Thursday, December 07, 2023

ஜோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)

 


காதல்  கை  கூடவில்லை  என்பதால்  தற்கொலை  என்ற  கான்செப்டில்  மரோசரித்ரா, புன்னகை  மன்னன் ,  போன்ற  படங்கள்  வந்தன.  காதலை  மனசுக்குள்ளேயே  வைத்து  வெளியே  சொல்லத்தயங்கும்  கேரக்டரை  வைத்து  இதயம் , காலமெல்ல்லாம்  காதல்  வாழ்க  போன்ற  படங்கள்  வந்தன. இந்த இரண்டு  கான்செப்ட்டையும்  மிக்ஸ்  பண்ணி  ஒரு  நல்ல  படம்  தந்திருகிறார்  அறிமுக  இயக்குநர் ஹரிஹரன்  ராம்


 பொதுவாக  ஒரு  காதல்  சப்ஜெக்ட்  படம்  ஹிட்  ஆக  வேண்டும்  என்றால்  மூன்று  முக்கிய  அமசங்கள்  இருக்க வேண்டும்  1   அழகிய  நாயகி 2  செம ஹிட்  பாடல்கள் , இசை  3  ஒளிப்பதிவு.  வெறும்  பாடல்கள்  ஹிட்  ஆனதாலேயே  படம்  ஹிட்  ஆன  வரலாறும்  நம்  வசம்  உண்டு . தென்றலே  என்னைத்தொடு , பருவராகம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


கோவையில்  ஒரு  இஞ்சினியரிங்க்  காலேஜில்  படிக்கும்  நாயகன்  அதே  காலேஜில்  அவன்  படிக்கும்  வகுப்பில்  புதிதாக  சேரும்  மலையாளப்பெண்ணான  நாயகியை   லவ்  அட்  ஃபர்ஸ்ட்  சைட்  விதிப்படி  காதலிக்கிறான்/. ஆனால்  நாயகி  ஒரு    தொட்டாசிணுங்கி. நாயகியை  யாராவது  ல்வ்  ப்ரப்போஸ்  செய்தாலே  அழுது  விடுகிறார். ரொம்ப  சென்சிட்டிவ். பொத்திப்பொத்தி  வளர்த்த பொண்ணு  மணிமேகலை , அதனால  அவளை  விட்டு  வெட்கம்  இன்னும்   போகல  கணக்காய்  நாயகி  இப்படி  இருப்பதால்  நாயகன்  காதலை  வெளிப்படுத்த  தயங்குகிறார்


இவரது  தயக்கமே  இவருக்கு  பிளஸ்  ஆகிறது. நாயகி  எப்படியோ  காதலுக்கு  ஓக்கே  சொல்லி  விடுகிறார். காலேஜ் லைஃப்  முடியும்  வரை  இருவரும்  ஜாலியாகக்காதலிக்கிறார்கள் , அதுவரை  பட,மும்  ஜாலியாக  நகர்கிறது .ஒரு  கட்டத்தில்  இருவருக்கும் ஈகோ  கிளாஸ்  நடக்கிறது . ஊடல் , பிரிவு மீண்டும்  சேர்தல்  என  நடக்கிறது. ஒரு  கட்டத்தில்  வீட்டுக்கு  வந்து  பெண்  கேள்  என  நாயகி  அழைப்பு  விடுக்கிறாள் . நாயகன்  நாயகி  வீட்டுக்குப்போகிறான். அங்கே  சூழ்நிலை சரி  இல்லை . ஒரு  கட்டத்தில்  நாயகன்  நாயகியின்  அப்பாவை அடித்து  விட்டதாக  நாயகி  தவறாகப்புரிந்து  கொள்கிறாள் . காதல்  பிரெக்கப் ஆகிறது. நாயகி க்கு  வேறு  ஒரு  மாப்பிள்ளையுடன்  திரும்ணம்  நடக்க  ஏற்பாடுகள்  செய்யப்படுகிரது


நாயகி  நெம்பர்  2  ஸ்கூல்  படிக்கும்போது  ஒரு  பையனை  காதலிக்கிறாள். அவன்  நாயகியை  மனத்காரக்காதலிக்கவில்லை. ஆனால்  அவளை  அடைய  நினைக்கிறான். பலவந்தம்  நிகழும்போது  நாயகி  நெம்பர்  2  வை  ஒருவன்  காப்பாற்றி  விடுகிறான். நாயகி  நெம்பர்  டூ  விற்கு  அந்த  பையனை  முகம்  பார்க்காமலேயே  காதல்  வருகிறது . ஆனால்  சந்தர்ப்ப சூழ்நிலை  காரணமாக  அந்தப்பையனைக்கண்டு  பிடிக்கவே  முடியவில்லை 


 இப்போது நாயகன்  வாழ்வில்  நாயகி  நெ1  நாயகி    நெ2  என்னென்ன  பாதிப்புகளை  ஏற்படுத்தினார்கள் ?  யாருடன்  இணைந்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ரியோ ராஜ்  இயல்பாக  நடித்துள்ளார். நாயகி  நெம்பர்  ஒன்  ஆக  மலையாளப்பெண்ணாக  மாளவிகா  மனோஜ்  அம்சமான  அழகுடன் , குடும்பப்பாங்கான  தோற்றத்துடன், கண்ணியமான  கிளாமரில்  மனம்  கவர்கிறார்.  நாயகனுடனான கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  ஆவுட்  ஆனது  பெரிய  பிளஸ்


 நாயகி  நெம்பர்  2  ஆக பவ்யா  த்ரிகா  நடித்திருக்கிறார்.. ஓக்கே  ரகம்.இவர்  ஸ்கூல்  மாணவியாக  வரும்  காட்சிகளில் இளமை  கொப்புளிக்கிற்து 


நாயகனின்  நண்பர்களாக  வருபவர்கள் , நாயகி  நெ1 -ன்  தோழியாக  வருபவர்  என  அனைத்துக்கேரக்டர்களும்  தங்களுக்குக்கொடுகப்பட்ட  வேலையைச்செவ்வனே  செய்திருக்கிறார்கள் 


சித்து  குமாரின்  இசையில்  ஒரு  பாடல்  சூப்பர்  ஹிட் . மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம் . ராகுல்கேஜி  விக்னேஷின்  ஒளிப்பதிவில்  நாயகிகள்  இருவரையும்  க்ளோசப்  , லாங்க்  ஷாட்  காட்சிகளில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஹரிஹரன்  ராம்



சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  தோழி மூலம்  நாயகி  தினசரி  என்ன  டிரசில்  வருகிறார்  என்பதை  அறிந்து  நாயகன்  அதே  கலர்  டிரசில்  வந்து  இம்ப்ரெஸ்  செய்வது


2 நாயகன் , நாயகி  இருவர்க்கும்  இடையேயான  சின்னச்சின்ன  சண்டைகள் , பிரிவுகள்  அனைத்தும்  மிக  யதார்த்தம்


3  இரு  நாயகிகளையும்  கண்ணியமான  உடையில்  கச்சிதமாக  கையாண்ட விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  உருகி உருகி 

2  ஒரே  கனா 


  ரசித்த  வசனங்கள் 


1    என்  ஸ்கூலுக்கு  வந்து    என்னையே  அடிச்சுட்டீங்களா? இருங்கடா. பசங்களைக்கூட்டிட்டு  வர்றேன்


 கோ எட் தானே? அப்டியே  பொண்ணுங்களையும்  கூட்டிட்டு  வா 


2   வாழ்க்கைங்கறது....


  யப்பா  டேய்... குடிக்க  விடுங்கடா


3  டேய், அவ  கிட்டே  என்னடா  பேசுனே


 அதெல்லாம்  லவ்வர்ஸ்க்குள்ளே  1000  இருக்கும்

 அதனால  தான்  கேட்டேன் , நீ  என்ன  பேசுனே? 


4  லவ்வை  சொல்றது  ரொம்ப  கஷ்டம்டா


 அப்டியா? இப்போப்பாரு , ஏய்  பித்துக்குளி , ஐ லவ் யூ, அவ்ளோ  தான்  போ 


5  உன்  மேல்  ஒரே  லவ்வா  இருக்கு . கவிதை  சொல்லவா? 

ம்


 வீட்டுக்கு  வெளில  இருக்கு  திண்னை , உன்  மேல  லவ்வா  இருக்கு , என்ன  பண்ண?


 போடா  வெண்ண


6  தூரமா  இருவரும்  இருக்கும்போது  லவ்வில்  ஏற்படும்  சண்டைக்குக்காரணம்  அந்த தூரம்  தான் 


7  லவ்  இருக்கும்  இடத்தில்  ஈகோ  இருக்கக்கூடாது,  ஈகோ  இருந்தால்  அது  லவ்வாவே  இருக்காது 


8  நாம  ரெண்டு  பேரும்  ஒரே  மாதிரி , லவ்  பண்றதுலயும், ஹர்ட்  பண்றதுலயும்


9  அடிக்கடி  சண்டை போடற  நாம் கொஞ்ச  நாள்  பேசிக்காம  இருந்தா  எல்லாம்  சரி  ஆகிடும், ப்ரீத்திங்  ஸ்பேஸ்  வேணும்


10  நாங்க  ரெண்டு  பேரும்  ஒரே  மாதிரி , லவ் காட்றதுலயும், ஈகோ  காட்றதுலயும்


11  பசங்களுக்கு  கல்யாணம் என்பது  ஒரு  கமிட்மெண்ட், உடனே  அதை  ஏத்துக்க  முடியும், ஆனா  பெண்களுக்குக்கல்யாணம்  என்பது  ஒரு  லைஃப், அக்செப்ட்  பண்ணிக்க  டைம்  எடுக்கும்


12 ஐ  ஆம்  கோச்சார்யா 


 அப்டின்னா


 கோச். ஆர்யா  = கோச்சார்யா


13   மேடம்  கரெஸ்பாண்டெண்ட்டா  இருக்கும்  காலேஜ்லயே  பசங்க, பொண்ணுங்க  தனித்தனியா  தான்  லஞ்ச்  சாபிடனுமாம்,  மேடம்  வீட்ல  எப்படி? அதே  போல  தானா? தனித்தனி  தானா?


14  ஒரு  பொண்ணு  உன்னை  லவ் பண்றா-னா  உன்  மேல  நம்பிக்கை  வெச்சிருக்கானு  அர்த்தம்,  அதை  அட்வாண்ட்டேஜா  எடுத்துக்கக்கூடாது

15  தப்பே  பண்ணாத  நீ  பயப்படறாதாலதான்  தப்பு  பண்ணின  இவன்  தெனாவெட்டா  இருக்கான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  கரஸ்பாண்ட்டென்ட்  ஆக  தன்  மனைவி  இருக்கும்  காலேஜூக்கு  வருகிறார். செக்யூரிட்டி , உட்பட  காலேஜில்  பணி  புரியும்  ஸ்டாஃப்ஸ்  யாருக்குமே  அவரை  அடையாளம்  தெரியவில்லை . ஏன்? மேரேஜூக்கு  அவங்க  யாரையும்  இன்வைட்  பண்ணவே  இல்லையா? அரேஞ்சுடு  மேரேஜ்  தானே?


2  நாயகி   நெ 2  வின்  ஃபிளாஸ்பேக்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக வைத்திருப்பது  பெரிய  ஆச்சரியத்தை  தர  வில்லை , மாறாக  வலிய  திணித்தது  போல  தோன்றுகிறது , பின்  பாதியை  நாயகி  நெ 2  வின்  ஃபிளாஸ்பேக்  போர்சன்  ஓப்பன்  பண்ணி  பின்  தொடர்ந்திருந்தால்  இன்னும்  நன்றாக  இருந்திருக்கும்


3  நாயகி  நெம்பர்2    கல்யாணத்தை  நிறுத்தும்படி  நாயகனுக்கு  ஃபோன்  செய்கிறாள், ஆனால்  ஃபோனை  மப்பில்  இருக்கும்  நண்பன்  வாங்கி  தன்  பாக்கெட்டில்  வைக்கிறான். யாருமே  பதிலே  சொல்லாமல்  தன்  செய்தி  போய்ச்சேர்ந்திருக்கும்  என  நாயகி  நெம்பர் 2  எப்படி  நினைத்தார்?


4  காதல்  தோல்வி  என்றது,ம்  நாயக்ன்  தண்ணி  அடிப்பது ,  தாடி யுடன்  அலைவது  இதெல்லாம்  டெம்ப்ளேட்  காட்சிகள் . தவிர்த்திருக்கலாம்


5  பின்  பாதி  திரைக்கதை  மவுன ராகம், ராஜா  ராணி  படங்களின்  சில காட்சிகளை  நினைவு  படுத்துகிறது. முதல்  பாதியில்  இருந்த  ஃபிரெஷ்னெஸ்  பின்  பாதியில்  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாயகிகளின்  அழகுக்காகவும், சூப்பர்  ஹிட்  பாடல்களுக்காகவும், முதல்  பாதி  திரைக்கதைக்காகவும்  படம்  பார்க்கலாம் ., ரேட்டிங்  3 / 5 


Joe
Theatrical release poster
Directed byHariharan Ram S.
Written byHariharan Ram S.
Produced byDr. D. Arulanandhu
Mathewo Arulanandhu
Starring
CinematographyRahul KG Vignesh
Edited byVarun KG
Music bySiddhu Kumar
Production
company
Vision Cinema House
Distributed bySakthi Film Factory
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTamil