ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் காரில் பயணம் செய்து ஒரு கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷனுக்கு வருகிறான் காரில். பெட்ரோல் , டீசல் க்குப்பதிலாக கேஸ் ஃபில்லப் செய்து ஓட்டும் மாடல் அது . ஆனால் அங்கே கேஸ் இருப்பு இல்லை . இன்னும் 10 நிமிடங்கள் கழித்து கேஸ் வருமாம், அதுவரை அட்டாச்டு ரெஸ்டாரண்ட்டில் டீ, காஃபி ஏதாவது சாப்பிடலாம் என வெயிட் செய்கிறான்
ஒரு போலீஸ் காரர் தன் மனைவியை அங்கே டிராப் பண்ணீ விட்டுப்போகிறார். அவர் தான் நாயகி . அந்த ரெஸ்டாரண்ட்டில் சர்வர்.
அப்போது அங்கே ஒரு காரில் இருவர் வருகிறார்கள் . பார்க்கவே முரட்டு ஆட்களாக இருக்கிறார்கள் . அப்போது தான் நியூசில் ஒரு தகவல் சொல்கிறார்கள் , அருகில் உள்ள வங்கியில் பணத்தைக்கொள்ளை அடித்து விட்டு காரில் இருவர் தப்பிச்சென்றார்கள் என்ற செய்தி ஒலிபரப்பாகிறது
நாயகன் நாயகியிடம் நைசாகப்பேச்சுக்கொடுத்து உங்க புருசன் போலீஸ் தானே? அவருக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லுங்கள் . வந்திருக்கும் இருவரும் வங்கிக்கொள்ளையர்களாகத்தான் தெரிகிறது என்கிறான்
அதே சமயம் ஒரு லவ் ஜோடி காரில் அங்கே வந்து சேர்கிறார்கள் . இதற்குப்பின் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் மீதிக்கதை
ஒரே ஒரு ஹோட்டலில் நடக்கும் சம்பவங்கள் . மிக மிக லோ பட்ஜெட். எந்த செலவும் இல்லை . நல்ல ஐடியா
கத்தி வியாபாரியாக , நாயகன் ஆக ஜிம் கம்மிங்க்ஸ் நடித்திருக்கிறார். முதல் பாதியில் அமைதியாக இருந்து விட்டு பின் பாதியில் ஆக்சனில் இறங்கும் கேரக்டர். கச்சிதமாக செய்திருக்கிறார்
நாயகி ஆக , ஹோட்டல் சர்வர் ஆக ஜாக்லின் பிரமாதப்படுத்தி இருக்கிறார்
வில்லன்களாக வருபவர்கள் தோற்ரம் , கெட்டப் , உடல் மொழியால் மிரட்டி இருக்கிறார்கள்
போலீஸ் ஆஃபீசர்களாக வரும் இருவர் நடிப்பும் நல்ல சுறுசுறுப்பு
மிகச்சரியாக 90 நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர்
மாத்யூ காம்ப்ட்டனின் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்துக்குத்தேவையான பணீயைச்செவ்வனே செய்திருக்கிறது . ஒளிப்பதிவும் தரம்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஃபிரான்சிஸ் காலுப்பில்
சபாஷ் டைரக்டர்
1 தேவை இல்லாமல் லொக்கேஷன் சேஞ்ச் , நடிகர்கள் , நடிகைகள் கூட்டம் எதுவும் இல்லாமல் 10 பேர் , ஒரே ஒரு ஹோட்டல் என்று தேர்ந்தெடுத்து திரைக்கதை அமைத்த விதம் . லோ பட்ஜெட்டில் படத்தை முடித்த விதம்
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம், என சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு பேங்க்கில் கொள்ளை அடிப்பவர்கள் அவ்ளோ பணத்துடன் நேராக வீட்டுக்கோ , மறைவான இடத்துக்கோ போய் பணத்தைப்பத்திரப்படுத்தாமல் காரில் டிக்கியில் பணப்பேக்கை வைத்து விட்டு அசால்ட் ஆக ஹோட்டலுக்குள்ளே நுழைவார்களா?
2 நாயகன் ரொம்ப தூரம் காரில் போக வேண்டிய தேவை இருக்கு . பெட்ரோலை காரிலிருந்து கேனுக்கு மாற்றும்போது அருகில் இருந்து கச்சிதமாக அந்த வேலையை செய்யாமல் பெட்ரோலை லீக் செய்து வேஸ்ட் செய்வது ஏன் ? ( அதனாலேயே பாதி வழியில் கார் நிற்கிறது )
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான க்ரைம் த்ரில்லர் , குடும்பத்துடன் பார்க்கலாம், கொஞ்சம் ஸ்லோ மூவி . ரேட்டிங் 3/ 5
The Last Stop in Yuma County | |
---|---|
Directed by | Francis Galluppi |
Written by | Francis Galluppi |
Produced by |
|
Starring |
|
Cinematography | Mac Fisken |
Edited by | Francis Galluppi |
Music by | Matthew Compton |
Production companies | |
Distributed by | Well Go USA Entertainment |
Release dates |
|
Running time | 90 minutes |
Country | United States |
Language | English |
Budget | $1 million[2] |
Box office | $41,520[3][4] |