Tuesday, September 03, 2024

வீராயி மக்கள் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா )

                   


     மாயாண்டி  குடும்பத்தார் , முத்துக்கு முத்தாக  போன்ற  படங்கள்  உங்களுக்குப்பிடிக்கும்   என்றால் இந்தப்படமும்  பிடிக்கும் . காமெடி டிராக் இல்லை , ஹீரோ பில்டப்  சீன்கள் இல்லை . கிளாமர்  டான்ஸ் இல்லை . கண்ணியமான  குடும்பக்கதை , பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும் விதத்தில்  உருவாகி இருக்கும் படம் இது . 9/8/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் 9/9/24  முதல்  ஓடிடி யில் வர இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  நண்பன்  கல்யாணப்பத்திரிக்கை  வைக்க  பக்கத்து  ஊருக்குப்போகிறான் ,  கூடத்துணைக்கு  நாயகனை அழைக்கிறான். அங்கே  போனால் நண்பன்  பத்திரிக்கை  வைத்த  இடம்    நாயகனுக்கு  சொந்தம் . அத்தை  முறை  ஆகிறது . அந்த விஷயமே  நாயகனுக்கு  அத்தை  சொல்லி தான்  தெரிகிறது 


 அத்தைக்கு  ஒரு  பெண்  இருக்கிறாள் . 16 வயது  ஆகிறது . நாயகனுக்கு அவளைப்பிடித்து  விடுகிறது . அவளுக்கும்  தான். ஆனால்    நம்  குடும்பமே  பகையால்  பிரிந்து  கிடக்கிறது . நம்  காதல்  கை கூடுமா?  என  சந்தேகம்  கொள்ள  நாயகன்  குடும்பத்தை  ஒன்று சேர்க்க  எடுக்கும்  முயற்சிகள்  தான்  மீதி  திரைக்கதை 


ஃபிளாஸ்பேக்  கதை 


நாயகனின்  பாட்டிக்கு  3 மகன்கள் , ஒரு மகள் .மூத்த  மகன்  தான்  பொறுப்பானவன் . நாயகனின்  அப்பா   மூத்த  மகன் . 2 வது  மகன்  தன்  மனைவியின்  பேச்சைக்கேட்டு  சொத்தைப்பிரிங்க என்று  சொல்லி  தனியாகப்போய் விடுகிறான் . 3  வது  மகன்  யாரோ  ஒரு  பெண்ணுடன்  ஊரை  விட்டு ஓடி விடுகிறான் .   மகளின்  கல்யாணத்திற்குப்போடுவதாக  வாக்களித்தபடி போடமுடியவில்லை .5  பவுன்  ஷார்ட்டேஜ் . அதனால்  மகளின் கணவன்  அனைவரையும் எடுத்தெறிந்து  பேசி விடுகிறான் . இதனால்  குடும்பங்கள்  பிரிந்து  வாழ்கின்றன 


 நாயகன்  ஆக   சுரேஷ்  நந்தா  பாந்தமாக  நடித்திருக்கிறார். அவரது  அத்தை பெண்ணாக  நந்தனா  ஆனந்த்  அழகாக  நடித்திருக்கிறார். தமிழ்  சினிமா வில் இந்த மாதிரி கண்ணியமான  கிராமத்துபெண்  கேரக்டரைப்பார்த்து  மாமாங்கம்  ஆகிறது 


 நாயகனின்  அப்பாவாக    வேல  ராமமூர்த்தி  அட்டகாசமான குணச்சித்திர   நடிப்பை  வழங்கி  இருக்கிறார் , நாயகனை  விட  இவருக்குத்தான்  காட்சிகள்  அதிகம் . நாயகனின்  சித்தப்பாவாக  மறைந்த  நடிகர்  ஜி மாரிமுத்து  பிரமாதப்படுத்தி  இருக்கிறார் . அம்மாவின்  கல்லறையில்  புலம்பும்  காட்சி  உருக்கம் . நாயகனின்  அத்தையாக    தீபா சங்கர்  உணர்ச்சிப்பிழம்பாக  நடித்திருக்கிறார் .  நாயகனின்  பாட்டி  ஆக  வீராயி  கேரக்டரில்  பாண்டி அக்கா  வாழ்ந்திருக்கிறார் 


தீபன்  சக்ரவர்த்தி  இசையில்  3  பாடல்கள்  அருமை . பின்னணி  இசையும்  சிறப்பு முகன் வேல் எடிட்டிங்கில்  படம் 2  மணி  நெரம் 11 நிமிடங்கள்  ஓடுகிறது . எம் சீனிவாசனின்  ஒளிப்பதிவில்  கிராமியக்கதை  கண் முன் அழகாய் விரிகிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  நாகராஜ்  கருப்பையா 



சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின்  அத்தை  மகள்  சந்திப்பு , காதல்  காட்சிகள்  மிக  நேர்த்தி . எல்லோராலும்  கனெக்ட்  பண்ணிக்கக்கூடிய  அமைப்பு 


2   முக்கியமான  பாத்திரங்கள்  மற்றும்  அனைத்துக்கதாபாத்திரங்களை  ஏற்று  நடித்த  அனைவரது நடிப்பும்  அருமை 


3   சமூக  அமைப்பை , கூட்டுக்குடும்ப மகிமையை உணர்த்தும் வசனங்கள் குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   நெஞ்சுக்குள்ளே  உன் பேரை பச்சை குத்தி  வெச்சிருக்கேன் 

2   தெக்கு திசை  நாடு 


3  சண்டாளச்சீமையிலே   சந்திரனைப்பெத்த  மக்கா 


  ரசித்த  வசனங்கள் 

1   கூடப்பிறந்த  பிறப்பு தான்  நம்ம பொழப்பு 

2   இது உங்க ஊர்  இல்லை , வேர் 

3  பத்து ஜென்மங்களா  வாழ்ந்துடப்போறோம். ஒத்தைப்பிறப்பு தானே? 

4  பிள்ளைங்களுக்கு  சொத்து பத்து சேர்த்து வைப்பதை  விட  சொந்தபந்தங்களை   அடையாளம் காட்டி  வளர்க்கனும் 

5  ஒரே  வீட்டில்  பிறந்தோம் , ஒரே  தட்டில்   சாப்பிட்டோம்   ஆனா  ஒண்ணா  வாழாம  விட்டுட்டோம் 

6  கெட்டதுல விட்ட  சொந்தத்தை ஒரு நல்லதுல சேர்க்கனும்   


7  ஒரு காலத்துல   அடித்துக்கொள்வதும் ஒரு காலத்துல  கூடிக்கொள்வதும் தானே  சொந்த பந்தம் ?

8  நிற்கறவரை தான் ஒரு மனுசனுக்கு மரியாதை , அவன் (கிடையில்) விழுந்துட்டா  மதிப்பில்லை 


9   என்  தலைல இருந்த  சுமையை அவன் இறக்கி வைப்பான்னு பார்த்தா  கூட  ஏத்தி வெச்சுட்டானே? 


10  அத்தை மகனைக்கட்டிக்கனும்னு ஆசை எல்லாருக்கும்தான்  இருக்கும், ஆனா  அது நடக்கனுமே? 


11  நாளை  நீ வரும் வழியில் பாலத்துல நிக்கவா? 


 நீங்க பாலத்துல நின்னா  எனக்கென்ன? சேலத்துல நின்னா  எனக்கென்ன? 


12   சொந்த பந்தம்னு கூடி வாழ்வதுதான் வாழ்க்கை  இருப்பதை எல்லாம்  அத்து விட்டுட்டு   இவரு  தனியா  வாழ்ந்து என்ன பண்ணப்போறாரு ? 


13  வயசானவங்க  கட்டைல போற  வரை  கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டாங்க 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தங்கைக்கு  பேசியபடி  பவுன் போடாதது அண்ணனின்  தப்பு தான். ஆனால் தப்பு முழுவதும் தங்கை மேல்  இருப்பது போல  முறைத்துக்கொண்டிருப்பது  எந்த விதத்தில் நியாயம் | 


2   கடைசித்தம்பி  ஊரை விட்டு  ஓடி விட்டான் , லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான் எல்லாம்  ஓக்கே ஆனால் 10  வருடங்களாக  ஒதுங்கி  இருந்த  அண்ணன்  தன்  மகன்  கல்யாணத்துக்காக  தம்பி வர வேண்டும் என  ஆசைப்படுவது  எந்த விதத்தில் நியாயம் ? 


3   மூத்த  மகனுக்கும்  தம்பி  மனைவிக்கும்  ஆகாது . ஆனால்  வெளீயூர்  போன அண்ணன் மணீயார்டரை  தன்  அம்மா பேருக்கு  அனுப்பாமல்  தம்பி மனைவி பேருக்கு  அனுப்புவது  ஏன் ?அதனால் தான் பிரச்சனையே  வருகிறது  


4  சித்தப்பாவின்  உயிரைக்காப்பாற்றிய  நாயகனுக்கு  யாரும்  நன்றி  கூட சொல்லவில்லை 


5  நாயகனுக்கு எருமைக்கடா  மாதிரி  தோற்றம் ,  சுமார் 30 வயது இருக்கலாம் . நாயகிக்கு கதைப்படி  எட்டாம் வகுப்பு நாயகி  3 வருசம் பெயில் ஆகி படிப்பவள்  அதனால் வயசு 8+ 3+ 5 = 16 .  போஸ்கோ  சட்டத்தில்  நாயகனை உள்ளே  தான்  போடனும் 


6  நாயகன்  தன்  அத்தை மகளை  கஷ்டப்பட்டு  ரோட்டில் , களத்து மேட்டில் ஏன் சந்திக்கனும் ? அத்தை  எதிர்க்கவில்லையே? உரிமையாய் வீட்டுக்கே  போய்  இருக்கலாமே ? 


7 குடும்பங்கள்  பிரிவதில்  இருந்த  காரண  காரியங்கள்  அளவுக்கு  சேர்வதில் அழுத்தம் இல்லை . என்ன காரணத்துக்காக  சேர்கிறார்கள்  என்பதில் தெளிவு இல்லை . க்ளைமாக்ஸ்  கிட்டே  வந்தாச்சு  சேர்வோம் என்பது போல இருக்கு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குடும்பத்துடன்  காண   வேண்டிய  நல்ல  படம் .  ரேட்டிங்  3 / 5 


Veerayi Makkal
Directed byNagaraj Karuppaiah
Written byNagaraj Karuppaiah
Produced bySuresh Nandha
Starring
  • Suresh Nandha
  • Nandana Anand
CinematographyM. Seenivasan
Edited byMugan Vel
Music byDeepan Chakravarthy
Production
company
White Screen Films
Release date
  • 9 August 2024
CountryIndia
LanguageTamil