Saturday, August 03, 2024

மழை பிடிக்காத மனிதன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (மாமூல் மசாலா )

               


        கேப்டன்  விஜயகாந்த்தின்  கடைசிப்படமாக  இது  அமையும்  என  சொல்லப்பட்டதால்  எதிர்பார்ப்புக்கு  உள்ளான  படம், ஆனால் அவர்  நடிக்கவில்லை 


 காத்திருந்த காதல் (1997) முதல்    "காதல் " (  2004)  வரை   15  படங்களில் ஒளிப்பதிவாளராகப்பணியாற்றிய   விஜய் மில்டன் இயக்குநர்   அவதாரம்  எடுத்த  முதல் படம்  அழகாய் இருக்கிறாய் , பயமாய்  இருக்கிறது . (2006)  டைட்டிலைப்போலவே படமும்  கவித்துவமாக  இருந்தது . எட்டு  வருட இடைவெளிக்குப்பின்  கோலிசோடா (2014)  10 எண்றதுக்குள்ள (2015) , கடுகு (2017) ,கோலிசோடா  பாகம் 2  ( 2018)  ஆகிய நான்கு படங்களை  இயக்கியவர்  பைராகி (2022) என்ற கன்னடப்படத்தை  இயக்கிய  பின்  இந்தப்படத்தை  இயக்கி உள்ளார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு அண்டர்கவர் ஏஜெண்ட் . அரசியல்வாதியின் மகனைப்போட்டுத்தள்ளி  விடுகிறார் . அவரைப்பழி வாங்க  அந்த  அரசியல்வாதி  துடித்துக்கொண்டு இருப்பதால்  ஒரு விபத்தில் நாயகன் இறந்தது போல செட்டப்  செய்து நாயகனின்   ஹையர் ஆபிஷர்   நாயகனை அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுகிறார் 


 வந்த இடத்தில்  இன்னொரு வில்லன் . வட்டிக்குக்கடன்  கொடுத்து மக்களைக்கொடுமைப்படுத்துபவன் . நாயகியின் அப்பாவை  வில்லன்  முடித்து விட நாயகன் வெகுண்டு எழுந்து  அவன் கொட்டத்தை அடக்க நாயகன்  உயிருடன் இருக்கும் மேட்டர்  எல்லோருக்கும்  தெரிந்து விடுகிறது . இதற்குப்பின்  என்ன நடக்கும் என்பதை  சின்னக்குழந்தை கூட சொல்லும் 


நாயகன்  ஆக  விஜய் ஆண்டனி.  பாட்ஷா  படம்   இவரை ரொம்ப  பாதித்திருக்கு போல .வழக்கம் போல முகத்தில் நடிப்பு வரவில்லை 


 நாயகி ஆக்  மேகா   ஆகாஷ்  . அழகாக இருக்கிறார் .படத்தில் ஒரே ஆறுதல் அவர் தான் 


 சரத் குமார் , சத்ய ராஜ் இருவரும் வீணடிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் .


சரண்யா  நல்ல குணச்சித்திர  நடிப்பு 


வில்லன் ஆக கன்னட நடிகர் தனஞ்செயா  .பாவம் . 


தலைவாசல் விஜய் குட் ஆக்டிங் 


அச்சு ராஜாமணியுடன் இணைந்து இசை அமைத்து  இருக்கிறார்   விஜய் ஆண்டனி . சுமார் தான் 


அந்தமான் லொக்கேஷனை  ஒளிப்பதிவாளர்  அழகாகப்பயன்படுத்தி இருக்கிறார் 

எடிட்டிங்  அதிகாரப்பூர்வமாக  யாரோ ஆனால் அந்த அபிசயல் ஆக  விஜய் ஆண்டனி தான் போல 



சபாஷ்  டைரக்டர்


  1   இயக்குனர்க்கு நாயகன் மீது என்ன  கோபமோ? காமெடியன் கேரக்ட்டர் மூலம்  கலாய்த்து  இருக்கார் . ஆரம்பத்துல   இருந்தே  ஒரே மாதிரி லுக்தானா? போர்  அடிக்கல?   எனக்கேட்பது போல  நாயகனின் ஒரே மாதிரி நடிப்பை  நக்கல்  அடித்த  விதம் 


2  1985  ல் ரிலீஸ் ஆன காக்கிசட்டை படத்தில் சத்தியராஜ் பேசிய தகடு தகடு டயலாக்கை பிளேடு பிளேடு என  மாற்றிப்பேச வைத்து  டயலாக்  ரைட்டர்   சம்பளத்தை  மிச்சம்  செய்தது 


3    1995ல் ரிலீஸ் ஆன ஆசை  படத்தில்  நாயகி - நாய்   பாண்டிங்கை  சுட்ட விதம்  


4   ஹிஸ்ட்ரீ  ஆப் வாயன்ஸ் படத்துக்கு  அபிசியல்   ரைட்ஸ் வாங்கி லியோ எடுத்தாலும் , பத்துகாசு செலவு  பண்ணாமல் அந்த காபி ஷாப் கான்செப்ட்டை  ஆட்டையைப்போட்ட விதம் 

5   பிளேடு  பைட் கான்செப்ட் புதுசா இருக்கு , சுட்டதோ ஒரிஜினல் ஐடியாவோ நல்லாருக்கு

6  படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்  ஆன ஒரு மேட்டரை ஓப்பனிங்க்ல எதனால் வைத்தார்கள்  என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர்  பதில் அளிக்கும்போது  எனக்கே அது தெரியாது , என் நாலெட்ஜ்க்கு வராமல் யாரோ மாற்றி எடிட் செய்து விட்டார்கள்  என சமாளித்தவிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  அடுத்து என்ன? ன்னு தெரிஞ்சா  வாழ்க்கை ருசிக்குமா? என்ன? 


2  ஒருத்தரைப்பற்றி ஒருத்தர்  தெரிஞ்ச்சுக்கும்  முயற்சியில் தான்  இந்த  உலகமே   இருக்கு 


3   சரியா இருப்பதை விட     நிம்மதியா   இருப்பது  முக்கியம் 


4  என்ன சார் ?  தள்ளிட்டு வர்ற  வண்டிக்கெல்லாம்  பேப்பர்  கேட்கறீங்க? 


 பேப்பர் இல்லைனு தானே வண்டியைத்தள்ளிட்டு  வர்றிங்க? 


5   என்ன? 


 இல்லை , இந்தப்பக்கமா  வந்தேன் 


எதுக்கு? 


 அந்தப்பக்கமாப்போறதுக்கு , ஹிஹி 


6  எல்லாரும் குடிச்சுட்டு  விழுவாங்க , நாம  விழுந்துட்டுக்குடிக்கிறோம் 


7     பர்மா எங்கடா?


 மேப்ல போய் தே டு, இங்கே வந்து கேட்டுட்டு இருக்கே? 


8  உன் பேரு தான் பர்மாவா?உன்  தம்பி பேரு மலேசியாவா? 


9   ஒவ்வொரு சைலன்ஸ் க்குப்பின்னாலும்  ஒரு  சத்தம்   இருக்கும் 


10  இந்த  உலகத்துல  எல்லாமே   நாம  ஆசைப்பட்ட   விதமாவா நடக்குது ?         ஆனா அதுக்காக  நாம  ஆசைப்படாமயா  இருக்கோம்? 


11      நான்  காத்து மாதிரி ,ஒரே இடத்துல  இருக்க  முடியாது , இருக்கவும் கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  சரத் குமார் கேரக்டர்  டிசைனில் ஒரு தெளிவில்லை . ஆரம்பித்த்தில்  இருந்தே நாயகனைக்காப்பாற்றத்துடிப்பவர்  திடீர் என ஹையர்  ஆபிசர்  சொன்னதும் கொல்லத்துடிக்கிறார் 


2  சத்யராஜ்  கேரக்ட்டர்  வலுவாக அமைக்கப் படவில்லை 


3   விஜய் ஆண்டனியி ன் ஆரம்ப காலபபடங்களான நான் , சலீம் , பிச்சைக்காரன்  இவை எல்லாம் கதைக்காக கவனிக்கப்பட்டவை . ஆனால்  தன்னை ரஜினி ஆக  , விஜய் ஆக நினைத்துக்கொண்டு அவர் ஓவர் ஹீரோயிசம்  செய்வது கடுப்பாக இருக்கிறது 


4   நாயகனுக்குப்பிடித்த நாயை வில்லன் சித்ரவதை செய்து மிரட்டுவது எல்லாம்  கேவலமான   ஐடியா 


5  தலையில் பட்ட  காயத்துக்கு வெள்ளைத்துணி பேண்டேஜ் போட்டுக்கொள்ளும் நாயகன் அடுத்த ஷாட்டில் பச்சைத்துணி ஆக  மாறுவது  பார்க்கவில்லை   போல 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இந்தப்படத்துக்குக்கிடைக்க  இருக்கும் மரண அடி விஜய் ஆண்ட்டணியை இது போன்ற மசாலாக்குப்பைகளில்  இனி நடிக்க விடாமல் செய்யட்டும் . டப்பாப்படம்  , ரேட்டிங் 1.5 / 5 .விகடன் மார்க் 34 , குமுதம் ரேங்க்கிங்   சுமார்