LONELY PLÀNET (2024)- English- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @நெட் பிளிக்ஸ். 18+
11/10/2024 முதல் நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.
நாயகி 50 வயதான புகழ் பெற்ற ரைட்டர்.இவர் ஒரு தனிமை விரும்பி.ஒரு நாவலை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.எழுத்தாளர்கள் பங்கு பெறும் ஒரு மீட்டப்பில் கலந்து. கொள்ள வந்திருக்கிறார்.
நாயகன் ஒரு கம்பெனியில் ஒர்க் செய்பவன்.நாயகனின் காதலி யும் ஒரு ரைட்டர்.இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.காதலிக்கு த்
துணையாக உடன் வந்து இருக்கிறாரே தவிர நாயகனுக்கு இலக்கியத்தில் ,எழுத்தில் பெரிய ஆர்வம் இல்லை.நாயகனுக்கு 25 வயது.காதலிக்கு 22வயது.
மீட்டப்பில் ரைட்டர்கள் எல்லாம் சேர்ந்து இலக்கியப்புதிர் போட்டி விளையாடுகிறார்கள்.நாயகனால் அதில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள முடியவில்லை.கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்ற அளவில் தான் அவருக்கு இலக்கிய அறிவு இருக்கிறது.அதனால் மற்ற ரைட்டர்கள் நாயகனை கிண்டல் செய்ய நாயகன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்
நாயகனுக்கு நாயகியுடன் அறிமுகம் உண்டாகிறது.இருவருக்கும் எந்த விதமான ஒத்த விருப்பமும் இல்லை எனினும் எப்படி நெருக்கம் உண்டாகிறது?அது எந்த அளவு வளர்கிறது?முதல் காதலிக்கு இந்த விஷயம். தெரிந்ததா? என்பது மீதி திரைக்கதை
நாயகி ஆக லாரா டெர்ன் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பில் மனம். கவர்கிறார்.
நாயகன் ஆக லியாம் ஹெம்ஸ் ஒர்த் இளமைத்துடுக்குடன் நடித்திருக்கிறார்
நாயகனின் காதலி ஆக. டயானா சில்வர்ஸ் அழகுப்பதுமையாக வந்து போகிறார்
ஒரு சிறுகதை படிப்பது போல சம்பவங்கள் கவிதையாக நகர்கின்றன
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். சுசன்னாகிராண்ட்
பென்ஸ் மித்தர்டு தான் ஒளிப்பதிவு.ஓவியம் போலகாட்சிகள்.
கெவின். டெர்ட்டின் எடிட்டிங்கில் படம். 96 நிமிடஙகள் ஓடுகின்றன
பினர் டோப்ரக் தான் இசை.துள்ளலான பின்னணி இசை.
ரசித்த வசனங்கள்
1 பயணஙகள் மனிதனைப்புதுப்பிக்கிறது. என பலர். சொல்றாங்க.ஆனா எவ்ளோ பெரிய பயணமா இருந்தாலும் நீங்க நீங்களாத்தான் இருக்கீஙக.மாற்றம் ஏதும் இல்லை
2. நீலக்கலரை விரும்பாதவர்கள் யார்?
3 சரக்கு அடிச்சுட்டா ஜனஙக தங்களைப்பற்றித்தான் பேசுவார்கள்
4. வாரன் பபட்டையே மீட் பண்ணி இருந்தாலும். பெருசா ஏதும் பேசி இருக்க மாட்டேன்.அது என் சுபாவம்
5 நாவலுக்கு டைட்டிலே. இன்னும் வைக்கலைன்னா எழுத இன்னும் விஷயம் இல்லைனு அர்த்தம்
6 நீ என்னை பாலோ பண்ணிட்டு வந்தியா?
ச்சே ச்சே நீ சேப்டியா இருக்கியா?னு. பார்க்க வந்தேன்
7. கடின உழைப்பு இல்லைன்னா நீ எதுக்கும் ஒர்த் இல்லை
8 அபாயத்தை விட்டோ ,ஆபத்தை விட்டோ நீ ஒரு நாளும் ஓடமுடியாது
9 எப்பவாவது ஸ்டக் ஆகி இருக்கியா?
அந்த வார்த்தையையே யூஸ் பண்ணதில்லை
சபாஷ் டைரக்டர்
1. நாயகன்,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி
2. நாயகனின் காதலியாக வருபவரின் அழகு,முக வசீகரம்
3 பாலுமகேந்திரா ப்டங்களில் வருவது போல கவிதையான சில காட்சிகள்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஒன்றரை வருட உழைப்பில் தயாரான 90% பணி முடிந்த நாவலின் பிரதியை தயார் செய்யாமல் இருந்தது
2. அஜாக்கிரதையாக இருந்து அந்த நாவலைப்பறி கொடுத்தது
3 நாயகன் ,நாயகி இருவருக்கும் எந்த விதமான ஒத்த ரசனையும் இல்லாமல் நெருக்கம் வருவது
4. காதலியை விட்டு விலக காரணமே சொல்லப்படவில்லை
5. இளமையான ,அழகான காதலி இருக்கையில் ,50 வயதான,வெகு சுமாரான நாயகியுடன் நெருக்கம் ஆவது நம்பும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+
சிபி எஸ் பைனல் கமெண்ட் - பாலுமகேந்திரா ரசிகர்கள் பார்க்கலாம்,ரேட்டிங் 2.25/5