தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.
வேண்டாம் என்று நீ
விலகிப்போனாலும்
காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி
உன் சுவாசத்தில் நிரம்புவேன்.
நான் பார்க்கின்ற
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்
அங்கே குடியேற குறுக்கு வழியோ ,
என் முகம் அதில் பிரதிபலிக்க
விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.
திட்டமிட்ட பயணத்திலோ,
எதேச்சையாகவோ
நம் சந்திப்பு ஒருமுறை
நிச்சயம் நிகழும்.
அப்போது
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.