2013ல் வெளி வந்த ஸ்பானிஸ் படமான கிராண்ட் பியானோ என்ற த்ரில்லர் படத்தை அட்லீ பாணியில் பட்டி டிங்கரிங் செய்யப்பட்ட படம் இது . இது ஒரு மலேசியன் தயாரிப்பு , அதனால் நடிகர் நடிகைகள் பார்க்காத முகங்களாக இருப்பார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு கோடீஸ்வரருக்கு அபூர்வமான வைரம் ஒன்று கிடைக்கிறது . அந்த வைரத்தை ஒரு மிகப்பெரிய பியானோ வில் மறைத்து வைக்கிறார். அதை வெளியில் எடுக்க நான்கு வெவ்வேறு ட்யூன்கள் வரிசையாக இசை அமைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாக்ஸ் ஓப்பன் ஆகி வைரம் கிடைக்கும். இப்படி ரெடி பண்ணி விட்டு அந்த நான்கு வெவ்வேறு ட்யூனை தனது நான்கு வாரிசுகளுக்குக்கற்றுத்தருகிறார். ஆனால் வாரிசுகளுக்கு வைரம் பற்றியும் தெரியாது . அந்த ட்யூன் தான் ஓப்பனிங் கீ ஆஃப் த டைமண்ட் என்ற விஷயமும் தெரியாது .
20 வருடங்கள் கழிகின்றன. அந்த கோடீஸ்வரருக்கு அல்சைமர் வியாதி வந்து எல்லாம் மறந்து போகிறது . பேரன், பேத்தி எல்லாம் எடுத்து விட்டார்
வில்லனுக்கு இந்த வைரம் விஷயம் தெரிய வருகிறது . அவன் வைரத்தை எடுக்க போடும் திட்டமும், அதை எக்ஸ்க்யூட் பண்ணிய விதமும் தான் மீதிக்கதை
கோடீஸ்வரரின் பேத்தி தான் நாயகி. அவளது காதலன் தான் நாயகன்
மூன் நிலா தான் நாயகி, அழகிய முகம், அளவான நடிப்பு . கண்ணியமான உடை என வலம் வருகிறார் .. மூக்குத்தி அவருக்கு லாங்க் ஷாட்டில் அழகாகவும், க்ளோசப் ஷாட்டில் சுமாராகவும் இருக்கிறது . மூன் என்றாலும் நிலா என்றாலும் ஒன்று தானே? அது என்ன மூன் நிலா? என தெரியவில்லை
நாயகன் ஆக ஒரு தாடிக்காரர் வருகிறார்.அனேகமாக இவர் தான் ஃபைனான்ஸ் பண்ணி இருக்க வேண்டும்
வில்லன்கள் ஆக இரண்டு பேக்குகள் வருகிறார்கள். 10 லட்ச ரூபாய் வட்டிக்கு விட்ட மலையாளத்துக்கார சேட் மாதிரி ஒரு பேக்கு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வேட்டி , நைட்டி காம்பினேசனில் கேவலமான கெட்டப்பில் வந்தாரே அதே போல் காஸ்ட்யூம் உடன் வருகிறார். சகிக்க வில்லை
இன்னொரு பேக்கு வில்லன் பற்றி சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும், எனவே அதை ஸ்கிப் செய்து விடலாம்
டிராமா டிவி சீரியல் ஆர்ட்டிஸ்ட்கள் மாதிரி ஏராளமான நபர்கள் படத்தில் உண்டு . ஓக்கே ரகம் சில , அய்யோ அம்மா ரகம் பல
பாடலகள் , இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு குளுமை . 131 நிமிடங்கள் ஓடும்படி கச்சிதமாக ட்ரிம் செய்திருக்கிறார் எடிட்டர்
சபாஷ் டைரக்டர்
1 ராஜதந்திரம் என்ற டைட்டிலில் ஏற்கனவே படம் ரிலீஸ் ஆனதால் ஒரிஜினல் படமான் பியானோ வை டைட்டிலில் சேர்த்த சாமார்த்தியம்
2 ஒரே பங்களாவில் மொத்தப்படத்தையும் முடித்த லாவகம்
ரசித்த வசனங்கள்
1 கார்ல தானே போறேன்? எதுக்கு ஹெல்மெட் அணியனும்கறீங்க ?
உனக்கு இருக்கும் மூளைக்கு நாய் வந்து நக்கிட்டுப்போயிடக்கூடாது பாரு
2 பத்து லட்சம் கடன் திருப்பித்தரனும், உடனே முடியாது கொஞ்சம் டைம் கேளு
அஜ்சு வருசம் டைம் கேட்கவா? சரி அது ஜாஸ்தி , அஞ்சு மாசம் கேட்கறேன்
3 முறைப்பையன் தான், அதுக்காக் இவ்ளோ முறைக்கனுமா?
4 வாழ்க்கைல அழகான விஷயங்களை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோடீஸ்வரர் இருக்கும் பங்களாவே கிராண்டா தான் இருக்கு . 10 கோடி மதிப்பு வரும், அவர் ஏன் பிசாத்து 10 லட்சம் ரூபா கடன் வாங்கனும் ? அதுவும் பேங்க்ல வாங்காம கந்து வட்டிக்காரன் கிட்டே வாங்கனும் ?
2 கடனை திருப்பிக்கேட்டு வில்லன் மிரட்டும்போது பேங்க்ல டேக் ஓவர் பண்ண வெச்சு ரிட்டர்ன் பண்ணலாமே?
3 அவ்வளவு பெரிய பங்களாவில் கோடீஸ்வரரைப்பார்த்துக்க ஒரு ஆளை ஃபிக்ஸ் பண்ண மாட்டாங்களா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நாயகியின் அழகுக்காக , பார்க்கலாம், மற்றபடி படத்தில் சரக்கு அதிகம் இல்லை . ரேட்டிங் 1.75 ? 5