Wednesday, September 11, 2024

ADIOS AMIGO (2024) -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட்பிளிக்ஸ்

         

 டைட்டிலுக்கு  அர்த்தம்  Farewell, friend  என  விக்கி பீடியா சொல்லுது .நான் கூட இரு நண்பர்களின் பெயர் என்று போஸ்ட்டர் டிசைன் பார்க்கும்போது நினைத்தேன்      காமெடி டிராமா  என  பிரமோட் செய்யப்பட்டாலும் இது அன்பே சிவம் மாதிரி  ஒரு பீல் குட் மூவி , எல்லோருக்கும் பிடிக்காது .பொறுமை முக்கியம்,பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனோட அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை ,ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்க . உடனடியா ரூ 50,000  பணம்  தேவை என தங்கை நாயகனுக்கு போன் பண்ணி சொல்றா .நாயகன் பணம்  ரெடி பண்ண  முயற்சி செய்கிறான் .பல நண்பர்கள் கை  விரித்து விட  ஒருவன் மட்டும்  காசோலை  கொண்டு வந்து கொடுத்துட்டுப்பணம் வாங்கிக்கோ என்கிறான் . அவன் சொன்னபடி  பஸ் ஸ்டேண்ட்  போகிறான் .அங்கே  ஒரு நபரைப்பார்க்கிறான் .அவன் பெரிய கோடீஸ்வரன் போல . பணத்தை  அசால்ட் ஆக செலவு செய்கிறான் . டீக்கடையில்  50 ரூ பாய்க்குபதிலாக  500 ரூபாய் தருகிறான் . லாட்டரி விற்கும் பெண்ணிடம்  மொத்த லாட்டரி டிக்கெட்டையும் வாங்கி மகிழ்விக்கிறான்  



அந்த நபர்   நாயகனை டீ சாப்பிட அழைக்கிறான் . நாயகனும் போகிறான் . பெரிய தொழில் அதிபரின் மகன் போல . ஆனால் சரியான சரக்கு பார்ட்டி . முழு போதையில் இருக்கிறான் . இவன் மனது வைத்தால் தன பிரச்சனை தீரும் என நாயகன் நினைக்கிறான் . அந்த நபர்  நாயகனை  திருவனந்தபுரம் போகலாம்  என அழை க்கிறான் . நாயகனும் அவன் உடன் செல்கிறான் 



அந்த நபரின்   முன்னாள்  காதலி கொல்லத்தில் ஒரு ஜவுளிக்கடையில்  கேஷியர் போல . அவளைக்கான  திருவனந்தபுரம் பஸ்ஸில்  இருந்து இறங்கி  திடீர் என கொல்லம்  ஸ்டாப்பில்  இறங்குகிறார்கள் . இதற்குப் பின் நாயகனுக்கு நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு அட்டகாசமாக  நடித்திருக்கிறார் .படம் முழுக்க அவர்  முகத்தில் ஒரு பதட்டம்  தெரிவது அருமை . கோடீஷ்வரனாக  ஆசிப் அலி  சரக்கு சங்கரலிங்கமாகவே மாறி விட்டார் .பிரமாதமான  நடிப்பு 


கோடீஸ்வரனின் முன்னாள் காதலி ஆக அனகா  ஹோம்லி லுக் , பாந்தமான நடிப்பு .நாயகனின் நண்பர்களாக அல்தப்   சலீம் ,சைன் டாம் சாக்கோ  இருவரும் கெஸ்ட் ரோலில் வந்திருக்கிறார்கள் 


பாடல்களுக்கான இசை - கோபி சுந்தர் + ஜேக்ஸ் பிஜோய்  , பின்னணி  இசை ஜேக்ஸ் பிஜோய்  .கச்சிதம் 


ஒளிப்பதிவு  ஜிம்சய் காலித் . நுணுக்கமான முக உணர்வுகளை பிரமாதமாகப்படம் பிடித்து இருக்கிறார் . 

எடிட்டிங்க்  நிஷாத்  யூஸுப் . இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது 


வித்தியாசமான  கதைக்கருவை எழுதி  இருப்பவர்  தங்கம் .இயக்கி இருப்பவர்  நகாசு நாசர் 

சபாஷ்  டைரக்டர்

1   படத்தில்  டூயட் இல்லை ,சண்டைக்காட்சிகள் இல்லை , வன்முறை இல்லை ,மொக்கைக்காமெடி டிராக் இல்லை . ஆனால்  ஒரு சிறுகதையை வாசிப்பது போல  கதையுடன் ஒன்றி விடுகிறோம் 


2  பஸ்ஸில்  தகராறு செய்த ஆளை  பயமுறுத்த  ஆசிப் அலி  செய்யும்  டெக்னிக் செம  மாஸ்  மசாலா ஆக்சன்  படம் போல  ஒரு காட்சி , ஆனால்  அதைக்காமெடியாக்கிய விதம் குட் 


3   ஆசிப் அலி  , கொல்லத்தில்    தன  முன்னாள்    காதலியை  சந்திக்க விழையும் காட்சி கவிதை 


4   வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் கணவர் முகம் கடைசி வரை  காட்டி இருக்க மாட்டார் ஆர் சுந்தர்ராஜன் . அதே போல  படம் முழுக்க நாயகனின்  அம்மா ,   தங்கை , ஆசிப் அலியின் மனைவி  , அம்மா  ஆகிய  நான்கு முக்கியக்கதாபாத்திரங்களின்     முகமும்  காட்டப்படாது . ஆனால் அவர்களைப்பார்த்த உணர்வு வரும், அருமையான இயக்கம் 


5    டாக்சிக்கு  பணம் கொடுக்க முடியாமல்  தடுமாறும் காட்சிகள்   ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது 


6    ஜீவன்  உள்ள க்ளைமாக்ஸ் 



  ரசித்த  வசனங்கள் 


1    டீன் ஏஜ் பசங்க லவ் பண்றதுக்கான சிச்சுவேஷனை பேரன்ட்ஸ் சே  உருவாக்கித்தரனும் 


2 பிரச்சனைகள்   வர்றதுக்கும் ,அது முடியறதுக்கும் ஒரு நிமிஷம் போதும் 


3  ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் .புதுப்புது  நட்புகள் கிடைக்கும் 


4  முன்னே பின்னே  தெரியாதவங்க கூட  நமக்கு உதவி பண்ணத்தயாரா இருக்காங்க. கடவுள் அவங்களை நம்ம கண்ணுக்குக்  காட்டனும் 


5 முதல்ல   என்  தலைல இருக்கும் நெருப்பை அணைச்சுக்கறேன், அதுக்கு அப்புறமா  மலைல இருக்கும் நெருப்பை அணைக்கறேன்,


6  ஒரு 100 ரூபா கிடைக்காம எத்தனை  பேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க தெரியமா?உனக்கு பணத்தோட  அருமை தெரியுமா? 

ஊருலிருக்கற  எல்லார் கஷ்டத்தையும் என்னால எப்படித் தீர்க்க  முடியும்? நான் பார்க்கறவங்க   கஷ்டத்தை மட்டும் தான் என்னால தீர்க்க  முடியும்

7 ஆசைப்பட்ட பெண்ணைக்கல்யாணம் பண்ண முடியாமபோனா   கஷ்டம் என்ன? என எனக்கும் தெரியும் 

8  என்னோட ஆசையே - யாரோட உதவியும் இல்லாம   நான் வாழனும்கறதுதான் 

9  நம்மைக்கெடுக்கும்  விஷயங்கள்   எவ்ளோ  நல்லாதா  இருந்தாலும்  அதை  நாம ஏத்துக்கக்கூடாது 

10 சந்தோசம் வரும்போது  சந்தோசப்படவேணாமா?அதுதானே அதுக்கு மரியாதை ?

11    நீ எனக்கு உதவி பண்ணலைன்னாலும்  எனக்கு உதவி பண்ணனும்னு   நினைத்தாய் பாரு அது எனக்குப்பிடிச்கிருக்கு 

12     சிலரை  எல்லாம் முதல் டைம் பார்க்கும் போதே  நமக்குப்பிடிச்சிடும் 

13  யாருக்கும் உதவாத  காசு வெறும் பேப்பர் தான் 

14  இருக்கறவங்க எங்கே சுத்துனாலும் கடைசில வர வேண்டியஇடத்துக்கு வந்துடுவாங்க, இல்லாதவங்க ? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1 கோடீஸ்வரனுக்கு , தொழில் அதிபருக்கு டவுன் பஸ்  ஸ்டேண்டில் என்ன  வேலை ? அதை தெளிவாக சொல்லவில்லை 

2  இந்த  பஸ்   வைக்கம் போகுதா? என மலையாள வெர்சனில் டயலாக் .அதை தமிழ் டப்பிங்கில் துபாய் போகுதா? என   மாற்றி இருக்காங்க.எதனால்? 

3   ஆலப்புழா டு  எர்ணாகுளம் செல்ல நாயகனுக்கு கைல காசில்லை . . 100 ரூபா ஒருத்தர்ட்டகேட்கறாரு   ரயில்ல போய் இருக்கலாமே? பெரிய பெரிய  தலைவர்கள் எல்லாம் வித் அவுட்ல ரயில்ல போய் இருக்காங்களே? 

4  தன காதலிக்கு பண உதவி செய்ய ஆசிப் அலி நினைக்கிறார் . அடிக்கடி போன் பண்ணி உன்  பேங்க் அக்கவுண்ட் நெம்பர்  கொடு என கிடக்கிறார் .காதலி தரவில்லை . கூகுள்   பே  பண்ணி  இருக்கலாமே? அதான் போன் நெம்பர் இருக்கே? 


5  அவ்ளோ பெரிய கோடீஸ்வரருக்கு   டெபிட் கார்டு , க்ரெடிட்  கார்டு இல்லையா? 


6  ஹோட்டலில்   பக்கத்து அறை  தம்பதியிடம்  தகராறு செய்யும்   ஆசிப் அலி  பின் தப்பிக்க மீண்டும் தன அறைக்கே  வருகிறார் .அதை  விட பாதுகாப்பு அப்டியே வெளியே போய் எஸ் ஆவதுதான் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எஸ் ராமகிருஷ்ணனின்  தேசாந்திரி  படித்த  வாசகர்கள் , அன்பே சிவம் , குணா மாதிரி  கல்ட்  கிளாசிக்  படங்களை  ரசித்தவர்கள் , பொறுமைசாலிகள் , பெண்கள்   அவசியம் பார்க்க  வேண்டிய படம் . ரேட்டிங்க்  3.25 / 5 


Adios Amigo
Theatrical release poster
Directed byNahas Nazar
Written byThankam
Produced byAshiq Usman
StarringAsif Ali
Suraj Venjaramoodu
CinematographyJimshi Khalid
Edited byNishadh Yusuf
Music by
Production
company
Distributed byCentral Pictures
Release date
  • 9 August 2024
CountryIndia
LanguageMalayalam