Friday, December 13, 2024

BAGHEERA (2024) - கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )@ நெட் பிளிக்ஸ்

                 


       31/10 /2024 தீபாவளிக்கு  ரிலீஸ்  ஆகி  29 கோடி ரூபாய் வசூலித்து  இந்த ஆண்டின்   அதிக வசூல் படைத்த கன்னடப்  படம்    என்ற  பெருமையைப்பெற்றது .இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்  படம் . பிரபுதேவாவின்  கேரியர் ஓர்ஸ்ட் படமான  பகீரா (2023)என்ற  டப்பாப்  படத்தின்  கதைக்கும் , இதற்கும்  சம்பந்தம் இல்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  சிறுவனாக  இருந்தபோதே  ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன்  டைப்  படங்களின்  ரசிகனாக இருக்கிறான் . தானும் அதே போல் ஆக வேண்டும் என நினைக்கிறான் . அவனது அம்மா அவனுக்கு  புது ஐடியா  தருகிறாள் .. அவனது அப்பா போல போலீஸ் ஆபீசர் ஆகி விடடால்  நிஜவாழ்வில் சூப்பர் மேன்  ஆகி விடலாம் என்பதே அது . 


 நாயகனும்  பெரியவன் ஆகி ஐ பி எஸ் ஆபீசர் ஆகிறான் .சிங்கம் , சாமி , மூன்று முகம்  படங்களின்  ஹீரோக்கள் போல  ரவுடிகளை பந்தாடுகிறார் . முதல்  50 நிமிடப்படம்  மாமூல் மசாலா  டெம்ப்ளேட்டில்  போகிறது . ஒரு கட்டத்தில்  ஹையர் ஆபீசர்  நாயகனுக்கு ஸ்பீடு  பிரேக்கர்  போடுகிறார் . இனிமேல் பெரிய  இடத்து விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிறார் . நாயகனின்  அப்பாவும்  நாயகனை க்கண்டிக்கிறார் . இது நாயகனுக்கு பெரிய  அதிர்ச்சியாக இருக்கிறது . அதை விடப்பெரிய  அதிர்ச்சி  அப்பா  நேர்மையானவர் இல்லை , லஞ்ச்ம  வாங்குபவர் என்ற  கசப்பான  உண்மை தெரிய  வருகிறது 

நாயகனால்  இனி நேர்மையான  போலீஸ் ஆபீசர் ஆக  இருக்க முடியாது .அதே சமயம்  கொடுமைகளுக்குத்துணை போகவும் முடியாது . ஒரே  வழி  பகலில்  சாதா போலீஸ் , இரவில்  சூப்பர்  மேன்   பகீரா அவதாரம் . இதனால்  அவரது   ஏரியாவில்  ரவுடிகளின்  அட்டகாசம்  குறைகிறது . .

சிபிஐ  பகீரா  யார் ? என்பதை கண்டுபிடிக்க  ஒரு டீமை அனுப்புகிறது . இதற்குப்பின்  என்ன ஆனது ? என்பது  மீதிக்கதை 


நாயகன் ஆக ஸ்ரீ முரளி  நடித்திருக்கிறார் . ஆக்சன்  ஹீரோவுக்கான எல்லா வேலைகளும் செய்கிறார் . பின் 

பாதியில்   தாடி  கெட்டப்  எடுபடவில்லை . நாயகி  ஆக ருக்மணி  வசந்த்  கண்ணியமான உடைகளில் வருகிறார் , நடிப்பும் நல்லாருக்கு . சிபி ஐ  ஆபீசர் ஆக  பிரகாஷ்  ராஜ்  கடைசியில்  பின் பாதியில் வருகிறார் . மற்ற  அனைவர் நடிப்பும் ஓகே ரகம் 

பி அஜனீஷ்  லோக்நாத்  இசையில்  5 பாடல்கள் . 3 சுமார் ரகம் . பின்னணி  இசை பரவாயில்லை அர்ஜூன்  ஷெட்டியின் ஒளிப்பதிவில்  காட் சிகள்  பிரமாண்டம் . பிரசாந்த்  நீல்  என்பவரின்  கதைக்கு திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்  டாக்டர்   சூரி 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி  மாமூலான போலீஸ்  கதை டெம்ப்லேட்டில்  இருந்தாலும்  கமர்ஷியலாக  விறுவிறுப்பாகக்காட் சிகள் அமைத்தது 


2  பின்  பாதி  சூப்பர்  ஹீரோ  கான்செப்ட்டில்   யூகிக்கும்படியான காட் சிகள்  என்றாலும்   சுவராஸ்யமானதாக இருந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  உலகத்துல எல்லாரும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் பிறக்கறாங்க , ஆனா  பலர்   அந்தக்காரணம்  தெரியாமயே  செத்துடறாங்க 


2  தனக்காக  வாழாமல்  மற்றவர்களுக்காக  வாழும் எல்லாருமே சூப்பர் மேன் தான் 



3  போலீஸ்  யூனிபார்ம்ல  இருக்கும்போது  சரக்குக்குடிச்சா  அது தப்பா ?


  ஆமா, அது க்ரைம் 



4 கடவுள்  ரொம்ப  மோசம் . எல்லா  வலிகளையும்  பெண்களுக்கே தந்திருக்கார் 


5    முகமூடி  போட்டு  வாழக்கத்துக்கோ 


6  உலகம்  பூரா  என்ன சிஸ்ட்டம்  பாலோ பண்ணுதோ  அதையே   நீயும்  பாலோ பண்ணு , எதிர்த்து  நின்னா   எதுவும் பண்ணமுடியாது 


7 நியாயத்தைக்காப்பாத்த காக்கிச்சடடை தான் போடணும்னு அவசியம் இல்லை , காப்பாத்தற  மனசு இருந்தாப் போதும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகன்  சிறுவனாக  இருக்கும்போது  அவன் அம்மா அவனுக்கு பிறந்த நாள் பரிசா  போலீஸ்  யூனிபார்ம் கிப்ட் பேக்கிங்க்ல  தர்றாங்க . புது  டிரஸ் .  அதை எடுக்கும்போது  அயர்ன் பண்ணிதான்  போடணும்கறாங்க . புது டிரஸ்  நீதிடாதான் இருக்கு .அதை  எதுக்கு அயர்ன் பண்ணனும் ? 


2  நாயகன்  பகீராவா  இருக்கும்போது  ஒரு கர்ச்சீப்பை முகத்துல  கட்டிக்கறான் .ஒரு பொண்ணு  செல்பி எடுத்துடுது . மீடியாக்களில் போட்டோ  வருது . கண்கள் , தலை , ஹேர் ஸ் டைல்   எல்லாம்  நல்லாத்தெரியுது . ஆனா யாருக்கும் டவுட்  வரலை .குறிப்பா சி பி ஐ .. ஐயோ பாவம்   


3   நாயகன்  பகலில்  போலீஸ் .இரவில்  பகீரா . எப்போ  தூங்குவாரு ?  டெய்லி  நைட்  வெளில  போகும்போது  அப்பாவுக்கு டவுட்  வராதா? 


4     நாயகனின்  உயிருக்கு ஆபத்து எனில்  நாயகியை  வெறுப்பது போல  நடிப்பார் . இது வாழ்வே  மாயம் , பயணங்கள் முடிவதில்லை கால கட்டங்களிலேயே வந்துடுச்சு  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பல  படங்களில்  பார்த்த  மாமூல் டெம்ப்லேட்  தான் . போர்  அடிக்காமல் போகுது . பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5 


பகீரா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்டாக்டர் சூரி
மூலம் திரைக்கதைடாக்டர் சூரி
மூலம் உரையாடல்கள்டாக்டர் சூரி
மூலம் கதைபிரசாந்த் நீல்
தயாரித்ததுவிஜய் கிரகந்தூர்
நடிக்கிறார்கள்ஸ்ரீமுரளி
ருக்மணி வசந்த்
பிரகாஷ் ராஜ்
அச்யுத் குமார்
ரங்கயான ரகு
கருடா ராம்
பிரமோத் ஷெட்டி
சுதா ராணி
ஷரத் லோஹிதாஷ்வா
ஒளிப்பதிவுஅர்ஜுன் ஷெட்டி
திருத்தியதுபிரணவ் ஸ்ரீ பிரசாத்
இசைபி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு
நிறுவனம்
வெளியீட்டு தேதி
  • 31 அக்டோபர் 2024
இயங்கும் நேரம்
158 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
பாக்ஸ் ஆபிஸ் 29 கோடி [ 2 ]