Monday, June 10, 2024

HIT LIST (2024) -ஹிட் லிஸ்ட்- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

                      


இயக்குநர்  கே எஸ்  ரவிக்குமாரின்  சொந்தப்படம் , இயக்குநர்  விக்ரமனின்  மகன்  கதாநாயகன்  ஆக  அறிமுகம்  ஆகும்  படம், போர்  தொழில்  ஹிட்டுக்குப்பின்  புது  ரவுண்ட்  வரும்  ஆர் சரத்  குமார்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  நடிக்கும்  படம் , தரமான  க்ரைம்  த்ரில்லர்  படம்  என  நான்கு  பாசிட்டிவ்  விஷயங்கள்  இருப்பதால்  இப்படத்தைப்பார்க்க  முடிவு  செய்தேன்   

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா,  தங்கை  இருவரையும்  வில்லன்  கடத்தி  வைத்து  நாயகனை  ஒரு  கொலை  செய்யச்சொல்லி மிரட்டுகிறான்., நாயகன் போலீசில்  புகார்  கொடுக்க  போலீஸ்  நாயகனை  கண்காணிக்கிறது 


 வில்லன்  சொன்னபடியெல்லாம்  நாயகன்  செய்கிறான் . முதல்  கட்ட  டாஸ்க்  ஆக   ஒரு  ரவுடியைப்போட்டுத்தள்ளச்சொல்கிறான்  வில்லன், எப்படியாவது  அம்மாவையும், தங்கையையும்  காப்பாற்றினால்  போதும்  என  நாயகனும்  அந்தக்கொலையை  செய்கிறான் 


 அடுத்ததாக  விஷம்  கலந்த  சாப்பாட்டை  நாயகனை  சாப்பிடச்சொல்கிறான். போலீஸ்  அதைத்தடுக்க  முனைகிறது 


 வில்லனின்  ஃபிளாஸ்பேக். வில்லனின்  அக்கா  ஒரு  டாக்டர் ., கொரோனா  கால  கட்டத்தில்  ஆக்சிஜன்  சிலிண்டர்  பற்றாக்குறையால்  பல  உயிர்கள்  மடிகின்றன. அந்த  ஹாஸ்பிடலின்  டீன்  ஆக்சிஜன்  சிலிண்டரை  பிளாக்கில்  விற்று  விடுகிறார். இந்த  மோசடியை  அம்பலப்படுத்த  முயலும்   வில்லனின்  அக்காவை  அந்த  டீன்  டாக்டர்  கொலை  செய்து  விடுகிறார்


 வில்லனுக்கும், நாயகனுக்கும்  என்ன  சம்பந்தம் ?  வில்லன்  ஏன்  இப்படி  எல்லாம்  செய்தான் என்பதை  போலீஸ்  துப்பு  துலக்கிக்கண்டுபிடிப்பதே  மீதித்திரைக்கதை 


 நாயகன்  ஆக   விஜய்  கனிஷ்கா  புதுமுகம்  என்றா    உணர்வே  வராத  வண்ணம்  இயல்பாக  நடித்திருக்கிறார். சேசிங்  காட்சிகள் , பய  உணர்வை  வெளிப்படுத்துவது ம், ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாமே  அருமை 


போலீஸ்  ஆஃபிசர்  ஆக  சரத்  குமார்  அனுபவம்  மிக்க  நடிப்பில்  மிளிர்கிறார் 


நாயகனின்  அம்மாவாக   சித்தாரா ,   வில்லனின் அக்காவாக  ஸ்முரிதி  வெங்கட்   கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 


  டீன்  டாக்டர்  ஆக  கவுதம்  வாசுதேவ்  மேனன்  வில்லத்தனத்தை  வெளிப்படுத்தி  இருக்கிறார் 


 ரவுடி  ஆக  கருடா  ராம், மற்றும்  காமெடிக்கு    ரெடிங்  கிங்க்ஸ்லி  வந்து  செல்கிறார்கள் . காமெடி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


ஜி  சத்யா  வின்  இசையில்  பின்னணி  இசை  நல்ல  விறுவிறுப்பு 


ஜான்  ஆப்ரஹாம்  எடிட்டிங்கில்  பர  பர  என  காட்சிகள்  நகர்கின்றன இரண்டேகால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


 சூர்ய  கதிர்  கே  கார்த்திகேயன்  இயக்கி  இருக்கிறார் 




சபாஷ்  டைரக்டர்


1   அறிமுக  நாயகன்  விஜய்  கனிஷ்காவின் பதட்டமான , இயற்கையான  நடிப்பு , அனுபவம்  மிக்க  சரத்குமாரின்  மிடுக்கான  போலீஸ்  நடிப்பு  இரண்டுமே  பேலன்ஸ்  செய்து    திரைக்கதையை  உயிரோட்டமாக  வைக்க  உதவிய   விதம், 


2  யாரும் யூகிக்க  முடியாத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


3   நாயகன் , வில்லன் , போலீஸ்  ஆஃபீசர்  ஆகிய  கேரக்டர்களுக்கு  பொருத்தமான  நட்சத்திரத்தேர்வு , அவர்களது  அருமையான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1   நாடு  இருக்கும்  நிலைமைல  பணக்காரங்களைக்காப்பாத்தினாத்தான்  அவங்க  மூலமா  நாட்டைக்காப்பாத்த  முடியும் , ஏழைங்களைக்காப்பாத்துனா  உன்னை  மாதிரி  கம்யூனிசம்  தான்  பேச  முடியும் 


2   இன்னொரு  உயிருக்காக  துடிக்கும் ஒரு  உயிர்  தான்     இந்த  உலகத்துலயே  சிறந்தது 


3   நம்ம  மிகப்பெரிய  வியாதி  எது  தெரியுமா? நாம  கஷ்டப்பட்டாலும்  அடுத்தவங்க  யாரும்  சந்தோஷமா  இருக்கக்கூடாது 


4  நாம  செய்யற  கர்மா  பூமாரங்  மாதிரி  நம்மையே  திருப்பித்தாக்கும் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரகசியக்கேமரா  வை கண்காணிப்புக்காக நாயகன்  சர்ட் பட்டன்  பட்டி  மேல்  பதிப்பவர்கள்  யார்  பார்த்தாலும்  அதுதான்  கண்காணிப்புக்கேமரா  என  தெரியும்  விதத்தில்  தான்  பதிக்கிறார்கள் .  வில்லன்  அதை  நோட்  பண்ணுவான்  எனத்தெரியாதா? 


2  நாயகன்  பைக்கை  20  மீட்டர்  தூரம்  விட்டு  ஃபாலோ  பண்ணுங்க  என  சரத்குமார்  ஆர்டர்  போடுகிறார். ஆனால்  2  மீட்டர்  கேப்பில்  ஃபாலோபண்றாங்க , இதை  வில்லன்  நோட்  பண்ண  மாட்டானா ? 


3  நாயகனின்  அம்மா, தங்கையை  மிரட்டும்,  வில்லன்  பப்ளிக்  ப்ளேசில்  அனைவரும்  பார்க்கும்  வண்ணம்  இருக்கும்போதே  முகமூடியுடன்  தான்  இருக்கிறான். பப்ளிக்  யாரும்  எதுவும்  கேட்க  மாட்டார்களா? 


4  நாயகன்  தைரியமாக  தான்  சொன்னபடி  கொலை  செய்வானா? என்பதற்கு  வில்லன்  ஆசிட்  டெஸ்ட்  வைக்கும்  விதமாக  கோழிக்கடைக்குப்போய்  உயிருடன்   ஒரு  கோழியை  வாங்கி  வீட்டுக்குக்கொண்டு  வந்து  வெட்டச்சொல்வது  எல்லாம்,  அவ்ளோ  டீட்டெய்லாக, நீளமாகக்காட்ட  வேண்டிய  அவசியம்  இல்லை . ரொம்ப  கொடூரமான  காட்சி  அமைப்பு 


5  ஜிபிஎஸ்  பொருத்தப்பட்ட  நாயகனின்  ஃபோனை  புத்திசாலித்தனமாக  வில்லன்  ரீப்ளேஸ்  செய்கிறான். நாயகனை  ஃபாலோ  செய்யும்  போலீஸ்  காப்சை  யூஸ்லெஸ்  ஃபெலோஸ், மிஸ்  பண்ணீட்டீங்க  என சரத் குமார்  திட்டுவதில்  என்ன  நியாயம்? அவங்க  என்ன  தப்பு  செஞ்சாங்க ? வில்லன்  இப்படிச்செய்வான்  என  எதிர்பார்த்து  பிளான்  பி  , பிளான்  சி  என  ஆல்ட்டர்  நேட்டிவ்  அரேஞ்ச்மெண்ட்   செய்யாதது   அவங்க  தப்பா? சரத்  குமார்  தப்பு  தானே? 


6  வில்லன்  டீன்   கீழ்  பணியாற்றும்  டாக்டர்  வில்லனிடமே  வில்லனுக்கு  எதிரான  வீடியோ  ஆதாரத்தைக்காட்டுவது  ஏன்? மாட்டிக்குவோம்னு  தெரியாதா? 


7  டாக்டர்  உயிருக்குப்போராடும்  ஒரு  பேஷண்ட்டைக்காப்பாற்ர  வில்லனிடம்  பேசி விட்டு  வெளியே  வரும்போது  ஒரு  நர்ஸ்  வந்து  பேஷண்ட்  டெட்  என்கிறார், டெட் பாடியை  சொந்தக்காரங்க  கொண்டு  போய்ட்டாங்க  என்கிறார். பேசிட்டு  வரும்  5  நிமிசத்துல  எல்லாமே  முடியுமா? ஃபார்மாலிட்டிஸ்  முடியவே அரை  மணி  நேரம்  ஆகும், அதுக்கு  டாக்டர்  சைன்  வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  இல்லை, ஆனால்  வன்முறை  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி  ஸ்லோ , பின்  பாதி  வேகம்,  சராசரி  தரம்  ரேட்டிங் 2.75 / 5 


Hit List
Directed bySoorya Kathir Kakkallar
K Karthikeyan
Produced byK. S. Ravikumar
StarringR. Sarathkumar
Vijay Kanishka
Gautham Vasudev Menon
Edited byJohn Abraham
Music byC. Sathya
Production
company
RK Celluloids
Release date
  • 31 May 2024
CountryIndia
LanguageTamil