Saturday, March 09, 2024

RICKY STANICKY (2024) -அமெரிக்கன் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

 


ஆஸ்கார்  அவார்டு  வின்னரான  இயக்குநர்  பீட்டர் ஃபாரெல்லி  இயக்கிய  காமெடி  மெலோ  டிராமா  இது. அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சி  ரீதியாக  இல்லாவிட்டாலும்  வசன  ரீதியாக  சில  பச்சைகள்  உண்டு. அதைத்தவிர்த்திருந்தால்  சிறுவர்களும்  கண்டு  களிக்கும் காமெடிப்படம்  ஆக  ஆகி  இருக்கும். ஜஸ்ட்  மிஸ்டு .7/3/2024 முதல்  அமேசான்  பிரைம்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கும்  உண்டு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நண்பர்கள்  மூன்று  பேர்  சின்ன  வயதில்  இருந்தே  ஊரில்  குறும்புத்தனங்கள்  செய்து  அதற்கு  ஒரு  கற்பனைக்கதாபாத்திரம்  உருவாக்கி  பழியை  அந்த  கேரக்டர்  மீது  போட்டு  இவர்கள் தப்பிப்பவர்கள் 

.ரிக்கி ஸ்டானிக்கி  என்பது  ஒரு  கற்பனை  கேரக்டர். இவர்கள்  மூவரும்  பெரியவர்கள்  ஆகி , திருமணம்  ஆன  பின்பும்  இது தொடர்கிறது.  எங்காவது  ஜாலி  டிரிப்  அடிக்க  வேண்டும்  என  மூன்று  நண்பர்களும்  நினைத்தால்  ரிக்கி  ஸ்டானிக்கி  உடல்  நிலை  சரி  இல்லாமல்  சீரியசாக  இருக்கிறான்  என்று  பொய்  சொல்லி  கிளம்பி  விடுவார்கள் 


ஒரு  கட்டத்தில்  மூன்று  நண்பர்களின்  குடும்பத்தார்  ஒரு  விழாவில்  ரிக்கி  யை  சந்தித்து  ஆக  வேண்டும்  என  முடிவெடுக்கின்றனர். இல்லாத  ஒரு  கேர்க்டரை  எப்படி  உள்ளே  கொண்டு  வர  முடியும் ?> மூன்று  நண்பர்களும்  ஐடியா  பண்றாங்க. அவர்களுக்கு  சமீபத்தில்  அறிமுகம்  ஆன  ஒரு  குடிகாரனை  நடிக்க  வைக்க  முயற்சி  செய்கிறார்கள் 


ரிக்கி  ஸ்டானிக்கி  கேரக்டரில்  அந்த  குடிகாரன்  பிரமாதமாக  பர்ஃபார்மென்ஸ்  செய்கிறான். நண்பர்கள் பணி  புரியும்  கம்பெனி  ஓனரின்  மனதைக்கவர்ந்து  வேலையும் வாங்கி  விடுகிறான். சம்பளம்  நண்பர்கள்  வாங்குவதை  விட  ஒரு  மடங்கு  அதிகம் , இதனால்  பொறாமைப்பட்ட  நண்பர்கள்  அந்த  குடிகாரனை  விரட்ட முடிவெடுக்கிறார்கள் . இதற்குப்பின்  நடந்தது  என்ன? என்பதுதான் மீதி  திரைக்கதை 


ரிக்கி  ஸ்டானிக்கி ஆக , குடிகாரனாக  நாயகன்  ஆக  ஜான்  செனா  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.முக  சாயலில்  ஆர்னால்டு  ஸ்வார்செனேகர்  போல  இருக்கிறார். பிரபலங்கள்  போல  அவர்  செய்யும்  மிமிக்ரிகள்  அருமை. குடும்பத்தினர்    மனம் கவர்வது ,  கம்பெனி  ஓனரின்  தவறுகளை  தைரியமாக  சுட்டிக்காட்டி  பெயர்  பெறுவது  எல்லாமே  ரசிக்க வைக்கிறது 


 மூன்று  நண்பர்களாக  ஜாக்  எஃப்ரான் , ஆண்ட்ரூ , ஜெமாரின்  மூவரும்  இயல்பாக  நடித்திருக்கிறார்கள் நண்பர்களின்  மனைவிகளாக  வரும்  இருவரும்  கச்சிதம். குறிப்பாக  டி வி  ஷோ  நடத்தும் நாயகியின்  நடிப்பு  சிறப்பு 


பேட்ரிக்  ஜான்  விட்டோ  வின்  எடிட்டிங்கில்  படம்  114  ஃநிமிடங்கள்  ஓடுகின்றன, எங்கும்  போர்  அடிக்கவில்லை .  காமெடியாக  முக்கால்வாசி  போன  படம்  க்ளைமாக்ஸில் செண்ட்டிமெண்ட்  சீனுடன்  எமொஷனலாக  முடிகிறது  டாவ்  பால்மரின்  இசையில்    காமெடிக்காட்சிகளுக்கான  பிஜிஎம்  கச்சிதம் ஜான்  பிராலே  ஒளிப்பதிவில்  முத்திரை  பதித்து  இருக்கிறார்


டேவிட்  , ஜேசன்  டெக்கர்  ஆகிய  இருவரும்  எழுதிய  கதைக்கு  8  பேர்  கொண்ட குழு  திரைக்கதை  எழுதி  இருக்கிறது , ஆஸ்கார்  அவார்டு  வின்னரான  இயக்குநர்  பீட்டர் ஃபாரெல்லி   படத்தை  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  நாய்க்குட்டி  கரையோரம்  இருக்கும்  வாத்தை மிரட்ட  வாத்து  மிரளாமல்  நாய்க்குட்டியை  தண்ணீருக்குள்  இழுத்துச்செல்லும்  காட்சி  காமெடி கலகல 


2  கம்பெனி  ஓனர்  மேடையில்  பேசும்போது  அவரையும்  அறியாமல்  செய்யும்  கோணங்கித்தனங்களை  நாயகன்  சுட்டிக்காட்டியதும்  நாயகனின்  நண்பர்களிடம்  இத்தனை  நாட்களாக  இதை ஏன்  நீங்கள்  கவனிக்கலை? என  கேட்பது  காமெடி 


3   ஒரு  வயசான  பாட்டி  நாயகன்  மீது  சந்தேகப்பட்டு  எடக்கு  மடக்கான  கேள்விகளைக்கேட்டு  மடக்குவதும்  படாத  பாடுபட்டு  நாயகன்  எஸ்கேப்  ஆவதும்  கலக்கல் 


4  ஹீரோ  ஆஃப் த  வீக்  டி வி  புரோகிராமுக்கு  நாயகன்  தேர்வாவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகளும்  அருமை 

  ரசித்த  வசனங்கள் 


1 குழந்தைங்கன்னாலே  ஜாலி  தான் 


 அபப்டியா? ஆனா  என்  பெற்றோர்  என்னைப்பற்றி  அப்படி  நினைக்கலை  போல 


2    நீ  ஏன்  சட்டை  போடாம  இருக்கே?


  என்  பேபியோட  ஸ்கின்  டூ ஸ்கின்  காண்டாக்ட்ல  இருக்க 

3   அந்த  மாட்டுக்கு கஞ்சா  போடறாங்கனு  நினைக்கறென். கறக்கற  பால்  செம  கிக்  தருது 

4  என்  முழு  பேமண்ட்டையும்  அட்வான்சா  இப்பவே  தரனும், இல்லைன்னா  நான்  நடிக்க  வர  மாட்டேன் 


 இப்போப்பாதி,   வேலை  முடிஞ்சதும்  மீதி


 இந்த  டீலுக்கு  நான்  ஒத்துக்க  மாட்டேன் 


சரி  நாங்க  வேற  ஆளைப்பார்த்துக்கறோம்


 ஓக்கே , எனக்கு  டீல்  பிடிச்சிருக்கு 


5  கேட்கறேனேன்னு  தப்பா  நினைக்காத, நீ  பயங்கரக்குடிகாரன்  தானே?  உன்  பாடி  எப்படி  இவ்ளோ  ஃபிட்டா  இருக்கு ?


போதை மருந்து   எடுத்துக்கறேன்


 சுத்தம், இது  வேறயா? 


6  வாழ்க்கையை  எங்கே  ஆரம்பிச்சாலும்  நீ நினைக்கும்  உயரத்தை  அடைந்து  விடலாம் 

7   என்ன?  உன்  கை  இப்படி  நடுங்குது .  ஏன்?  என  யாராவது  கேட்டா  நான்  சொல்வது  போல  சொல்லி  சமாளி

நிறுத்து  , எனக்கு  டயலாக்ஸ்  சொல்லிக்கொடுத்தா  பிடிக்காது . நானே  சொந்தமா  சொல்லனும் 


8   டியர்,  ஒரு  சந்தோஷமான  விஷயம்  சொல்றேன்,  உன்  முகம்  ஏன்  இஞ்சி  தின்ன  குரங்கு  மாதீரி  ஆகுது ?


 அது  வந்து ,சந்தோசமா  இருக்கும்போது   என்  முகம்  இப்படித்தான்  ஆகும் , ஹிஹி 


9  ரிக்கி  ஒரு  பர்த்டே  கேண்டில்  மாதிரி, எவ்ளோதான்  ஊதினாலும் அணைய  மாட்டேங்கிறான், திரும்பத்திரும்ப  விஸ்வரூபம்  எடுத்து  நிற்கிறான் 


10  நீ  பொய்  சொன்னதை  விட  நீ  ஏன்  பொய்  சொன்னே? எனபதை  என்னால  புரிஞ்சுக்க  முடியல


11   எந்த  ஒரு  தருணத்திலும்  நாம  மாறனும்னு  நினைச்சா  அதுவாகவே  மாறலாம்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  காட்சி  ரீதியாக  யூ , வசன  ரீதியாக  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  காமெடிக்கதை  தான் , பார்க்கலாம் , ரசிக்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5


Ricky Stanicky
Release poster
Directed byPeter Farrelly
Written by
  • Jeff Bushell
  • Brian Jarvis
  • James Lee Freeman
  • Peter Farrelly
  • Pete Jones
  • Mike Cerrone
Story by
  • David Occhino
  • Jason Decker
Produced by
Starring
CinematographyJohn Brawley
Edited byPatrick J. Don Vito
Music byDave Palmer
Production
companies
  • Footloose Productions
  • Rocket Science
  • VicScreen
  • Smart Entertainment
  • Blue Rider Media
  • Bright White Light
Distributed byAmazon MGM Studios
Release date
  • March 7, 2024
Running time
113 minutes[1]
CountryUnited States
LanguageEnglish