Wednesday, June 05, 2024

கருடன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

   

   எதிர்  நீச்சல் (2013) , காக்கி சட்டை ( 2015) , கொடி (2016) ,பட்டாஸ்( 2020)  ஆகிய  படங்களை  சுவராஸ்யமாக  இயக்கிய   ஆர்  எஸ்  செந்தில்  குமார்  விடுதலை  பாகம்  1 ல்   உதவி  திரைக்கதை  ஆசிரியர்  ஆகவும் , செகண்ட்  யூனிட்  டைரக்டர்  ஆகவும்  பணி  ஆற்றினார். அப்படத்தில்  முதன்  முதலாக  நாயகன்  ஆக  நடித்த  புரோட்டா  சூரி  நாயகனாக  நடிக்கும்  இரண்டாவது  படம்  இது . இயக்குநருக்கு  ஐந்தாவது படம்  இது                


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  ஒரு  அரசியல்வாதி . அரசியல்வாதிகள்  என்றாலே  பெரும்பாலும்  வில்லன்கள்  தானே? பத்திரப்பதிவுத்துறை  அமைச்சர்  ஆக  இருக்கும்  வில்லனுக்கு  ஒரு  தகவல்  கிடைக்கிறது . ஊரில்  உள்ள  ஒரு  கோயிலுக்கு  கோடிக்கணக்கான  ரூபாய்  மதிப்புள்ள  நிலம்    இருக்கிறது . இந்த  விஷயம்  ஊர்  மக்களுக்குத்த்நெரியாது . அந்தக்கோயிலுக்கு  ட்ரஸ்ட்டிகளாக  இருவர்  இருக்கிறார்கள் . அவர்களை  மீறி  வில்லனால்  எதுவும்  செய்ய  முடியவில்லை 


 இதனால்  வில்லன்  சதித்திட்டம்  தீட்டுகிறான். இரு  நண்பர்களையும்  பிரித்து  அவர்கள்  இருவரையும்  பகையாளி  ஆக்கி  குளிர்  காய  நினைக்கிறான் 


  நாயகன்  ஒரு  அனாதை . சின்ன  வயதில்  இருந்தே தன்னை  வளர்த்து  வரும்  நபருக்கு  விசுவாசமான  நாய்  போல்  உழைக்கிறான். இரு  நண்பர்களில்  ஒருவன்  தான்  நாயகனின்  முதலாளி. 


ஆரம்பத்தில்  தன்  முதலாளிக்கு  விசுவாசமாக  இருக்கும்  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தன்  முதலாளி  அவரது  நண்பருக்கு  துரோகம்  செய்யும்போதும் , நண்பரைக்கொலை  செய்ய  முயற்சிக்கும்போதும்  என்ன  செய்ய முடிவு  எடுக்கிறார்  என்பதே  மீதித்திரைக்கதை 


 நாயகன்  ஆக  புரோட்டா  சூரி. காமெடியன்  ஆக  இருந்து  நாயகன்  ஆகிய  நபர்களில்  சந்தானத்தையோ , விவேக்கையோ , வடிவேலுவையோ  முழுக்கதாநாயகன்  ஆக  தொடர்ந்து  நம்மால்  ரசிக்க  முடியவில்லை , ஆனால்  சூரி  நடித்த  இரண்டு  படங்களிலுமே  முழுமையாக  அவரை  நாயகன்  ஆக  ரசிக்க  முடிகிறது . இது  சூரிக்குக்கிடைத்த  வெற்றி  +  வரப்பிரசாதம் 


இடைவேளை  ட்விஸ்ட்  காட்சியில்  சூரியின்  நடிப்பு  அசர  வைக்கிறது  எனில்  க்ளைமாக்சில்  கலங்கடிக்கிறது .  திரைக்கதையை  விட  நடிப்பவர்களின்  அதீத  வீச்சால்  ஒரு  படம்  ரசிக்கப்படுவது  அபூர்வமே 


 இரு  நண்பர்களாக  எம்  சசிக்குமார்  , மலையாள  நடிகர்  உன்னி  முகுந்தன் இதில்  எம் சசிக்குமாருக்கு  வழக்கமான  நண்பன்  ரோல் . அசால்ட்  ஆக  நடித்து  இருக்கிறார்.  நாடோடிகள் , சுப்ரமணியபுரம்  படங்களில்  கிடைத்த  அளவுக்கு  இவருக்கு  இதில்  கை  தட்டல்   கிடைக்கவில்லை  என்றாலும்  ரசிக்க  வைக்கிறார். 


உன்னி  முகுந்தன்  கேரக்டர்  டிசைன்   கொஞ்சம்  சிக்கலானது .நம்ப  முடியவில்லை  என்றாலும்  அவர்  நடிப்பில்  குறை  வைக்க  வில்லை 


அமைச்சர்  ஆக  ஆர்  வி உதயகுமார்  அசத்தல்  நடிப்பு . போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக சமுத்திரக்கனி  கச்சிதமான  நடிப்பு 


நாயகன்  சூரிக்கு  இணையாக  ரேவதி  சர்மா  ஆச்சரியமான  அழகுடன் , கண்ணியமாக  நடித்திருக்கிறார். இப்போதெல்லாம்  கதாநாயகிகள்  கண்ணியமான  உடையில்  வருவதே  அரிதாகி  விட்டது 


 வடிவுக்கரசிக்கு  உன்னியின்  பாட்டி  வேடம் . நல்ல  குணச்சித்திர  நடிப்பு 


  எம்  சசிக்குமாருக்கு   மனைவி  ரோலில்  ஷிவதா  கலங்கடிக்கும்  நடிப்பு . உன்னி  முகுந்தனின்  மனைவி  ஆக  வரும்   ரோஷினி  ஹரிப்பிரியனுக்கு  வில்லி  ரோல் . கச்சிதம். வில்லனின்  கையாள்  ஆக  மைம்  கோபி  மிரட்டலான நடிப்பு 


 இசை  யுவன்  சங்கர்  ராஜா . ஆக்சன்  காட்சிகளில்  விறுவிறுப்பான  பிஜிஎம்  போட்டு  அசத்துகிறார்   7  பாடல்களில்  3  தேறுகிறது 


ஒளிப்பதிவு  ஆர்தர்  ஏ  வில்சன். கிராமத்து  அழகைக்கண்  முன்  நிறுத்துகிறார் 


பிரதீப்  இ  ராகவ்  எடிட்டிங்கில்  படம்  இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது \


 இயக்குநர்  வெற்றிமாறன்  எழுதிய  கதைக்கு  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  துரை  எஸ்  செந்தில்  குமார் 




சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  சூரிக்கு  உண்மையை  மறைக்கத்தெரியாது . யாராவது  ஏதாவது  கேட்டால்  உணமையை  உளறி  விடுவார் . படத்தில்  3  இடங்களில்  மூச்சு  விடாமல்  வசனம்  பேசும்  காட்சிகள்  மூன்று  இருக்கிறது .  அப்ளாஸ்  அள்ளும்  காட்சிகள் 


2   இடைவேளை  விடும்  முன்  வரும்  சூரியின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  கலக்கல்  ரகம் 


3  நேரடியாக  கதை  சொல்லாமல்  ஆங்காங்கே  நான்  லீனியர்  கட்டில்  சில  சுவராஸ்யங்களை  கட்  பண்ணி  கட்  பண்ணி  சொன்ன  விதம்


4  நாயகன்  -  நாயகி  காம்பினேஷன்  காட்சிகள்  குறைவு  என்றாலும் மனதுக்கு  நிறைவு 


  ரசித்த  வசனங்கள் 


1  நம்மைச்சுற்றி  இருக்கும் விஷயங்கள்  கெட்டுப்போக  பெரும்பாலும்  3  விஷயங்கள்  தான்  காரணம்   1  மண்  2  பொன்  3  பெண் 


2  கோயில்  நிலத்தை அபகரிச்சா  அம்மன்  கண்ணைக்குத்திடுமா? அம்மனுக்கு  கண்  வெச்சு கும்பாபிஷேகம் பண்றதே  நாம  தான் 


4  போலீஸ்  வேலையை  ஏன்  ரிசைன்  பண்றே?


 சம்  பர்சனல்  பிராப்ளம்  சார்


 மளிகைக்கடை  ஸ்டார்ட்  பண்ணப்போறியா? 


5  ஏம்ப்பா , சாகனும்னு  கிணத்துல  குதிச்ச  அந்தப்பொண்ணே  கொஞ்சமாத்தான்  தண்ணியைக்குடிச்சிருக்கு, காப்பாத்த   கிணத்துல  குதிச்ச   நீ  எம்ப்பா  அம்புட்டுத்தண்ணியைக்குடிச்சே?


 தாகமா  இருந்துச்சு  டாக்டர் 


6  சாதிப்பெருமை  பேசிட்டுத்திரியற  நம்மை  விட  தான்  என்ன  ஜாதின்னே  தெரியாம  வாழும்  சொக்கன்  இதுக்குத்தகுதியானவன் 


7  நீ  இப்போ  சந்தோசமா  இல்லையா?


 நான்  இல்லைன்னு  சொன்னா  எல்ல்லாத்தையும்  மாத்திக்குவேன்னா  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


1  இண்ட்டர்வெல்  பிளாக்  சீன்  ஆக  வரும் சூரியின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  தியேட்டரில்  பலத்த  கரகோஷத்தைப்பெற்றது , செம  மாஸ்  சீன்  என்றாலும்  காந்தாரா  படத்தின்  பாதிப்பு  இருப்பதைத்தவிர்த்திருக்கலாம் 


2  நாயகன்  சூரி  வில்லனின்  அடியாளை  ஒரு  கையையே  வெட்டி  விடுகிறார். ஆனால்  போலீஸ்  கேஸ்  இல்லை , ஜெயில்  இல்லை 


3   எம்  சசிக்குமார்  தனி  ஆளாக  வில்லனை  பார்க்கப்போய்  ஏன்  மாட்டிக்கொள்கிறார் ?


4  வேண்டும்  என்றே  ஓவர்  வயலென்சை  புகுத்தியது  ஏன் ? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வெட்டுதல் , ரத்தம்  தெறிக்கும்  காட்சிகள் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பழக்கமான  பழைய  கதை  தான் , ஆனால்  திரைக்கதை  அமைத்த  விதம்,  பலரது  நடிப்பும்  ரசிக்க  வைக்கிறது. கருடன் = பட்டி டிங்கரிங் அட்லீ வெர்சன் ஆஃப் GARUDA GAMANA RISHABA VAAHANA (2021) - கன்னடம் + சமஸ்தானம் (2002) - தமிழ் . புரோட்டோ சூரிக்கு வெற்றிப்படம். பி , சி செண்ட்டர்களில் பிரமாதமான வெற்றி - விகடன் மார்க் = 44 , குமுதம் ரேங்கிங் = ஓக்கே ரேட்டிங் - 3 / 5 


Garudan
Theatrical release poster
Directed byR. S. Durai Senthilkumar
Screenplay byR. S. Durai Senthilkumar
Story byVetrimaaran[1]
Produced byVetrimaaran
K. Kumar
Starring
CinematographyArthur A. Wilson
Edited byPradeep E. Ragav
Music byYuvan Shankar Raja
Production
companies
Release date
  • 31 May 2024
Running time
135 minutes[2]
CountryIndia
LanguageTamil