1. உன் மனைவி அழுதுட்டு இருக்காங்களே... அடிச்சியா?
நீ வேற அவதான் என்னை அடிச்சா... அடிச்சு அடிச்சு அவ கை வலிக்குதாம்.
----------------------------------------
2. என் மனைவிக்கு ரொம்ப இளகுன மனசு.
எப்படி சொல்றே?
எப்போ என்னை அடிச்சாலும் உடனே ‘சாரி... தெரியாம அடிச்சுட்டேன்’ அப்படிம்பா...
-------------------------------
3. முதலிரவு அறையை விட்டு வெளியே வந்து மாப்ளை ஞானி மாதிரி தத்துவம் பேசுனாராமே?
ஆமா. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது. பல வளைவுகளை, நெளிவு சுழிவுகளை நாம சந்திக்க வேண்டிவரும் அப்டிங்கறாரே?
-----------------------------------
4. உங்க படத்துல வசனம் புரியலையே...?
ஓ... அப்போ கதை மட்டும் புரிஞ்சிடுச்சோ?
-------------------------------
5. காதலிச்சவனை கழட்டி விடறது தப்பு.
மேடம்... அதுக்காக உங்களை காதலிக்கற எல்லாரையும் மாசாமாசம் மேரேஜ் பண்ணிக்கிட்டே இருந்தா வீட்ல புருஷன்களோட எண்ணிக்கை ஏறிட்டே போகுது பாருங்க.
----------------------------
6. ஆண்ட்டி ஹீரோவா நடிக்க மறுத்துட்டீங்களா? ஏன்?
ஆண்ட்டிக்கு ஹீரோவா நடிச்சா ‘மாமா’-னு கிண்டல் பண்ணுவாங்களே?
-------------------------------
7. புரொடியூசர் ஓவரா செண்ட்டிமெண்ட் பார்க்கற ஆள் போல...
எப்படி சொல்றே?
பாம்பே டையிங்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னதுக்கு வேணாம் dieing இருக்கே?-னு தயங்கறார்.
-----------------------------------
8. எமன்: உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்.
கணவன்: ஏற்கெனவே என் மனைவி டெய்லி அதைத் தானே பண்ணிட்டு இருக்கா?
-------------------------------
9. நாங்களே 6-வது முறையாக ஆட்சிக்கு வந்தால்...
7-7 (ஏழேழு) ஜென்மத்துக்கும் தமிழ்நாட்டை காப்பாத்த யாராலும் முடியாது... அதானே தலைவரே?
----------------------------------
10. உங்க பையனுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமே இல்லையே... பின்னே எப்படி 2G பிரச்சனைல மாட்டிக்கிட்டான்னு சொல்றீங்க?
அவன் வி”ஜி”[VIJI]யை லவ் பண்ற விஷயம் சு”ஜி”[SUJI]க்கு தெரிஞ்சிடுச்சாம்.
------------------------------
டிஸ்கி -1 : இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்தா நம்ம ஆளுங்க வெறி பிடிச்ச மாதிரி நாமதான் ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கறாங்க.. விளையாட்டு,தேசப்பற்று என்பதையும் மீறி பாகிஸ்தான் மேல நம்மையும் அறியாம நமக்கு வெறுப்பு கூடிடுச்சு.பாகிஸ்தான் மேல நமக்கு வெறுப்பு குறையனும் என்பதற்காக பாகிஸ்தான் ஃபிகர்ஸ உங்க பார்வைக்கு....
டிஸ்கி -2 : எகனை மொகனைன்னா என்னா? எனக்கும் தெரியாது... ஹி ஹி .அநேகமா எடக்கு மடக்குக்கு அண்ணன்னு நினைக்கறேன்...