Friday, August 02, 2024

NAGENDRAN'S HONEYMOONS (2024) - நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் - மலையாளம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்

               


        ஜெமினி கணேசன் நடிப்பில்  கே  பாலச்சந்தர்  இயக்கத்தில்  உருவான  நான்  அவன்  இல்லை (1974)  ,  அதன்  ரீமேக் ஆன ஜீவன் நடிப்பில்    செல்வா இயக்கத்தில் உருவான  நான்  அவன்  இல்லை (2007) ,  அதன்  தொடர்ச்சியாக நான்  அவன்  இல்லை  பாகம் 2 (2009)   ஆகிய மூன்று  படங்களின்  கதையும் ஒன்று தான் . நாயகன்  அவன்  வாழ்வில்  ஏகப்பட்ட  பெண்களைக்காதலித்து  ஏமாற்றுவதுதான் கதைக்கரு. அதே  கதைக்கருவில்  திரைக்கதை  மட்டும்  கொஞ்சம்  மாற்றமாக  வந்துள்ள  வெப்சீரிஸ்  தான்  இது 


196  நிமிடங்கள்  டைம்  டியூரேசன்  உள்ள  இந்த  வெப் சீரிஸ்  6 எபிசோடுகளாக வந்துள்ளது . ஒவ்வொரு  எபிசோடும்  சராசரியாக  34  நிமிடங்கள், மொத்தம்  மூன்றே  கால் மணி  நேரம் ஒதுக்கினால் ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம் ,டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்  ஓடிடி யில்  தமிழ் டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது  


 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  வேலை  வெட்டி  இல்லாத  தண்டக்கடன் . அம்மா  மட்டும் தான்  வீட்டில் . நாயகனுக்கு   துபாய்  போக  ஆசை, ஆனால்  கை  வசம்  பணம்  இல்லை . அப்போதான்  கூட  இருக்கும் ஒரு  குலக்கொழுந்து  ஒரு  வீணாப்போன  ஐடியா  தருகிறான். பெண்ணைத்திருமணம்  செய்தால்  வரதட்சணை  கிடைக்கும் . அந்தப்பணத்தை  வைத்து  ஃபாரீன்  போகலாம்  என்கிறான் .


 அந்தக்கேவலமான ஐடியாவைப்பின்பற்றி  நாயகன்  வரிசையாக  ஆறு  பெண்களை  ஏமாற்றுகிறான், திருமணம்  செய்கிறான் . க்ளைமாக்சில்  ஒரு  அதிர்ச்சி  காத்திருக்கிறது 


1   ஜானகி -  நாயகனின்  அத்தை  பெண். ஏழை. ஆனால்  அவளைத்திருமணம்  செய்தால்  வரதட்சணை  கிடைக்கும்  என  நம்பி  மணக்கிறான். பின்  அவளை  விட்டுச்செல்கிறான் 


2  லில்லிக்குட்டி - நாயகி மனநிலை  தவறியவள் . 18  ஏக்கர்  சொத்து  உண்டு . திருமணம் ஆனதும் கிடைத்த  பணத்தை  சுருட்டிக்கொண்டு  நாயகன்  எஸ்  ஆகிறான் 


3  லைலா -  ஜூடோ  ரத்னத்தின்  தங்கை  மாதிரி  ஃபைட்  எல்லாம்  போடும்  ஒரு பெண் , சந்தர்ப்ப  சூழலால்  கொலை  செய்கிறாள் . அவளைக்கல்யாணம்  செய்து  ஏமாற்றுகிறான்  நாயகன் 


4  சாவித்திரி  - காலேஜ்  படிக்கும்போது லெக்சரர்  உடன்  காதல்  ஏற்பட்டு  அதனால்  கர்ப்பம்  ஆகும்  நாயகி . காதலன்  விட்டு  விட்டு  ஓடி  விடுவதால்  பெற்றோர்  நாயகனுக்குக்கட்டி  வைக்கின்றனர் 


5   தங்கம் -  நாயகி  ஒரு  விலைமகள் . ஊர்  மக்கள்  எல்லோரும் ஆளுக்குக்கொஞ்சம்  காசு  போட்டு  வரதட்சணை  கொடுத்து  நாயகனுக்குத்திருமணம்  செய்து  வைக்கிறார்கள்  அவளிடம்  இருந்த  பணத்தை  ஆட்டையைபோட்டு  விட்டு நாயகன்  தப்பிக்கிறான் 


6  மொழி -  நாயகி  ஒரு  அப்பாவி . திருமணம்  ஆனதும்  நாயகன்  நாயகியிடம்  தன்னைப்பற்றிய  எல்லா  உண்மைகளையும் கூறி  விடுகிறான் . விடிந்து  பார்த்தால் நாயகி  நாயகனை  ஏமாற்றி  விட்டு  நாயகனிடம்  இருந்த  பணத்தை  எடுத்துக்கொண்டு   நாயகனின்  நண்பனுடன்  ஓடி  விடுகிறாள் . இதுதான்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாம் 


  நாயகன்  ஆக  சுராஜ்  வெஞ்சாரமூடு  நடித்திருக்கிறார். போலீஸ்  ஆஃபிசர்  ஆக ஈகோயிஸ்ட்டாக  பல  கலக்கலான  கேரக்டர்களீல்  பட்டாசைக்கிளப்பிய இவருக்கு  இந்த  ரோல்  அந்த  ரோல்கள்  போல  செட்  ஆகவில்லை ,  இருந்தாலும்  சமாளீக்கிறார் 


நாயகிகளாக  கனி குஸ்ருதி கிரேஸ்  ஆண்ட்டனி ,  ஸ்வேதாமேணன் , ஆல்பி பஞ்சிகரன் , அம்மு அபிராமி ,நிரஞ்சனா அனூப் ஜோயா  ஆகியோர்  நடித்துள்ளனர்,. அனைவருக்கும்  10  நிமிடங்கள் தான்  நடிக்க  வாய்ப்பு  என்றாலும்  அவர்களில்  கிரேஸ்  ஆண்டனி  கலக்கி  இருக்கிறார் .

கலா பவன்  ஷாஜன்  நடிப்பும்  குட் 


 கதை  நடக்கும்  காலகட்டம்  1978  என்பதால்   அந்தக்கால  பாணீயில்  ரஞ்சன் ராஜ்  இசை  அமைத்த  விதம்  அருமை . எஸ்  நிகிலின்  ஒளிப்பதிவு அழகு . எடிட்டிங் மன்சூர். ஒவ்வொரு  எபிசோடும் 20  நிமிடங்கள்  வருவது  போல  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம். 36   என்பது  நீளம் . சரக்கு  இல்லை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  தயாரித்து  இருப்பவர்  நிதின்  ரஞ்சி  பணிக்க ர் 


சபாஷ்  டைரக்டர்


1   2016 ஆம்  ஆண்டு  மம்முட்டி  நடிப்பில்  கசாபா  என்ற  டப்பாப்படத்தை  இயக்கி  இருந்தாலும்  இந்தப்படத்துக்கு   வெற்றி  கிடைக்கும்  என்று  நம்பிக்கை  ஊட்டி  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கிய  சாமார்த்தியம் 


2  ஆறு  நடிகைகளை  நாயகிகள்  ஆக்கி  இருந்தாலும் கிளாமர்  காட்சிகள்  வைக்காமல்  கண்ணீயம்  காத்தது 


3  நாயகன்  எப்படி ஒவ்வொரு  முறையும்  ஐடெண்ட்டியை  மாற்ற  முடியும் ? ஆதார்  கார்டு  காட்டிக்கொடுக்குமே? என்ற  லாஜிக்  மிஸ்டேக்கை  யாரும்  சொல்லி  விடக்கூடாது  என்பதற்காக  கதைக்காலகட்டத்தை  1978  என  சொன்னது 


  ரசித்த  வசனங்கள் 


 1  எனக்கு கல்யாணம்  வேண்டாம், ஒரு  மனுசன் அப்புறம்  நிம்மதியா  இருக்கவே  முடியாது 


2   எதையும்  உயர்வுபடுத்தாம  வீணே  நம்ம  கிட்டே  எதையும் வெச்சிருக்கக்கூடாது 


3   அத்தான் , மரத்தில்  உள்ள  இலைகள்  போல  நாம  பிள்ளை  குட்டி  பெத்துக்கலாம் 


4 தங்கம்  சும்மா  பங்கமா  இருப்பா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஓப்பனிங்  ஷாட்டிலேயே  நாயகன்  இடது கை  விரலால்  பல் துலக்குகிறார்.. இடது கைப்பழக்கம் உள்ள  ஆளும்  இல்லை 


2   நாயகனின் நண்பன்  கள்ளக்காதலி வீட்டில் இருக்கும்போது  செட்டியார் வந்து விடுகிறார். வாசலில்   அந்நியன் செருப்பு  இருப்பதைப்பார்க்கிறார். எந்த  மாங்கா  மடையனாவது  நைட்  டைமில்  கள்ளக்காதலி  வீட்டுக்குப்போகும்போது  வாசலில்  செருப்பை  விட்டுச்செல்வார்களா?  வீட்டுக்குள்ளேயே  செப்பலைப்போட்டுட்டுப்போவதுதானே  சேஃப்டி ? 


3  நாயகனின் நண்பன்   ஒரு  இக்கட்டான  சூழலில்  மாட்டும்போது  நாயகன்  அவனது  உயிரைக்காப்பாற்றுகிறான். உனக்கு  என்ன  வேண்டுமானாலும் கேள், பணம்  வேண்டுமா? எனக்கேட்கும்போது  அதெல்லாம்  வேண்டாம்  என்கிறான். ஆனால்  அடுத்த  நான்காவது  ஷாட்டிலேயே  விசா  எடுக்க  ரூ 16,000  வேண்டும், நான்  யாரிடம்  போய்க்கேட்பேன்  எனப்புலம்புகிறான்  நாயகன். அந்த  நண்பனிடமே  கேட்டிருக்கலாமே? 


4   ரொம்ப  நாளா  மூல  வியாதி  இருக்கு , ஆனா  டாக்டருக்கு  தர  ஃபீஸ்க்குப்பணம் இல்லைனு  நாயகனின் நண்பன்   புலம்பறான் . கேரளாவில் ஜிஹெச்  இருக்கு , ஆயுர்வேதிக்  ஹாஸ்பிடல்  இருக்கு , இலவச  சிகிச்சை தான் , அங்கே  போகலாமே? 


5  நாயகன் வேலை  வெட்டி  இல்லாத  வெட்டித்தண்டம், சொத்தும்  இல்லை . ஆனால்  கிளி  மாதிரி  இருக்கும்  ஜானகியை  எப்படி கட்டித்தர  முன்  வருகிறார்கள் ? இந்தக்காலத்துல  1008  கண்டிசன்ஸ்  போடறாங்க  பெண்  வீட்டார் 


6  நாயகன்  தன்  அம்மா, மனைவி  இருவருக்கும்  தெரியாமல்  வீட்டை விட்டு  ஓடத்திட்டம்  போட்டவர்  நைட்  டைமில்  சூட்கேசுடன்  வெளியே  வருகிறார். ஆல்ரெடி  பகலில்  தன்  நண்பனிடம்  கொடுத்து  வைத்துப்பின்  நைட்டில்  கிளம்புவதுதானே  சேஃப் ? 


7    நான்  அவன்  இல்லை (1974)  ,  நான்  அவன்  இல்லை  ( 2007) நான்  அவன்  இல்லை  பாகம் 2 (2009)   இந்த  மூன்று  படங்களில்  இருந்த  வேகம் , விறுவிறுப்பு   சுவராஸ்யம்  இதில்  இல்லை 

8   லாட்ஜில்  அட்வான்ஸ்  தரனும். இவங்க  பாட்டுக்கு  மிட்  நைட்டில்  காலி  செஞ்சா  வாடகை  மிச்சம்  எனப்பேசுவது  எப்படி ? 


9    தற்கொலை  செய்யும்  பெண்  நாற்காலி  , சேர் ,  டேபிள்  என  எதுவுமே  இல்லாமல்  முயற்சிப்பது  எப்படி ? 


10 போகும்  இடம்  எல்லாம்  ட்ரங்க்  பெட்டியுடன்  நாயகன்  அலைவது ஏன் ? 


11  அப்பப்ப  ஏமாற்றிப்பணம்  சேர்க்கும்  நாயகன்  அதை  வங்கி  அல்லது  போஸ்ட்  ஆஃபீஸ்  சேவிங்க்ஸ் பேங்க்  அக்கவுண்ட்டில்  போடாமல்  தன்  கைவசம்  உள்ள  பெட்டியில்  வைப்பது ஏன் ? 


12  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  மகா  மொக்கை 


13   நாயகனின்  இலக்கு  பணம் தான். 2  வதாகத்திருமணம்  செய்யும்  மனநிலை  சரி இல்லாத  பெண்ணுக்கு 18  ஏக்கர்  நிலம்  உண்டு. அதைப்பொறுமையாக  ஆட்டையைப்போடாமல் நாயகன் அந்தப்பெண்ணை  விட்டு  வருவது ஏனோ? 


14   சிப்பிக்குள்  முத்து ( ஸ்வாதிமுத்யம் ) படத்தில்  மனநிலை  சரி இல்லாத  நாயகனுக்குத்திருமணம்  நடக்கும்போது  முதல்  இரவில்   மனைவி  தான்  முன்னெடுத்து  நடத்துவாள். ஆனால்  இதில்  மனநிலை  சரி  இல்லாத  பெண்  அந்த  விஷயத்தில்  மட்டும்  ஓவர்  விவரமான  ஆளாகக்காட்டி  இருப்பது  எப்படி?  



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நான்  அவன்  இல்லை  படம்  போல்  இருக்கும்  என  ஏமாற  வேண்டாம் . காமெடி  டிராமா  என  ப்ரமோ  செய்திருக்கிறார்கள், ஆனால்  ஏமாற்றம் , காமெடி  எல்லாம்  இல்லை . ரேட்டிங் 2/ 5