Saturday, July 06, 2024

ரசவாதி (2024) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ் ஓடிடி

         

i              இயக்குனர் சாந்த குமார் 2011 ஆம் ஆண்டு மவுன குரு  என்ற மாறுபட்ட  ஆக்சன்  த்ரில்லர்  மூவி தந்தவர் .8 வருட இடைவெளிக்குப்பின்  மகா முனி   என்ற  டபுள் ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட்டை   2019ல்    தந்தவர் .அவரது முதல் படம் கமர்ஷியலாக செம ஹிட் .   இரண்டாவது  படம் பலரது பாராட்டுதல்களையும் ,விருதுகளையும்   வென்றது மூன்றாவது  படமாக ஒரு மாறுபட்ட சைக்கோ க்ரைம் ஆக்சன் த்ரில்லர் தந்திருக்கிறார் 


10/5/2024 முதல் திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம்  + ஆஹா தமிழ் ஓடிடி ஆகிய தளங்களில் காணக்கிடைக்கிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்



 வில்லன் சின்ன வயதில் இருந்தே பல  கொடுமைகளைக்கண்முன் கண்டவன் . அப்பா சரி இல்லை .அம்மாவை அவன் கண் முன் அப்பா  கொடுமைப்படுத்துவார் .அம்மாவின் கொடூர மரணத்துக்கு அவனது அப்பாதான் காரணம் . இந்த வடு அவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணி அவனை சைக்கோ ஆக்குகிறது . பெரியவன்  ஆனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறான். அவனுக்குக்கீழ் பணியாற்றும் ஆட்களைக்கொடுமைப்படுத்துகிறான் . இப்படி வில்லனின்   கேரக்டர் டிசைன் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு எக்சிக்யூட் செய்யப்பட்டுள்ளது 



நாயகன் ஒரு சித்த மருத்துவர்  . இயற்கை நல விரும்பி . மிக அமைதியானவர் .நாயகி  ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப்பணி புரிகிறார் . இருவரும் சில சந்திப்புகளில் பரஸ்பரம் விரும்புகிறார்கள் .மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலே வில்லனுக்குப்பிடிக்காது,அதுவும் நாயகன் , நாயகி இருவரும் காதலிப்பது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை . நாயகன் இதற்கு முன் வில்லனைக்கண்டதில்லை . ஆனால் வில்லனுக்கு நாயகனைத்தெரிந்திருக்கிறது .ஒரு பகையும் இருக்கிறது .வில்லனுக்கும், நாயகனுக்கும் இருக்கும்  முன் பகை என்ன? முன் பின்  கண்டிராத வில்லனுக்கு  நாயகன்  எப்படிப்பகையாளி ஆனான்  என்பது  க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


வில்லன் ஆக சுஜித்   சங்கர்  அற்புதமாக நடித்திருக்கிறார் . ஒரு  ரகுவரானோ , பிரகாஷ் ராஜோ  செய்ய   வேண்டிய  ரோல் .   சர்வ சாதாரணமாக இவர் அந்த ரோலில் கலக்கி இருக்கிறார். 


நாயகன் ஆக அர்ஜுன் தாஸ் . மிக அமைதியான ரோலில் படம் முழுக்க வருபவர் பிளாஷ்பேக்கில் ஆக்சன் காட்டுவது   குட்


நாயகி ஆக தான்யா ரவிச்சந்திரன் குடும்பப்பாங்கான தோற்றம் . கண்ணிய உடை அழகு. ஆனால் அவரை தம் அடிப்பவராக , போதைப்பழக்கம் உள்ளபவராக காட்டியது தேவை  அற்றது 



வில்லனின் மனைவி ஆக  ரேஷ் மா வெங்கடேஷ் .பாவமான தோற்றம் . பரிதாபம் வர வைக்கும் நடிப்பு  

சைக்கலாஜிக்கல் டாக்டர் ஆக   ரம்யா   சுப்ரமணியம் கச்சிதம் 

இசை எஸ் தமன் . இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம் .பின்னணி இசை கச்சிதம் .ஒளிப்பதிவை நான்கு பேர் கவனித்து இருக்கிறார்கள் . கொள்ளை அழகு லொகேஷன்கள் .,இயற்கைக்காட்சிகளை  ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் 


விஜே சாபு , ஜோசப் இருவரும் எடிட் செய்து இருக்கிறார்கள் . இரண்டு மணி நேரம் 15  நிமிடங்கள் படம் ஓடுகிறது . பிளாஷ்பேக் காட்சி கொஞ்ச்ம ஸ்பீடு பிரேக்கர் 

கதை , திரைக்கதை எழுதி , இயக்கி தயாரித்து இருப்பவர்  இயக்குனர் சாந்த குமார் 


சபாஷ்  டைரக்டர்


1  இயக்குனர் ஹரி மாதிரி காமெராவை ஆட்டாமல் அமைதியாகக்கதை சொல்லிய பாங்கு 


2  வில்லனின் கேரக்ட்டர் டிசைனை வடிவமைத்த விதம் , அதை எக்சிக்யூட் செய்த விதம்  


3  முதல் பாதி திரைக்கதை சுவராஸ்யம் 


4   வில்லன் வரும் இடங்களில் பகிரும் பீதி ஊட்டும் பிஜிஎம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பாத ரசத்தை  ஏன் அரசன்  என சொல்கிறார்கள் ?  அனைத்து கேரக்ட்டர்களையும்  அரசன் உள் வாங்கிக்கொள்வது போல பாத ரசமும் செயல்படுவதால் 


2  நம்ம வீட்டுப்பெண்கள்  லவ் மேட்டர்ல வீட்ல மாட்டிக்கிட்டா உடனே கல்யாண சம்பந்தம் சொந்தத்துல  பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க 


3   கற்பனை பண்ணின வாழ்க்கைக்கும், வாழும் வாழ்க்கைக்கும்  சம்பந்தம் இல்லை , இருக்காது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1 வில்லன் ஒரு சைக்கோ பேஷண்ட் , அவனுக்கு எப்படி போலீஸ் வேலை கிடைத்தது ? டிபார்ட்மெண்ட்டில் பலரும் அவனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது யாருமே புகார் தர்லையா? 


2  வில்லன் தன  ஹையர் ஆபிசரைக்கோலை  செய்தது யாருக்குமே தெரியாமல் போவது எப்படி? சந்தேகம் கூட வராதது எப்படி ? 


3  திருமனம் ஆகி தன கணவன் வீ ட்டுக்குப்போகும் பெண் தன சூட்கேசில் முன்னாள் காதலனுடன் ஜோடியாக இருக்கும் போட்டோ வைக்கொண்டு போகுமா? 



4  வில்லன் ஒரு சைக்கோ என ஊரே பேசுகிறது , ஆனால் பெண் வீட்டாருக்கு அது தெரியாமல் இருக்கு. விசாரிக்க மாட்டார்களா? 



5 வில்லன் மீது மனைவியைத்தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதியாதது ஏன்? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொமாண்டிக் மூவி ரசிகர்கள் , த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பொறுமை அவசியம் .ரேட்டிங் 2.75 / 5 


Rasavathi
Theatrical release poster
Directed bySanthakumar
Written bySanthakumar
Produced bySanthakumar
StarringArjun Das
Tanya Ravichandran
Reshma Venkatesh
Sujith Shankar
CinematographySaravanan Ilavarasu
Shiva GRN
Edited byV. J. Sabu Joseph
Music byS. Thaman
Production
companies
DNA Mechanic Company
Saraswathi Cine Creations
Distributed bySakthi Film Factory
Release date
  • 10 May 2024
CountryIndia
LanguageTamil