்கு பக்கத்துல பெரிய கோடு போட்டுட்டாங்க
=============
14 டியர்.நம்ம வீட்ல நீ தனி நான் தனி
வாட்?
லூசு.தனித்தனி மீட்டர் போட்டுட்டா 100 யூனிட் தான் வரும்.அரசை ஏமாத்திடலாம் இல்ல?
=========
15 கடலை போடறது விவசாயம் தானே?
ஆமா.
நான் டெய்லி நெட் ல பல பொண்ணுங்களோட கடலை போட்டதுல போன் பில் 2000 ரூபா கடன்.இதை அரசு கட்டிடுமா?
==
16 தலைவரே! நம்ம கட்சியோட செல்வாக்கு குறைஞ்சிருச்சு போல
ஆமா. “ செல்” வாக்கு உண்மைனு நம்பறாங்க ஜனங்க
================
17 42 வயசு ஆகுது மாப்ளைக்கு.ஏன் 24 ன்னு பொய் சொன்னீங்க?
பொண்ணு சூர்யா ரசிகையாம்
===========
18 சூர்யா ரசிகையைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு மாப்ளை ஏன் அடமா இருக்காரு?
அப்போதான் 24 மணி நேரமும் மாப்ளையையே நினைச்ட்டு இருக்குமாம்
==============
19 சார், நேத்து நைட்டே படம் பார்த்துட்டீங்களே? ஏன் இன்னும் விமர்சனம் வர்லை?\
நான் ஒரு டாக்டர் இல்லையா? “24” மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும்.
======
20 தலைவரே! தீவுத்திடல்ல மீட்டிங்காமே?எதுனா குறியீடா?
4 பக்கமும் தண்ணீரால் சூழ்ந்ததுதான் தீவு.எங்களுக்கு வாக்களித்தால் கண்ணிர்தான் தீர்வு
==================