Monday, January 29, 2024

மதிமாறன் (2023 ) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

    


உருவ கேலி கூடாது  என்பதை இந்த  அளவுக்கு  வலிமையாக  இதற்கு  முன்  வேறு  எந்தப்படத்திலும்  வலியுறுத்தியதாகத்தெரியவில்லை . முந்தானை  முடிச்சு  தவக்களை , அபூர்வசகோதரர்கள்  குள்ள  அப்பு  கமல் , இணைந்த  கைகள்  கிங்க் காங் , டிஸ்யூம், ஏழாம்  அறிவு  கின்னஸ்  பக்ரு   ஆகிய    நடிகர்கள்  குள்ள  கேரக்டரில்  நடித்து  புகழ்  பெற்றவர்கள் . இதில்  கமல்  தவிர  மற்ற  அனைவரும் இயற்கையாகவே  குள்ளமாகப்பிறந்தவர்கள் . ஒரு  குள்ள  கேரக்டர்  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்தில்  நாயகனாக  வருவது  இதுவே  முதல்  முறை 


இந்தப்படத்துக்கு  முதலில்  காம்ப்ளெக்ஸ்  என  டைட்டில்  வைக்கப்பட்டு  , பின்  இன்ஃபீரியாரிட்டி  காம்ப்ளெக்ஸ்  என  வைக்கலாமா? என  பரிசீலிக்கப்பட்டு  கடைசியில்  நெடுமாறன்  என  கேரக்டர்  பெயரும் ,  மதிமாறன்  என  டைட்டில்  பெயரும்  வைக்கப்பட்டது  . . மீடியாக்களில்  இப்படத்துக்கு  பாசிடிவ்  விமர்சனங்கள்  வந்திருந்தாலும்  தியேட்டரில்  ரிலீஸ்  ஆனபோது பிரம்மாண்ட  வெற்றியைப்பெறவில்லை . 2021ல்  ஷூட்டிங்  ஆரம்பிக்கப்பட்டு  2023   டிசம்பர் 29 ல்  வெளியான  இப்படம்  2023 ஆம்  ஆண்டின்  கடைசிப்படம்  என்ற  பெருமையைப்பெறுகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  ஒரு  தபால் ஊழியர். அவருக்கு  மகன், மகள்  என  இரட்டை  வாரிசுகள் . இரட்டையர்களாகப்பிறந்தாலும்  மகன்  குள்ளமாகப்பிறந்ததால்  பலரது கேலிக்கும் , கிண்டலுக்கும்  ஆளாகிறான். குள்ள  உருவமாக  இருக்கும்  நாயகன்  தன்  சகோதரி  மீது  உயிரையே  வைத்திருக்கிறான்


 ஒரு  கட்டத்தில்  நாயகனின்  சகோதரி ஒரு  காலேஜ்  லெக்சரரை  காதலித்து  கர்ப்பம்  ஆகி  ஊரை  விட்டே  ஓடி  விடுகிறார். இதனால்  அவமானம்  அடைந்த  பெற்றோர்  தற்கொலை  செய்து கொள்கிறார்கள் 


இதற்குப்பின்  ஓடிப்போன  சகோதரியை   நாயகன்  கண்டு பிடித்தானா?  என்பது  ஒரு  டிராக் .


 ஊரில்  திருமணம்  ஆன  பெண்கள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டு  கொல்லப்படுகிறார்கள் . அந்த  சீரியல்  கில்லர்  யார்  என்பதை  நாயகன்  எப்படிக்கண்டு  பிடிக்கிறான்  என்பது இன்னொரு  டிராக் 


 நாயகன்  ஆக  வெங்கட்  செங்குட்டுவன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். உருவ கேலிக்கு  எதிரான  வசனங்கள்  பேசும்போது  கை தட்டலையும், பரிதாபத்தையும்  அள்ளீக்கொள்கிறார். விழா  மேடையில் நடனப்போட்டியில்  கலக்கல்  டான்ஸ்  ஆடி  ஆச்சரியப்படுத்துகிறார் 


நாயகனின்  சகோதரி  ஆக  இவானா . கண்ணியமான  அழகி .இவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  சறுக்கல்  உண்டு . ஆனால்  அது  அவர்  தவறல்ல . நடிப்பு  குட் 


நாயகி  ஆக  ஆரத்யா. இவர்  போலீஸ்  ஆஃபிசர்  ஆக  வரும்  காட்சிகளை  விட  நாயகனுக்கு  ஜோடியாக  வரும்  காட்சிகளில்  தான்  மனம்  கவர்கிறார் 


ஆடுகளம்  நரேன்  போலீஸ்  கமிஷனர்  ஆக  ஓப்பனிஞ்   சீன்களில்  ஓவர்  ஆக்டிங்கில்  சொதப்பி  இருந்தாலும்  பிஞ்  பாதியில்  கச்சிதம் .


 நாயகனின்  அப்பாவாக  எம் எஸ்  பாஸ்கர் தேர்ந்த  குணச்சித்திர  நடிப்பு . வாட்ச்மேனாக  பவா  செல்லத்துரை  பிரமாதமான  நடிப்பு \

\கார்த்திக்  ராஜாவின்  இசையில்  ஐந்து  பாடல்கள் சுமார்  ரகம் . பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


 128  நிமிடங்கள்  ஓடும்படி  படத்தை  ஷார்ப்  ஆக  கட் செய்து  இருக்கிறார்  எடிட்டர்   சதீஷ்  சூர்யா .கே பர்வேசின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கச்சிதமாகப்படமாக்கப்பட்டுள்ளது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மந்த்ரா  வீர  பாண்டியன்  (  நடிகை  மந்த்ராவுக்கும்  இவருக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை ) 


சபாஷ்  டைரக்டர்

1  ஓப்பனிங்  ஷாட்டிலேயே  கொலைகளைக்காட்டி  ஒரு  பரபரப்பை  ஏற்படுத்திய  விதம்  குட் . ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  மெதுவாக  நகர்வதால்  அதை  ஆங்காங்கே  ஜிலேபியை  பிய்த்துப்போடுவது  போல  தூவி  இருக்கும்  விதமும்  கச்சிதம் 


2   நாயகி  நாயகன்  காதலை  வெளிப்படுத்த  எத்தனித்து  பின்  தள்ளிப்போடும்  காட்சி 


3   நாயகன்  தன்  கண்  முன்  தன்  பெற்றோர்  தற்கொலை  செய்து  கொள்ளும்  காட்சியைக்கண்டும்  தடுக்க  முடியாமல்  போவதும், அதே  சம்பவம்  வேறு  ஒரு  சமயம்  வேறு  ஜோடிக்கு  நிகழும்போது  காப்பாற்றும்  காட்சியும்  அருமை 


4  வில்லன்  கொலை  செய்யப்பட்ட  பெண்களோடு   செல்  ஃபோனில்  பேசி  இருக்கிறான், ஆனால்  அதை  சைபர்  க்ரைம்  போலீசால் கார்னர்  பண்ண  முடியவில்லை , அதற்கான  காரணமும் , வில்லனின்  ஐடியாவும்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   இரட்டையர்களில் ஒரு  வாரிசு  ஆரோக்யமாகவும், இன்னொரு  வாரிசு  உருவ  உயரக்குறைபாடோடு  இருப்பதால்  இருவரையும்  ஒரே  இடத்தில்  வளர்த்தால்  இன்ஃபீரியாரிட்டி  காம்ப்ளெக்ஸ்  ஏற்படும், அதனால்  இருவரையும்  பிரித்து  தனித்தனி  ஏரியாக்களில்  வளர்க்கலாம் 


ஒருவருக்கு  இரு  கண்களில்  ஒரு  கண்  மாறுகண்  ஆக  இருந்தால்  அந்தக்கணைப்பிடுங்கி  தூரவா  போடுகிறோம் ? 


2   ஆளைப்பார்த்தா  அழகு  போல , ஆனா  வேலையைப்பார்த்தா  இழவு  போல 


3   செஸ்  கேம்ல  எப்பவும்  கேம்  ஆடறவங்களை  விட  வெளில  இருந்து  அதை  வேடிக்கை  பார்க்கறவங்களுக்குதான்  நிறைய  ஐடியா  கிடைக்கும், அவனை  ஆட  விட்டா  ஈசியா  ஜெயிச்சிடுவான் 


4   எந்த  காக்காவும்  தான்  கறுப்புனு  ஃபீல்  பண்ணிக்கிட்டு  இருப்பதில்லை , எந்த  கொக்குவும்  தான்  வெள்ளைனு  பெருமை  பீற்றிக்கொள்வதில்லை , மனுசங்க  மட்டும்  தான்  கலர்ல  ஃபீல்  ஆகறாங்க \


5   டெய்லி  ஒரு  புதுக்கார்ல  போனா  எப்படி  இருக்கும் ? அப்படித்தான்  எனக்கு  பொண்ணுங்க \\


6   இந்த  உலகத்துல  ஏமாற்றுவதுதான்  தப்பு , ஏமாறுவது  அவ்ளோ பெரிய  தப்பு  இல்லை 


7   மத்தவங்க  சாதிச்சாதான்  அச்சீவர்ஸ் , எங்களை  மாதிரி  ஆளுங்க  அச்சீவ்  பண்ணாதான்  சாதா  மனுசங்களாவே  ஏத்துக்குவீங்க  போல 


8  இந்த  உலகத்துலயே  மிகப்பெரிய  வன்முறை  உருவ  கேலிதான்


9   கிண்டல்  கேலி பண்ணும்  உலகம்  எப்பவும்  அதன்  வாயை  மூடுவதில்லை , ஆனா  நாம நம்  காதுகளை  மூடிக்கொள்ளலாமே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அளவுக்கு  மிஞ்சினால்   அசின்  கூட  பிசின்  தான். நாயகனை  கேலி  கிண்டல்  பண்ணுவதாக  இரண்டு  காட்சிகள்  காட்டினால்  போதாதா? அவர்  மேல்  பரிதாபம்  வரவைக்க  படம்  முழுக்க  ஏகபப்ட்ட  பாடி  ஷேமிங்  காட்சிகள் , டயலாக்குகள் , ஓவரோ ஒவர் 


2 ஆனானப்பட்ட  போலீஸ்  கமிஷனருக்கே    தோணாக  க்ரைம்  ஐடியாக்கள்  நாயகனுக்கு  தோன்றுவதும், அவனது  ஐடியாக்களை  அவர்  ஏற்றுக்கொள்வதும்  நம்பும்படி  இல்லை \\


3 போலீஸ்  ஸ்டேசனில்  ஒரு  போலீஸ்  ஆஃபீசரையே  நாயகன்  தாக்குவதும்  ஓவர் 


4   நாயகனின்  அக்கா  காதலித்த  நபர்  பணக்காரர் , காலேஜ்  லெக்சரர். ஏன்  வீட்டில்  மறைக்கனும்? பொறுக்கியை  லவ்  பண்ணி  இருந்தாதான்   பயப்படனும். அந்தக்காட்சிகள்  ஒட்டவில்லை 


5   வில்லன்  பெண்களை  கொலை  செய்வதற்கு  வலிமையான  காரணம்  சொல்லப்படவில்லை . சிங்கம்  புலி  படத்தில்  ஜீவாவுக்கு செட்  ஆவது  போல  பெண்கள்  தாங்களாகவே  அவன்  வலையில்  விழுகிறார்கள். எதற்காக  வில்லன்  ரேப் செய்யனும்? கொலை  செய்யனும் ? 


6 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக  ஒரு  வில்லன்  என்பதை  இரு  வில்லன்கள்  எனக்காட்டியதும்  தேவை  இல்லை 


7  விஷத்தை   சாராயம்  , பெப்சி , கொக்கோகோலா  போன்ற  பானங்களில்  கலந்தால்  தான்  கலர்  சேஞ்ச்  தெரியாது.  பாதாம் கீர் ,  மாம்பழ  ஜூஸ்  மாதிரி  லைட்  கலர்  ஜூஸ்ல  கலந்தா  கலர்  காட்டிக்கொடுக்கும் 


8  க்ளைமாக்சில்  வில்லனுக்கு  அவன்  மனைவியே  விஷம்  கலந்த  ஜூஸ்  தருவதும்  , அவன்  அதைக்குடித்த  அடுத்த  நொடியே  இறப்பதும்  காட்சிப்படுத்தப்பட்ட  விதம் நம்பும்படி  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  -  ஃபேமிலி  மெலோ  டிராமாவக  முதல்  பாதியும், க்ரைம் த்ரில்லராக  பின்  பாதியும்  உள்ளது . பார்க்கலாம்,  ரேட்டிங்  2.5 / 5 


Mathimaran
Theatrical release poster
Directed byMantra Veerapandian
Written byMantra Veerapandian
Produced byLenin Babu
Starring
  • Venkat Senguttuvan
  • Ivana
  • Aradhya
CinematographyParvaez K
Edited bySathish Suriya
Music byKarthik Raja
Production
company
GS Cinema International
Release date
  • 29 December 2023
CountryIndia
LanguageTamil