Tuesday, September 10, 2024

PECHI (2024) - பேச்சி -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்)

           

      டி வி சீரியல்கள் , திகில் படங்கள் ,பேய்ப்படங்கள் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை , ஆனாலும் சில பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படம் ஒரு நல்ல படம் என்பதை வலியுறுத்தியதால் பார்த்தேன் . 2/8/2024  முதல் திரை  அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம்  16/9/24 முதல் ஒ டி டி  யில் வர இருக்கிறது       


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு முன் கதை - பலவருடங்களுக்கு முன்பு ஒரு சூனியக்காரி  சாகா வரம் வேண்டி சாத்தானை நோக்கி தவம் இருக்கிறாள் . அவள் அந்த வரத்தைப்பெற்று விட்டால் உலகம் நாசம் ஆகி விடும் என்பதால் அந்த  ஊர்  மக்கள் திட்டம் போட்டு  ஒரு பூசாரி உதவியடன் சூனியக்காரி யை  கொலை செய்து விடுகிறார்கள் .அவள் உருவம் போல ஒரு பொம்மை செய்து ஒரு மரத்தில்  ஆணி அடித்து மாட்டி விடுகிறார்கள் .யாராவது அந்த ஆணியை அகற்றினால் சூனியக்கரி உயிர் ;பெறுவாள் . அங்கே  யாரும்  வரக்கூடாது என்பதற்காக  இது தடை செய்யப்பட்ட பகுதி  என போர்டு வைத்து எச்சரிக்கை செய்கிறார்கள் /.உள்ளூர்  மக்கள் யாரும் அங்கே  வருவதில்லை . 


சூனியக்காரி யை  கொலை செய்ய உதவிய  பூசாரியின்  வம்சத்துக்கு  எதிர்காலத்தில்  சாத்தானால் ஆபத்து வந்து விடக்கூடாது என ஒரு மந்திர  தாயத்தை   ரெடி செய்து பூசாரி  தன வாரிசுகளுக்கு தந்து விட்டு இறக்கிறார் .. பல தலைமுறைகளுக்குப்பின்  இப்போது  அந்த தாயத்து கதையின் நாயகன் ஆன கானக  கைடு  இடம் உள்ளது . அவனுக்கு ஒரு மனைவி , ஒரு குழந்தை உண்டு 



5 பேர் கொண்ட  ஒரு குழு ட்ரெக்கிங்க்  மாதிரி  அந்த  ஏரியாவுக்கு வருகிறார்கள் .மூன்று  ஆண்கள் , இரு பெண்கள்  . இதில்  இரு காதல் ஜோடிகள்  அடக்கம் . இவர்கள் மெத்தப் படித்தவர்கள்  என்பதாலும் , பகுத்தறிவுக்கிடங்காகவும் இருப்பதால்  இந்த சூனியக்காரி   கதையை எல்லாம் நம்பவில்லை . நாயகன் ஆன கைடையும் நம்பவில்லை . அவர்கள்  என்ன ஆனார்கள் என்பது  மீதி திரைக்கதை . க்ளைமாக்சில்  யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்டும் உண்டு 

 நாயகன் ஆக  பால சரவணன்  கச்சிதமாக நடித்துள்ளார் .மற்ற ஐவரும் ஆபத்தில் சிக்கும்போது இவர் அடையும் பதட்டம் அபாரம் . சொந்தக்காரங்க கூட அவ்ளோ அக்கறை எடுத்துக்க மாட்டாங்க . இயல்பான, உயிரோட்டமான நடிப்பு .


 முக்கியமான  ரோலில்  நடுவுல கொஞ்ச்ம பக்கத்தைக்காணோம் காயத்ரி . பாராட்ட வைக்கும் நடிப்பு . இவர்கள் போக  ப்ரீத்தி நெடுமாறன் , தேவ் ராம்நாத் , ஜனா , மகேஷ்வரன்  அனைவரும்  கொடுத்த ரோலை சரியாக செய்து இருக்கிறார்கள் . நாயகனின் மனைவியாக ஆதிரை , சூனியக்காரி ஆக  சீனியம்மாள்  இருவரும் கச்சிதம் 


ராஜேஷ் முருகேஷ் இசை ஓகே ரகம் .பின்னணி இசையில் இன்னும் மிரட்டி  இருக்கலாம் .எட்டடிங் அஸ்வின் . 107 நிமிடங்கள்  படம் ஓடுகிறது . ஒளிப்பதிவு பார்த்திபன் .கானகத்தின் அழகைப்படம் பிடிக்கிறது 


வாஸ் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  பி ராமச்சந்திரன் 


சபாஷ்  டைரக்டர்

1   முப்பது நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை  107 நிமிடங்கள் இழுத்த விதம் 


2  சுமாரான  ஒரு படத்தை க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் மூலம் சுவராஸ்யமான படமாக ஆக்கியது 


  ரசித்த  வசனங்கள் 


1   ஹேங்க் ஓவர் என்பது அடிக்கற சரக்குல இல்லை , அடிக்கிற அளவுல  இருக்கு 


2  இந்த  கானகத்துல கூட யாரோ வந்து சரக்கு அடிச்சுட்டு   போய் இருக்காங்க , பாரேன் 


 நம்ம ஆளுங்க நிலவுக்குப்போனாக்கூட அங்கேயும் சரக்கு அடிப்பாங்க 


3 சாதா மனுஷங்களுக்குத்தான் அது சாத்தான், ஆனா சூன்யக்கரிக்கு அதுதான் கடவுள் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டைட்டில் சரி இல்லை .பேச்சி பேச்சீ  நீ பெருமை உள்ள பேச்சி என ராமராஜன் பாடியது தான் நினைவு வருகிறது .கொல்லிமலை அல்லது அரண்மனைக்காடு , அல்லது சூனியக்காரி  என வைத்திருக்கலாம் 


2  சூனியக்காரி கொடுமைக்காரி என்பதை காட்சியாக விளக்கவில்லை . வசனமாக மட்டுமே  வருகிறது . அதனால் அவரைக்கொல்லும்போது நமக்கு பரிதாபம் தான் வருகிறது 


3  நாயகன் கழுத்தில்  போட்டிருக்கும்  தாயத்து  கை  கலப்பில் இன்னொருவர் கழுத்துக்குப்போவது நம்பும்படி இல்லை 

4  அந்த  ஐந்து கேரக்டர்களும்  ஓவர் தெனாவெட்டாகப்பேசிக்கொண்டிருப்பதால் அவர்கள்  மீது ஆடியன்ஸுக்கு  பரிதாபம் வரவில்லை . அதனால் அவர்களுக்கு என்ன ஆகுமோ  என்ற பதைபதைப்பு வரவில்லை . இது பெரிய மைனஸ் 

5  ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒருவர் அசால்ட்டாக  மரத்தின் அருகே  மறந்து வைத்து விட்டு வருவதும் நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - u/a



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மோசமும் இல்லை , பிரமாதமும் இல்லை . பொழுது போகவில்லை எனில் டி வி லபோட்டா பார்க்கலாம் ரகம் . ரேட்டிங்க்  2 / 5 


பேச்சி
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ராமச்சந்திரன் பி
எழுதியவர்ராமச்சந்திரன் பி/வாஸ்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுபார்த்திபன் டிஎஃப்டெக்
திருத்தியதுபற்றவைத்த அஸ்வின்
இசைராஜேஷ் முருகேசன்
உற்பத்தி
நிறுவனங்கள்
வெயிலான் எண்டர்டெயின்மென்ட்
வெரஸ் புரொடக்ஷன்ஸ்
வெளியீட்டு தேதி
  • 2 ஆகஸ்ட் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்