ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் கிரிமினல்களின் செல் ஃபோன் , லேப் டாப் இவற்ரை ஹேக் செய்து தகவல்களை சேகரிப்பதில் நிபுணி . . திருமணம் ஆகாதவர் . அப்பாவுடன் வசித்து வருகிறார். அப்பா ரிட்டையர் ஆன வக்கீல்
வில்லன்கள் மூன்று பேர். இவர்கள் கடத்தல், திருட்டு என எல்லா பொறுக்கித்தனங்களையும் செய்பவர்கள் .வில்லன்களுக்கும் நாயகிக்கும் அறீமுகமே இல்லை . எதேச்சையாக வில்லன்களில் ஒருவன் நாயகிக்கு ஃபோன் போட்டு தவறாகப்பேசுகிறான். நாயகி ஃபோனைக்கட் பண்ணி அந்த எண்ணை பிளாக் செய்கிறாள் . ஆனால் வில்லன் ஏகப்பட்ட சிம் கார்டு வைத்திருப்பதால் தொடர்ந்து தொல்லை தருகிறான்
நாயகி போலீசில் புகார் தருகிறாள் . சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் வில்லன்கள் மூவரையும் போலீஸ் பிடித்து எச்சரித்து அனுப்புகிறது . இதனால் கடுப்பான வில்லன்கள் நாயகிக்கு , நாயகியின் அப்பாவுக்கு தொடர் தொல்லைகள் தருகிறார்கள்
நாயகி வில்லன்களின் செல் ஃபோனை ஹேக் பண்ணி அவர்கள் இல்லீகலாக செய்யும் கடத்தல் தொழிலை போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி மாட்டி விடுகிறாள் . உடனே வில்லன்கள் நாயகியைக்கடத்தி விடுகிறார்கள் . நாயகிக்கு ஃபைட் தெரியாது . நாயகனும் படத்தில் இல்லை . நாயகி எப்படி சாமார்த்தியமாக தப்பிக்கிறாள் என்பதே மீதி திரைக்கதை
நாயகி ஆக ராஜிஷா விஜயன் பிரமாதமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நாயகிக்கு கண்னாடி போட்டு அழகு பார்த்தவர் கே பாக்யராஜ் தான் இது நம்ம ஆளு சோபனா , சுந்தர காண்டம் சிந்துஜா என நீளும் பட்டியல்கள்
இதில் கண்னாடி அணீந்த நாயகி புத்திசாலியின் உருவமாகக்காட்டப்படுவது சிறப்பு . சிரித்த முகம் , குண்டுக்கன்னங்கள் என இவரது பிளஸ் பாயிண்ட்ஸ் நீள்கிறது
நாயகியின் அப்பாவாக - சீனிவாசன். சிறந்த குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்.
வீணாப்போன வில்லன்களாக வரும் மூவருமே சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
106 நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார் கிறிஸ்டிசெபாஸ்டியன் ராகேஷ் சரணின் ஒளிப்பதிவு சிறப்பு
சித்தார்த்தா பிரதீப் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்குத்தேவையான வேகத்தைத்தருகிறது
ராகுல் ரிஜி நாயர் இயக்கி தயாரித்து இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 சைபர் க்ரைம் ல ஒர்க் பண்ணு,ம் நாயகி தன் அப்பா அறிமுகப்படுத்திய ஆளிடம் 5 நிமிடம் பேச்சுக்கொடுத்தே அவர் வாயிலிருந்தே பாஸ்வோர்டைக்கண்டுபிடிக்கும் காட்சி
2 நாயகிக்கு ஒரு காதலன் , ஒரு டூயட் என டெம்ப்ளேட்டாக யோசிக்காமல் புதுமையாக திரைக்கதை அமைத்த பாணி
3 நாயகி வில்லன்களிம் ஃபோனை ஹேக் பண்ணி செய்யும் தில்லாலங்கடி வேலைகள் ரசிக்க வைக்கின்றன
\
4 வில்லனின் மனைவி ஓடிப்போய் விட்டாள் என எல்லோரும்ம் கிண்டல் பண்ணும்போது ஆந்த பாயிண்ட்டை வைத்து நாயகி சைக்கலாஜிக்கலாக வில்லனை பலவீனப்படுத்தப்பார்க்க என் மனைவியைப்போட்டுத்தள்ளியதே நான் தான் என வில்லன் சொல்லும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 நான் அங்கே வந்து சேரும் முன் எனக்கு வந்து சேர வேண்டியது வந்தி
ருக்கனும்
2 இப்பவெல்லாம் பெரும்பாலான ஆட்கள் பாஸ்வோர்டாக 1234 அல்லது PASSWORD என்பதைத்தான் பாஸ்வோர்டாக வைத்திருக்கிறார்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனின் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் செல் ஃபோனை நாயகி அலேக் செய்யும் காட்சி நம்பும்படி இல்லை \
2 நாயகி மீது ஆசைப்படும் வில்லன்கள் மூவருமே நாயகியைக்கடத்தி பல நாட்களாக சும்மாவே கட்டி வைத்திருந்தனர் என சொல்வதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
3 கோடி ரூபாய் கொடுத்தாலும் போலீஸ் ஆஃபிசரின் மனைவி செல் ஃபோனை ஹேக் செய்து அவருக்கு கள்ளக்காதலன் இருக்கிறானா? என செக் செய்ய மாட்டேன் என நாயகி வீராப்பு பேசுவதும் ஓவர் ஹீரோயினியிசம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான க்ரைம் த்ரில்லர் . குயிக் வாட்ச் ஆகவே பார்க்கலாம். ரேட்டிங் 3 / 5
Keedam | |
---|---|
Directed by | Rahul Riji Nair |
Produced by | Rahul Riji Nair Sujith Warrier Lijo Joseph Ranjan |
Starring | |
Cinematography | Rakesh Dharan |
Edited by | Christy Sebastian |
Music by | Sidhartha Pradeep |
Production companies | First Print Studios Fairy Frames Productions |
Distributed by | Capital Studioz |
Release date |
|
Running time | 106 minutes |
Country | India |
Language | Malayalam |