மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படங்களில் இதயம், கிட்னி , உட்பட பல உறுப்புக்களை திருடுவது அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் பார்த்தாச்சு. இதுல் ஸ்கின் தெஃப்ட் புது கான்செப்ட்.
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் பொண்ணுங்களை ஏமாத்தி காதலிப்பது போல நடித்து அவங்களை அனுபவித்து விட்டு அவங்க தோலை சேல்ஸ் பண்ணுபவன். கோடீஸ்வர குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒரு பெண் தன் உடல் அழகைப்பேணி காக்க நினைத்தால் அவரது அதே பிளட் க்ரூப் உள்ள இளம்பெண் கிடைத்தால் போதும், அவங்க தோலை எடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்குவாங்க . இந்த டாஸ்க்கை ஏற்று பெண்களை கடத்திக்கொண்டு வருபவன் தான் வில்லன்
வில்லி போதை மருந்துக்கு அடிமை ஆனவள். இவள் ஒரு சமயம் வில்லன் செய்யும் ஃபோர்ஜரி வேலைகளைக்கவனித்து விடுகிறாள். அதை வைத்து அவனை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறாள்
நாயகி தன் ஊரில் இருந்து பணி நிமித்தம் நகரத்துக்கு வருகிறாள் . ந்கரில் தன் தங்கை வீட்டில் முதலில் தங்குகிறாள் . தங்கை புதிதாகத்திருமணம் ஆனவர் .அதனால் தம்பதிக்கு இடைஞ்சல் ஆக தான் இருக்க வேண்டாம் என எண்ணி வேறு ஒரு தோழியுடன் ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி பணிக்கு செல்கிறாள்
நாயகிக்கு ஒரு காதலன் உண்டு .அவனை தன் தோழிக்கு ஒரு முறை அறிமுகப்படுத்தி விடுகிறாள் . ஒரு நாள் . பணி முடிவடையும் முன்பாகவே வீட்டுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டதால் நாயகி வீட்டுக்கு வர அங்கே நாயகியின் காதலன் நாயகியின் தோழியுடன் சரசத்தில் இருக்க சத்தம் போடாமல் வந்த சுவடு தெரியாமல் நாயகி கிளம்பி விடுகிறாள்
இதற்குப்பின் நாயகி செய்தது என்ன? வில்லன், வில்லி , நாயகி மூவருக்கும் என்ன தொடர்பு ? என்பதை ,மீதி திரைக்கதையில் காண்க
நாயகி ஆக ஹன்சிகா மோத்வானி கொழுக் மொழுக் என இருக்கிறார். ஆனால் பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போலவோ , படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் போலவோ , மன்னன் விஜய சாந்தி போலவோ அவரால் வில்லித்தனம் காட்ட முடியவில்லை . குழந்தை முகம் அவருக்கு
போலீஸ் ஆஃபீசர் ஏசிபி ஆக முரளி சர்மா கம்பீரமான நடிப்பு .வில்லனின் ஓனர் எம் எல் ஏ குரு மூர்த்தி ஆக ஆடுகளம் நரேன் சரியான வில்லத்தன நடிப்பு
சோட்டா கே பிரசாத்தில் எடிட்டிங்கில் படம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது . மார்க் கே ராபின் இசையில் ஒரு பாடல் சுமார் ரகம், பின்ன்ணி இசை தெறிக்கிறது . பல இடங்களில் த்ரில்லிங் மொமெண்ட் தந்ததே பிஜிஎம் தான்
கிஷோர் போய்டப்பி தான் ஒளிப்பாதிவு . நேர்த்தியாகப்படம் பிடித்து இருக்கிறார்
ஸ்ரீனிவாஸ் ஓம்கார் தான் இயக்கம், நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்து ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் உடன் த்ரில்லிங்காக படத்தை இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் , வில்லி , வில்லனின் ஓனர் எம் எல் ஏ , , எம் எல் ஏவின் ஓனர் எம் பி என படத்தில் ஏகப்பட்ட நெகடிவ் கேரக்டர்கள் . எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களது கேரக்டர் டிசைனை வடிவமைத்த விதம் குட்
2 மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்டில் ஸ்கின் தெஃப்ட் என்ற கான்செப்ட்டை புதுமையாக சொன்ன விதம்
3 நாயகி தன் அபார்ட்மெண்ட்க்கு வரும்போது போலீஸ் இருப்பதைப்பார்த்து பம்மும் காட்சிகளும் அதைத்தொடர்ந்து வரும் சஸ்பெண்ஸ் நிகழ்வுக:ளும் அருமை
ரசித்த வசனங்கள்
1 மெடிக்கல் க்ரைம் உலக அளவில் நேபாள்க்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகம்
2 ஹைப்போ பிக்மெண்ட்டேஷன் , ஸ்கின் கிரேஃப்டிங் இதிலெல்லாம் கோடிக்கணகான பணம் புழங்குகிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பணம் கேட்டு மிரட்டுபவன் பணம் இருக்கும் பையை ஒரு டஸ்ட் பின்னில் போடச்சொல்லி விட்டு அவனே வந்து எடுத்து மாட்டிக்குவானா? யார் வந்து பையை எடுக்கிறார்கள் என்பதைக்கண்காணிப்பார்கள் என்ற அடிப்படை அறிவு இருக்காதா?
2 வில்லன் வில்லத்தனம் செய்வதையே தொழிலாகக்கொண்டவன், ஆனால் நாயகி ஐ டி ஆஃபீசர். நாயகி வில்லனை எதிர்த்து செய்யும் சாக்சங்கள் நம்பும்படி இல்லை
3 இருக்கற வில்லன்கள் போதாது என்று க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் இன்னொரு வில்லன். அவன் நாயகி மீது கண் வைக்கவில்லை , கை வைக்கவும் நினைக்கவில்லை என்பது நம்ப முடியவில்லை
4 துப்பாக்கி முனையில் ஒரு ஆளை மிரட்டும் நபர் பேக்கு மாதிரி ட்ரக்ஸ் யூஸ் பண்ணி மப்பில் மட்டை ஆவாரா?
5 நாயகி வீட்டுக்கு வரும்போது டி வி வால்யூம் ஓவராக இருக்க எங்கெங்கோ தேடி ரிமோட்டைக்கண்டு பிடித்து டி வி யை ஆஃப் பண்றார். அதுக்கு பேசாம டி வி பிளக் பாயிண்ட் ஸ்விட்சை ஆஃப் பண்ணி இருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ ( வில்லன் சில காட்சிகளில் டாப்லெஸ் ஆக வருகிறான் )
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். முதல் பாதி ஒண்ணுமே புரியாது . பிட் பிட்டாக காட்சிகள் வரும், பொறுமையாகப்பார்த்தால் பின் பாதியில் புரியும் . ரேட்டிங் 2.5 / 5
My Name Is Shruthi | |
---|---|
Directed by | Srinivas Omkhar |
Produced by | Ramya Prabhakar Nagendra Raju |
Starring | Hansika Motwani |
Cinematography | Kishore Boyidapu |
Edited by | Chota K. Prasad |
Music by | Mark. K. Robin |
Release date |
|
Country | India |
Language | Telugu |