Tuesday, August 06, 2024

ARTIST - ஆர்ட்டிஸ்ட் (2013) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ தந்தி ஒன் ,

       

    சிறந்த இயக்குனர் , சிறந்த  நடிகர் , சிறந்த  நடிகை  என்று கேரளா மாநில அரசின்  மூன்று விருதுகளை வென்ற படம் இது       , பரித்தோஷ   உத்தம் எழுதிய  " ட்ரீம்ஸ்  இன்  த  ப்ரஷ்ஷியன்  ப்ளூ "   என்ற நாவலைத்தழுவி    அமைக்கப்பட்ட  திரைக்கதை இது .இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில்  உருவான படம் 

கமல் + மாதவி  நடிப்பில் உருவான  ராஜபார்வை படத்தின்  பாகம்  2  எனவும் சொல்லலாம்       


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பிரமாதமான ஓவியர் . நாயகி அப்போதுதான் புதுசா ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்திருக்கும்  மாணவி .நாயகனின்  அட்டகாசமான ஓவியத்திறமையைப்பார்த்து  நாயகி அவனை  காதலிக்கிறாள் நாயகனுக்கு நாயகி மேல் பெரிதாகக்காதல் எல்லாம்  இல்லை .அவனது முழு  கவனமும்  ஓவியத்தின் மீது தான் . இருந்தாலும்  நாயகியின் காதலை  ஏற்றுக்கொள்கிறான் 


நாயகன் ஒரு முஸ்லீம் , அப்பா பெரிய தொழில் அதிபர் . அப்பாவின்  தொழிலுக்குத்தன்னை இழுத்து விட்டால்  என்ன  செய்வது ? நம்  கனவு பலிக்காது  என நாயகன் அப்பாவை  விட்ட  விலகியே  இருக்கிறான் 


நாயகி ஒரு இந்து பிராமின் பெற்றோ ரின் எதிர்ப்பை மீறி  நாயகனுடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறாள் . நாயகி தன சிறு சேமிப்பில் இருந்த தொகையை எடுத்து  தனி வீடு வாடகைக்குப்பார்த்து நாயகனுடன் குடியேறுகிறாள் .படிப்பை நிறுத்தி விட்டதால் காலேஜ்க்குப்போகவில்லை . ஆபிஸ்  வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாள் 


காதல் வாழ்க்கை நன்ராகப்போய்க்கொண்டிருந்த நேரம் ஒரு சாலை விபத்தில் நாயகனுக்குக்கண்  பார்வை  பறி போகிறது .இருந்தாலும்  மனம்  தளராமல்  நாயகனுக்கு  உறுதுணையாக நாயகி இருக்கிறாள் 


ஆனால் நாயகன் நாயகியின் தியாகத்தைப்புரிந்து கொள்ளாமல் அவள் மீது எரிந்து விழுகிறான் . இயலாமையை , ஆற்றாமையை நாயகி மீது காட்டுகிறான் 


பார்வை பறி போனாலும்  ஓவியம் வரைந்தே சாதிக்க வேண்டும் என்பதில் நாயகன்  பிடிவாதமாக இருக்கிறான் 



நாயகன் , நாயகி இருவருக்கும் காலேஜ் மேட்டாக இருந்த  வில்லன்   இதுதான் தருணம் என்று நாயகியை அடைய  முயல்கிறான் .இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான்  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பகத் பாசில் அற்புதமான  நடிப்பை வெளிப்படுத்துகிறார் .அவரது இளமையான தோற்றம் கொள்ளை அழகு . பார்வை பறி போன பின் அவர் காட்டும்  எரிச்சல்  அருமை 


நாயகி ஆக ஆன் அகஸ்ட்டின் நாயகனை தூக்கி சாப்பிடும் நடிப்பு . ஒப்பனை இல்லாமல் வசீகரம் காட்டும் ஓவிய  முகம் 


வில்லன்  ஆக  ஸ்ரீ ராம்   ராமச்சந்திரன் செம பர்சனாலிட்டியாக  இருக்கிறார் . நாயகனை விட  வில்லன் தோற்றப்பொலிவில் அசத்துவது அபூர்வம் 


முக்கியமான பாத்திரங்ளாக  மூன்று பேரை மட்டும் வைத்து திரைக்கதை நகர்த்துவது  அருமை 


பிஜிபால்  இசை  அருமை . . ஷாம் தத்  சைமுதீன்  தான் ஒளிப்பதிவு.செம . வினோத் சுகுமாறன்  எடிட்டிஙகில்  படம் 104  நிமிடங்கள் ஓடுகிறது .


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  .இயக்குனர் ஷ்யாம் பிரசாத் 



சபாஷ்  டைரக்டர்

1  லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எல்லாம்  சரிப்படாது ,  பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் தான்  சிறந்தது  என்ற கருத்தை மறை முகமாகச்சொன்ன விதம்  


2  நாயகன்  - நாயகி   இருவரின் அற்புதமான  நடிப்பு , கெமிஸ்ட்ரி 



3 ஆர்ட் பிலிம்  போல திரைக்கதை நகர்ந்தாலும் கமர்ஷியல்  ரசிகர்களும் பார்க்கும்  வண்ணம்  இயக்கிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரு நல்ல ஓவியம் வரைஞ்சவங்கள் உடைய  அனுபவத்தைக்குறிக்கும் .அவங்க ஆசை , அனுபவம் எல்லாமே  அதில் இருக்கும் 


  2  உன்  சந்தோஷத்துக்காகத்தான்  சொல்றோம் 


 தயவு செஞ்சு மத்தவங்க சந்தோஷத்துக்காக  நீங்க பொறுப்பெடுத்துக்காதீங்க , உங்க  பாரம் தான்  அதிகம் ஆகும் 


3  ஒரு ஓவியத்துல ரியாலிஸ்ட்டிக் இருக்கணும்னு அவசியம் இல்லை 


4 நம்மால பின்னால (  கடந்த காலம் ) போய் எதையும் மாற்ற முடியாது


5  வஞ்சசனையோட நிறம் தான்  நீலம், ஏன்னா  அதுதான்  உலகத்தை சுத்தியும் இருக்கு  



 6   தியாகம் செஞ்சவங்களுக்கு   இந்த உலகம் காயத்தைத்தான் ,கொடுக்கும். அதுதான் வாழ்க்கை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின் அப்பாவை ஒரு காடசியில்  கூட  காட்டவில்லை .மகன் விபத்தில் மாட்டி பார்வையை இழந்தான் என்பதே  அவருக்குத்தரியாதா? பணத்துக்காகஜ நாயகி அவ்ளோ கஷ்டப்படும்போது நாயகன் நினைத்தால் அப்பா  மூலம்  உதவி பெற்றிருக்கலாமே? 


2  நாயகியின்  அம்மா, அப்பா  அப்பப்போ    போனில் விசாரிப்பதோடு சரி , மகளை நேரில் வந்து பார்க்க  மாட்டார்களா?


3  வில்லனின்  எண்ணம்  நாயகிக்கு  முதலிலேயே  தெரிந்து விடுகிறது .அப்பவே அவனைக்கட் பண்ணி  இருக்கலாமே? 



4   ரூ  30,000  சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு  நாயகி  சாதா வேலைக்கு ,மாறுவது  நம்பமுடியவில்லை .  நாயகனை  கவனித்துக்கொள்ள   குறைந்த சம்பளத்தில் ஆள் வைத்திருக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எல்லோருக்கும் படம் பிடிக்காது .பொறுமை மிகத்தேவை .பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்  ரேட்டிங்க் 3/ 5 


Artist
Film poster
Directed byShyamaprasad
Written byShyamaprasad
Based onDreams in Prussian Blue
by Paritosh Uttam
Produced byM. Mani
Starring
CinematographyShamdat Sainudeen
Edited byVinod Sukumaran
Music byBijibal
Production
company
Sunitha Productions
Distributed bySunitha Productions
Release date
  • 30 August 2013
CountryIndia
LanguageMalayalam