Thursday, May 09, 2024

HI NANNA(2023) - தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


ஹாய்  அப்பா    என்பதுதான்  டைட்டிலுக்கான  அர்த்தம் ..7.12.2023  அன்று  திரை  அரங்குகளில் ரிலீஸ்  ஆன  இப்பட,ம்   பாக்ஸ்  ஆஃபீசில் 76  கோடி  வசூலித்தது. நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  செய்ய  மட்டும்  உரிமைத்தொகை  ஆக  ரூ  37  கோடி  கிடைத்தது.இப்படத்தின்  டைட்டில்  கார்டில்  நேச்சுரல்  ஸ்டார்  நானி  என    பட்டம்  சூட்டப்பட்டது 


நாயகியாக  நடித்த  மிருணாள்  தாக்கூர்க்கு பின்னணிக்குரல்  கொடுத்தவர்  பாடகி  சின்மயி. ஸ்ருதி  கமல்  , நேஹா  சர்மா இதில்  மாடலிங்  கேர்ள்  ஆக  கேமியோ  ரோலில்  வருகிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சிங்கிள்  டாடி . அவருக்கு 6    வயதில்  ஒரு  மகள் . சிஸ்டிக் ஃபிப்ரோசிஸ்  எனும்  வினோத  வியாதி  மகளுக்கு  உண்டு. அதனால்  கண்ணை இமை  காப்பது  போல  நாயகன்  தன்  மகளைப்பார்த்துக்கொள்கிறார். இவர்  ஒரு  ஃபோட்டோகிராஃபர்


  மகள்  அடிக்கடி  தன்  அப்பாவிடம்  தன்  அம்மாவைப்பற்றிக்கேட்கும்போதெல்லாம்  நாயகன்  பிடி  கொடுக்காமல்  நழுவி விடுவார்


ஒரு  நாள்  நாயகி  மகளை  சந்திக்கிறார். இப்போது  இருவரும்  சேர்ந்து  நாயகனிடம்  அம்மா  பற்றி  கதை  கேட்கிறார்கள் . வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  ஃபிளாஸ்பேக்  கதையை  சொல்கிறான் 


நாயகன்  ஃபோட்டோ கிராஃபர்  ஆக  இருக்கும்போது  நாயகியைகண்டதும்  காதல்  கொள்கிறார்.  ஐ  லவ்  யூ  சொல்கிறார். நாயகி  கோடீஸ்வரியின்  மகள் . நாயகியின்  அம்மா, அப்பா  இருவரும்  லவ்  மேரேஜ் , அனால்  அடிக்கடி  சண்டை  போட்டுக்கொள்கிறார்கள் . இதனால் நாயகிக்கு  காதல் , கல்யாணம்  இவற்றில்  எல்லாம்  விருப்பம்  இல்லை 


  ஆனால்  ஒரு  கட்டத்தில்  நாயகி  நாயகனின்  காதலுக்கு  ஓக்கே  சொல்லி  விடுகிறாள் . இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது. பெற்றோரின்  எதிர்ப்பை  மீறி  நாயகி  நாயகனைத்திருமணம்  செய்து  கொள்கிறார். இருவருக்கும்  ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது . ஆனால்  குழந்தைக்கு  அந்த  அபூர்வ  வியாதி  இருப்பதால்  இருவரும்  மனம்  உடைகிறார்கள் 


  நாயகன் , நாயகி  இருவரும்  காரில்  போய்க்கொண்டிருக்கும்போது  ஒரு  விபத்தில்  நாயகிக்கு  தலையில்  அடிபட்டு  பழைய  நினைவுகளை  எல்லாம்  இழந்து  விடுகிறார். அதனால் நாயகியின்  அம்மா  நாயகியைத்தன்னுடன்  அழைத்துசென்று  விடுகிறார் 


 இதில்  கதையை  நிறுத்துகிறார்  நாயகன் 


 இந்தக்கதையைக்கேட்கும்போது  மகள்  அம்மாவாக  நான்  யாரைக்கற்பனை  செய்து  கொள்ள?   எனக்கேட்டு  விட்டு  இதோ  இந்த  நாயகியையே  அம்மாவாக  நினைத்துக்கொள்ளவா? என்கிறாள் 


 அப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட் .  கதை  சொல்லுங்கள்  எனக்கேட்ட  நாயகி  , ஃபிளாஸ்  பேக்  கதையில்  வரும்  நாயகி  இருவரும் ஒருவரே


 இப்போது  நாயகனுக்கு   நாயகி  யார் ? என்பது  தெரியும், ஆனால்  நாயகிக்கு  தான்  நாயகனின்  மனைவி  என்பதோ , மகளின்  அம்மா  என்பதோ  தெரியாது 

 நாயகியின் அம்மா  நாயகிக்கு  வேறு  ஒருவருடன்  திருமணம்  செய்து  வைக்க  ஏற்பாடு  செய்கிறார். இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 

நாயகன்  ஆக  நானி  இரு  வேறு  தோற்றங்களில்  வருகிறார். ஃபிளாஸ்பேக்  காட்சியில்  வரும்  [போது  குறும்புத்தனம் , சுட்டித்தனம் ,  சுறு சுறுப்பு  என  கலக்குபவர்  . அப்பாவாக  வரும்போது  ஹேர்  ஸ்டைல் , உடல்  மொழி  எல்லாவற்றையும்  மாற்றி  முதிர்ச்சியான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். பல  இடங்களில்  பெண்களைக்கவரும்  விதத்தில்  அவரது  நடிப்பு  சிறப்பாக  அமைந்திருக்கிறது


 நாயகி  ஆக  மிருணாள்  தாக்கூர் ., கொள்ளை  கொள்ளும்  அழகு . ஆனால்  அவர்  மூக்குத்தி  போட்டிருப்பது  அவரது  அழகைக்கூட்டவில்லை.கார்ணம்  அவரது   நாசிக்கு  ஏற்ற  மாடல் அது  இல்லை , மாடர்ன்  டிரஸ்  , சேலை  என  எல்லா  உடைகளிலும்  அழகாக  இருக்கிறார். நடிப்பிலும்  குறை  இல்லை 


  மகள்  ஆக  க்யாரா  கன்னா  பிரமாதமான  அழகுடன்  நடித்திருக்கிறார். அள்ளிக்கொள்ளும்  மழலை  அழகு . இந்த  மாதிரி  குழந்தை  வேணும்  என  எல்லோரையும்  ஏங்க  வைக்கும்  அழகு , நடிப்பும்  அருமை 


நாயகியின்  அப்பாவாக  ஜெயராம்  கச்சிதமான  நடிப்பு   நாயகியின்  அம்மாவாக  ஷில்பா  ஊளாஸ்கார்  கிட்டத்தட்ட  வில்லி  ரோல். ஓக்கே  ரகம் 


பிரவீன்  அந்தோனியின்  எடிட்டிங்கில்  155  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. இன்னும்  20  நிமிடங்கள்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


ஹேசாம்  அப்துல்  வகாப்  தான்  இசை . பாடலக்ளனைத்தும்  இனிமை , பின்னணி  இசை  குட் 


சனு  வர்கீஸ்  தான்  ஒளிப்பதிவு , நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஒரு  புரொஃபசனல்  ஃபோட்டோகிராஃபர்  என்பதால் ஒளிப்பதிவாளருக்கு ஓவர்  டைம்  ஒர்க், நன்றாக  செய்திருக்கிறார்


நாகேந்திர  காசி , வம்சி  போவண்ணா  ஆகிய  இருவரும்  இணைந்து  வசனம்  எழுதி  இருக்கிறார்கள்   ஏழு  வசனங்கள்  வானவில்  போல்  மிளிர்கின்றன 


  மேலும்  மூவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கும்  ஷோர்யூவ்  இயக்கியும்  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1    காட்சிகள்  ஒவ்வொன்றும்  ரிச்  ஆக  தெரிய  ஃபோட்டோகிராஃபி  முக்கிய  பங்கு  வகிக்கிறது


2  நாயகன் , நாயகி , மகள்  மூவரின்  கேரக்டர்  டிசைன் ,  நடிப்பு  அனைத்தும்  அருமை 


3  குட்டி  நாயாக  நாயகியிடம்  வளரும்  நாய்  பின் பெரிய  நாய்  ஆன  பின்பு  நாயகியைக்கண்டதும்  ஓடி  வருவது  கொள்ளை  அழகு 


4  தன்  பணக்காரத்திமிரைக்காட்ட  நாயகியின்  அம்மா  ஃபைவ்  ஸ்டார்    ஹோட்டலில்  மூவரும்  சாப்பிட  ஆர்டர்  தந்த  பின்  பில்லை  நாயகனைக்கட்டச்சொன்னதும்  அதை  நாயகன்  டீல்  செய்யும்  விதம் 

5  நாயகன்  , மகள்  இருவருக்குமான  பாண்டிங், குட்டிப்பெண்ணின்  க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் 



  ரசித்த  வசனங்கள் 


1   அவளைப்பார்த்ததும்  முதல்  எடுத்ததும்  ஏன்  ஐ  லவ்  யூ சொன்னே?


அவ  கிட்டேப்பேசும்  முதல்  வார்த்தையே  உண்மையா  இருக்கனும்னு  நினைச்சேன் 


2   என்னோட  தவறான  முடிவால் , தவறான  கல்யாணத்தால்  நானாவது  பங்களாவில்  உட்கார்ந்து  அழுதுட்டு  இருக்கேன் , நீ  நடு  ரோட்ல  நின்னுதான்  அழனும் 


3   நம்  இருவருக்குமிடை யே  உள்ள  தூரத்தை  நீங்க   கிலோ  மீட்டரால்  அளக்கறீங்க .  நான்   காலத்தால்  அளக்கிறேன் . எத்தனை  வருடங்கள்  ஆனாலும்  தூரம்  மாறாது , ஆனால்  காலம்  மாறும்


4   அவங்க  ரெண்டு  பேரும்  ஒண்ணு  சேராம  இருக்க  முடியல , ஆனால்  ஒண்ணு  சேர்ந்தாலும்   ஒண்ணா  இருக்க  முடியல


5    நான்  பழைய  நினைவுகளை  மறந்து  போனாலும்  எனக்கு  வேண்டியவங்க   எப்பவும்  என்  பக்கத்துலயே  இருக்காங்க 


6  உங்களை  விட்டுடுப்போனவங்க  மீது  உங்களுக்கு  ஏன்  இவ்ளோ  காதல் ?


 ஏன்னா  இதுதான்  காதல் 


7    வெட்கத்தை  விட்டு  ஒரு  பெண்  தன்  காதலைச்சொன்னா  இப்படித்தான்  கேரக்டர்  அசாசினேஷன்  பண்றதா? இதனால தான்  பெண்கள்  தன்  காதலைச்சொல்ல  முன்  வருவதே  இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    இந்த  மாதிரி  கிளாசிக்கான  லவ்  ஸ்டோரியில்  நாயகியை  கிளாமராகக்காட்டக்கூடாது   ஆடை  வடிவமைப்பில் கண்ணியம்  தேவை \


2 நாயகி  பெரிய  கோடீஸ்வரி . மீடியாக்களில்    அவர்  முகம்  பிரபலம் . அவரது  திருமண  ஃபோட்டோக்கள்  நிச்சயம்  வந்திருக்கும்.  வில்லனுக்கோ  , அவன்  தம்பிக்கோ  அது  தெரியாமல்  போவது  எப்படி ? 


3  ஆறு  வயதான  மகள்  10ஆம்  வகுப்பு  வரை  படிக்க  வந்துட்டா  என  ஒரு இடத்தில்  டயலாக்  வருது .,


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  லிப்  லாக்  சீன்கள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  ஒரு  ஃபீல்  குட்  லவ்  ஸ்டோரி. பார்க்கலாம்  . ரேட்டிங்  3 / 5 


Hi Nanna
Teaser poster
Directed byShouryuv
Screenplay byShouryuv
Bhanu Dheeraj Rayudu
Vasanth Sameer Pinnamaraju
Story byShouryuv
Dialogues byNagendra Kasi
Vamshi Bommena
Produced byMohan Cherukuri (CVM)
Dr. Vijender Reddy Teegala
Murthy K. S.
Starring
CinematographySanu Varghese
Edited byPraveen Anthony
Music byHesham Abdul Wahab
Production
company
Vyra Entertainments
Release date
  • 7 December 2023
Running time
155 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest.₹76 crore[2]