பிரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயன் மார்க்கெட் மாவீரன் படத்தால் நிமிர்ந்தது . சமீபத்தில் டி இமான் சர்ச்சைக்குப்பின் இறங்கு முகத்தில் இருக்கும் அவரது இமேஜால் படத்தின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா? என்ற சந்தேகங்களுக்கு இடையே ரிலீஸ் ஆகி இருக்கும் படம் குழந்தைகள் , சிறுவர்களைக்கவரும் விதமான ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான படம் என்ற பெருமையைப்பெறுகிறது
1984 ல் ரிலீஸ் ஆன மை டியர் குட்டிச்சாத்தான் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது . இந்தியாவின் முதல் 3 டி படம் என்ற அந்தஸ்துடன் வந்த அப்படம் குழந்தைகளைக்கவரும் படமாக அமைந்தது . 1987ல் ரிலீஸ் ஆன ஹிந்திப்படமான மிஸ்டர் இண்டியா தமிழில் கே பாக்யராஜ் நடிக்க 1989ல் என் ரத்தத்தின் ரத்தமே என்ற டைட்டிலில் ரீமேக் ஆகி ரிலீஸ் ஆகி தோல்வியை சந்தித்தது . அதில் வரும் அரூபக்காட்சிகள் , சாட்டை அந்தரத்தில் உயர்ந்து அடிப்பது போன்ற காட்சிகள் எடுபடவில்லை .
ஸ்பாய்லர் அலெர்ட்
பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் இருக்கும் வாயுவை எடுக்கும் முயற்சியில் வில்லன் இருக்கிறான். அப்படி அவன் செய்தால் அது பூமியை பாதிக்கும், தங்கள் கிரகத்தையும் எதிர் காலத்தில் பாதிக்கும் என்று கருதிய வேற்றுக்கிரக வாசிகள் தங்களின் பிரதிநிதியை பூமிக்கு அனுப்புகின்றன
வேற்றுக்கிரகவாசியின் விண்கலத்தின் ஒரு ஸ்பார்க் வில்லன் கையில் சிக்கிக்கொள்கிறது . அதை வைத்து வில்லன் தன் திட்டத்தை டெவலப் செய்ய ஆரம்பிக்கிறான்
நாயகன் ஒரு இயற்கை விவசாயி . பிழைப்பு தேடி பட்டணம் வருகிறான். வேற்றுக்கிரக வாசி நாயகனுடன் நட்புக்கொள்கிறது . வில்லனிடம் இருந்து நாயகனைக்காப்பாற்றும் முயற்சியில் அந்த வேற்றுக்கிரகவாசி வில்லனிடம் மாட்டிக்கொள்கிறது . நாயகன் அதை எப்படிக்காப்பாற்றினான் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக சிவகார்த்திகேயன் கலகலப்பாக படத்தைக்கொண்டு போகிறார். சின்னக்குழந்தைகளுக்குப்பிடித்தமான அவர் இப்படத்தில் மேலும் ஒரு படி ஏறி வாண்டுகளின் மோஸ்ட் வாண்ட்டட் ஹீரோ ஆகிறார். மாவீரன் பாதிப்பில் சில சூப்பர் பவர் காட்சிகளும் உண்டு
நாயகி ஆக ரகுல் ப்ரீத்தி சிங் , அதிகம் வேலை இல்லை , மாமூல் தமிழ் சினிமாவின் அக்மார்க் நாயகி வேடம் . இஷா கோபிகர் ஒரு முக்கிய ரோலில் வருகிறார் ஆனால் ஏமாற்றமே
வேற்றுக்கிரக வாசியாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்க குரல் கொடுத்து இருப்பவர் சித்தார்த்
நாயகனின் அம்மாவாக பானுப்ரியா . அழகன் படத்தில் கோழி கூவும் நேரம் ஆச்சு பாட்டில் அவரை ரசித்து விட்டு இப்போது அம்மா ரோலில் பார்க்க சங்கடமாக இருக்கிறது
பால சரவணன், கருணாகரன் , யோகிபாபு ஆகியோர் காமெடிக்கு , பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் மோசம் இல்லை
வில்லன் யாரோ பாம்பேக்காரர் போல எடுபடவில்லை
155 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர் ரூபன் . பின் பாதிக்காட்சிகள் இழுவை
ஏ ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், பின்னணி இசை ஓக்கே ரகம்
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப்பெரிய பலம், ஆங்கிலப்படம் பார்க்கும் பிரமிப்பைத்தருகிறது . விஎஃப் எக்ஸ் ஒர்க் , விஷூவல் எஃபக்ட்ஸ் பிரமாதம்
கே மணிகண்டன் உதவி வசனகர்த்தாவாக இருக்க திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரவிக்குமார்
சபாஷ் டைரக்டர்
1 வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதே பூமியை அழிக்கத்தான் என்ற கான்செப்ட்டிலேயே ஹாலிவுட் படங்கள் பார்த்த நமக்கு நன்மை செய்யும் ஏலியன் புதுசு . பாசிட்டிவ் வைப்ரேஷன்
2 நமக்கு அறிமுகம் ஆன நாயகன், நாயகியை விட அறிமுகமே இல்லாத ஏலியன் கேரக்டர் டிசைன் கச்சிதமாக நம் மனதில் தங்கும்படி , மனதைக்கவரும்படி இயக்குநர் உருவாக்கிய விதம்
3 நாயகி மேல் மாடியிலிருந்து பூந்தொட்டி விழ இருக்க அதை பூக்குவியலாகக்கொட்ட வைத்து ரொமாண்டிக் சீன் ஆக மாற்றிய லாவகம் அழகு
ரசித்த வசனங்கள்
1 தோற்றுப்போகும் எல்லாமே நம்ம தப்பால நடக்கறதில்லை , நம்மைச்சுற்றி இருப்பவர்கள் செய்யும் தப்பால நடக்குது
2 ஐ டி கார்டுல . ஆதார் கார்டுல நம்ம முகம் எல்லாம் ஏலியன் மாதிரி இருக்கும், ஆனா ஏலியன் முகம் ஐடி கார்டில் எப்படி இருக்கும் ?
3 சாரி, நீ என்னை லவ் பண்றதா நினைச்சு திட்டிட்டேன் சாரி
‘’ பரவால்லைங்க , லவ்வர் கோபத்துல திட்டுவது சகஜம் தான்
4 ஹாய் ஏலியன் , பல லட்ச்சம் கிமீ தாண்டியா பூமி வந்தே? டோல்கேட் சார்ஜ் கட்டியே ஏழை ஆகி இருப்பியே?
5 விவசாயம் பற்றிப்பேசுனா வேடிக்கை பார்க்கக்கூட ஆட்கள் இருப்பதில்லை
6 அதோ அங்கே நட்சத்திரம் தெரியுதா?
மிஸ் ! நிலாவே தெரியுது
7 ஒண்ணு அழிஞ்சாதான் ஒண்ணு வாழும்.
அப்போ நீ அழியறியா? நாங்க வாழ்ந்துக்கறோம்
8 நல்லா விளைச்சல் வந்தா மட்டும் போதாது , நல்லதா விளைக்கனும்
9 என்னது ? ஏற்பாடு பண்ற ஆளுங்களா? நம்மை மாமாங்கறான்
10 வழக்கமா ஏலியன்கள் அமெரிக்காவை அழிக்கத்தானே வரும் ?
ஏன் எங்க ஊரை அழிக்க வந்திருக்கீங்க ?
உங்க ஊரை நீங்களே அழிச்சுக்கறீங்களே? நாங்க எதுக்கு தனியா அதை அழிக்கனும் ?
11 நான் வந்த வாகனத்தை இழந்துட்டேன் ‘
சைடு லாக் போடலையா?
சைடுல மறைவா நிறுத்தி வெச்சிருந்தேன்
12 பூம்பாறைல பார்த்த பூ அந்தப்பொண்ணு , நான் வெறும் பாறை
13 ஃபேஸ்புக் பார்த்தீங்களா?
இல்லைங்க , நான் இன்னும் ரீசார்ஜ் பண்ணலை
14 இவன் உடம்பு நல்லாதானே இருக்கு ? ஏன் ஸ்கேன் எடுக்கறாங்க ?
15 பார்க்கறதுக்கு நான் ஏலியன் மாதிரி இருந்தாலும் நானும் மனுசன் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 டாட்டூ என்னும் ஏலியன் இங்கே பூமியில் சிக்கியதும் அதைக்காப்பாற்ற ஏலியன் க்ரூப் எந்த நடவடிக்கைலயும் ஈடுபடாதது ஏன் ?
2 மனிதர்களிடம் மாட்டிக்கொண்டால் உன்னை நீயே அழித்துக்கொள் என கட்டளை இடப்பட்டும் ஏலியன் அதை ஃபாலோ பண்ணாதது என்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சின்னக்குழந்தைகள் , சிறுவர் சிறுமியர் பார்க்க வேண்டிய ஜாலியான படம் ரேட்டிங் 2.75 / 5
நன்றி - அனிச்சம் மின்னிதழ் ஃபிப்ரவரி 1 இதழ்
Ayalaan | |
---|---|
Directed by | R. Ravikumar |
Written by |
|
Produced by | Kotapadi J. Rajesh |
Starring | |
Cinematography | Nirav Shah |
Edited by | Ruben |
Music by | A. R. Rahman |
Production companies |
|
Distributed by | KJR Studios |
Release date |
|
Running time | 155 minutes[1] |
Country | India |
Language | Tamil |