Sunday, March 17, 2024

மிஷன் சேப்ட்டர் 1 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


   2024  ஆம்  ஆண்டு  பொங்கல்  ரிலீஸ்  ரேசில்  ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்டவை சிவகார்த்திகேயனின்  அயலான், தனுஷ்  நடித்த  கேப்டன்  மில்லர்  ஆகிய  இரு  படங்களும்  தான். ஆனால் இரண்டுமே  ரசிகர்களுக்கு  பெரிய  அளவில்  திருப்தி  தரவில்லை .சுமார்  ரகப்படங்களாகவே  அமைந்தன.ஆனால்  யாரும்  எதிர்  பார்க்காத  வகையில்  இந்தப்படம்  ஹிட்  ஆகி  விட்டது. குறைவான  தியேட்டர்கள்  மட்டுமே  கிடைத்திருந்தாலும்  ரிலீசுக்குப்பின்  ரசிகர்கள்  வரவேற்பைப்பார்த்து  அதிக  தியேட்டர்களில் திரையிடப்பட்டது .10கோடி  ரூ பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  23  கோடி  ரூ  வசூலித்தது

 இப்படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  அச்சம்  என்பது  இல்லையே. பின்  தயாரிப்பு தரப்பு  மாறியதால்  டைட்டில்  மாறியது,மிஷன் சேப்ட்டர் 1  அச்சம்  என்பது  இல்லையே.  என்ற  டைட்டிலில்  வெளியானது


1995ல்  முறை  மாப்பிள்ளை  படத்தில்  அறிமுகம்  ஆனாலும்  1996ல் ப்ரியம்  படம்  தான்  அருண்  விஜய்க்கு  பேர்  வாங்கித்தந்த  படம்.2001 ல் ரிலீஸ்  ஆன  சேரனின்  பாண்டவர்  பூமி  மூலம்  நல்ல  நடிகர்  என  பெயர்  எடுத்தார் .2003ல்  ரிலீஸ் ஆன  ஜனநாதனின்  இயற்கை  ஒரு  ஃபீல்  குட்  மூவி  ஆக  அமைந்தது . 2006ல்  ரிலீஸ் ஆன  அழகாய்  இருக்கிறாய்  பயமாய் இருக்கிறது  கல்லூரி மாணவிகளிடையே  பலத்த  வரவேற்பைப்பெற்றது 2012ல்  ரிலீஸ்  ஆன  தடையறத்தாக்க  நல்ல   ஆக்சன்  மசாலாவாக  அமைந்தது .2013ல்  ரிலீஸ்  ஆன  என்னை  அறிந்தால்  படத்தில்  அஜித்குமாருக்கு  வில்லனாக  நடித்து கை  தட்டல் பெற்றார்.2017ல்  ரிலீஸ்  ஆன  குற்றம் 23  மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் .2019ல்  ரிலீஸ்  ஆன  தடம்  இரு வேட படங்களில்  மாறுபட்ட  ஆக்சன்  த்ரில்லர்  ஆக  பேர்  வாங்கியது


இயக்குநர்  ஏ எல் விஜய்க்கு  2007ல் ரிலீஸ்  ஆன  கிரீடம்  தான்  முதல்  படம்  என்றாலும்  2008ல்  ரிலீஸ்  ஆன  பொய்  சொல்லப்போறோம், 2010ல்  வந்த  மதராசப்பட்டினம் இரண்டும்  நல்ல  பேர்  வாங்கித்தந்தது.2011 ல்  வந்த  தெய்வத்திருமகள்  தமிழக  அரசின் விருதைப்பெற்றது


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  ஒரு  தீவிரவாதி.  சிறை  தண்டனை  பெற்று  லண்டன்  சிறையில்  இருக்கும்  அவனது  கூட்டாளிகள்  மூவரை  ஜெயிலில்  இருந்து  தப்பிக்க  வைக்க  திட்டம்  போடுகிறான். அவன்  பிளான்  படி  மொத்த  ஜெயில்  கைதிகள்  அனைவரையுமே தப்பிக்க  வைத்து  விட்டால்  இவன்  பேர்  வெளியே  வராது  எதேச்சையாக  நடந்தது  என  காட்டி விடலாம்  என  நினைக்கிறான்


நாயகனுக்கு  ஒரு  மகள்  இருக்கிறாள். அவளுக்கு  லண்டனில்  ஒரு  ஆபரேஷன்  நடக்க  இருக்கிறது . சிகிச்சைக்காக  லண்டன்  வந்த  அவர்  ஒரு  சின்ன  தகறாரில்  சிறை  செல்ல   நேரிடுகிறது.சிறையில் நாயகன்  இருக்கும்போது  தான்  வில்லனின்  ஜெயில் கைதிகளை  தப்புவிக்கும்  ஆபரேஷன்  நடக்கிறது 


நாயகன்  வில்லனின் திட்டத்தை  எப்படி  முறீயடித்தார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அருண்  விஜய்  அசால்ட் பண்ணி  இருக்கிறார். தமிழ்  சினிமாவில்  சரத்  குமார் , அர்ஜூன் வரிசையில்  நல்ல  ஜிம்  பாடி . அசாதாரணமான  பைசெப்ஸ்  கொண்ட  ஹீரோக்களில்  இவரும்  ஒருவர். ஆக்சன்  காட்சிகளில்  கலக்கிய  அளவு  சோக  காட்சிகளில்  அவரால்  சோபிக்க  முடியவில்லை .ஆனாலும்  சமாளிக்கிறார்


லண்டன்  சிறை  ஜெயிலர்  ஆக   எமி  ஜாக்சன்.மதராசப்பட்டிணம்  பார்த்து  அவரது அழகுக்கு  ரசிகர்கள்  ஆனவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும். முக  முதிர்ச்சி  பார்த்து  ஹார்ட்  அட்டாக்  வரலாம், அவரும்  ஆக்சன்  காட்சிகளில் அசத்தி  இருக்கிறார்


 ஹாஸ்பிடலில் நர்ஸ்  ஆக  நிமிஷா  சஜயன்  திறம்பட  நடித்திருக்கிறார்.உம்மணாம் முகமாக  எப்போதும்  காட்சி  அளிக்கும் இவர்  இதில்  சிரித்த  முகமாக  இருப்பது  ஆற்தல் 

நாயகனின்  மகளாக  இயல்  நன்கு  நடித்திருக்கிறார். நாயகனின்  சிறைத்தோழனாக  அபிஹாசன்  நடித்திருக்கிறார்

வில்லன்  ஆக  பாரத்  போபனா  நடித்திருக்கிறார்.  எப்போப்பாரு  ஃபோனிலேயே  மிரட்டிக்கொண்டிருக்கிறார்

ஜி வி  பிரகாஷ்  குமாரின்  இசையில் பாடல்கள் ஓக்கே  ரகம் . பின்னணி  இசை நல்ல  விறுவிறுப்பு 

அந்தோணியின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது சந்தீப்  கே  விஜயின்  ஒளிப்பதிவு  குட் 


ஏ  மகாதேவ்  கதை , திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  அமலா  பாலின்  முன்னாள்  கணவர்  ஏ எல்  விஜய் 


சபாஷ்  டைரக்டர்

1 பாலிதீன்  கவர்களால்  தங்கள்  முகத்தைக்கவர்  பண்ணி  விட்டு  கைதிகள்  முகத்தில்  மிளகாய்ப்பொடி  தூவும்  ஐடியா  குட் 

2  மேக்னெட்டை  ஒயரில்  கட்டி  மெஷின்  கன்னை  இழுத்து  பிடிக்கும்  காட்சியும்  அப்ளாஸ்  பெறும்  காட்சி 

3  வில்லன்  ஜெயிலரைப்பார்த்து  ஃபோனில்  பேசும்போது  அதுக்கு  ரீ  ஆக்சன்  கொடுக்கும்  எமி  ஜாக்சன்  பிறகு  வில்லன்  பேசுவது  நாயகன்  அருண்  விஜய்  உடன்  என்பதை  அறிந்து  அதிர்ச்சி  ஆகும்  சீன்  மாஸ்  சீன் 

4  சிறைக்கைதியாக இருக்கும்  நாயகன்  எதற்காக  திடீர்  என  ஜெயில்  கைதிகள்  தப்பிக்கும்போது  எதிர்க்கிறார்  என்ற  சஸ்பென்ஸ்  ஓப்பன்  ஆகும்  இடம்  செம .  ரஜினி  நடித்த  நிஜமான  ஜெயிலர்  படத்தில்  கூட  இப்படி  ஒரு காட்சி  இல்லை 

5  நாயகன்  நாயகி இடம்  ஜெயிலின்  ப்ளூ  பிரிண்ட்  கேட்கும்போது  டக்  என  கிராஃபிக்சில்  நாயகன்  நிற்கும்  இடத்தில்  ப்ளூ  பிரிண்ட்  உதயம்  ஆவது  அருமை 

6  ஜெயில்  கைதிகள் தப்பும்போது  நாயகன்  போடும்  திட்டங்கள் ஒவ்வொன்றும்  குட்  

  ரசித்த  வசனங்கள் 


1  அம்மாவின்  அருகாமை  அல்லது  அம்மாவின்  அன்பு கிடைக்காதவங்க  தான்  இந்த  உலகத்துலயே  பரம  ஏழை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஆஸ்பிடலில் அட்மிட்  ஆகிட்ரீட்மெண்ட்டில்  இருக்கும்  குற்றவாளி  தப்பிக்க  நினைப்பது  ஓக்கே, ஆனா  ஏன்  கிறுக்கன்  மாதிர்  கழுத்தில்  சுளுக்குக்காக  போடப்பட்ட  சாதனத்தை  கழட்டி  எறியனும்?

2   வில்லன்  ஜெயிலில்  இருக்கும்  கைதிகளுக்கு  ஒரு  கேனத்தனமான  ஆர்டர்  போடறான்,கிச்சன்  ரூம்ல  சில  ஆளுங்க  இருக்காங்க , அவங்களைக்கொன்னுடுங்க , அங்கே சிசிடிவி  கேமரா  இல்லாததால்  எந்த  ஆதாரமும்  இருக்காது  என்கிறான்.ஆனா  அவன்  பேசுவது  லைவாக  நாயகன்  உட்பட  5  ஆஃபீசர்கள்  கேட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்  என்பது  வில்லனுக்குத்தெரியும்  அதுவே  ஒரு  சாட்சி  தானே? 

3  இரும்புச்சங்கிலி போட்டு  தாழ்  போட்ட  கிச்சன்  கதவுகளை  உடைப்பது  எல்லாம்  நம்பவே  முடியலை. அது   இரும்பா?  கரும்பா? 

4  எத்தனையோ  என்கவுண்ட்டர்களில்  பலரைப்போட்டுத்தள்றாங்க .பயங்கரவாதிகள் மூவரை  ஜெயிலில்  இருந்து  தப்ப  விடக்கூடாது  என  அவர்களைப்படாத  பாடு பட்டு  காப்பாற்றுவதற்குப்பதில்  அவங்க  மூன்று பேரையும்  ஆன்  த  ஸ்பாட்  போட்டுத்தள்ளி  இருந்தால்  வில்லன்  செய்வது  அறியாமல்  திகைத்து  நிற்பானே? ஆனா  படம்  ஒரு  மணி  நேரத்தில்  முடிஞ்சிடும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  ஆக்சன்  த்ரில்லர் . குடும்பத்துடன்  பார்க்கலாம்  விஸ்வாசம் போல  அப்பா மகள்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  இருப்பதால்  பெண்களையும்  கவரும், ரேட்டிங்  3 / 5 


பணி: அத்தியாயம் 1
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஏ.எல்.விஜய்
எழுதியவர்ஏ. மகாதேவ்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுசந்தீப் கே. விஜய்
திருத்தியவர்அந்தோணி
இசைஜி.வி.பிரகாஷ் குமார்
உற்பத்தி
நிறுவனங்கள்
வெளிவரும் தேதி
  • 12 ஜனவரி 2024
நேரம் இயங்கும்
144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பட்ஜெட் 10 கோடி
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் 23 கோடி [1]