Friday, March 08, 2024

இந்திராணி முகர்ஜி கதை - புதைக்கப்பட்ட உண்மை (2024) - ஹிந்தி/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா டாக்குமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


2012 ஆம்  ஆண்டு  நிகழந்த  சீனா போரா  கொலை  வழக்கில்  என்ன  நடந்தது ? உண்மைக்குற்றவாளி  யார்?   என்பதை  விவரிக்கும்  வெப்  சீரிஸ்  தான்  இது . இதில்  பங்கு  பெற்றவர்கள்  அனைவருமே   உண்மைக்கதாபாத்திரங்கள் தான் .   என்பது  கூடுதல்  சிறப்பு. ஷாரூக்கான்  உட்பட  பல  ஹிந்தி பிரபலங்கள்  உடன்  நெருக்கமாக இருந்த  மீடியா  பர்சன்கள்  தான்  குற்றம்  சாட்டப்பட்டவர்கள்  என்பதால்  இது  கூடுதல்  கவனம்  பெறுகிறது. 2012ல்  நிகழ்ந்த  கொலை  2015ல் தான்  உலகத்துக்குத்தெரிய  வருகிறது. 2015ல்  கைதான  குற்றவாளி  ஆறரை  வருடங்கள்  சிறை  தண்டனையில்  இருந்து  விட்டு  இப்போது  பெயிலில்  வந்திருக்கிறார். வழக்கு  தீர்ப்பு  இன்னும்  வரவில்லை 

 இந்த  வெப்சீரிஸ்  ரிலீஸ்  ஆக  சிபிஐ  தடை  வாங்கி  இருந்தார்கள் . தீர்ப்பு  வருவதற்கு  முன்  வெப்  சீரிஸ்  ரிலீஸ்  ஆகக்கூடாது  என்றார்கள். அந்தத்தடையை  மீறி  தயாரிப்பு  நிறுவனம்  இதை  போராடி  ரிலீஸ்  செய்து  இருக்கிறார்கள்   


மொத்தம்  நான்கு  எபிசோடுகள் .முதல்  எபிசோடு  50   நிமிடங்கள்  ,அடுத்த  3  எபிசோடுகளும்  40  டூ 45  நிமிடங்கள்   ஆக  மொத்தம்  180  நிமிடங்கள் ,   ஒரே  சிட்டிங்கில்  3  மணி  நேரத்தில்  பார்த்து  விடலாம். விறுவிறுப்பான சுவராஸ்யமான  சம்பவங்கள்  உண்டு .அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை , குடும்பத்துடன்  பார்க்கலாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


இந்திராணி  முகர்ஜி   ஐ என்  எக்ஸ்  மீடியாவின்  சீஇஓ  ஆகப்பணியாற்றி  வந்தார். அவரது  கணவர்  பீட்டர்  முகர்ஜி  ஸ்டார்  டி வி  யின்  சீஇஓ  ஆக  பணி ஆற்றி  வந்தார். இந்தியாவின்  வலிமை  வாய்ந்த  டாப் 50  பெண்களில்  ஒருவர்  ஆக  இவர்  திகழ்ந்தார். பல  விருதுகளையும்  பெற்றுள்ளார். 


2012 ஆம்  ஆண்டு  இந்திராணி  முகர்ஜி யின்  தங்கை  சீனா  போரா  திடீர்  என  காணாமல்  போகிறார். அவர்  அமெரிக்கா  போய்  இருக்கிறார்  என்று  இந்திராணி  முகர்ஜி  அறிக்கை  விட்ட  பின்  அனைவரும்  அமைதி  ஆகி  விட்டனர் .


ஆனால்  2015  ஆம்  ஆண்டு  வேறு  கேஸ்  விஷய,மாக  ஒரு  டிரைவர்  கைது  செய்யப்பட்டபோது  அவர் அனுமதி  பெறாமல்  ஒரு  துப்பாக்கி  வைத்திருந்தார்.அது  பற்றிய  விசாரனையில்  அந்த  டிரைவர்  இந்திராணி  முகர்ஜியின்  தூண்டுதலின்  பேரில்  சீனா  போராவை  எரித்துக்கொலை  செய்ததாக  ஒப்புதல்  வாக்கு  மூலம்  அளிக்கிறார். உடனே  இந்திராணி  முகர்ஜி  கைது  செய்யப்படுகிறார். சீனா  போரா  இந்திராணி  முகர்ஜியின்  தங்கை  அல்ல , மகள்  தான்  என்ற  உண்மை  தெரிய  வருகிறது 


இந்திராணி  முகர்ஜிkகு  14  வயதாக  இருக்கும்போது  அவரது  சொந்தத்தந்தையால்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாகிறார். அம்மாவிடம்  சொன்னபோது  வேறு  யாரிடமும்  சொல்லாதே  என  எச்சரிக்கை  விடுக்கப்பட்டு  வேறு  உறவினர்  வீட்டுக்கு  அனுப்பி  வைக்கப்படுகிறார். இரண்டு  வருடங்கள்  கழித்து  மீண்டுய்  அம்மா, அப்பா  இருக்கும்  வீட்டுக்கு  வருகிறார். அவரது  16  வது  வயதில்  மீண்டும்  தன்  சொந்த  அப்பாவால்   பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாகிறார். . 


 இந்த  முறை    இந்திராணி  முகர்ஜி  கர்ப்பம்  ஆகிறார். நான்கு  மாதங்கள்  ஆகி  விட்டதால்  கருவைக்கலைக்க  முடியாது  என  டாக்டர்  சொல்லி  விட்டதால்  குழந்தை  பெற்றுக்கொள்கிறார். அந்தக்குழந்தை  தான்  சீனா  போரா 


சித்தார்த்  தாஸ்  என்பவரை  இந்திராணி  முகர்ஜிk  சந்திக்கிறார். இருவருக்கும்  காதல். இவர்கள்  திருமணம்  செய்து  கொள்கிறார்கள் . 1986ல் திருமணம்  ந்டக்கிறது . 1988ல் மைக்கேல்  என்ற  மகன்  பிறக்கிறான். 1990ல்  இந்திராணி  முகர்ஜிk  தன்  இரண்டு  குழந்தைகளையும்  தன்  பெற்றோர்  பொறுப்பில்  விட்டு  விட்டு  கொல்கத்தா  செல்கிறார். கம்ப்யூட்டர்  படிப்பு  படிக்கிறார். 1993ல்  சஞ்சீவ்  கண்னா  என்பவரை  சந்திக்கிறார். அவரைத்திருமணம்  செய்து  கொள்கிறார். விதி  என்ற  மகள் 1998ல்  அவர்களுக்கு  பிறக்கிறது . 2001 ல்   அவர்கள்  மும்பைக்கு  குடி  போகிறார்கள் .


2002  ஆம்  ஆண்டு  இந்திராணி  முகர்ஜிk  பீட்டர்  முகர்ஜியை  சந்திக்கிறார். அவரை  மூன்றாவது  கணவராக  திருமணம்  செய்து  கொள்கிறார்.  மகளான  விதி யை  பீட்டர்  முகர்ஜி  தத்து  எடுத்துக்கொள்கிறார்


தந்து  பெற்றோர்ள்  வளர்ப்பில்  இருக்கும்  தன்  முதல்  மகள்  ஆன  சீனா  போரா , மகன் மைக்கேல்  இருவரையும்  தன்  இருப்பிடத்திற்கு  வரவழைக்கிறார்.  பொது  இடங்களில்  தன்னை  அம்மா  என்று  அழைக்கக்கூடாது , அக்கா  என்று  தான்  சொல்ல  வேண்டும்  என  நிபந்தனை  விதிக்கிறார்வேறு  வழி  இன்றி  அவர்கள்  அதற்கு  ஒத்துக்கொள்கின்றனர். இருவருக்கும்  வசதியான  வாழ்க்கையை  அளிக்கிறார்


 இந்திராணி  முகர்ஜி  யின்  மூன்றாவது  கணவர்  ஆன  பீட்டர்  முகர்ஜியின்  முதல்  மனைவிக்குப்பிறந்த  ராகுல்  என்பவருடன்  சீனா  போராவுக்குப்பழக்கம்  ஏற்படுகிறது .  காதல்  ஆக  மலர்கிறது . இந்தக்காதலுக்கு  பீட்டர்  முகர்ஜி  சம்மதம்  சொல்கிறார். ஆனால்  இந்திராணி  முகர்ஜிக்கு  இது  பிடிக்க  வில்லை . காரணம்  நேரடியாக  இல்லாவிட்டாலும்  சுற்றி  வளைத்து  ராகுல் , சீனா  போரா  இருவருக்கும்  அண்ணன்   தங்கை  உறவு  தான்  ஆகிறது


ஆனால்  அவரது  கண்டிப்பை  மீறி   இருவரும்  காதலிக்கிறார்கள் . சீனா போரா  பணம்  கேட்டு  தன்  அம்மாவை  அடிக்கடி  மிரட்டி  வருகிறார். தராவிட்டால்  தான்  தங்கை  அல்ல  , மகள்  தான்  என்ற  உண்மையை  சொல்லி  விடுவேன்  என்கிறார்


 இதனால்  திட்டம்  போட்டு  இந்திராணி  முகர்ஜி  தன்  கணவர்  பீட்டர்  முகர்ஜி  உடன்  இணைந்து  சீனா  போராவை  கொலை  செய்கிறார்கள் 


சீனா  போராவின்  செல்  ஃபோனை  இந்திராணி  முகர்ஜி  வைத்திருந்து  அதன்  மூலம்  ராகுலுக்கு  பிரேக்கப்  மெசேஜ்  அனுப்பி  சமாளிக்கிறார்.   சீனாபோராவின்  பாஸ்போர்ட்டே  தன்னிடம்  தான்  இருக்கிறது . பின்  எப்படி  அவர்  அமெரிக்கா  சென்று  இருக்க  முடியும்  ? என  ராகுலுக்கு  சந்தேகம். என்ன  காரணத்துக்காக  பிரேக்கப்  என்றும்  அவருக்குக்குழப்பம்.  போலீசில்  புகார்  அளித்திருக்கிறார். தன்  செல்வாக்கால்  லோக்கல்  போலீஸ்  ஸ்டேஷன்  பிரச்சனைகளை  இந்திராணி  முகர்ஜி  சமாளித்து  இருக்கிறார்


இதில்  ஆர்ட்டிஸ்ட்  பர்ஃபார்மென்ஸ்  என்று  எதையும்  , யாரையும்  சொல்ல  முடியாது . எல்லாருமே  நிஜ  கேரக்டர்கள் . இந்திராணி  முகர்ஜி  வில்லாதி  வில்லி  ஆக  இருந்திருக்கிறார்


   வெப்  சீரிஸ்  சித்தரிப்பின்  படி  அவருக்கு  மூன்று  கணவர்கள்  என்று   சொல்லப்பட்டாலும்  அவர்  சின்ன  வயதில்    இரு  வேறு  நபர்களுடன்  ஓடிப்போனவர்  என  விக்கி  பீடியா  சொல்கிறது . ஆக  மொத்தம் லீகல்  ஆக  மூன்று  துணைகள் , இல்லீகல்  ஆக  இரு  துணைகள்   ஆக  மொத்தம்  ஐந்து  துணைகள் 


தன்  அப்பா  தான்  தன்னை  பாலியல்  வன்  கொடுமைக்கு  ஆளாக்கினார்  என்பது  நிஜமான  சம்பவமா? அல்லது  தன்  மேல்  இரக்கம்  வர  இந்திராணி  முகர்ஜி  அடித்து  விட்ட  கட்டுக்கதையா?என்பது  தெரிய வில்லை .டி என்  ஏ  டெஸ்ட்  நடத்தினால்  தான்  உண்மை  வெளியே  வரும், ஆனால்  சீனா  போரா  கொலைக்கேசுக்கு  அவரது  பயலாஜிக்கல்  ஃபாதர்  யார்  என்பது  அவசியம்  இல்லாததால்  அந்த  சோதனை  நடக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  இந்த  கேஸ்  முழுக்க்   முழுக்க  இந்திராணி  முகர்ஜி  சார்பாகவே காட்டப்படுகிறது . அவரது  வக்கீல்  பேட்டி  , இந்திராணி  முகர்ஜி  பேட்டி , மக்ன் , மக்ள்  பேட்டி  என  காட்டப்படுகிறது . மிக  சுவராஸ்யமாக  இருந்தது 


2   போலீஸ்  கமிஷனர்  இந்திராணி  முகர்ஜிக்கு  ஆதர்வாக  செயல்பட்டதால்  பணி  மாற்றம்  பெற்றது , ஐ என்  எக்ஸ்  மீடியா  ஷேர்களை  விற்று  இந்திராணி  முகர்ஜி  வெளியேறியது  போன்ற  பரபரப்பான  உண்மைகள்  சுவராஸ்யம்


  ரசித்த  வசனங்கள் 


1  இந்திராணி  முகர்ஜிk - என் அழகு  எப்படி  இருந்ததுன்னா  ஆண்கள்  என்னைத்திரும்பிப்பார்க்கும்  அளவிற்கு , பெண்கள்  இவளிடம்  என்ன  இருக்கிறது ? என  மயங்கும்  அளவுக்கு 

2  இந்திராணி  முகர்ஜி யின் மகன் மைக்கேல் = என்  அம்மாவிடம்  வசதியான  வாழ்க்கை  வேண்டும், ஆடம்பரமான  வாழ்க்கை  வேண்டும்  என  நாங்கள் எதிர்பார்க்கலை . எல்லார்  முன்னும்  அன்பாக  அம்மா  என்று  அழைக்கும்  உரிமை தான்  கேட்டோம், ஆனால்   கடைசி  வரை  அதை  அவர்  தரவில்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆட்டோ  டிரைவரை  இந்திராணி  முகர்ஜி  நம்பியது எப்படி ?  என்  தெரியவில்லை .காரியம்  முடிந்ததும்  அவனை  வேறு  ஊருக்கு  அனுப்பி  இருக்கலாம், அல்லது  வேறு  உலகத்துக்கே  அனுப்பி  இருக்கலாம். இவ்ளவ்  பெரிய  சாட்சியை  எப்படி  விட்டு  வைத்தார்கள் ? 

2   சீனா  போரா  எதற்காக  பணம்  கேட்டு  அம்மாவை   மிரட்ட  வேண்டும் ? ராகுலிடம்  வசதி  இருக்கு , ராகுலின்  அப்பாவிடம்  இல்லாத  பணமா? 


3  இந்த  காலகட்டத்தில் டைவர்ஸ்  கேஸ்  நடந்து  டைவர்ஸ்  கிடைக்க  4  டூ 6  வருடங்கள்  ஆகின்றன. இந்திராணி  முகர்ஜிக்கு  மட்டும்  டக்  டக்  என  டைவர்ஸ்  எப்படிக்கிடைத்தது ? 


4  இந்திராணி  முகர்ஜி யின்  இரண்டாவது  கணவரும்  இந்தக்கொலைக்கு  உடந்தை  என்கிறார்கள் , மூன்றாவது  கணவரும்  உடந்தை  என்கிறார்கள் . ஆனால்  முதல்  கணவர்  இந்த  கேஸ்  பற்றி  எந்தக்கருத்தும்  சொல்லவில்லை , அது  ஏன் ? அவர்தான்  சீனா  போராவின்  அப்பா  ( என  விக்கி  பீடியா  சொல்கிறது ) 

5   இந்திராணி முகர்ஜியின்  மகன்  மைக்கேலை  ஒரு  மன  நல  மருத்துவமனையில்  அடைத்து  போதை  மருந்து  செலுத்தி  கொடுமைப்படுத்தி  இருக்கிறார்கள் . ஆனால்  அது  தனி  கேசாக  ஃபைல்  செய்யப்படவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  சம்பவங்கள் , ரசிக்கும்படி  இருக்கிறது . பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5