Thursday, October 03, 2024

VAZHA (2024) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி +எமோஷனல் டிராமா) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

   

                    

15/8/2024  அன்று   திரை அரங்குகளில்  வெளியான இப்படம் இப்பொது ஓடிடி யில் ரிலீஸ்  ஆகி இருக்கிறது .தோல்வி அடைந்த  மனிதர்களின்  வாழ்க்கையை கவிதையாக  படமாக்கும்  அங்காடித்தெரு , வெயில்  படப்புகழ்  வசந்தபாலன் பாணீயில்  இயக்கப்பட்ட ஒரு காமெடி டிராமா  இது . முதல் பாதி காமெடியாகவும் பின் பாதி  எமோஷனல் கனெக்ட் உடனும் இருக்கும் . தமிழில்  வெளியான   வாழை  படத்துக்கும் , இந்த வாழா  படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 


 மலையாளத்தில்   வாழா  என்றால்  வாழை  மரம் என்று  பொருள் . இவனைப்பெற்றதுக்கு ஒரு வாழை  மரத்தை நட்டிருந்தாலாவது எதாவது பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று ஒரு கேரளப்பழமொழி உண்டு 


ஜெயஜெயஜெயஹே , குருவாயூர்  அம்பல நடையில்  ஆகிய  சூப்பர்  ஹிட்  படங்களை  இயக்கிய விபின்  தாஸ்  தான் இந்தப்படத்தின்  திரைக்கதை  ஆசிரியர் . கவுதமிண்டே  ரதம்  படத்தை  இயக்கிய ஆனந்த  மேனன்  தான்  இப்படத்தின்  இயக்குனர் 


  வெறும்  4  கோடி லோ பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  இதுவரை   40   கோடி  ரூபாய்  வசூல்  செய்து இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஐந்து  சிறுவர்கள்  சின்ன வயசிலிருந்தே ஸ்கூலில் படிக்கும்போதிருந்தே   லாஸ்ட் பெஞ்ச்  லாரன்ஸ்களாக , உருப்படாத  பயல்களாக  இருந்து வருகிறார்கள் . அவர்களது பள்ளி  வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை  , குடும்ப வாழ்க்கை  ஆகியவற்றைக்காமெடியாகசொல்லும் கதை தான் இது . டைட்டிலிலேயே  இது பயோ பிக்சர் ஆப் எ பில்லியன் பாய்ஸ்  என சொல்லி விடுவதால்  வழக்கமான மசாலாப்பட டெம்ப்ளேட் இதில் இருக்காது 


ஸ்கூலில்  படிக்கும்போது   டீச்சர்களிடம்  திட்டு வாங்கி   பின்  அவரவர்  பெற்றோருடன்  வரவும்  என  அறிவுறுத்தப்பட்டு   அவர்கள்  வந்த பின்  அனைவரையும் லெஃப்ட்  அன்ட்  ரைட்  வாங்குவதுதான்  முதல்  பாதி  திரைக்கதையை  ஆக்ரமிக்கும்  விஷயங்கள் . ஜாலியாகப்போகிறது 


அதற்குப்பின்  வாழ்க்கையில்  ஒவ்வொரு  கட்டத்திலும்  அவர்கள்  தோல்வி  அடைவது , அவற்றை   அவர்கள்  கடந்து வருவதுதான்  திரைக்கதை 


 ஐந்து  மாணவர்களாக   நடித்திருக்கும்  அனைவரும்  நமக்கு  புதுமுகங்கள்  என்றாலும்  படம்  ஓட ஓட  அவர்கள்  முகம்  நம்  மனதில்  தங்கி    விடுகிறது பஷீல்  ஜோசப்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார் 

 6  பாடல்கள்  உள்ள  இப்படத்தை  5    பேர்  குழு  இசை  அமைத்திருக்கிறது . பின்னணி  இசை  கலாட்டா தான் . கண்ணன்  மோகன்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  6  நிமிடங்கள்  ஓடுகிறது புதுசேரி  அர்விந்த்  ஒளிப்பதிவு கண்ணுக்கு இதம் 



சபாஷ்  டைரக்டர்


1  ஸ்கூலில்  டீச்சர்   எம்  என்ற  ஆங்கில  எழுத்தை  போர்டில்  எழுதி   அதில்  இருந்து மரம் வரைவது எப்படி? எனக்கற்றுக்கொடுக்கும்  ஓப்பனிங்  சீன்  செம 


2  ஐந்து   பசங்களூம்   ஏதோ  ஒரு  குறும்பு  பண்ணி  மாட்டிக்குவதும் , பெற்றோர்  வர  வைக்கப்பட்டு   திட்டு  வாங்குவதும்  தான் முதல்  பாதி  திரைக்கதையே . நாஸ்டாலஜி மொமெண்ட்ஸ் 


3  ஐந்து  பசங்களில்  ஒருவன்  மட்டும்  ஒரு  பெண்ணிடம்  காதல்வசப்படுவது, அந்தப்பெண்ணுடன்  சுற்றுவது   ரகளையான  காட்சிகள் 


4  பின் பாதிப்படத்தில்  ஐந்து  மாணவர்களின் பெற்றோரும்  அவர்களுக்கு  சப்போர்ட்டுக்கு வருவது ஆதரித்துப்பேசுவது எல்லாம்  கை தட்டல் பெற்ற  அட்டகாசமான  காட்சிகள்  


5  ஒரு  காமெடிப்படம்  திடீர்  என  செண்ட்டிமெண்ட்  காட்சிகளுடன் யு டர்ன்  அடிக்கும்போது பெரும்பாலும்  அது ஒர்க்  அவுட்  ஆகாது , ஆனால்  அந்த  மேஜிக்  இப்படத்தில்  நடக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 


1  உங்களைத்திட்டிட்டு இருக்கும் உங்க அப்பா உங்களை அங்கீகரிக்கும்போதுதான் நீங்க ஹீரோ ஆகறீங்க 


2   யார்  என்ன சொன்னாலும்  நம்ம இஷ்டப்படி நாம வாழ்ந்தா போதும் 


3   எங்க   அப்பா சர்வீஸ்ல இருந்தப்போ  இறந்ததால எனக்கு  அவரோட  அரசுப்பணி  கிடைச்சுது . நானா  எதுவும்  முயற்சி எடுக்கலை . அதே  மாதிரி கவர்மெண்ட்   வேலைல   இருக்கும்போதே  நான்  செத்துட்டா  உனக்கும் கவர்மெண்ட்  ஜாப் கிடைக்கும் 


4  நமக்கு  ஒரு தேவை  வரும்போது அடுத்தவங்க காலைப்பிடிக்க வேண்டிய அவசியம் வரக்கூடாது 


5   இவனுங்களை  எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினாத்தான் திருந்துவானுங்க 


 அப்படின்னா ஜெயிலுக்குப்போன பின் திருந்திய ஒரு நாலு பேரைக்காட்டு 


6   உலகில்   மூன்று   வகையான  குழந்தைகள்  இருக்காங்க 

  1  தனக்குப்பிடிச்ச படிப்பைப்படிச்சு வாழ்பவர்கள்

  2  பெற்றோர் விருப்பப்படி படிப்பவர்கள்  

3  தனக்கும் பிடிக்காம , அம்மா, அப்பா விருப்பத்துக்கும் இல்லாம என்ன படிக்கறோம், என்ன பண்றோம்னே தெரியாம வாழ்பவர்கள் 


7  ஹெச்  எம்  என்னை அடிக்க குச்சி எடுத்துத்தருவாளே  அவ  என்னைப்பார்த்து  சிரிச்சா 


 டேய் , என்னைப்பார்த்தும்தாண்டா  அவ  சிரிச்சா 


8     நீ  படிப்பதற்கான  அருகதை உனக்கு இல்லை 

ஏன்மா ?


 உங்க  அப்பாவோட மூளை தானே உனக்கும் ? 


9    டேய் , யாரும்  பார்க்காதீங்க , அவ  என்  அத்தை  பொண்ணு


10    நம்ம   ரெண்டு பேரைத்தவிர   மூன்றாவதா  ஒரு ஆள்  அவளைப்பார்த்துடக்கூடாது 


11   நீ  ஏன்  ஆம்பளை  மாதிரி  ஹேர்கட்  பண்ணிட்டு  சுத்திட்டு இருக்கே? 


 எனக்குப்பிடிச்சிருக்கு 


12  உன்  பேரென்ன? 


 ஃபிரெட்டி


 என்னது ? ஜட்டியா? 


13  நல்லாப்படிக்கனும்னா  அதே  மாதிரி  நல்லாப்படிக்கும் ஒரு  நண்பன்  கூட இருக்கனும், அல்லது  நம்ம வைராக்கியத்தைத்தூண்டி விடும் எதிரி அருகில் இருக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு  வாழை  மரம்  குலை தள்ளி இருக்கு . வாழைப்பழங்கள்  உள்ள  அந்த  சீப்பை  மட்டும்  வெட்டாமல்  எதுக்கு  மரத்தையே  வெட்டனும் ? 


2   கில்மாப்பட  சி டி யை  யாராவது  ஸ்கூலில்  உள்ள  சிஸ்டத்தில்  போட்டுப்பார்த்து  மாட்டுவார்களா? 


3  அப்படியே  ஸ்கூலுக்கு  சி டி  கொண்டு  வந்தாலும்  அந்த  சி டி  கவரை  தன்  புத்தகப்பையில்  நோட்   புக்கில்  ஒளித்து  வைத்து  மாட்டுவார்களா? 


4  தற்கொலை  முயற்சிக்காட்சி  தவிர்த்திருக்கலாம்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியாப்பொழுது  போகும்  படம் . பின்  பாதி  சோகம்  உண்டு. ஆனால்  க்ளைமாக்ஸ்  சுகம்  சுபம் . ரேட்டிங்  3 / 5