Sunday, September 25, 2011

முரண் படம் ஃபாரீன் பட ரீமேக் அல்ல - சேரன் முன்னுக்குப்பின் முரண் ஆன பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGWU-O5LxvkhnuQYsjGyTX0kNB4xRQgM4LbbWvCmtURPW6umiBJERKnmyVP-xob45_cvMw-XopLln8tsktSnbAbELtB8yMrQ_ahSsw7fJJrVCDHfoPQjVyH7-c_T2YDr6UIBQLk3rQmxQ/s1600/muran_movie_wallpapers_posters_01.jpg

தியேட்டருக்குப் போகாதீங்க!

சேரனின் புது ரூட்!

சேரனுடன் ஒரு சந்திப்பு...

 '1. ' 'முரண்’ என்ன மாதிரியான படம்?''


 சி.பி - ஒரு மாதிரியான படம்னு டைட்டிலைப்பார்த்து யாரும் ஏமாந்துடாதீங்க.. படம் பக்கா ஆக்‌ஷன் கதை, பாதி படத்துக்கு சேரனும், பிரசன்னாவும் கார்ல போய்ட்டே தான் இருக்காங்க.. 




''இந்தப் படம் ஒரு கதையா ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். 'அடுத்து இப்படித்தான் போகும்’ என்ற ரசிகனின் யூகத்துக்கு எதிர் திசையிலேயே படம் பயணிக்கும். பல இடங்களுக்குப் பயணம் போகிறோம். அப்போது யாரோ ஒருவரைச் சந்திக்கிறோம். சில சந்திப்புகள் உறவாக, நட்பாக, காதலாக மாறுகிறது. சில சந்திப்புகள் பிரச்னைகளாகவும் மாறும். தெளிவான ஒரு மனிதனும் புதிரான ஒரு மனிதனும் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்களும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் முரண்!''

சி.பி -படம் ரிலீசுக்குப்பிறகு முன்னுக்குப்பின் முரணா பேசிட்டார்னு யாரும் சொல்லாத அளவு படம் இருந்தா சரிதான்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


2. ''படத்தில் என்ன ஸ்பெஷல்?''

சி.பி - பேட்டி எடுக்கற வெள்ள சொக்கா போட்டிருக்கற அண்ணே..  சம்பளம் சரியா தர்றதில்லையா?ஹைக்கூ மாதிரி குட்டி கேள்வியா கேட்டு பதிலை மட்டும் எஸ்ஸே டைப்ல வாங்க நினைச்சா எப்படி?


''முதலில் பிரசன்னா. அர்ஜுன் என்ற அவர் கேரக்டர் ஒரு புதிர். ஆனால், நந்தா என்ற என் கதாபாத்திரமோ, எதையும் அழகாக முடிவு எடுத்து நிதானமாகப் போகக் கூடிய தெளிவான ஆள். உண்மை யைச் சொல்ல வேண்டும்    என்றால், இருவருமே அழகாகப் பொருந்தி இருப்பதாகச் சொல்கிறார் கள். படத்துக்குச் சில பெரிய கேமராமேன்களின் பெயர் களைச் சொன்னேன். 'இல்ல சார், என்னைப் புரிஞ்சிக்கிட்டு தயக்கம் இல்லாமல் வொர்க் பண்றவரா இருந்தா நல்லா இருக்கும்’ என்ற இயக்குநர் ராஜன் மாதவ், பத்மேஷ் என்பவரை ரெகமெண்ட் பண்ணினார். அதேபோல் இசையமைப்பாளராக சாஜன் மாதவைச் சொன்னார். அவர், இயக்குநரின் சகோதரர்.

சி.பி - ஓஹோ. அப்போ இது ஒரு குடும்பப்படமா?  அண்ணன் டைரக்டர், தம்பி மியூசிக் , அக்கா பொண்ணு எடிட்டரா/?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CkNTZR8rWr6d9PibbyTGZ2OJpNrLMZLTgxDcdaOhEPKWOTR1LAlvCWECisfzCKzw1ZBCJgksNA7FeaYK_JSMzK7gVddmEiCw8eqn2OQDk9XVQpfqRe9D7J7RfPGP4tEOQBMJCrCdJ28L/s1600/Muran+Press+Meet+Photos+Stills+Gallery+Cheran+in+Muran+Media+Meet+Pics+%252810%2529.jpg

இருவரும் ரவீந்தரன் மாஸ்டரின் மகன் கள். அவர் மலையாளப் படங்களின் இசையமைப்பாளர். நான் முன்னேறணும் என மனதளவில் என் அண்ணன்தான் நினைப்பான். என் இயக்குநரின் அந்த எண்ணம் எனக்குப் பிடிச்சிருந்தது.  கதை முதல் 20 நிமிடங்கள் ஹைவேயிலேயே நடக்கும்.

 சி.பி - படம் ஓடலைன்னா புரொடியூசர் எங்கே வரனும்னு வழி காட்டுதலா படம் இருக்கும் போல!!!!!!!!!

இரண்டே இரண்டு கேரக்டர் கள்தான். 20 நிமிடங்கள் பயணத்தி லேயே கதை சொல்வது கடினம். அங்கு தான் எங்கள் இருவரின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படும். காண்பித்த ஷாட்டையே திரும்பக் காட்டக் கூடாது, எடுத்த இடத்திலேயே திரும்ப எடுக்கக் கூடாது எனப் பெரிய சவால். அந்தக் காட்சிகளை இப்போது பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது!''


சி.பி - பார்த்தவங்களே திரும்ப பார்க்கக்கூடாதுன்னு சொல்வீங்களோ? அப்புறம் ரிப்பீட் ஆடியன்ஸ் பற்றாக்குறை ஆகி ஹிட் பாதிக்கப்படுமே.?


http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/09/muran-press-meet-08.jpg

'3' 'முரண்’ ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்கிறார் களே?''


சி.பி -  TWO STRANGERS  படத்துல வர்ற அனைத்துக்காட்சிகளும் தவறாது இடம் பெறும், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா 2 ஹீரோக்களுக்கும் தலா ஒரு டூயட், ஒரு குத்தாட்டப்பாட்டு உண்டு.. ஹி ஹி  ( கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சு கோவிந்தா!!!!)



''தழுவல் இல்லை. எப்போதோ பார்த்த ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷன் என ராஜன் என்னிடம் முதலிலேயே சொன்னார்.


சி.பி - அண்ணே!!!!! தழுவல் இல்லை இன்ஸ்பிரேஷனா? இது எப்படி இருக்குன்னா ...... ஒரு ஜோக் சொல்றேன் பாருங்க.


” அந்தப்பொண்ணை கையைப்பிடிச்சு இழுத்தியா?”

”அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்பிட்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்.”



ஆனால், அந்த விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த மாதிரி திரைக் கதை அமைத்திருக்கிறார். இன்ஸ்பிரேஷன் தவறு கிடையாது. எல்லோருக்கும் வருவதுதானே?''


சி.பி - குங்குமத்துல செல்வராகவன் பேட்டி படிச்சீங்க இல்ல.? ஃபாரீன் டி வி டி பார்த்து படம் எடுக்கறவங்களை மண்ணைக்கவ்வ வையுங்கள்னு கோபமா சீறி இருக்காரு.. அநேகமா அவர் உங்களை த்தான் தாக்கறார்னு நினைக்கறேன். http://tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Movies-Gallery/Muran-Movie-Stills/Muran-Movie-Stills-0002.jpg




4. ''எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் கருத்து சொல்பவர் நீங்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?''

சி.பி - இப்படி உசுப்பேத்தி  உசுப்பேத்தி....................


''தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் டி.வி-யின் மூலம் குறைந்த வாடகையில் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசெல்லும் முனைப்பு முதல் சாதனை. அதைச் செயல்படுத்து வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அரசால் அவை களையப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.


சி.பி =- ஜிங்க் ஜக் சிங்க் ஜக்


இந்த கேபிள் டி.வி. திட்டத்தின் மூலம் அரசு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்னையையும் தீர்க்க முடியும். எல்லாத் திரைப்படங்களும் லாபம் ஈட்டச் செய்து நஷ்டத்தில் இருந்து அவர்களைக் காக்க முடியும். அதற்கு என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. இன்று மக்கள் அனைவரும் படம் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான பணம் உரிய தயாரிப்பாளர்களிடம் போய்ச் சேர்வது இல்லை. யாரோ எங்கேயோ தொடர்ந்து திருடியபடி இருக்கிறார்கள். குடும்பத்தினர் புதுப் படங்களைப் பார்க்க திரையரங்கம் செல்ல வேண்டியது இல்லை. ஒரு படத்துக்கு 25 ரூபாய் கொடுத்தால் போதும். அந்தப் பணம் தயாரிப்பாளர்களுக்கு கேபிள் டி.வி. மூலமாக வர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும். முதல்வர் அவர்கள் மனதுவைத்தால் அவரிடம் இதுபற்றி விளக்கத் தயாராக இருக்கிறேன்!''


சி.பி - நீங்க விளக்கி அவங்க கேட்டுட்டாலும்.. போங்க அண்ணே போங்க போய் புள்ள குட்டிகளை நடிக்க வைங்கண்னே!!!!!

நன்றி விகடன்