Saturday, May 18, 2024

சர்வம் தாள மயம் (2019) - தமிழ் - சினிமா விமர்சன,ம் ( மியூசிக்கல் மோட்டிவேஷனல் டிராமா )

   


  கர்நாடக  சங்கீதம், மிருதங்கம்  இவற்றில்  ஏதாவது  ஒன்றை  அடிப்படையாக வைத்துத்திரைக்கதை  அமைக்கப்பட்ட  படங்களான  மிருதங்க  சக்கரவர்த்தி   (1983) , சிந்து  பைரவி (1985) , உன்னால்  முடியும்  தம்பி ( 1988) ஆகிய  மூன்றுமே  வெற்றிப்படங்கள் தான்  என்றாலும்  ஏனோ  இசை சம்பந்தப்பட்ட  அது  மாதிரி  படங்கள்  அதிகம்  வரவில்லை . சங்கரா பரணம் (1979) , சலங்கை  ஒலி ( சாகர சங்கமம்) -1983  இவை  இரண்டிலும்  கர்நாடக  சங்கீதத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்து  எடுக்கப்பட்டாலும்  கதைக்களம்  மாறுபட்டவை . இவை  இரண்டுமே  பிரம்மாண்ட  வெற்றி  பெற்ற  படங்கள் 


ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேணன் சைதன்யா (1991)  என்ற  தெலுங்குப்படத்தில்  ஒளிப்பதிவாளராக  அறிமுகம்  ஆகி  மணிரத்னம்  படங்களான  பம்பாய் (1995) குரு -ஹிந்தி (2007) , கடல் (2013)  போன்ற  படங்களில்  சிறந்த  ஒளிப்பதிவை  வழங்கி  இருந்தார். 1997 ல் இவரது  இயக்கத்தில்  வந்த  முதல்  படமான  மின்சாரக்கனவே  வெற்றி  பெற்ற  படம்..2000 ல்  வெளியான  கண்டு  கொண்டேன் கண்டு  கொண்டேன்  தரமான  காதல்  கதை  என்றாலும் சரியாகப்போகவில்லை. 19  வருடங்கள் கழித்து  அவர்  இயக்கிய  தமிழ்ப்படம்  தான் சர்வம் தாள மயம்.கொஞ்சம்  ரிஸ்க்  ஆன  கதை  தான் . ஆனாலும்  தரமான  மேக்கிங்  மூலம்  வசூல்  ரீதியாகவும்  வெற்றி பெற்ற  படம்  இது இவரது   லதா  மேனன்  தான்  தயாரிப்பாளர் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகனின்  அப்பா  மிருதங்கம்  தயாரித்து  விற்பனை  செய்யும்  தொழிலில்  இருப்பவர். நாயகன்  பிளஸ்  2  பரீட்சை  கூட  ஒழுங்காக  எழுதாமல்  சினிமா , ஊர்  சுற்றல்  என்று  இருப்பவன் . ஒரு  நாள்  பிரபலமான  விதவான்  ஆன  பாலகாட்டு  வேம்பு  ஐயர்  என்பவருக்கு  மத்தளம்  ஒன்றை  டெலிவரி  செய்ய  ஒரு  கச்சேரி  நிகழ்ச்சிக்குப்போகும்  நாயகன்  அங்கே   வேம்பு  ஐயருக்குக்கிடைக்கும்  மரியாதை , புகழ்  போன்றவற்றைக்கண்டு  பிரமித்து  தானும்  அதே  போல்  மிருதங்க  வித்வான்  ஆக  நினைக்கிறார்


வேம்பு  ஐயரிட்மே  தன்  ஆசையைத்தெரிவித்து  தன்னை  சீடனாக  ஏற்றுக்கொள்ளும்படி  வேண்டுகிறார். ஆனால்  பிரமணர்  ஆன  தான்  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தைச்சேர்ந்த  நாயகனுக்கு தொழில்  கற்றுத்தருவதா? என்ற  எண்ணத்தில்  ஆரம்பத்தில்  தவிர்க்கிறார். பிறகு  நாயகனுக்கு  இருக்கும்  இசைப்புலமை , இசை  ஆர்வம்  கண்டு  அவனை  சீடனாக  ஏற்றுக்கொள்கிறார்


வில்லன்  வேம்பு  ஐயரிடம்  சீடன் கம்  உதவியாளராக  இருக்கிறான் . அவனுக்கு  நாயகனைப்பிடிக்கவில்லை. அவனை  மட்டம்  தட்ட  சமயம்  பார்த்து  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  வேம்பு  ஐயர்  நாயகனுக்கு  ஆதரவாகப்பேசி  வில்லனை  வீட்டை  விட்டு , தன்னை  விட்டு  வெளியேற்றி  விடுகிறார்


இதனால  நாயகனை , வேம்பு  ஐயரைபப்பழி  வாங்க  சமயம்  பார்த்துக்காத்திருக்கிறான்  வில்லன்

வில்லனின்  திட்டம்  நிறைவேறியதா? நாயகன்  மிருதங்கம்  கற்று  சாதித்தானா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜி வி  பிரகாஷ்  மிக  கண்ணியமான  கதபாத்திரத்தில்  வருகிறார். நான்  பார்த்தவரை  இவர்  ரவுடி , பொறுக்கி , பொம்பள  பொறுக்கி  போன்ற  மட்ட  ரகமான  கேரக்டர்களில்  தான்  நடித்து  வ்ந்தார் .முதல்  முறையாக   சாதிக்கத்துடிக்கும்  இளைஞன்  கதாபாத்திரத்தில்  அருமையாக  நடித்துள்ளார் . இந்த  கேரக்டருக்காக  ஒரு  வருடம்  நிஜமாலுமே  மிருதங்கம்  கற்றாராம். 


நாயகி  ஆக  அபர்ணா  பாலமுரளி  அழகிய முகம்,  வாட்டசாட்டமான  உடல்  அமைப்பு , பொங்கும் இளமை  என  ஆர்ப்பரிக்கிறார்


 வேம்பு ஐயர்  ஆக  நெடுமுடி  வேணு   வித்யா  கர்வத்தை  வெளிப்படுத்தும்  விதம்  அபாரம். படம்  முழுக்க இவரது  கேரக்டர்  டிசைன்  கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது , அனுபவம்  மிக்க  நடிப்பு 


  நாயகனின்  அப்பாவாக  இளங்கோ  குமாரவேல்  நல்ல  குணச்சித்திர  பாத்திர வடிவமைப்பு .  அருமையான  நடிப்பு 


 வில்லன்  ஆக  வினீத். கச்சிதம் . டி வி  தொகுப்பாளராகவே  வரும்  திவ்ய  தர்ஷினி    அழகு 

ஏ ஆர்    ரஹ்மானின்  இசையில்  ஆறு  பாடல்கள், அவற்றில்  நான்கு  பாடல்கள்  அருமை .  இவரது  இசையில்  வந்த  சங்கமம்  படத்தின்  பாடல்கள்  அளவுக்கு  இல்லை    என்றாலும்  திரைக்கதை  அமைப்பில்  சங்கமம்  ஒரு  டப்பாப்படம் . இது  நல்ல  படம் 


ரவி  யாதவின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  பிரம்மாண்டமாய்  கண்  முன்  விரிகின்றன


அந்தோணியின்  எடிட்டிங்கில்  130  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜீவ் மேனன் 



சபாஷ்  டைரக்டர்


1   தனிப்பட்ட  ஒரு வித்வானின்  வாழ்க்கையை  சொல்லும்  சிந்து  பைரவி  யை  விட  வாழ்வில்  முன்னேறத்துடிக்கும்  ஒரு  மனிதனின்  கதையைச்சொன்ன  விதத்தில்  இது  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  உயர்ந்து  நிற்கிறது 


2    நெடுமுடி  வேணு , இளங்கோ  குமாரவேல் , ஜி வி பிர்காஷ்  மூவரின்  நடிப்பும்  அருமை 


3  ரியாலிட்டி  ஷோக்களில்  நடக்கும்  அரசியல் , டிஆர்  பி  ரேட்டிங்  வெறி  போன்றவற்றைப்படம்  பிடித்துக்காட்டிய  விதம் 


4 க்ளைமாக்ஸ்  போட்டிப்பாட்டில்  ஏ ஆர்  ரஹ்மானின்  டேஸ்ட்க்கு  ஏற்ப  பாடலை  வடிவமைத்த  விதம். கர்நாடக  சங்கீதம்  மட்டுமல்லாமல் உலகில்  உள்ள  பல  தரபப்ட்ட  இசைகளையும் மிக்ஸ்  செய்து  தந்த  விதம்




  ரசித்த  வசனங்கள் 


1  உன்  அம்மாவுக்கு என் மேல  கோபம் இல்லை , என்  தொழில்  மூலம் வர்ற  வருமானம்  மேல  கோபம் 


2  அடி மரத்துல  மிருதங்கம்  செஞ்சா  அது  ரெண்டு  தலைமுறைக்கு  வரும், மேல்  மரத்துல  செஞ்சா  ரெண்டு  வருசத்துக்குக்கூட  வராது 


3   நான்  எந்த  ஃபீல்டுக்குப்போனாலும் நம்ப்ர்  ஒன்னா  இருக்கனும்னு  ஆசைப்படுவேன்


4  மிருதங்கத்துக்கு  மூணு  விதமான  தோல்  தேவை ,ஆட்டுத்தோல் , மாட்டுத்தோல்  எருமைத்தோல், மூணுமே  பெண்  இனமா இருக்கனும்,  அதுவும்  பிரசவிச்ச பின்


5 ஸ்கைப்பா? எந்த  வித்தையா  இருந்தாலும்  குரு  கிட்டே  நேரில்  வந்து  கத்துக்கனும்


6  ''நீ ஒரு வேம்பு ஐயரோட வெற்றியைப் பார்த்துட்டுப் பேசுற, நான் நூறு வாத்தியக்காரனோட வறுமையைப் பார்த்துப் பேசுறேன்''


7  மிருதங்கம்  வாசிப்பதில்  உலகிலேயே  நான்  தான்  நெம்பர்  ஒன்னா  வரனும்


 அது  முடியாது , நான்  தான்  நெம்பர் ஒன்


7 கல்லில்  இருந்து  சிற்பம் வரனும்னா  சிற்பிக்குப்பொறுமை  வேணும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  விஜய்  ரசிகன் , பொறுப்பில்லாதவன் , படிப்பு  வராது  போன்ற  ஓப்பனிங்  காட்சிகள்  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


2  நாயகி  நாயகனை  விட  உயரம்  அதிகம்,  உடல்  வாகும்  அவரை  விட  கூடுதல் . பார்க்க  நாயகனுக்கு  பெரிய,ம்மா  பொண்ணு  போல  அக்கா  போல  இருக்கிறார்


3   நாயகி  நாயகனின்  காதலை  ஆரம்பித்தில்  மறுத்தவர்  பின்  அவரை  ஏற்றுக்கொள்வதில்  வலு  இல்லை 


4   ஒவ்வொரு  மனிதனுக்கு ம்  தன்  அப்பா  தான்  முதல்  ஹீரோ . நாயகன்  தன்  அப்பாவிடமே  மிருதங்கம்  கற்றுக்கொள்ளாமல்  வேறு  யார்  யாரிடமோ  கெஞ்சி  கூத்தாடி  கலை  கற்பது  ஏனோ ? அப்பாவிடமே  கற்று  இருக்கலாமே? 


5  நாயகன்  -  நாயகி  திருமணத்துக்கு  முன்பே  இணையும்  செல்வராகவன்  தனமான  காட்சி  எதுக்கு ? ராஜீவ்மேனன்  படங்களில்  வழக்கமாக  இப்படி  இருக்காதே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கர்நாடக  சங்கீதம்  என்றால்  அலர்ஜி  என்பவர்கள்  கூட  பார்க்கும்படி  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  இருக்கும்  படம் , பார்க்கலாம் . ரேட்டிங்  3 /. 5 


சர்வம் தாள மயம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ராஜீவ் மேனன்
எழுதியவர்ராஜீவ் மேனன்
உற்பத்திலதா மேனன்
நடிக்கிறார்கள்ஜி.வி.பிரகாஷ் குமார்
நெடுமுடி வேணு
அபர்ணா பாலமுரளி
வினீத்
குமரவேல்
ஒளிப்பதிவுரவி யாதவ்
திருத்தியவர்அந்தோணி
இசைஅசல் பாடல்கள்:
ஏ.ஆர்.ரஹ்மான்
ராஜீவ் மேனன் (ஒரு பாடல்)
பின்னணி இசை:
ஏ.ஆர்.ரஹ்மான்
குதுப்-இ-கிருபா
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஜியோ ஸ்டுடியோஸ்
சக்தி திரைப்படத் தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 1 பிப்ரவரி 2019
நேரம் இயங்கும்
130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்