Wednesday, February 14, 2024

THREE OF US (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


69 வது  ஃபிலிம் ஃபேர்     ஃபெஸ்டிவலில்  கலந்து  கொண்டு  எட்டு  பிரிவுகளில் போட்டி இட்டு  சிறந்த  நடிகை , சிறந்த  ஒளிப்பதிவு  என  இரு  விருதுகளை வென்ற  படம். இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்   24/11/2022 ல்  திரையிடப்பட்டாலும்  தியேட்டர்களில் ரிலீஸ்  ஆனது    3/11/2023ல்  தான். 

தமிழ்  சினிமாவின்  முதல்  ஸ்கூல்  ரீயூனியன்  கான்செப்ட்டில்  வந்த  படம் 1988ல் ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம் .2005 ல்  ரிலீஸ்  ஆன ஒரு  கல்லூரியின்  கதை  காலேஜ்  ரியூனியன் சப்ஜெக்ட் . 2018ல் ரிலீஸ்  ஆன 96  கிளாசிக்  மூவி  ஆஃப்  ரீ யூனியன்  சப்ஜெக்ட் 


இந்தப்படத்தின்  நாயகி  ஷெஃபாலி  ஷா  டெல்லி  க்ரைம் - நிர்பயா வழக்கு   (ஹிந்தி) என்ற  வெப்சீரிசில் கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தியவர். போலீஸ்  கமிஷனராக  அவர்  காட்டிய  கம்பீரம்  கண் முன்  நிற்கிறது. அந்த  கேரக்டரில்  இருந்து  முற்றிலும்  மாறுபட்ட  காமெடியான  மாமியார்  ரோலில்  டார்லிங்க் (  ஹிந்தி ) கில் கலக்கினார். இந்தப்படத்தில்  அதிகம்  வசனம்  பேசாமல்  கண்களாலேயே  கதை  சொல்லும்   பாத்திரம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  டிமன்ஷியா  என்ற  ஞாபக  மறதி  நோயால்  பாதிக்கப்பட்டவர் .  திருமணம்  ஆகி  25  வருடங்கள்  ஆன பின்  திடீர்  என  இவருக்கு  இந்த  நோய்  தாக்கி  இருக்கிறது. இந்த  நோயால்  பாதிக்கப்பட்டால்  மூளை  நரம்புகள் பலவீனம்  அடைந்து  ஞாபக  சக்தியை  கொஞ்சம்  கொஞ்சமாக  இழக்க  நேரிடும். அதனால்   நாயகி  தன்  பழைய  நினைவுகளை  மீட்டெடுக்க  தான்  ஸ்கூலில்  படித்த  தருணங்களை  நினைவுகூர  பல  ஆயிரம்  கிமீ  தூரம்  தள்ளி  இருக்கும்  ஊருக்கு  செல்ல  முடிவு  எடுக்கிறாள் ., கூடவே  அவள்  கணவனும்  வருகிறான்


 தான்  படித்த   ஸ்கூல் ,  தான்  சிறுமியாக  இருந்தபோது உலவிய  இடங்கள் , சந்தித்த  மனிதர்கள்  ஆகியோருடன்  தன் மகிழ்ச்சியை  வெளிப்படுதுகிறாள் . அப்போது  தான்  ஸ்கூலில்  படித்தபோது பழக்கம்  ஆன  க்ளாஸ்மேட்  ஆன  நாயகனையும்  சந்திக்கிறாள் 


 நாயகி  நாயகனை  ச்ந்தித்த  பின்  அவரது  முகத்தில்  சந்தோஷம்  தாண்டவம்  ஆடுவதை  அவள்  கணவன்  கவனிக்கிறார். அதே  போல்  நாயகியின்  க்ளாஸ்மேட்  ஆன  நாயகனின்  மனைவியும்  சில  மாற்றங்களை  உணர்கிறாள் 


இந்த  நான்கு  பேர்  வாழ்க்கையிலும்  பிறகு  நிகழ்ந்த  சம்பவங்கள்தான் மீதி  திரைக்கதை 


 ஆக்சுவலாக  இதற்கு  ஃபோர்  ஆஃப்  அஸ்  என  டைட்டில் வைத்திருந்தால்  இன்னும்  பொருத்தமாக  இருந்திருக்கும்


நாயகி  ஆக ஷெஃபாலி  ஷா  அற்புதமாக  நடித்திருக்கிறார். அவரது பளிங்குக்கண்களே  ஒரு  கவிதை  பாடி விட்டு  செல்கின்றன. அவரது  உடல் மொழி  அட்டகாசம். ஒரு  சின்ன  அசைவு  கூட  ஓவர்  ஆக்ட்டிங்காக  இல்லை .


 நாயகன்  ஆக , நாயகியின்  க்ளாஸ் மேட்  ஆக   ஜெய்தீப்  அண்டர்ப்ளே  ஆக்டிங்கின்  மகத்துவத்தை  உணர்த்துகிறார். நாயகியின்  ஆர்ப்பாட்டமான  முக  பாவங்களுக்கு  ஈடு  கொடுத்து  அமைதியாக  நடித்து   தன்  இருப்பை உணர்த்துகிறார்


நாயகியின்  கணவனாக  ஸ்வானந்த்  கிர்கிரே அருமையான  நடிப்பு, இவர்  ஒரு  இயக்குநர் , ப்ளே  பேக்  சிங்கர் பாடல்  ஆசிரியர் , திரைக்கதை  ஆசிரியர்,  வசனகர்த்தாவும்  கூட இவரது  பன்முகத்தன்மையையும்  ஓரமாக  மூட்டை  கட்டி  வைத்து  விட்டு  எளிமையான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


நாயகியின்  க்ளாஸ்  மேட்  ஆன  நாயகனின்  ,மனைவியாக காதம்பரி  கடம்  ஒரு  உற்சாக  மின்னலாக  நடித்திருக்கிறார். இவருக்கு  அதிக    காட்சிகள்  இல்லாதது  ஒரு  குறை 


99  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  அளவு  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார் சம்யுக்தா  காஜா . அவினாஷ்  ஆனும்  என்பவர்  பிரமாதமாக  ஒளிப்பதிவு செய்து  விருதை  தட்டிக்கொண்டு  சென்று  விட்டார். காட்சிகள்  எல்லாம்  ஓவியம் 


அலோகானந்தா  தாஸ்குப்தா  தான்  இசை .  பின்னணி  இசையில்  மிக  மெலோடியாக    மென்மையாக  மீட்டி  இருக்கிறார். பல  இடங்களில்  மவுனம், நிசப்தம் தான்  இசை  மொழி 


அவினாஷ்  அருண்  என்பவர்  தான்  திரைக்கதை , இக்கம் . அருமையான  மெலோ  டிராமா . திரைக்கதையில்  இருவரும் , வசனம்  எழுத  வேறு  இருவரும்   உதவி  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனும் , நாயகியும்  பல  வருடங்களுக்குப்பின்  சந்திக்கும்போது  நாயகியின்  கணவர்  நாசூக்காக  கிளம்புவதும்  அவர்களை  தனிமையில்  விடுவதும்  அருமை 


2  சந்திப்புக்குப்பின்  நாயகியின்  கணவனுக்கு  ஏற்படும்  குற்ற  உணர்ச்சி , தாழ்வு  மனப்பன்மை  யை  உடல்  மொழியால்  உணர்த்துவது  அருமை . நான்  உன்னை  சந்தோஷமா  வைக்கலையோ  என  மருகுவது  அபாரம் 


3    96  படத்தில்  நாயகனும் , நாயகியும்  உடல்  ரீதியாக  இணைவார்களா?  என்ற  எதிர்பார்ப்பை  ப்டம்  நெடுக  விதைத்திருந்தார்  இயக்குநர். ஆனால்  இதில்  மிக  கண்ணியமாக  காட்சிகளை  நகர்த்தி  இருப்பது    சிறப்பு 


4    ஃபிளாஸ்பேக்  காட்சிகளே  வைக்காமல்  யூகமாகவே  இவ்ர்கள்  நட்பு  இப்படித்தான்  இருந்திருக்கும்  என  உணர்த்துவது  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  பிரச்சனைகளை  நான்   ஹேண்டில்  பண்றேனா? இல்லை , பிரச்சனைகள்  என்னை  ஹேண்டில்  பண்ணுதா? என்பதே  சில  சமயங்கள்  தெரியறதில்லை 


2  இந்த  ஊரை  விட்டுட்டு  யாராலும்  வேற  இடம்  போக  முடியாது 

ஆனா , நான்  போய்ட்டேனே?

 அதான்  திரும்ப  வந்துட்டியே?


3  எனக்கு  இந்த  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  ஒர்க்  பிடிக்கலை ,  எப்போ வேணா  நீங்க இறக்கலாம்னு  பொய்  சொல்லி, பயமுறுத்தியே  ஆள்  சேர்த்த  வேண்டி  இருக்கு ‘


4    தம்பதிகளுக்கு  டைவர்ஸ்  வாங்கித்தரும்  கோர்ட்  செக்சனில்  நான்  ஒர்க் பண்றேன்


 அப்போ  யார்  யார்  சேர்ந்து  வாழலாம்? யார்  யார்  பிரியலாம் ? என்பதை  நீ  தான்  தீர்மானிப்பே?


 நோ நோ  அதை  அவங்கதான்  தீர்மானிப்பாங்க 


5  நாளை  என்ற  நாள்  வரனும்னா  இன்று  போய்க்கழியனும் 


6  உன்னுடைய  எந்தக்கவிதையைப்படிச்சாலும்  உன்னுடையதுதான்  என  அடையாளம்  கண்டு கொள்வேன்.  உன்    அறியாமை அந்தக்கவிதையில்  ஒளிந்திருக்கும் 


7    பதினெட்டு  வருசமா   உங்க  கூட  குடும்பம்  நடத்தறேன், என்னைப்பற்றி  ஒரு  வரி  கூட  எழுதுனது    இல்லை , 25  வருடங்கள்  முன் உங்க  கூடப்படிச்ச  பொண்ணை  ஒரு  நிமிசம்  பார்த்ததும்  ஒரு முழுக்கவிதையே  எழுதிட்டீங்க ? 


8  உங்களை  இம்ப்ரெஸ்  பண்றதுக்காகத்தான்  டீ  போடப்போறார், பொதுவா  அவர்  கிச்சன்  ரூம்  பக்கம் தலைவெச்சே  படுக்க  மாட்டார் 


9  ஹிந்தில  19  என்ற  எண்ணைப்பார்க்கும்போது  ஒருவரோடு  ஒருவர்  பிணக்கு  கொண்டு  முறுக்கிக்கொண்டு  விலகி  நிற்பதைப்போலத்தோன்றும்


10  நீ  என்  கூட  வாழ்ந்த  இத்தனை  வருட  வாழ்க்கைல  என்னைக்காவது  ஒரு  நாளாவது  சந்தோஷமா  இருந்ததுண்டா?

ஏன்  கேட்கறீங்க ? 

சும்மா  தான்  பதில்  சொல்லு

புரியுது , நான்  இப்போ  என்  கிளாஸ்மேட்டோடு  சந்தோஷமா  இருந்தது  உங்களை  அப்செட்  பண்ண  வெச்சிருக்கு 


11   நாம்  இருவரும்   கடைசியா  சந்தோஷமா  இருந்த  தருணம்  எப்போ?னு  நீங்க  கேட்டீங்களே? அதையே  நான்  மாற்றிக்கேட்கறேன். நாம்  இருவரும்  சோகமாக  இருந்த  தருணம்  எப்போ ?


12  யாரும்  ரொட்டீன்  லைஃபை  நினைவு  வெச்சுட்டு  இருக்க  மாட்டாங்க 


13  நம்  இருவருக்குமிடையேயான  உறவில்    எந்த  ஆச்சரியமும்  இல்லை . உறவு  நடந்தது  அவ்ளோதான் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது ஒரு  ஃபீல்  குட்  மூவி . ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்சோ , பரபரப்பான , விறுவிறுப்பான  காட்சிகளோ  இருக்காது . மகேதிரன் , பாலும்கேந்திரா  ரசிகர்கள்  பார்க்கலாம், ரஜினி , விஜய் , சிரஞ்சீவி  ரசிகர்கள்  தவிர்க்கவும் .  ரேட்டிங்  3 / 5 


டிஸ்கி -  இந்தப்படம்  தியேட்டரில்  ரிலீஸ்  ஆகி சில  மாதங்களும், ஓடிடியில்  ரிலீஸ்  ஆகி  ஒரு  மாதமும் ஆகின்றன. ஆனால்  இதுவரை  தமிழில்  எந்த  ஒரு  விமர்சகரும்  விமர்சிக்காதது  ஏன்? என  தெரியவில்லை . தமிழில்  வெளி  வரும்  முதல் (எழுத்து ) விமர்சனம்  இதுதான்  என  பெருமையாகச்சொல்லலாமா?  தமிழில்  யாருமே  இதை  இன்னும்  கண்டுகொள்ளவில்லையே  ? என  வருத்தப்படலாமா? தெரியவில்லை 


Three of Us
Theatrical Release Poster
Directed byAvinash Arun
Written by
  • Avinash Arun
  • Omkar Achyut Barve
  • Arpita Chatterjee
Dialogues byVarun Grover
Shoaib Zulfi Nazeer
Produced by
  • Sanjay Routray
  • Sarita Patil
  • Dikssha Jyote Routray
  • Bunny Vas
Starring
CinematographyAvinash Arun
Edited bySanyukta Kaza
Music byAlokananda Dasgupta
Production
companies
Distributed byKarmic Films
Release dates
  • 24 November 2022 (IFFI)
  • 3 November 2023 (India)
Running time
99 minutes[1]
CountryIndia
LanguageHindi