Tuesday, April 02, 2024

ஜோஷ்வா-இமை போல் காக்க (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர் ) @அமேசான் பிரைம்

      


  இளைய  தளபதி  விஜய்  நடிக்க யோஹன்  அத்தியாயம்  1  படத்தின்  கதை  தான்  இது  என்று  சொல்லப்பட்டாலும்  இயக்குநர்  கவுதம்  இதை  மறுத்திருக்கிறார்.இப்படத்துக்கு  முதலில்  சூர்யாவைத்தான்  அணுகினார்கள்  என்றாலும்  சூர்யா  ஆல்ரெடி  தான்  நடித்த  காப்பான்  (2019)  படத்தின்  கதை  சாயல்  தெரிகிறது  என  மறுத்து  விட்டாராம்  .(  இது  ல  காமெடி என்னான்னா  1991  ல்  ரிலீஸ்  ஆன  ஏவி எம்மின்  மாநகரக்காவல் படத்தின்  பட்டி  டிங்கரிங்  கதை  தான்  காப்பான்  என்பது  சூர்யாவுக்குத்தெரியாமல்  போனதே ) 


  என்னை  அறிந்தால் (2015)  படத்தின்  வில்லன்  அருண்  விஜய் தான்  இக்கதையில் நடிப்பதாக  இருந்தது.பின்   அதுவும்  செட்  ஆகவில்லை . 2019 ஆம் ஆண்டு  பூஜை  போடப்பட்டு  தொடங்கப்பட்ட  படம்  கொரோனா  காரணமாக  இரண்டு  வருடங்கள்  தாமதம்  ஆகி  2022 ல்   படப்பிடிப்பு  நடந்து  இப்போதுதான்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது . நடுநிசி  நாய்கள்  தான்    கவுதம்  கேரியரில்  டப்பாப்படம். விண்ணைத்தாண்டி வருவாயா  தான்  அவரது  ஹை  குவாலிட்டி  படம்  , இப்படம்  எந்த  ரேஞ்ச்  என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஃபாரீனில்  படித்து  வக்கீலாக  இருப்பவர் . நாயகன்  ஒரு  காண்ட்ராக்ட்  கில்லர் . அதாவது  வாடகைக்கொலையாளி . இருவரும்  எதேச்சையாக  சந்தித்து  திடீர்க்காதலில்  விழுகிறார்கள் .   நாயகன்  தன்னைப்பற்றிய  விபரம்  சொன்னதும்  நாயகி  பிரேக்கப்  செய்து  கொள்கிறார்


  ஃபாரீன்  போன  நாயகி அங்கே  ஒரு  பெரிய  கொலைக்கேசில் சாட்சி  ஆகி  விடுகிறார் .நாயகியைக்கொல்ல  பல  கொலைகாரக்கும்பல்கள்  ரெடி  ஆகின்றன.


 நாயகன்   காண்ட்ராக்ட்  கில்லர்  வேலையை  விட்டு  விட்டு  இப்போது  செக்யூரிட்டி  கார்டாகப்பணி  புரிகிறான். நாயகிக்கே  செக்யூரிட்டி  ஆக  வேலை  பார்க்கும்  வாய்ப்பு   நாயகனுக்குக்கிடைக்கிறது . நாயகன்  நாயகியைக்காப்பாறினானா?  காதலைப்புதுப்பித்தானா? என்பது  மீதி  திரைக்கதை 

நாயகன்  அக  வருண்.நல்ல  ஹைட் , ஜிம்  பாடி  ஆனால்  முகத்தில்  உணர்சிகள்  மிஸ்சிங். . விஜய்  சூர்யா  அருண்  விஜய்  ஆகியோர்  செய்ய  வேண்டிய  ரோலை  இவர்  செய்கிறாரே  என  ஆச்சரியப்படுவதா?அவங்க  எல்ல்லாம்  தப்பிச்சுட்டாங்க , இவர்  மாட்டிக்கிட்டாரே  என  பரிதாபப்படுவதா? 


 நாயகி  ஆக  ராஹெபி . பார்க்க  ஜிலேபி  மாதிரி  இருக்கிறார். ஆனால் நடிப்பு  பெரிதாக  மனம்  கவரவில்லை 


நாயகனின்  நண்பன்  ஆக  கிருஷ்ணா . நல்ல  வாய்ப்பு.ஆனால்  அவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  குழப்பம், ட்விஸ்ட்க்காக  சொதப்பி  வி,ட்டார்கள்  , ஆனால்  கிருஷ்ணா  நடிப்பு  குட் 


 மன்சூர்  அலிகான்  டான்  கேரக்டரில்  வருகிறார். வழக்கமாக  பரட்டைத்தலையில்  கேவலமான  கெட்டப்பில்  வரும்  இவர்  இதில்  டீசண்ட்  ஆக  வருவது  வியப்பு \


நாயகியின்  அப்பாவாக  கிட்டி , கமலின்  சத்யா  படத்தில்  இருந்த  கம்பீர  நடிப்பு  மிஸ்சிங்


திவ்யதர்ஷினி  ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார். நாயகியை  விட  இவர்  அழகாக  இருக்கிறார். 


விசித்ரா,லிசி  ஆண்ட்டனி  சின்ன  ரோல்களில்  வருகிறார்கள் 


அந்தோணீயின்  எடிட்டிங்கில்  படம்  140  நிமிடங்கள்  ஓடுகின்றன. மெயின்  கதையில்  கிருஷ்ணாவின் ஃபிளாஸ்பேக்  கதை  சரியாக  ஃபிட்  ஆகவில்லை 


கார்த்திக்கின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கதையுடன்  ஒட்டாமல்  தனித்து  நிற்பது  பலவீனம் எஸ்  ஆர்  கதிர்  ஒளிப்பதிவு  குட் . நாயகியை க்ளோசப்  காட்சிகளில்  கூட  அழகாகக்காட்ட  முடியவில்லை 


திரைகக்தை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கவுதம்  வாசுதேவ்  மேனன் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனின்  சிகிச்சைக்காக  டாக்டர்  ஒரு  அசிஸ்டெண்ட்டை அழைத்து வர  நாயகன்  அந்த  அசிஸ்டெண்ட்டிடம்  டாக்டர்  பேரு  என்ன  எனக்கேட்டு  அவன்  விழித்ததும்  அவன்  வில்லனின்  கையாள் என்பதை  உணர்ந்து  ஆக்சன்  சீக்வன்ஸ்  ஆரம்பிக்கும்  காட்சி  செம 


2  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா  20  அடியாட்களுடன்  ஹோட்டலுக்கு  வர  நாயகன் - நாயகி  சேசிங்  சீன்  குட் 


3  நாயகன்  மற்றும்  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா   இருவருக்குமிடையேயான    ஃபிளாஷ்பேக்  ட்விஸ்ட்  குட்   


4  கிருஷ்ணா  வைத்து  சொல்லப்படும்  இரண்டாவது  ட்விஸ்ட்  குட் 


5  கிருஷ்ணாவின்  ஃபோனை  நாயகன்  காரில்  வேண்டுமென்றே  விட்டு  வர  அதை  வைத்து  வில்லி  சாந்தினி  அவர்களை  ட்ரேஸ்  அவுட்  செய்யும்  காட்சி 


6  நம்ப  முடியவில்லை என்றாலும்  எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  நான்  உன்  ஜோஷ்வா , எங்கு  சென்றாலும்  கூட்டிச்செல்வாயா? 


2  ஜோசுவா , சிறு  பேராசை 


3  தப்பாசு  நேரம்... யார்  அந்தத்திருடன் 


4  அச்சத்தில்  மிச்சம்  கொள்வேனா? 


5  காக்க  காக்க  கண்  போல்  காக்க 


6  சிங்கிளா  சிங்கம்  வருது  , ஒதுங்கு  ஒதுங்குடா 


  ரசித்த  வசனங்கள் 


1  அதிகமாப்பேச  வேண்டாம், அமைதியா  இரு  என்பதைத்தான்  நாசூக்கா  கீப்  கொயட்னு  சொல்லி  இருக்காங்க 


2  பயமா  இருக்கா?


 நீ  வர்றேன்னு  தெரிஞ்ச பிறகு  இல்லை 


3  ஒரு  வாரம்  நீ  அசையக்கூட  கூடாதுனு  டாக்டர்  சொல்லிட்டார்


 அப்டியா? அப்போ  உன்னைக்கொலை  செய்ய  வர்றவங்க  கிட்டே  ஒரு  வாரம்  கழிச்சு  வரச்சொல்லிடலாமா? 


4  உன்  இங்க்லீஷ்  புரியல , ஆனா  உன்  ஆதங்கம்  புரியுது 


5  எப்பவுமே  நம்ம  கூட  இருக்கறவங்க  தான் ( நமக்கு  துரோகம்  செய்வாங்க )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்னைப்பற்றி  நாயகியிடம்  விவரிக்கும்போது  சொல்லும்  விஷயம்  பரிதாபத்தை ஏற்படுத்துவது  போல  இருந்தாலும்  சொன்ன  விதம் பிட்  பிட்டாக  சின்ன  வார்த்தையாக   ஸ்டைலாகப்பேசுவது  எரிச்சல்  மூட்டுவதாக  இருக்கிறது.அதில்கதாபாத்திரம்  தெரியவில்லை ,இயக்குநர்  டச்  தான்  அதீதமாய்த்தெரிகிறது 


2 நாயகி  எதுவும்  விளக்கம்  கேட்கலை .நாயகன்  தானா  முன் வந்து  கிறுக்கன்  மாதிரி  தான்  ஒரு  கொலைகாரன், பலரைக்கொன்றிருக்கிறேன்னு  சொல்லிட்டு  அதெல்லாம்  மறந்துடு , இனி  அப்டி  நடக்க  மாட்டேன்  என  சொல்வது   மடத்தனம் 

3  ஏர்போர்ட்  வாசலில் நாயகன்  2  நிமிடங்களில்  18  கொலை  பண்ணிட்டு  34  பேரை  அடித்து  வீழ்த்துகிறான், இது கின்னஸ்  ரெக்கார்டு. ஆனா  போலீஸ்  வர்லை.இது  லிம்கா   ரெக்கார்டு 


4 ஒரு  இடைவெளிக்குப்பின்  நாயகன் - நாயகி இருவரும்  சந்திக்கும்  சீனில்  உயிரோட்டமான  காட்சி  இல்லை . ஓவர்  அலட்டலாக  செயற்கையாக  இருவரும்  பேசிக்கொள்கிறார்கள், ஒட்டவே  இல்லை 


5 நாயகனுக்கு  வயிற்றில்  புல்லட்  பட்டிருக்கு . சீரியஸ்  கண்டிஷன். ஒண்னா  அவன்  ஹாஸ்பிடலுக்குப்போய்  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், இல்லைன்னா  டாக்டரை  அவன்  இருக்கும்  இடத்துக்கு வர  வெச்சு  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், ரெண்டும்  செய்யாம  பெரிய  பருப்பு  மாதிரி  நாயகியைக்கார்ல  கூட்டிட்டுபோய்  மயக்கம்  ஆகிறான், சும்மா  அனுதாபம்  சம்பாதிக்கவா?  பிராக்டிகலா யோசிக்க  மாட்டானா? 

6  உயிருக்கு  ஆபத்தான  நிலைல  நாயகன்  இருக்கும்போது நாயகி  அவனைக்காப்ப்பாற்ற  தானே  காரை  ஓட்டிட்டுப்போறா. அப்போ  வில்லன்கள்  துரத்தறாங்க .அப்போ  ஒண்ணா  அவ  காரை  வேகமா  ஓட்டி  தப்பிக்கனும்,அல்லது  வில்ல்ன்களைத்தாக்க  முயற்சி  பண்ணனும், ரெண்டும்  இல்லாம  நாயகனை  எந்திரு  அஞ்சலி  எந்திரு  அஞ்சலி  கணக்கா  எழுப்பிட்டு  இருக்கா , அவனே  சீரியசா  இருக்கான், எந்திரிச்சாலும்  ஃபைட்  போடவா  போறான்? 


7  நாயகனைத்தாக்க  ஒரு  கும்பல் வருது . நாயகனிடம்  துப்பாக்கி  இருக்கு . நாலு  பேரை  ஷூட்  பண்ணினா  மீதி ஆட்கள்  ஓடி  இருப்பாங்க .நாயகன்   ஃபைட்  சீக்வன்ஸ்  வரனும்  என  துப்பாக்கியை  நாயகி கைல  கொடுத்து  தேவைப்பட்டா  ஷூட்  பண்ணு  என  ஒரு  ரூமில்  நாயகியை  அடைத்து  விட்டு  இவன்  ஃபைட்  போட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணிட்டு  இருக்கான்.அதுக்குப்பதிலா  முடிஞ்ச  வரை  10  பேரை  ஷூட்  பண்ணிட்டா  மீதி  ஆட்களோட  ஃபைட் போட்டு இருக்கலாம் 


8  ஆறு  அடியாட்கள்  நாயகியைப்பிடிச்சு    எங்கேயோ  கூட்டிட்டுப்போறாங்க.  நாயகன்  இல்லை .அப்பவே  நாயகியைப்போட்டுத்தள்ளி  இருக்கலாம், எல்லார்  கைலயும் , கத்தி , கடப்பாறை  ஆயுதம்  எல்லாம்  இருக்கு , ஏன்  கொல்லலை ? 


9  மன்சூர்  அலிகான்  முன்  நாயகி  மாட்டிக்கிட்டா . டிரைவர்  சொல்றான். இளைக்கொன்னு  வீடியோஎடுத்துஅனுப்பினா  6  கோடி  ரூபா  பேமண்ட்  கிடைக்கும்கறான். டக்னு  கொல்லாம   அவரு  லூஸ்  மாதிரி  டயலாக் பேசிட்டு  இருக்காரு . ஹீரோ  வர்ற  வரை  டைம்  வேஸ்ட்  பண்ணனும்னு  ஆர்டர் போல 


10 நாயகன் - நாயகி  இருவரும்  பல  ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள் . சாப்பிடும்போது  எந்த  வித  செக்கிங்கும்  இல்லை .வில்லன்  க்ரூப்20 கோடி ரூபா  விலை  பேசி  அடியாட்களை  அனு[ப்பி கொல்லச்சொன்னதுக்குப்பதிலா  ஏதோ  ஒரு  ஹோட்டல் சர்வருக்கு  ஒரு   கோடி  ரூபா  குடுத்து  சாப்பாட்ல விஷம்  கலக்க  வெச்சு  ஈசியா  கொன்னிருக்கலாம், ஐடியா  இல்லாத  பசங்க 


11  ஹோட்டலில்    நடக்கும்    ஃபைட்  சீக்வன்சில்  வடச்சட்டில  ( வாணலி)  சுடுதண்ணீர்  இருக்கு , நாயகன்  அதை  வெறும்  கைகளால்  எடுத்து  அடியாட்கள்  மேல்  ஊற்ற  அவங்க  அலறுகிறார்கள் .இவர்  மேல் தெறிக்காதா?கொதிக்கும்  வாணலியை  வெறும்  கைகளால்  தூக்குகிறாரே?இவர்  என்ன  இரும்புக்கை  மாயாவியா?


12  கிருஷ்ணா  வசனமா  பேசும்போது  அவரு  தங்கையை ஒருத்தன்  கடல்ல  தூக்கிப்போட்டுட்டான்  கறாரு, ஆனா விஷூவலா  நமக்குக்காட்டும்போது  அது  ஆறு 


13  நாயகியிடம்  துப்பாக்கியைக்கொடுத்து  விட்டு  நாயகன்  கிருஷ்ணாவுடன்  போடும்  சோலோ  ஃபைட்  சினிமாத்தனம் 


14  க்ளைமாக்சில்  மெயின்  வில்லன்  சைடு  வில்லனிடம்  நாயகி  ஃபோட்டோவைக்காட்டி  இவளைத்தான்  கொல்லனும்கறான்.அவன்  அவனோட  அடியாளுங்க கிட்டே  அந்த  ஃபோனில்  இருக்கும்  ஃபோட்டோவைக்காட்டுகிறான், அதுக்குப்பதிலாக  எல்லார்  ஃபோன்  வாட்சப்க்கும்  அதை  ஃபார்வார்ட்  பண்ணி  இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் , ஆனால்  லிப்லாக்  சீன்  உண்டு . இப்பவெல்லாம்  லிப் லாக்  கூட  யூ  ஆகி  விட்டது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கவுதம்  ரசிகர்களுக்கு  மட்டும்  உவப்பான  படம் . பொது  ரசிகர்களுக்கு  அவ்வளவாகப்பிடிக்காது . ரேட்டிங்  2.25 / 5


Joshua: Imai Pol Kaakha
Poster
Directed byGautham Vasudev Menon
Written byGautham Vasudev Menon
Produced byIshari K. Ganesh
StarringVarun
Krishna
Raahei
CinematographyS. R. Kathir
Edited byAnthony
Music byKarthik
Production
company
Vels Film International
Release date
  • 1 March 2024
Running time
140 minutes
CountryIndia
LanguageTamil