பொதுவாக இரத்த அழுத்தம் நார்மல் அளவு 120 / 80 என இருக்க வேண்டும் வயதானவர்களுக்கு 140 / 90 இருக்கலாம், இதற்கு மேல் இருந்தால் ஹைப்பர் டென்ஷன் அல்லது பிளட் பிரஷர் இருக்கிறது என அர்த்தம் . இரத்த அழுத்தம் எப்போது எப்படி செக் செய்ய வேண்டும் ?
1 காலை நேரத்தில் செக் செய்வது நல்லது . ஏன் எனில் நாம் ஆஃபீஸ் டைம் முடிந்த பின் அலுவலகத்தில் நடந்த பல பிரச்சனைகள் நம் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி பிரஷர் அளவில் மாற்றம் இருக்கலாம், பிளாங்க்காக மனம் இருக்கும்போதே பார்க்க வேண்டும்
2 எப்போதும் இடது கையில் தான் பிளட் பிரஷர் பார்க்க வேண்டும் . இது மருத்துவர்கள் அட்வைஸ் , ஆனால் இப்போதும் பல நர்ஸ்கள் அதை ஃபாலோ பண்ணுவதே இல்லை .பலருக்கும் இந்த தகவலே தெரிவதில்லை
3 ரெகுலராக பிரஷருக்கு மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் காலை உணவுக்குப்பின் மாத்திரை எடுத்துக்கொண்ட பின் 2 மணி நேரம் கழித்து பிரசர் செக் செய்வது நல்லது ., அப்போதுதான் மாத்திரை சாப்பிட்ட பின் பிரஷர் எந்த அளவு கண்ட்ரோலாக இருக்கும் என்பது தெரியும்
4 வேகமாக நடந்து வந்த பின்னோ , சைக்கிள் ஓட்டி வந்த பின்னோ உடனே பி பி செக் செய்யக்கூடாது , அப்போது பிரசர் அதிகமாக இருக்கும், பயணம் முடிந்து ஹாஸ்பிடல் வந்து 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் ஆக இருந்த பின் பி பி செக் செய்ய வேண்டும்
5 சிலருக்கு ஹாஸ்பிடலோ போபியா இருக்கும், அதாவது ஹாஸ்பிடல் படி ஏறினதுமே ஒரு பயம் உள்ளூர தோன்றும் . மனம் பட பட என அடித்துக்கொள்ளும் , இப்படிப்பட்டவர்கள் பி பி மிஷின் ஒன்று வாங்கி வீட்டில் வைத்து அவர்களாகவே செக் செய்து கொள்ளலாம். அல்லது மெடிக்கல் ஷாப் , இரத்த பரிசோதனை நிலையம் ஆகியவற்றில் பி பி செக் செய்து கொள்ளலாம்