Wednesday, April 17, 2024

J BABY (2024) - ஜெ பேபி - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா) @ அமேசான் பிரைம்

           


தமிழ்  சினிமாவில்  குடும்பப்பாங்கான  படங்களை  எல்லாம்  இப்போது  பார்க்க  முடிவதில்லை . ஒரு  காலத்தில்  விசு  ,  வி  சேகர்  போன்ற  இயக்குநர்கள்  தரமான  குடும்பப்படங்களை  இயக்கினார்கள் , மாஸ்  மசாலா  ஆக்சன்  ஹீரோக்கள்  தங்கள்  சம்பளத்தை  உயர்த்த  ஆக்சன்  குப்பைகளில்  நடித்தால்  தான்  நல்லது  என்ற  பொது நல  நோக்கில்  வன்முறை  மசாலாக்களில்  கலந்து  விட்டதால்  அத்தி  பூத்தாற் போல  குடும்பப்படங்கள்  எப்போதாவதுதான்  வருகின்றன. 


  ஊர்வசி , லொள்ளு  சபா  மாறன் ,  அட்டக்கத்தி  தினேஷ்  ஆகிய  திறமைசாலிகளின்   மாறுபட்ட  நடிப்பைக்காண  இப்படத்தை  அவசியம்  பார்க்கலாம் ,  8/3/2024  அன்று  திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது 8/4/24  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 


இது  உண்மையில்  நடந்த  சம்பவம் என்பது  ஒரு  சிறப்பம்சம்.  இந்த  சம்பவத்தில்  வெளீயூரில்  அம்மாவைக்கண்டு  பிடிக்க  வரும்    மகன்களுக்கு  அடைக்கலம்  கொடுத்த   ஓய்வு  பெற்ற  ராணுவ  வீரரை   அதே  கேரக்டரில்  நடிக்க  வைத்து  ரீ  கிரியேட்  செய்தது  ஒரு  சிறப்பு  நிகழ்வு 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்கு 3  மகன்கள் , இரு  மகள்கள் . முதல்  மகனுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகிறது . திருமணத்துக்கு  முந்தின  நாள் மணப்பெண்  வேறு  ஒருவனுடன்  ஓடி  விடுவதால்  திருமணம்  நிற்கிறது . மாப்பிள்ளை  வீட்டார் , பெண்  வீட்டார்  இரு  தரப்புக்கும்  தகறாரு .  ஓடிப்போன பெண்ணுக்கு  ஒரு  தங்கை  உண்டு .


 த்ரிஷா  இல்லைன்னா  நயன் தாரா  ஃபார்முலா  படி அக்கா  தானே ஓடிப்போச்சு  தங்கையையாவது  கட்டி  வைங்க  எனக்கேட்டதில்  தகறாரு. இந்த  சம்பவம்  நடந்து  சில மாதங்களுக்குப்பின்  அண்ணனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  ஆகி  விடுகிறது . அண்ணன்   மேரேஜில்  ஓடிப்போன  மணப்பெண்ணின்  தங்கையை    நாயகியின்  இரண்டாவது மகன் காதல்  திருமண்ம்  பண்ணி  வீட்டுக்குக்கூட்டி வர  மீண்டும்  தகறாரு .   இப்போது  அண்ணன்  -  தம்பி  இருவரும் பேசிக்கொள்வதில்லை 


இதனால்  மனம்  உடைந்த  நாயகிக்கு  மன  நல  பாதிப்பு  உருவாகிறது . 5  வாரிசுகள்  இருந்தும்  அவருக்கு  மன  நிம்மதி  இல்லை . அம்மாவை  மகன்கள்  ஒரு  மன நல  மருத்துவமனையில்  சேர்க்கிறார்கள் 


மேலே  சொன்னவை  எல்லாம் ஃபிளாஸ்பேக்

அங்கிருந்து  அவர்  தப்பி  1700  கிமீ  அப்பால்  கல்கத்தாவுக்கு  ரயிலில்  சென்று  விடுகிறார். கல்கத்தா  போலீஸ்  தகவல்  கொடுத்து  இரு  மக்னகளை  அங்கே  வரவழைக்கின்றனர். இரு  மக்னகளின்  பயணம் ,  அம்மா,  மகன்கள்  சந்திப்பு  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக  ஊர்வசி  கலக்கி  இருக்கிறார். இவர்  நடித்த  படங்களில் நடிப்பில்  உச்சம்  தொட்ட  படங்கள்  முந்தானை  முடிச்சு , மகளிர் மட்டும் ,  மைக்கேல்  மதனகாமராஜன். வரிசையில்  நான்காவதாக  இதை  சேர்க்கலாம்,.


மனநிலை  பாதிக்கப்பட்டவராக  நடிக்கும்போதும்  சரி , தனது  மகனகளை  விட்டுக்கொடுக்காமல்  கோர்ட்டில்  ஜட்ஜையே  திட்டும்போதும்  சரி   அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


 லொள்ளு  சபா  மாறன்  வழக்கமாக  காமெடி  ரோல்களில்  வருபவர்  இதில்  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார். அந்தக்கால   வாகை சந்திரசேகர்  பாணியில்  இவரது  நடிப்பு  மனம்  கவர்கிறது. இவ்வளவு  அழுத்தமான , சோகமான  ரோலில்  கூட  அவரது  அக்மார்க்  பிராண்ட்  ஆன  காமெடி  ஒன்  லைன் கவுண்ட்டர்களை  அவர்  விடவில்லை 


  அட்டக்கத்தி  தினேஷ்க்கும்  அழுத்தமான  கதாபாத்திரம்  தான் . ஆனால்  ஆள்  அவ்ளோ  ஸ்மார்ட்  ஆக  முதலில்  இருந்தவர்  இப்போது  ஓவர்  வெயிட்  போட்டு  விட்டார் . பல  இடங்களில்  கண்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


  மிலிட்ரி  வீரர்  ஆக  வருபவர்  யதார்த்தமான  நடிப்பு . மற்றும்  படத்தில்  பங்கேற்ற  அனைவருமே  சிரப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்கள் 


 டோனி  பிரிட்டோவின்  இசையில்  ஐந்து  பாடல்கள் , அவற்றில்  இரு  பாடல்கள்  மனம்  உருக வைக்கின்றன, பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


ஜெயந்த்  சேது  மாதவன்  ஒளிப்பதிவு  தரம்  சண்முகம்  வேலுசாமி  எடிட்டிங்கில்  படம்  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடுகிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் அறிமுக  இயக்குநர்  சுரேஷ்  மாரி . உண்மை  சம்பவத்தை  தழுவி  திரைக்கதை  எழுதியதால்  மனதுக்கு  நெருக்கமாக  அமைகிறது  


சபாஷ்  டைரக்டர்


1   ஒரு  கட்டத்தில்  மகனான  தினேஷ்  அம்மாவான  ஊர்வசியை  பலர்  முன்னிலையில் அடிப்பதும்  பின்  அதை  நெஇனைத்து  கதறி  அழுவதும்   உருக்கமான  காட்சி 


2  அடி  வாங்கிய  ஊர்வசி அடுத்த  காட்சியிலேயே  தினேஷ்  வீட்டுக்கு  வந்து  பசிக்குது , சோறு  போடு  எனக்கேட்டு  சாப்பிடும்போது-+ மகனுக்கு  ஊட்டி  விடுவதும்  குற்ற  உணர்ச்சியில்  தினேஷ்  வெடித்து  அழுவதும்  கல்  நெஞ்சையும்  கரைக்கும்  காட்சி 


3  லொள்ளு  சபா  மாறன்  குடி  போதையில்  இரவில்  உளறுவது  ஒரு  குடிகாரனையே  நேரில்  பார்ப்பது  போல  அவ்ளோ  யதார்த்தம் 


4   மிலிட்ரி  வீரரின்  கேரக்டர்  டிசைன் , அவரது  நடிப்பு  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   இந்த  ரயிலுக்கு  அவுரா  என  பேரு  வெச்சதுக்குப்பதிலா  நகர்றா ( நவுர்றா)   என  பேரு  வெச்சிருக்கலாம்,  எவ்ளோ  கூட்டம் ? 


2  நமக்கு  ஒண்ணு  கிடைக்காம  போனா  அதை  விட  நல்லதா  நமக்குக்கிடைக்கப்போகுதுனு  எடுத்துக்கனும் 


3  வெல்லம்  விற்கப்போனா  மழை  பெய்யுது , பொரி  விற்கப்போனா  காத்து  அடிக்குது , என்ன  செய்ய ?


 ஏன் ? ரெண்டையும்  கலநது  பொரி  உருண்டை  விற்கப்போவதுதானே? 


4  அண்டா  பிரியாணின்னா  அண்டாவில்  செஞ்ச  பிரியாணினு  நினைச்சேன், அண்டா-ன்னா  ஹிந்தில  முட்டையாம் 


5  ஹலோ , சார் ,  நீங்க  சொன்ன்படி  நாங்க  ரயில்வே  ஸ்டேஷன்  வந்துட்டோம் \\


 சரி  அப்படியே  திரும்பிப்போங்க 


 என்ன  சார்? 1700  கிமீ  ட்ராவல் பண்ணி  வந்திருக்கோம் , திரும்பிப்போகச்சொல்றீங்க ?\

\


 அட. ஊருக்கு  திரும்பிப்போகச்சொல்லலை . ஸ்டேஷனுக்குப்பின்னால  போங்கன்னேன் 


6  என்னது  ? பெரக்பூரா?  பான் பராக்  மாதிரி  இருக்கு 


7  இது  லேடீஸ்  ஹாஸ்டல். ஆண்கள்  அனுமதி  இல்லை 


 அப்போ  செக்யூரிட்டிஸ்  எல்லாம் ஆம்பளைங்க  இல்லையா? 


8  சிக்கன்  பிரியாணி ?


  ஆலு  பிரியாணி  (  உருளைக்கிழங்கு  பிரியாணி) 

  ஆமா, நாங்க  ரெண்டு  பேர் , ஆளுக்கு  ஒரு  பிரியாணி


9  அண்ணன்  தம்பி  உறவு  கிடைக்காது , கிடைச்சா  நல்லா  வாழ்ந்துடனும் . எனக்கெல்லாம்  கிடைச்சும்  ஒண்ணா  வாழ  முடியலை.  நீங்க  ஒண்ணா  இருந்தும்  பிரிஞ்சு  வாழ்றீங்க ? 


10  இந்தப்பணம் , ஈகோ   இதுக்கெல்லாம்  உறவை  இழந்துடக்கூடாது 


11  ஒரே  ஒரு  வாழ்க்கை . இந்த  மனுஷங்க  குணம்  எந்த  அளவுக்கு  மோசமானதோ  அந்த  அளவுக்கு  நல்லதும்  செய்யும் 


12  குடும்பத்தலைவிக்கு  ஒரு  பிரச்சனை  வந்தா  யாராவது  ஒருவர்  குடும்பப்பொறுப்பை  ஏத்துக்கனும்


13    சர்க்கரை  , வியாதி ,  இரத்த  அழுத்தம்  மாதிரி  தான்  மன  நிலை  பாதிக்கப்படுவதும் ஒரு  வியாதி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பீடி  குடிக்கும்  பழக்கம்  உள்ள  மாறன்  36  மணி  நேரப்பயணமாக  ரயிலில்  போகும்போது  10  கட்டு  பீடி  வாங்கி  ஸ்டாக்  வைத்துக்கொள்ள  மாட்டாரா?  ஓடும்  ரயிலில்  பீடி  கிடைக்குமா?  என  ஏன்  அலையனும் ? 

2  மன  நிலை  பாதஇக்கபப்ட்ட  ஊர்வசி  ஹாஸ்பிடலில்  கழிக்கும்  நாட்களில்  ஒரு  நாடகத்தன்மை.  ஆரோரோ  ஆரிராரோ , மனசுக்குள்  மத்தாப்பூ  ஆகிய படங்களை  இயக்குநர்  ரெஃப்ரென்சாக  எடுத்து  இன்னும்  காட்சிகளில்  மெருகேற்றி  இருக்கலாம். குறிப்பாக  .  ஆரோரோ  ஆரிராரோ   தமிழ்  சினிமாவில்  மனநிலை  பாதிக்கப்பட்டவர்களை  வைத்து  கெரெ பாக்யராஜ்  பிரமாதமாக  திரைகக்தை  எழுதிய  படம் 


3  மனநிலை  பாதிக்கப்பட்டவர்  என்ற  ஒரே  காரணத்துக்காக  ஊர்வசி  கோர்ட்டில்  ஜட்ஜ் , போலீஸ்  அஃபீசர்  என  எல்லோரையும்  கண்டபடி  பேசுவது   டியாலிட்டி  இல்லை 


4  திரைக்கதையில்  நான்  லீனியர்  கட்  எனப்படும்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளை  ஆங்காங்கே  தெளிப்பது  ஃபேமிலி  டிராமாக்களில்  தேவை  இல்லை .  க்ரைம்  த்ரில்லர்  கதைகளுக்கு  தான்  செட்  ஆகும். ஒரு  அம்மாவைத்தேடி  மகன்கள்  கிளம்பும்போது  அவர்களுக்கு  இடையேயான  பாண்டிங்  நமக்குத்தெரிந்திருக்க  வேண்டும்




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அம்மா , அப்பா  வை   அவர்கள்  இருக்கும்  காலத்தில் கவனிக்காமல்  அவர்கள்  இறந்த  பின்  வருத்தப்படும்  அனைவரையும்  இப்படம்  கவரும் . குறிப்பாக  பெண்களைக்கரைய  வைக்கும். அருமையான  குடும்பப்படம் . ரேட்டிங்க் 3.5 / 5


J Baby
Theatrical release poster
Directed bySuresh Mari
Written bySuresh Mari
Produced byPa. Ranjith
Abhayanand Singh
Piiyush Singh
Sourabh Gupta
Aditi Anand
Ashwini Chaudhari
StarringUrvashi
Attakathi Dinesh
Lollu Sabha Maaran
CinematographyJayanth Sethu Mathavan
Edited byShanmugam Velusamy
Music byTony Britto
Production
companies
Vistas Media
Neelam Productions
Neelam Studios
Distributed bySakthi Film Factory
Release date
  • 8 March 2024
CountryIndia
LanguageTami