Monday, July 08, 2024

ஜோக் 101 (2024) - கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ தந்தி 1 சேனல்

     

     யு டியூப்பில்  இலவசமாகப்படங்கள்    பார்ப்பது போலவே இப்போதைக்கு தினத்தந்தி நாளிதழின்  தந்தி 1 சேனல்  பல மாற்று மொழிப்படங்களின்  தமிழ் டப்பிங்க்  வடிவை இலவசமாகப் பதிவேற்றிக்கொண்டிருக்கிறது .இதில்  நான்  பார்த்த முதல்   படம் இது தான் . 102 நிமிடங்கள் ட்யுரேஷன் என்பதால் குயிக்  வாட்ச் ஆகவே      பார்த்து விடலாம் .7/3/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆன இப்படம் இப்போது தந்தி 1 சேனல் -ல் திரை இடப்படுகிறது               


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின் நண்பனின் தங்கை ஒருவனைக்காதலிக்கிறாள் . காதலனுடன் டூர் போகிறாள் . போன  இடத்தில் ஆள் மிஸ்ஸிங் அவள் காதலனால் 2  மாத  கர்ப்பிணி ஆக   வேறு இருக்கிறாள் . அதனால் காதலன் தான் அவளைப்போட்டுத்தள்ளி இருப்பானோ? என ஒரு டவுட் நாயகன்  - ன் நண்பன் வெளி நாட்டில் இருப்பதால் நண்பனுக்காக  நாயகன்  அந்த மர்மத்தை  துப்பு துலக்க களம்  இறங்குகிறான் 

நண்பனின் தங்கை டூர்  போன இடத்துக்கு நாயகன் வருகிறான் .

நண்பனின் தங்கைக்கு தான் பரிசாகக்கொடுத்த  நெக்லஸை   ஒரு  பெண்  அணிந்து கொண்டு ஸ்கூட்டியில் போவதைப்பார்க்கிறான்  . அந்தப்பெண்ணை பின் தொடர்ந்து  செல்கிறான் . அந்தப்பெண்  தான்   படத்தின்  நாயகி . நாயகன் நாயகி  மீது காதல் வசப்படுகிறான் . நாயகி எஸ்   ஆர் , நோ எதுவும் சொல்லாமல் தனது  பெற்றோரைப்பார்த்துப்பேசச்சொல்கிறாள் 


நாயகன் வந்த வேலையை விட்டு விட்டு தன சொந்த வேலையைப்பார்த்துக்கொண்டிருக்கிறானே என அவன் நண்பனுக்குக் காண்டு .இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை



நாயகன் -நாயகி ஆக விஜய ராகவேந்திரா + தேஜஸ்வினி  நடித்திருக்கிறார்கள் . இதில் நாயகன் வழக்கமான ஆக்சன்  ஹீரோ செய்யும் எல்லா  வேலைகளையும்  செய்கிறான்  


நாயகி ஆக  வரும் தேஜஸ்வினி கொஞ்சம்  கீர்த்தி சுரேஷ் சாயல் , கொஞ்சம்  மீரா  ஜாஸ்மின்  சாயல்  என காக்ட்டெய்ல் தேவதை ஆக வருகிறார் .   அவரது   கண்ணியமான  கிளாமர்    ரசிக்க  வைக்கிறது 

சபாஷ்  டைரக்டர்


1   முதல் பாதி கதை லவ் ஸ்டோரி போல செல்வதால் நேரம் போவதே தெரியவில்லை 


2  ஜோக் அருவி யை பல கேமரா கோணங்களில் காட்டிய விதம் கொள்ளை அழகு 


3 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1     இந்த  அம்மன் ரொம்ப சக்தி உள்ளது . திருமணம் ஆகாத ஜோடி இங்கே வந்தா   திருமணம் ஆகும் , திருமணம் ஆன  ஜோடி இங்கே வந்தா  மீண்டும் ஒரு முறை திருமணம் ஆகும் , 


2    இவன் வாட்ச் மேனா ? எமனோட கீப்போட   பையன்  மாதிரி இருக்கிறான் 


3   பொதுவா டூரிஸ்ட்டா வர்றவங்க ஊருக்குபோய்ச்சேர்ந்தா போதும்னுதான் நினைப்பாங்க , போலீஸ் கிட்டே போக மாட்டாங்க 


4  இந்த ஊரைப்பிடிச்ச முதல் தரித்திரம் இவன் தான்னு சொல்றீங்களே? அப்போ இன்னும் இதே மாதிரி பல தரித்திரங்கள் இங்கே இருக்கா? 


5   என்ன ? விதி இங்கே டபுள்காட் போட்டு   படுத்திருக்கு ? 


6  நீ  சாப்ட்வெர்  தான் , என் அண்டர்வேர் கதை தெரியுமா? 


7  சுவரை உடைக்கும் அளவு உங்க தலை  பலமா  இருக்கலாம்  ,ஆனா  உங்க தலை உடையாம இருக்கணுமே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு குடும்பத்தில்  பாட்டி ,  அம்மா,அப்பா மூவரும் சேர்ந்து  100 கொலைகள் , கொள்ளைகள் செய்து விட்டு அந்த வீட்டுக்கு வாரிசாக இருக்கும் நபர் பார்வைக்கு எதுவுமே தெரியாமல் வாழ முடியுமா? 


2  டூரிஸ்ட் ஸ்பாட்டில் போலீஸ் , பாரஸ்ட் ஆபிசர்ஸ்  யாரும் விசிட்  அடிக்க  மாட்டார்களா? 


3  கொள்ளை அடிக்கும்  நகையை உருக்கி தங்கமாக விற்று  புது டிசைனில் நகை செய்து போடுவது பாதுகாப்பா? அப்படியே  அதே நகையை அணிவது பாதுகாப்பா? 


4   வில்லனின் [பிளாஷ்பேக்  கேவலம் .தன செய்கையை  நியாயப்படுத்த ஒரு சோகக்கதை சொல்வது   கொடுமை 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒளிப்பதிவு , அருவி , நாயகியின்  அழகு  இந்த மூன்றையும் ரசிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5