Wednesday, March 27, 2024

BLACK ROSE (2023) - வியட்நாம் மூவி - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


     இந்தப்படம்  பற்றிய  விபரங்களை  அறியலாம்  என  கூகுளில்  சர்ச்  செய்தால்  வெவ்வேறு  கால கட்டங்களில்  ,வெவ்வேறு  மொழிகளில் ,வெவ்வேறு  கதை  அமைப்பில் இதே  டைட்டிலில்  13  படங்கள் வந்துள்ளன.இது  போக  எழுத்தாளர்  இந்துமதியின்   கதை , வசனத்தில் உருவான  கறுப்பு  ரோஜா  என்ற  தமிழ்ப்படம்  வேற  இருக்கு . நெட்  ஃபிளிக்ஸ்  என்பதால்  இது  ஒரு  எரோட்டிக்  த்ரில்லர்  ஆக  இருக்குமோ  என்ற  சந்தேகத்துடன்  தான் படம்  பார்த்தேன், ஆனால் தமிழ்ப்படம்  போல ஒரு  சின்னக்கதையை  நீட்டி முழக்கி  ஜவ்வாக  இழுத்து  சொல்லி  இருந்தாலும்  சுவராஸ்யமாகவே  திரைக்கதை  அமைத்திருக்கிறார்கள் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பணக்கார  வீட்டில்  பணிப்பெண்ணாக சேர்கிறார்.  வில்லன் - வில்லி  இருவரும்  தம்பதியினர்.அவர்களுக்கு  ஒரு  கைக்குழந்தை  இருக்கிறது . சமையல்  வேலை  மற்றும்  குழந்தையைப்பராமரிப்பது  நாயகியின்  பணி . இந்தக்குடும்பத்தை  நிர்மூலமாக்குவதுதான்  என்  குறிக்கோள் என  நாயகி  ஓப்பனிங்கிலேயே  சொல்லி  விடுவதால்  ஏதோ   திட்டத்துடன் தான்  இங்கே  வந்திருக்கிறார்  என்பது  நமக்குத்தெரிந்து  விடுகிறது  


படத்தின்  பின்  பாதியில்  சொல்லப்படும்  அந்த  ஃபிளாஸ்பேக்கை  இப்போதே  நாம்  பார்த்து  விடுவோம்.அப்போதான்  கதை  புரியும் ‘’


  நாயகியின்  தம்பியும், வில்லியும்  இணைந்து  ஒரு  ரெஸ்டாரண்ட்  நடத்தி  வருகிறார்கள் . இருவரும்  காதலர்கள் .வில்லிக்கு    இவனை  விடப்பெரிய  இடமாக   வசதியான வில்லன்  கிடைத்ததும்  நைசாக  அவனைக்கழட்டி  விட்டு  விடுகிறாள் . . நாயகியின்  தம்பி  யின்  ரெஸ்ட்டாரண்ட்  தீ  விபத்தில்  மாட்டிக்கொள்கிறது.அவனும்  மாட்டிக்கொள்கிறான்.ஒரு  பக்க  முகமே  கருகி  விடுகிறது 


 தம்பியின்  இந்த  நிலைமைக்கு  வில்லி  தான்  காரணம்  என  நாயகி   நினைக்கிறார்.,தன்  ரூட்டில்  குறுக்கே  வராமல்  இருக்க வில்லி  தன்  தம்பியை  ரூட்  க்ளியர்  பண்ணி  இருப்பாள் என  நினைக்கிறாள் .அதனால்  பழி  வாங்க  வில்லியின்  குடும்பத்தை  கெடுக்க  இங்கே  வந்திருக்கிறாள்


வில்லனின்  பிஸ்னெஸ்  பார்ட்னரும், நண்பரும்  ஆன  ஒருவன்  அடிக்கடி  வில்லன்  வீட்டுக்கு  பணி  நிமித்தம்  வருகிறான் . அவனுக்கு  நாயகியின்  அழகு  கவர்கிறது . நாயகியைப்பற்றிய  கமெண்ட்டை  நாயகியின்  அங்க  அழகு  பற்றிய  வர்ணனையை  அவன்  வில்லனிடம்  அடிக்கடி  சொல்கிறான் 


இதனால்  வில்லனுக்கு  நாயகி  மீது  ஆர்வம்  வருகிறது . வில்லனுக்கும்  , நாயகிக்கும்  கள்ளக்காதல்  உருவாகிறது . அதாவது  நாயகி  தன்  வலையில் வில்லனை  வீழ்த்துகிறாள் . 


ஒரு  கட்டத்தில்     வில்லிக்கு  வில்லன் -  நாயகி  காதல்  தெரிய  வர  அவள்  பொங்கி  விடுகிறாள் .  குடும்பத்தில்  சண்டை 


ஆக்சுவலாக  வில்லி  நாயகியின்  தம்பியை  ஏமாற்றிய  துரோகம்  மட்டும் தான்  செய்கிறாள் .   வில்லியை  அடைய  வில்லன்  தான்  திட்டம்  போட்டு  அந்த  தீ  விபத்தை  ஏற்படுத்துகிறான்.


இது  நாயகிக்கு  தெரியாது .  இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  சம்பவங்கள்   


இந்த  சாதாரண  பழி  வாங்கும்  கதையை  குடும்பப்பின்னணியில்  சொல்ல  இயக்குநர்  ரொம்பவே  சிரமப்பட்டிருக்கிறார். வில்லனின்  அப்பா  பெரிய  தொழில்  அதிபர். அவர்  கம்பெனிக்கு  அடுத்த  சேர்மேன்  யார்? வில்லனா?வில்லனின்  தங்கையா?  என்ற  போட்டி   என  கிளைக்கதை  வேறு  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்க்  ஆக  இருக்கிறது


வில்லன் , வில்லி  இருவரும்  பர்சனாலிட்டி  ஆக  இருக்கிறார்கள் . வில்லனை  தன்  அழகால்  வீழ்த்தும்  அளவுக்கு  நாயகி  அவ்ளோ  அழகெல்லாம்  இல்லை . ஆனால்  கிளி  மாதிரி  சம்சாரம்  இருந்தாலும்  குரங்கு  மாதிரி  வைப்பாட்டி  வைத்துக்கொள்வது  ஆணின்  வழக்கம்  என்ற  பழமொழி  இந்த  அழகு  பிரச்சனையை  தீர்த்து  விடுகிறது


40  நிமிடத்தில்  சொல்லி  முடிக்கக்கூடிய  இந்தக்கதையை  இரண்டு  மணி  நேரம்  இழுத்திருக்கிறார்கள் . 


 ஒளிப்பதிவு ,  லொக்கேஷன்  , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள் குட் , பின்னணி  இசை  நன்றாக  இருந்தது


சபாஷ்  டைரக்டர்


1  படம்  போட்ட  முதல்  15  நிமிடங்களிலேயே படத்தின்  மொத்தக்கதையை  ஆடியன்சால் யூகிக்க  முடியும் அளவுக்கு  திரைக்கதை  அமைத்தது 


2  சாதாரண  பழி  வாங்கும்  கதையை  குடும்பக்கதை போல  பில்டப்  பண்ணி  சொன்னது 


  ரசித்த  வசனங்கள் 


1  அதிர்ஷ்ட  தேவதையும், ஆப்புர்ச்சுனிட்டி  ஏஞ்சலும்  ஒண்ணு . உனக்கான  அதிர்ஷடக்கதவை  ரெண்டு  தடவை  தட்டிட்டு  இருக்க  மாட்டாங்க , முதல்  டொக்  டொக்  கிலேயே  நீ  கதவைத்திறந்துடனும் 


2  பெரியவங்க  அவங்க  அனுபவத்தில்  இருந்து  எதாவது  சொன்னா  அதைக்காது  கொடுத்துக்கேட்கனும். அவங்க  முழு  வாழ்க்கையை நீ  வாழ்ந்துதான்  அதை  உணரனும்னு  அவசியம்  கிடையாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லியின்  தோழிகள்  ., உறவினர்  பலரும்  நாயகி  பற்றி  எச்சரிக்கிறார்கள் .இவ்வளவு  இளமையான ,அழகான  வேலைக்காரி  அமர்த்துவது  ஆபத்து  என்கிறார்கள் . வில்லி  அதைக்காதில்  போட்டுக்கவே  இல்லை . புருசன்  ராமனாவே  இருந்தாலும்  எந்த  சீதையும்  தன்  வீட்டில்  இப்படி  அழகான  இளமையான  பெண்ணை  பணிக்கு  அமர்த்த  மாட்டாள் 


2   நாயகி  பணிக்கு  வருகையில்  எப்போதும்  மிக  கிளாமரான  டிரஸ்  தான்  அணிந்து  வருகிறாள் .அப்போது  வில்லியின்  கண்களை  அத் உறுத்தவில்லையா?  ஏம்மா  மின்னல் , அடக்க  ஒழுக்கமா  டிர்ஸ்  பண்ணிட்டு  வாம்மா  என  சொல்ல  மாட்டாரா? 


3  கதைப்படி  நமக்கு  நாயகி  மீது  பரிதாபம்  வரனும், ஆனால் வரவில்லை , காரணம்  நாயகி  வில்லனை  வலையில்  வீழ்த்துகிறாள்  . சைக்கிள்  கேப்பில்  வில்லனின்  பார்ட்னருடனும்   நெருக்கமாக  இருக்கிறார்


4   வில்லி வில்லனைப்பழி  வாங்க  கடலுக்கு  படகில்  செல்லும்போது  எதற்காக  கைக்குழந்தையை  எடுத்துச்செல்கிறார்? அது  ரிஸ்க்  ஆச்சே?  வீட்டில்  பெரியவங்க  இருக்காங்களே? அவங்க  பார்த்துக்க  மாட்டாங்களா?


5 பொதுவாக  கள்ளக்காதலில்  ஈடுபடும்  நபர்  வீட்டில்  யாரும்  இல்லாத  போதுதான்  ட்ரை  பண்ணுவாங்க , ஆனால்  வில்லன் தன்   வீட்டில்   ஒரு  பார்ட்டி  நடக்கும்போது  மனைவி  ஹாலில்  இருக்கும்போது  மாடியில்  நாயகி  உடன்  சரசம்  ஆடுவது  நம்ப  முடியவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பல  முறை  பார்த்துப்பழக்கப்பட்ட கதை  தான்  என்றாலும் காட்சிகள் சுவராஸ்யமாக  இருப்பதால்  ஆண்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2 / 5