இந்தப்படத்துக்கு முதலில் எட்டப்பன் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது . மற்றவர்களை ஏமாற்றி , மிரட்டி பிழைக்கும் நாயகனின் கதை என்பதால் டைட்டில் அப்படி வைத்தார்கள், ஆனால் நிஜமான எட்டப்பன் பரம்பரை வாரிசுகள் டைட்டிலை எதிர்த்ததால் அது பின் மாற்றப்பட்டது . சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற ஹிட் பாட்டு உண்டு . அதை ரீமேக் பண்ணி ஒரு பாட்டாக சேர்த்திருக்கிறார்கள் , படத்தின் டைட்டிலையும் பாடலின் முதல் வரியிலிருந்து உருவி இருக்கிறார்கள்
இந்தப்படம் ரிலீஸ் ஆனபோது கமர்ஷியல் ஆக போகவில்லை . ஃபிளாப் படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன், நாயகி, தோழன் மூவரும் சின்ன வயதில் இருந்தே ஒரே ஸ்கூல், ஒரே க்ளாசில் படித்தவர்கள் . இருவருமே நாயகி மீது ஆசை வைக்க நாயகி யார் பெரிய ஆள் ஆகி டாக்டர் ஆகிறீர்களோ அவர்களையே திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள். ஏழாம் வகுப்புப்படிக்கும்போது நாயகியின் அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி விட நாயகி ஊரை விட்டுப்போகிறார்
பல வருடங்கள் கழித்து நாயகனின் நண்பன் நிஜமாகவே டாக்டர் ஆகி விடுகிறான், நாய்கியைப்பார்த்து ப்ரப்போஸ் செய்து திருமணத்துக்கும் ஓக்கே வாங்கி விடுகிறான். ஆனால் நாயகன் வளர்ப்பு சரி இல்லாததால் பிளாக்மெய்லர் ஆகி விடுகிறான்
அதாவது ஆட்கள் எசகுபிசகாக பெண்ணிடம் இருக்கும்போது அதை ஃபோட்டோ எடுத்து அதைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் இருப்பவன்
நாயகனின் நண்பன் ஒரு முறை எதிர்பாராத விதமாக ஒரு கொலைக்கேசில் மாட்டிக்கொள்கிறான். ஆனால் உண்மையான கொலைகாரன் யார் ? என்று நாயகனுக்குத்தெரியும். நாயகனின் தோழனை கொலைக்கேசில் இருந்து விடுவிக்க வேண்டும் எனில் நாயகி தன்னைத்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கண்டிசன் போடுகிறான் . இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஸ்ரீ காந்த் ஃபங்க் வைத்த ஹேர் ஸ்டைல் உடன் வில்லன் ரோல் செய்து இருக்கிறார். ஆண்ட்டி ஹீரோ . அவருக்கு பெரிய அளவில் செட் ஆகவில்லை . நாயக்னின் தோழன் ஆக அர்விந்த் ஆகாஷ் நடித்திருக்கிறார், சுமாரான நடிப்பு . நாயகி ஆக நவ்யா நாயல் அ ழகாக வந்து போகிறார்
சத்யன் காமெடி ரோல்.,காதல் தண்டபாணி , போஸ் வெங்கட் , நீலிமா ராணி அனைவரும் வந்த வரை ஓக்கே ரகம்
விஜய் ஆண்ட்டனி இசையில் ஐந்து பாடல்கள் அவற்றில் மூன்று செம ஹிட் . பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . நாயகியை கிலாமராகக்காட்டுவதில் ஸ்லீவ்லெஸ் டிரெசில் கவர் பண்ணுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்
சுரேஷ் கோட்டியின் எடிட்டிங்கில் இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது
ஆர் கே வித்யாதரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். பின் பாதி திரைக்கதையில் தடுமாற்றம்
சபாஷ் டைரக்டர்
1 நவ்யா நாயரின் அழகு, இளமை படத்துக்குப்பெரிய பிளஸ்
2 விஜய் ஆண்ட்டனியின் இசையில் பாடல்கள் ஹிட் ஆனது பிளஸ்
செம ஹிட் சாங்க்ஸ்
1 பூவே பூவே சொல்லிடு இது காதல் தானா? (டைட்டில் சாங்)
2 நச்சிலோ நச்சிலோ ( ஓப்பனிங் சாங் )
3 நான் உன்னைப்பார்க்கும் நேரம் நீ விண்ணைப்பார்ப்பது ஏனோ? ( ட்ரீம் டூயட்)
4 ஓ ரசிக்கும் சீமானே ஜொலிக்கும் உடை அணிந்து ( குத்தாட்டப்பாட்டு )
5 கோடிக்கோடி மின்னல்கள் ( மப்புப்பாட்டு )
ரசித்த வசனங்கள்
1 வெளில தான் நான் GUN காமு, ஆனா நிஜத்தில் நான் காமுகன்
2 தான் லவ் பண்ற பொண்ணு எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்னு நினைக்கறவன் தான் உண்மையான லவ்வர்
3 பணம் இந்த உலகத்துல என்ன வேணா சாதிக்கும்
4 இந்த உலகத்துல ஒவ்வொரு மனுசன் கிட்டேயும் ஒரு ரகசியம் இருக்கு
5 உனக்கு லைஃப்ல எல்லாமே ஈசியா கிடைச்சிடுச்சு, ஆனா எனக்கு எதுவுமே கிடைக்கலை
6 ஒரு பெண்ணை அழகுக்காக லவ் பண்ணினா அவ அழகு போனதும் லவ்வும் போயிடும், பணத்துக்காக லவ் பண்ணினா பணம் போனதும் லவ்வும் போயிடும் , எதுக்காக லவ் பண்றோம்னே தெரியாம லவ் பண்ணினா அது தான் பிளைண்ட் லவ் , கடைசி வரை இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி வீட்டுக்குத்தெரியாமல் நாயகனுக்கு ஃபோன் பண்ணி என்னைப்பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரைத்துரத்த ஐடியா பண்ணு என சொல்கிறாள். பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஏன் ஃபோன் செய்கிறாள்? பாத்ரூமில் உள்ளே தாழ் போட்டு ஷவரை ஓப்பன் பண்ணி விட்டு தண்ணீர் சத்தம் வெளியே கேட்கும்போது டக்னு ஃபோன் பண்ணி இருக்கலாமே?
2 நாயகன் தன் தோழியிடம் முதன் முதலாக லவ் ப்ரப்போஸ் பண்ண வரும்போது கறுப்புக்கலர் சர்ட் அணிந்து வருகிறார். இந்துக்களுக்கு அது அமங்கலமான நிறம் ஆச்சே? இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்கப்போகும்போதுதானே அந்தக்கலர் டிரஸ் போட்டு போவாங்க ?
3 கைதியை அரெஸ்ட் பண்ணி ஜீப்பில் போகும் போலீஸ் அவனை கை விலங்கிட்டு ஜீப்பில் லாக் பண்ணி வைக்க மாட்டார்களா? வழியில் ஒரு கலவரத்தை டீல் பண்ண எல்லா போலீசும் களம் இறங்க கைதி ஈசியாக தப்பிக்கிறான். அட்லீஸ்ட் ஜீப்பை விட்டு இறங்கும்போதாவது போலீஸ் கை விலங்கிட்டு லாக் பண்ணி இருக்கலாமே?
4 நாயகன் ஒரு கிரிமினல், நாயகியை அடைய பிளான் போடறான். நாயகியின் காதலனை சிக்கலில் மாட்ட வைத்து நாயகியை அடைய முயற்சிக்கும்போது நாயகி “ உடமபை வேணா ஒருவன் பலவந்தமா அடையலாம், ஆனா மனசை அடைய முடியாது என டயலாக் பேசிய்தும் திருந்துகிறானாம், இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு >?
5 வில்லன் போல் நடக்கும் நாயகன் கூட நாயகிக்கு நான்கு டூயட், ஆனா நாயகி காதலிக்கும் காதலன் கூட ஒருன் டூயட் கூட இல்லை , அப்றம் எப்படி ரசிகன் மனதில் நாயகி தன் காதலன் கூட சேரனும்னு நினைப்பான் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் யூ/ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான படம் தான் . பாட்டுக்காகவும் , நாயகிக்காகவும் ஆண்கள் பார்க்கலாம் . ரேட்டிங் 2/ 5
Rasikkum Seemane | |
---|---|
Directed by | R. K. Vidhyadaran |
Produced by | Thirumalai |
Starring | |
Cinematography | M. V. Panneerselvam |
Edited by | Suresh M. Koti |
Music by | Vijay Antony |
Production company | Trans India |
Release date |
|
Country | India |
Language | Tamil |