Friday, January 05, 2024

கிடா (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ட்ராமா த்ரில்லர்) @ அமேசான் பிரைம் , ஆஹா தமிழ்

 


திரைப்பட  விழாக்கள்  பலவற்றில்  கலந்து  கொண்டு  விருதுகளைக்குவித்த  படம்  இது 17  வருடங்கள்  அசிஸ்டெண்ட்  டைரக்டராக  பணி  ஆற்றிய  அறிமுக  இயக்குநர்  ரா  வெங்கட்  தன் அனுபவத்தை  வைத்து  முதன்  முதலாக  கவரிமான்  பரம்பரை  என்ற  டைட்டிலில்  விஷ்ணு  விஷால் -ஷிவானி ராஜசேகர்  நடிப்பில்  உருவாக  இருந்த  படம்  சில  காரணங்களால்  கைவிடப்பட்டது . அடுத்த  பிராஜக்ட்  தான்  இந்தக்கிடா. விருதுக்குத்தகுதியான  படங்கள்  கமர்ஷியலாகப்போவது  சிரமம் என்ற  பொது  விதியை  உடைத்து  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற படம்  இது . நல்ல  சினிமா  ரசிகர்கள்  அவசியம்  காண  வேண்டிய  , தவற  விடக்கூடாத  படம் இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு  கிராமத்தில்  ஒரு  தாத்தா  , பாட்டி  தன்  பேரனுடன்  குடிசையில்  வசிக்கிறார்கள் . இரண்டு  நாட்களில்  தீபாவளி  வர  இருக்கிறது . பேரனுக்குப்புது  டிரஸ்  வாங்க  ரூ  2000  தேவைப்படுகிறது . தன்னிடம்  இருக்கும்  சின்ன நிலத்தை  விற்கலாம்  என  முடிவு  செய்கிறார். ஆனால்  யாரும்  வாங்க  முன்  வரவில்லை .  சிலரிடம்  கடன்  கேட்டுப்பார்க்கிறார். யாரும்  தரவில்லை . எனவே  பேரன்  ஆசையாக  வளர்த்த  ஆட்டுக்கிடாவை  விற்க  முடிவு  செய்கிறார்.  விலை  எல்லாம்  பேசி  அட்வான்ஸ் வாங்கிய பின் திருடர்கள் நால்வர்  அந்த  ஆட்டை  ஆட்டையைப்போட்டு  விடுகின்றனர் . இது ஒரு  டிராக் 


நாயகன் ஒரு  மட்டன்  கடையில்  பல  வருடங்களாக  வேலைபார்த்து வருபவன். ஓனருக்கு  ரொம்ப  செல்லம், ஆனால்  ஓனர்  மகனுக்கு  நாயகனைப்பிடிக்காது ஒரு  கட்டத்தில்  லேட்டாக  கடைக்கு  வேலைக்கு  வந்த  காரணத்தால்  இனி  வேலைக்கு  வர   வேண்டாம்  என  ஓனர்  மகன் சொல்லி  விடுகிறான். இதனால்  கடுப்பான  நாயகன்  தீபாவளி  அன்று  உன்  கடைக்கு    எதிரில்  ஒரு  கடை  போட்டு  வியாபாரம்  செய்கிறேன்  என  சவால்  விடுகிறான்..  எங்கெங்கோ  ஆடு  வாங்கப்போய்  கிடைக்காமல்  கடைசியாக  அந்த  தாத்தாவிடம் வந்து  சேர்கிறான்.. இது இன்னொரு   டிராக்


 நாயகனின்  மகன்  தன்  சொந்தக்காரப்பெண்ணைக்காதலிக்கிறான். இருவரும்  தீபாவளி  அன்று  காலையில்  வீட்டை  விட்டு , ஊரை  விட்டு  ஓடிப்போக  திட்டம்  போடுகிறார்கள் . நாயகனின்  மகன்  ஒரு  ஆட்டோ  டிரைவர் . தாத்தாவின்  ஆட்டைக்களவாடிய  களவாணிகளை  நாயகனின்  மகன்  ஆட்டோவில்  தான்  துரத்திச்செல்கின்றனர் . இங்கே  அவன்  பிசியாக  இருப்பதால்  சொன்னபடி  ஊரை  விட்டு  ஓடிப்போக  அவனால்  முடியவில்லை . இது  இன்னொரு  டிராக்


 இந்த  மூன்று  டிராக்  கதை  மாந்தர்களும்  ஒரே  டிராக்கில்  இணைந்து  பயணிக்கும்போது  என்ன  நடக்கிறது ? என்பதுதான்  கதை ‘  கதையின்  சுருக்கத்தைக்கேட்டால்  ரொம்ப  சாதாரணமாகத்தோன்றும், ஆனால்  திரைக்கதை  அமைத்த  விதம் , நடிகர்கள்  தேர்வு , கேரக்ட்ர்  டிசைன்  வடிவமைத்த  அழகு  எல்லாமாகச்சேர்ந்து  இதை  ஒரு  பிரமாதமான  படமாகக்கொண்டு  வந்திருக்கிறது 


 நாயகன் ஆக காளி  வெங்கட் . மிக  யதார்த்தமான  நடிப்பு .  முதலாளியிடம்  பணிவாகப்பேசுவதும் , ஓனர்  மகனிடம்  கோபமாக  சவால்  விடுவதும்  மாறுபட்ட  நடிப்பு .


 தாத்தாவாக  பூ  ராமு   அமைதியாக   , சோகமாக  வந்து  அனைவர்  மனதையும்  கவர்கிறார். பேரன்  ஆக  மாஸ்டர்  தீபன்  கச்சிதம்

ப்டத்தில்  நடித்த  அனைத்து  நடிகர்களுமே  யதார்த்தமாக  தங்கள்  பணியைச்செய்திருக்கிறார்கள் .


123  நிமிடங்கள்  ஓடும்படி  கச்சிதமாக  படத்தை  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் ஆனந்த  ஜெரால்டின். தீசன்  இசையில்  இரண்டு  பாடல்கள்  அருமை , பின்னணி  இசையும்  ஓக்கே  ரகம் எம்  ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவில் பகலில், இருட்டில்  காட்சிகள்  கச்சிதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன



சபாஷ்  டைரக்டர் (ரா  வெங்கட் )


1   சொந்தக்காரரிடம்  ரூ  5000  கடன்  கேட்ட  போது  அப்றமா  கடைப்பக்கம்  வாங்க  என  அனுப்பி  விட்டு  கடைக்கு  வந்த போது  200  ரூபாயை  செலவுக்குக்கொடுப்பதும்  அதை  அவர்  வாங்க  மறுப்பதும்  நெகிழ்ச்சியான  காட்சி 


2   ரூ  10,000  மதிப்புள்ள  ஆட்டுக்கிடாவை  விலை  பேசும்  நாயகன்  கைல 10 பைசா  இல்லாமல்  சமாளிக்கும்  விதம்  அருமை . ஒவ்வொரு  வீடாகப்போய் மட்டன்க்கு  ஆர்டர்  எடுத்து  50%  அட்வான்ஸ் வாங்கி  தான்  கொடுக்க  வேண்டிய  அட்வான்ஸ்  தொகையை  சேர்த்துல்  உத்தி அருமை 


3  களவாணிகள்  செல்லும்  டாட்டா  ஏஸ்  இருட்டில்  நிற்கிறது . தேடி  வந்தவர்கள்  பார்க்கும்போது  அடையாளம் தெரியவில்லை . தீபாவளிக்கு  முன்  தினம்  என்பதால்  அங்கே  சில  சிறுவர்கள்  புஷ்வாணம்  வைக்க  வான்  நோக்கி  பூச்சொரியும்  மத்தாப்பு  ஒளியில்  திருடர்களை  அடையாளம்  கண்டு  துரத்தும்  இடம்  மாஸ்  சீன் 


4   சில்லறைக்காசாக  உண்டியலில்  சேர்த்த  1000  ரூபாய்க்காசுகளை  உறவினர்  வீட்டில் கொடுத்து  ரூபாய்  நோட்டாக  மாற்றப்போனபோது அந்தப்பெண்  கூட  500  ரூபாய்  சேர்த்துத்தருவதும் , பட்டாசுகளைப்பரிசாகத்தருவதும் மனித  நேயம்  மலரச்செய்யும்  உணர்ச்சிகரமான  காட்சி


  ரசித்த  வசனங்கள் 


1  காலைல  வெள்ளனே ( விடியல்காலை) வந்து  டீக்கடையைத்திறக்கனும், நீ  பாட்டுக்கு  பொண்டாட்டியைக்கட்டிப்பிடிச்சுட்டே  கிடந்தா..?


 நீ  வந்து  பார்த்தியாக்கும் ?  பக்கத்துலயே  விட  மாட்டேன்கறா


 அப்றம்  எப்டி  3  புள்ளைக  பெத்தே?


2   நான்  பார்த்த  நாய்கள்  எல்லாம்  ஒண்ணு  குலைக்கும்  அல்லது  கடிக்கும், இதுக  ரெண்டும்  செய்ய  மாட்டேங்குது. நாம  உக்காந்தா  அதுவும்  உக்காருது , நாம  எந்திரிச்சா  அதுவும் எந்திரிக்குதே?


3  திருடனுக்கு  ஃபிட்னஸ்தான்  முக்கியம், நாய்  துரத்துது , ஓடாம  மரத்தைப்பிடிச்சு  தொங்கிட்டு  இருக்கே? 


4 குடிகாரனுங்க  பூரா  குழந்தை  மாதிரி , குழந்தை  எங்காவது  திருடுமா?


இவனைப்பார்த்தா  குழந்தையையே  திருடுனவன்  மாதிரி  இருக்கான் 


5  குடிக்கனும்னு  கூப்ட்டா  ஓடி  ஓடி  வருவானுங்க , ஆனா  உதவினு  கூப்பிட்டா  ஒரு  பய  வர  மாட்டான்


6  உதவி  என்பது  ஒருத்தரு  ஒருத்தர்  மாத்தி  செஞ்சுக்கறதுதானே?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  காட்சியில்  பேரன்  வாசலில்  ஆட்டுக்கிடா  உடன்  படுத்துத்தூங்குவதைப்பார்த்த தாத்தா  தன்  மனைவியை எழுப்பி  அவனை  உள்ளே  கூட்டிட்டுப்போய்  படுக்க வை  என்கிறார். ஏன் ? அதை  அவர்  செய்ய  மாட்டாரா? தூங்கிக்கொண்டிருக்கும்  மனைவியை  ஏன்  எழுப்பனும் ? ஆணாதிக்க  உணர்வு . இந்த  கேரக்டர்  மேல்  எப்படி  பரிதாபம்  வரும் ?   


2  பேரனின்  கேரக்டர் டிசைனில்  ஒரு குழப்பம். தான்  ஆசையாக  வளர்த்த  கறுப்பன்  என்னும்  கிடாவை  விற்றுத்தான்  தீபாவளி  டிரஸ்  வாங்கித்தர  முடியும்  எனில்  எனக்கு  தீபாவளி  டிரசே  வேண்டாம்  என  உறுதியாக  மறுக்கும்  பேரன்  அடுத்த  சில  காட்சிகளிலேயே  மனம் மாறுவது  எப்படி ? அவன்  கண்  முன்னாலாயே  ஆட்டைப்பேரம்  பேசி  விற்கும்போது  அவன்  எதுவுமே  சொல்லவில்லையே? 


3  டாடா  ஏஸ்  வண்டியில்  ஐந்து  ஆடுகளைத்திருடி  எடுத்துச்செல்லும்  களவாணிகள்  அந்த  வண்டியின்  பாடியை  கவர்  போட்டோ , துணி  போட்டோ  மூடாமல்  போகிறார்கள் . வழியில்  அனைவரும்  பார்க்கிறார்கள் . ஈசியா  ட்ராக்  பண்ணிப்பிடித்து  விடுவார்கள்  என  தெரிய  வேண்டாமா?


4  மட்டன்   வாங்க  அட்வான்ஸ்  கொடுத்த  ஆட்கள் தீபாவளிக்கு  முந்தின  நாள்  இரவே  காளி  வெங்கட்  வீட்டில்  வந்து  வருவாரா? வர  மாட்டாரா? என  தகறாரு  செய்வது  நம்பும்படி  இல்லை . தீபாவளி  அன்று  காலையில்  மட்டன்  தருவதாகத்தானே  பேச்சு? 


5  மிட்  நைட்டில்  உண்டியல்  காசு  எடுத்து  பாட்டி  அந்தக்கடைக்குப்போய்  பேரனுக்கு  டிரஸ்  எடுத்து  விடுகிறாள் . உடனே  தாத்தாவுக்கு  ஒரு  ஃபோன்  போட்டு  சொல்ல  மாட்டாளா? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  =- க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  த்ரில்லர்  படத்துக்கு உண்டான  விறுவிறுப்புடன் , பிரமாதமான  திரைக்கதையுடன்  2023 ஆம்  ஆண்டின்  சிறந்த  டாப் 10  படங்கள் பட்டியலில்  நிச்சயம்  இடம் பிடிக்கும்  படம்  இது . ரேட்டிங்  3. 5 / 5 


கிடா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ரா. வெங்கட்
உற்பத்திஸ்ரவந்தி ரவி கிஷோர்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஎம்.ஜெயபிரகாஷ்
திருத்தியவர்ஆனந்த் ஜெரால்டின்
இசைதீசன்
தயாரிப்பு
நிறுவனம்
வெளிவரும் தேதி
  • 11 நவம்பர் 2023
நேரம் இயங்கும்
123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்