Sunday, December 15, 2024

மிஸ் யூ (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

         


   ஷங்கரின் பாய்ஸ் (2003) படம்  மூலம்  அறிமுகம் ஆன சித்தார்த்  சமீபத்தில்  தந்த  ஹிட் படம்  சித்தா (2023) .விமல்  நடிப்பில்  வெளிவந்த  மாப்ள சிங்கம் (2016) , அருள் நிதி , ஜீவா நடிப்பில்  வெளிவந்த  களத்தில் சந்திப்போம் (2021)  ஆகிய  இப்படங்களை  இயக்கிய  இயக்குனர் என்  ராஜசேகர்  தனது ஆஸ்தான வசனகர்த்தா  ஆர் அசோக் உடன் இணைந்து  இயக்கி  இருக்கும் படம் தான் இது 


நிஜத்தில்  46 வயதான  சித்தார்த்  படத்தில் பார்க்கும்போது   30 வயது இளைஞராக  தெரிவதும் , நிஜத்தில்  28 வயதான   நாயகி ஆஷிகா    படத்தில் பார்க்கும்போது 36  வயது  போல தெரிவதும் ஆச்சர்யமான  உண்மைகள் . கன்னட  நடிகையான ஆஷிகா கிரேசி பாய் (2016) படத்துக்காக  சிறந்த  நடிகை  விருது வாங்கியவர்            


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  முதன் முதலாக  ஒரு பஸ்ஸில்  நாயகியை சந்திக்கிறான் . முதல் சந்திப்பிலேயே  மோ தல் . அடுத்த சந்திப்பில்  நாயகன்  நாயகியின் அப்பா மீது காரில் மோதி விடுகிறான் .அப்பவும்  இருவருக்கும் சண்டை .நாயகனின் அப்பா , நாயகியின் அப்பா இருவரும் நண்பர்கள்  என்பதால்  இரு குடும்பத்தாரின் முடிவுப்படி வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  நாயகியைத் திருமணம்  செய்து கொள்கிறான் .ஆனால் இருவருக்கும் ஒத்துப்போவதில்லை . சின்ன  சின்ன  விஷயத்துக்கு எல்லாம் சண்டை . நாயகன்  நாயகியைப்பிரிய  முடியுவ் எடுக்கிறான் 


 இப்போ  மேலே  சொன்னவை எல்லாம்  பிளாஸ் பேக் 


 நாயகன்   ஒரு நாள் திடீர்  நண்பனுடன்  பெங்களூர் வர  அங்கே  ஒரு பெண்ணை சந்திக்கிறான் .பார்த்ததும் அவனுக்கு அவளைப்பிடித்து  விடுகிறது . ஆனால் அவள் நாயகனைக்கண்டுகொள்ளவே இல்லை . அவளை போட்டோ  எடுத்து  தன்  அம்மாணவிடம் காட்டி  இவளை எனக்குப்பிடிச்சிருக்கு என்கிறான்  . அந்த போட்டோ  வைப்பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி . அவள்  தான்  நாயகனின்  மனைவி 


  ஒரு கார் விபத்தில்  நாயகனுக்கு தலையில்  அடிபட் ட தில்   பழைய  நினைவுகள்  மறந்து விடுகின்றன .


 அதவாது  தன முன்னாள் மனைவி என்பது தெரியாமல்  அவளைக்காதலிக்கும்  கணவன் , இதற்குப்பின் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  சித்தார்த்  அருமையான நடிப்பு . ஆக்சன் , வெட்டு , குத்து , ரத்தம் என  குப்பைப் படங்களை , ஆக்சன் மசாலாக்களைத்தொடந்து  பார்த்து  இது போல  காதல் சப்ஜெக்ட் கதை பார்க்க ஆறுதல் ஆக இருக்கிறது 


 நாயகி ஆக ஆஷிகா .கண்ணியமான  தோற்ற,ம் .இவரது முகச்சாயல்  கோகுலத்தில் சீதை  சுவ லடசுமி  போலவும்  மனிதன்  ரூபிணி  போலவும்  கலந்து கட்டி  இருக்கிறது . கண்ணியமான  உடையில்  வளம்  வருவது ஆறுதல் அளிக்கிறது 



நாயகனின்  நண்பர்களாக  கருணாகரன் , லொள்ளு சபா  மாறன் , பால சரவணன்  மூவரும்  காமெடி  நடிப்பில்   சைன்  செய்கிறார்கள் .லொள்ளு சபா  மாறன் திறமைக்கு  சந்தானம்  மாதிரி  பெரிய  இடம் அடைந்திருக்கணும் ஏனோ மிஸ்டு 


பொன்வண்ணன் , ஜெயப்பிரகாஷ் , ஆடுகளம்  நரேன்  போன்ற அனுபவம் மிக்க  நடிகர்கள்  கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் 


ஜிப்ரானின்  இசையில்  நான்கு பாடல்கள்   சுமார் ரகம்  தான் . பின்னணி  இசையம் சராசரி தரம் . கே ஜி  வேங்கடேஷின் ஒளிப்பதிவு  அழகு . நாயகிக்கு  வைத்த க்ளோசப்  ஷாட்களில்  இன்னும்  கவனம் செலுத்தி  இருக்கலாம் , தினேஷ் பொ ன்ராஜின்  எடிட்டிங்கில்  படம்  125 நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1   சமீபத்தில்  நாளிதழில்  ஒரு செய்தி   வந்தது . அம்னீஷியா   பேஷண்ட்டான  ஒரு ஆள்  தனது முன்னாள்  மனைவி  என்பது  தெரியாமல்    பிரப்போஸ் செய்கிறான் . இந்தக்கதைக்கருவை  வைத்து  திரைக்கதை  அமைத்த  சாமர்த்தியம் 


2    நேரடியாக கதை    சொல்லி  இருந்தால் அந்த அளவு  சுவாரசியம்  இருக்காது என்பதை உணர்ந்து  நான் லீனியர்  கட்டில்  நிகழ்காலம் ,  கடந்த  காலம் என மாறி மாறி  காட் சிகளை   அடுக்கிய விதம் 


3   நீண்ட  இடைவெளிக்குப்பின்  தமிழ்  சினிமா உலகில்  ஒரு காதல்  சப்ஜெக்ட்  தர முன் வந்தது 

 4  படத்தின்  பெரிய பிளஸ்  அருமையான  வசனங்கள் , ரொமாண்டிக் போர்சன் ,காமெடி போர்சன்  இரண்டிலுமே ஷைன்செய்து இருக்கிறார் அசோக் 


  ரசித்த  வசனங்கள்  (ஆர் அசோக்) 


1   மறதியால்  கஷ்டப்படறவங்களை  விட  நினைவுகளால் கஷ்டப்படறவங்கதான்  அதிகம் 


2  ஒரு கெட்ட விஷயம்  நமக்கு  நடக்கக்கூடாதுன்னா  அது அடுத்தவங்களுக்கு நடக்கும்போது நடக்க விடாம நாம அதைத்தடுக்கணும் 


3   வெறுப்போட  உச்சக்கட்டம்  சத்தம் போடறதோ , கத்தறதோ  இல்லை .     கண்டுக்காம  போவது 


4  வாழ்க்கைல  நம்மை ஒருவர்  ரிஜெக்ட்  பண்றது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? 


5 ஒரு பூ  மலர்வதைப்பார்க்க  ரொம்ப   நேரம் காத்திருக்கணும் . அது மாதிரி  தான்  காதல் மலர்வதம் 


6   தெரிந்துகொள்வதற்கும்  , உணர்வதற்கும் வித்தியாசம் இருக்கு 


7  வாழ்க்கைல  அடஜஸ்ட்  பண்ணலாம் , ஆனா வாழ்க்கை  பூரா   அடஜஸ்ட்  பண்ண  முடியாது 


8  வாழ்க்கைல   பிடிக்காத  விஷயத்தை  மறக்கணும்னு  எல்லாரும் நினைப்பாங்க, ஆனால் யாராலும் அது முடியாது 



9 நமக்குப்பிடிச்ச  விஷயத்துக்காக   நம்மால  முடிஞ்ச்ச  வரை போராடுவோம் .அதுக்கும் மேல கிடைக்கலைன்னா அது நம்ம தப்பில்லை , 


10   அவனவன்  பொண்டாட்டியை மறக்க வேற யார் கிட் டயாவது போவான் , இவன் என்னடான்னா இவனோட பொண்டாட்டியை மறக்க இவனோட பொண்டாட்டி கிட் டேயே  போய் இருக்கான் 


11   சார் , பார் க்ளோஸ்   பண்ணணும் 


 நல்லா இருக்கற பாறை ஏன் க்ளோஸ்   பண்ணணும் ?


 சார் , க்ளோசிங்க்  டைம்  ஆகிடுச்சு 


 சரி ,    நான்  வேணா  உங்க   ஓனர் கிட் ட  பேசறேன் 


நான் தான் சார் ஓனர்


12    இது  ஹாரர்  த்ரில்லர்  நான் தேடச்சொன்னது  லவ் ஸ் டோரி 


 நம்ம  வாழ்க்கைல ரெண்டும் ஒன்னு தானே? 


13  பொண்டாட்டியை மறக்கறது  எவ்ளோ  பெரிய  வரம் தெரியமா? 


14  உன்    மனசுக்குப்பிடிச்ச  மாதிரி  பெண்ணை ஆர்டர் பண்ணி  செஞ்சு  கொண்டு  வர முடியாது 


15  வடக்கே   தலை வெச்சுப்படுத்தா  மூளை மழுங்கிடும்ன்னு சொல்வாங்க 


16  நீ  போடடோ ல காட்டுன ப்ப  இந்தப்பொண்ணு தான்  வேணாம்னேன் . இந்த மாதிரி தான் எல்லாப்பொண்ணும் இருக்கும்னா எனக்கு கல்யாணமே வேணாம் 


17   நான்  எந்த மாதிரி  பொண்ணு  வேணும் என யார் கிட் டேயோ  கேட்டு , அவங்க எனக்குன்னு செஞ்சு  அனுப்புனா மாதிரி இருக்கு 


18  பெங்களூ ர்ல  அமைதியான இயற்கையான  இடமா? அப்படி ஒண்ணே  கிடையாதே? 


19   நாம  எல்லாப்பக்கமும் தேடுனோமே? வீட்ல  தேடுனோமா? நான் கூட சின்னப்பையனா  இருக்கும்போது கட்டிலுக்கு அடில ஒளிந்து விளையாடுனேன்  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அமைச்சரின்  மகன்  ஒரு கொலை செய்வது , அதை பார்க்கும்  நாயகி சாட் சியாக  ஆவது  , நாயகன்  பைட்  போடுவது  இவை எல்லாம்  ரொமாண்டிக்  டிராமாவில் ஒட்டவில்லை 



2  அப்போது தான் அறிமுகம் ஆன நாயகனை  திடீர்  நண்பன்  தனது  காபி  ஷாப்பில்  கல்லாவில்  உட்கார  வைப்பது 


3  காபி ஷாப்  வைத்திருக்கும்  நண்பனுக்கே  தெரியாத   தொழில்  நுணுக்கங்கள்   வெட்டாபீஸ்  ஆன நாயகனுக்குத்தெரிவது 


4  நாயகியின்  அப்பா  கொஞ்சம்  கூட   பொறுப்பில்லாமல்  தன மகளை வாழா வெட்டி ஆக்க முனைவது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் , தம்பதிகள்  பார்க்கலாம் . புஷ்பா 2 மாதிரி  டப்பாப்படங்களை  ரசிக்கும்  மசாலா  ரசிகர்கள்  தவிர்க்கவும் . இது கண்ணியமான  ரசனை கொண்ட  ரசிகர்கள் , பெண்களுக்கான படம் . ரேட்டிங்  2.5 / 5 . விகடன் மார்க்  42 . குமுதம்  ரேட்டிங்  - ஓகே