Sunday, February 18, 2024

குண்ட்டூர் காரம் -தெலுங்கு /(தமிழ்) -சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் ஆக்சன் ஓவர்லோடட் மசாலா)@ நெட் ஃபிளிக்ஸ்


   200  கோடி  ரூபாய்  செலவு  செய்து  எடுக்கப்பட்டு  171  கோடி  மட்டுமே  வசூல்  ஆன  டப்பா  படம்  இது . பொதுவாக  தெலுங்கு  ரசிகர்கள்  டப்பாப்படங்களை , குப்பைப்படங்களை  ஓட  வைத்து  விடுவார்கள் . இதில்  ஏனோ  மிஸ்  ஆகி  விட்டது. 


  நான்  சின்னப்பையனாக  இருந்தபோது  ஒக்கடு (2003) பட  நாயகனான  மகேஷ்  பாபு , காதல்  தேசம் (1996) பட  அப்பாஸ்  இருவ்ரும்  பெரியப்பா  பையன், சித்தப்பா  பையன்  என்றே  நினைத்தேன். இருவருக்கும்  மைதா  மாவு  மாதிரி  முக  கலர் , இடியே  விழுந்தாலும்  உணர்ச்சி  காட்டாத  அல்லது  காட்டத்தெரியாத  முக  பவனை.. என்ன? ஒருவர்  எப்படியோ  சூப்பர் ஸ்டார்  ஆகி விட்டார்


திரைக்கதை  எழுதுபவர்கள்  அவசியம்  காண  வேண்டிய  படம்  இது , மக்களை  மடையர்கள்  என  நினைத்துக்கண்டபடி  செண்ட்டிமெண்ட்  சீன்களை  புகுத்தினால்  ஓடி  விடும்  என  நினைத்தவர்களுக்கு  மரண  அடி  கொடுத்திருக்கிறார்கள் , மிக்க மகிழ்ச்சி 


ஒரு  நல்ல  தரமான  படத்தை  அடையாளம்  காட்டுவது எந்த  அளவு  முக்கியமோ  அதே  அளவு  ஒரு  குப்பைப்படத்தையும்   அடையாளம்  காட்ட  வேண்டியது  அவசியம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பாட்டுக்கு  சிவனே  அல்லது  பார்வதியேனு  அவர்    உண்டு  அவர் மிளகாய்  மண்டி  உண்டுனு இருக்கார். அப்போ  வில்லன்  ஆன  அவர்  தாத்தா  அவரை  ஆஃபீசுக்கு  வர  வைக்கிறார். வில்லன் ஒரு  அரசியல்வாதி . அவரோட  மகள்  அதாவது  நாயகனின்  அம்மா  சட்ட  அமைச்சர்


ஒரு  ஃபிளாஸ்பேக். நாயகனின்  அம்மா  லவ்  மேரேஜ். ஜாதிக்கட்சித்தலைவரா  இருந்த  தன்  அப்பா  சொல் பேச்சு  கேட்காம  வேற  ஜாதிப்பையனை  லவ்  பண்ணி கல்யாணம்  பண்ணி  குழந்தையும் பெத்துக்கறார்.அப்போ  அதை  தடுக்க  முடியாத  வில்லன்  10 வருசம்  கழிச்சு  தன்  மகளைக்கடத்தி  வந்து  வேறு  ஒரு    மாப்பிள்ளைக்குக்கல்யாணம்  கட்டி  வைத்து  விடுகிறார்.. 25  வருடங்கள்  கழித்துத்தான்  அவருக்கு  நினைவு  வருது. நாயகன்  இருந்தால்  பிரச்சனை. அவனைப்போட்டுத்தள்ளிட்டா  படமே  எடுக்க  முடியாது . அதனால்  அவனை  அழைத்து  வந்து  மிரட்டி  நான்  இவங்க  மகன்  இல்லை  என  எழுதி  வாங்கிக்கலாம்னு  முட்டாள்  தனமா ஐடியா  பண்றார்


நாயகன்  தாத்தா  வீட்டுக்கு  வந்து  தாத்தா  வீட்டில்  எடுபுடியா  இருக்கும்  ஒரு  ஆளின்  மகளை  லவ்  பண்ணீட்டு  இருக்காரு . இதுக்குப்பின்   என்ன  என்ன  மடத்தனமான  திருப்பங்கள்  நிகழ்ந்தன  என்பதுதான்  பின்  பாதி  காதில்  பூச்சுற்றும்  கதை  


லியோ படத்தில்  ஹீரோவை  ஆளாளுக்கு  வந்து  மிரட்டுவங்க . நீதானே? லியோ ஒத்துக்கோ ஒத்துக்கோ. அந்த  கான்செப்ட்டையே  சமூக  வலைத்தளங்களில்  ஆளாளுக்கு  எள்ளி  நகையாடினார்கள் . இதில்  அடுத்தடுத்து  நாயகனை  வீட்டு க்கு  வர  வைத்து  வில்லன்  இந்த  பத்திரத்தில்  கையெழுத்துப்போடு  என  கேட்டுக்கொண்டே  இருக்கிறார்


நாயகன்  ஆக  மகேஷ்  பாபு .. 500  பேர்  வந்தாலும்  அசராமல்  அடிக்கிறார். நாயகியிடம்  ஜொள்  விடுகிறார். இதை  விட  ஒரு  ஆக்சன்  ஹீரோ  என்ன  செய்யனும் ?


நாயகி  ஆக  ஸ்ரீ லீலா  அழகு  பொம்மை  ஆக  வருகிறார்.பணக்கார  வீட்டில்  இருந்தாலும்  பாவம்  அரை  குறை  டிரஸ்  உடன்  அலைகிறார். ஒரு  டப்பாங்குத்துப்பாட்டுக்கு  செம குத்தாட்டம்  போட்டிருக்கிறார். சி  செண்ட்டர்  ரசிகர்கள்  எல்லாம்  விசில்  அடித்து  ரசிப்பார்கள் 


அம்மா  ஆக  ரம்யா  கிருஷ்ணன்.  ஓவர்  மேக்கப் , ஆனால்  முகத்தில்  நீலாம்பரியின்  கம்பீரம்  அப்படியே  இருக்கிறது . தாத்தா  ஆக  பிரகாஷ்  ராஜ். வயதான  கெட்டப்பில்  பரிதாபம்  ஆக  இருக்கிறார்


  தாத்தா  தான்  வில்லன் , பேரன்  தான்  நாயகன்  என்று  ஆன பின்  திரைக்கதை  படுத்து  விடுகிறது 


மீனாட்சி சவுத்ரி , ஜெகபதி பாபு , ஜெயராம்  என  வீணடிக்கபப்ட்ட  நல்ல  கலைஞர்கள்  உண்டு 


எஸ்  தமன்  இசையில்  ஆறு  பாடல்கள்  . அதில்  இரண்டு  செம  ஹிட் . பின்னணி  இசை  ஓக்கே  ரகம். க்ளைமாக்ஸ்  குத்துப்பாட்டுக்கு  நடனம்  அமைத்தவர்  கலக்கி  இருக்கிறார்


மனோஜ்  பரமஹம்சா , வினோத்  இருவரும் ஒளிப்பதிவு . காட்சிகளை  பிரம்மாண்டமாகப்படம்  ஆக்கி  இருக்கிறார்கள் . 


நவீன்  நூலி  தான்  எடிட்டிங் . 159  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 


த்ரிவிக்ரம்  சீனிவாஸ்  தான் இயக்குநர். ஆந்திராவில்  அதிக  சம்பளம்  வாங்கும்  ஸ்க்ரிப்ட்  ரைட்டர்  கம்  டைரக்டர். யானைக்கு  அடி  சறுக்கி  விட்டது 


சபாஷ்  டைரக்டர்


1  கொஞ்சம்  கூட  நம்பகத்தன்மையே  இல்லாத  ஒரு  கதையை  நம்பி  200 கோடி  செலவு  பண்ண  தயாரிப்பாளரை  ஒத்துக்கொள்ள வைத்த்து 


2  க்ளைமாக்ஸ்  குத்தாட்ட;ப்பாட்டை  படம்  எடுத்த  விதம் 



 ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  அம்மா  தன்  பிள்ளையை  விட்டுப்போகனும்னா  செத்துத்தான்  போகனும் 


2   மரத்து  மேல  கல்லெறிஞ்சா பழம்  கிடைக்கும், சேற்றின் மேல்  கல்  எறிஞ்சா  நம் மீதுதான்  சேறு  விழும்


3   சும்மாவே  உன்  கண்ணைப்பார்க்க முடியலை, இதுல  ஐ லைனர்  வேற  போட்டுகிட்டா  யப்பா 


4   எல்லாப்பொண்ணுங்க  கிட்டேயும்  இப்படித்தான்  பேசுவியா?


  ரொம்ப  அழகான  பெண்ணுங்க  கிட்டே  மட்டும் 


5  சாப்பாடு  வேண்டாம்னு  சொன்னா  நாள்  முழுக்க  பசியோடு  இருக்கனும், அம்மா  வேண்டாம்னு  சொன்னா  வாழ்க்கை  பூரா  கண்ணீரோடுதான்  இருக்கனும்


6   எனக்குப்பதவி  தராம  உங்க  மகளுக்குப்பதவி  தர  அவ  என்ன  பெருசா  கிழிச்சுட்டா? ரெண்டு  கல்யானம்  பண்ணுனது  எல்லாம்  ஒரு  சாதனையா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  கோடி  ரூபா  சம்பளம்  பேசி  ஹீரோ  வை  அடிக்க  ஆள் வைக்கும்  வில்லன் ரெண்டு  கண்ணும்  தெரியாத  ஆளையா  செலக்ட்  பண்ணுவான்? அய்யோ  பாவம் 


2  ஒரு  முக்கியமான  வில்லனைப்பார்க்க  ஹீரோ ஸ்பாட்டுக்கு  வரும்போது  அங்கே  ஒரு  மொட்டையன்  பஜ்ஜி சுட்டுட்டு  இருக்கான், அவனிடம்  விசாரித்தால்  ஒரு  ஆளைக்காட்ட  அவன்  கூட  ஃபைட்  போடுகிறார். அப்றம்  தான்  அந்த  பஜ்ஜி  சுட்ட  மொட்டையன்  தான் நிஜ  பாஸ்  என  ட்விஸ்ட் வருது , இது குருதிப்புனல்  ட்விஸ்ட் 


3    நாயகனை  அரெஸ்ட்  பண்ண  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  அவரைக்கண்டு  பயந்து  ஓடுவ்து  எல்லாம்  டூ மச்  மசாலா , ஹீரோயிசம்


4  மத்திய  அமைச்சராக  இருக்கும் ஒரு  நபர்  25  வருடஙகளாக  அப்பாவுக்கு  பயந்து  கொண்டா  இருப்பார்?  ஒரு  நாள்  கூட  அவரை  ஏமாற்றி  புருசனை , மகனை  பார்க்க  வர  முடியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  மாதிரி  குப்பைப்படங்களைப்பார்க்கவும்  ஒரு ரசிகர்  பட்டாளம்  இருக்கிறது . ரேட்டிங்  1/ 5 



Guntur Kaaram
Theatrical release poster
Directed byTrivikram Srinivas
Written byTrivikram Srinivas
Produced byS. Radha Krishna
Starring
Cinematography
Edited byNaveen Nooli
Music byThaman S
Production
company
Release date
  • 12 January 2024
Running time
159 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget200 crore[2][3]
Box officeest. ₹171.5 crore[4]